Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, May 7, 2014
சர்ச்சைக்குறிய மூலப்பொருளை நீக்க கோகோ கோலா ஒப்புதல்
நியூயார்க்: உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தனது குளிர் பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்' அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை கோகோ கோலா நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, மவுண்ட் அன்ட் டியூ போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பதை அறிந்ததால் உலகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆன் லைனில் கோகோ கோலா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து மனுக்கள் குவிந்தன. சர்ச்சைக்குறிய மூலப்பொருளை நீக்க கோகோ கோலா ஒப்புதல் இதையடுத்து ‘பிவிஒ'வை நீக்கும் முடிவை கோகோ கோலா எடுத்துள்ளது. இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட ரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் கோகோ கோலா நிறுவனத்துக்கான செய்தித்தொடர்பாளர் ஜாஷ் கோல்ட் தெரிவித்தார். கோகோ கோலாவின் இந்த முடிவு, தனியார் நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த பொருள் கலக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு தடை உள்ளது. கடந்த ஆண்டே பெப்சி நிறுவனம் இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டது நினைவு கூறத்தக்கது.
ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறவே முடியாது: ராஜபக்சே திட்டவட்டம்
கொழும்பு: ஈழத் தமிழர் வாழும் இலங்கையின் வடபகுதியில் இருந்து ராணுவ முகாம்களை அகற்றவே முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜபக்சே கூறியுள்ளதாவது: ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறவே முடியாது: ராஜபக்சே திட்டவட்டம்! இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் நாடு முழுவதும் ராணுவம் முகாம்களை அமைத்து நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றது. தமிழர்கள் வாழும் வடபகுதியில் மட்டுமல்ல சிங்களவர் வாழும் அம்பாந்தோட்டையிலும் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை மூடிவிட தயாராக இல்லை. அதே நேரத்தில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை படிப்படியாக பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றபடி குறைக்கப்படும். இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.
ராகுல், ராப்ரி தேவியின் தொகுதிகள் உள்பட 64 தொகுதிகளில் இன்று 8ம் கட்ட லோக்சபா தேர்தல
மொத்தம் 64 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 543 இடங்களை கொண்ட மக்களவைக்கு 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
--------------------------------------------------------------------------------------
இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 8வது கட்டமாக சீமாந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 7 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகள் என 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த 64 தொகுதிகளில் மொத்தமுள்ள 1737 வேட்பாளர்களின் தலைவிதியை 18.47 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
----------------------------------------------------------------------------
இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தொகுதியிலும், பா.ஜ.க பொதுச் செயலாளர் வருண் காந்தி அதே மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் முகமது கைப் பூல்பூர தொகுதியிலும், காஷ்மீர் முன்னாள் முதலமைசரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவருமான முசாபர் உசேன் பெய்க் பாரமுல்லா தொகுதியிலும், ஒய்.எஸ்.ஆர்.
-------------------------------------------------------------------------------
காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயாம்மா விசாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனார். அதே போல பிகாரில் லோக் ஜன் சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஹாஜிபூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி சரண் தொகுதியிலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியும் போட்டியில் உள்ளனர். இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா மண்டி தொகுதியிலும்), முன்னாள் முதல்வர் பிரேம் குமாரின் மகனும் தற்போது எம்.பியுமான அனுராக் தாகூர் ஹமீர்பூரிலும் மற்றும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் புரந்தேஸ்வரி, பல்லம் ராஜு ஆகியோரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இந்த 64 தொகுதிகளில் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------
இந்த வாக்குப் பதிவுக்குப் பிறகு கடைசி கட்டமாக வரும் மே 12ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல்: ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுடன், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
Subscribe to:
Posts (Atom)