Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, August 26, 2014

முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். -

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். --------------------------------------------------------------------------- அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். ----------------------------------------------------------------------------- இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று முன்தினம் வெளியேறினர். ----------------------------------------------------------------------------- இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் நடைபெற்றது.

விடுதலைப்புலிகள் இருந்த வரை இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்று பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் கானா நிர்மலன் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து கானா நிர்மலன் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ----------------------------------------------------------------------------------- விடுதலைப்புலிகள் இருந்த வரை இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. தற்போது இலங்கையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. --------------------------------------------------------------------------------- போர் முடிந்த பிறகும் இலங்கையில் இன அழிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரச்னையைப் புரிந்து கொள்ள வேண்டும். ----------------------------------------------------------------------------------- இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்தியா இலங்கைக்கு முழு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்றார்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு எதிராக ராஜபக்சே வீட்டில் யாகமா?: விசாரிக்க கோரி டி.ஐ.ஜி.யிடம் மனு

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே வீட்டில் திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலில் பணியாற்றும் திரிசுந்தரர்கள் யாகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. -------------------------------------------------------------------------------- கடந்த மாதம் 20ந் தேதி இலங்கை சென்ற திரிசுந்தரர்கள் குழு ஒன்று எதிரிகளை அழிக்கக்கூடியதும், அவர்களது மனதை இலங்கைக்கு சாதகமாக மாற்றவும் "சத்ரு சம்ஹார யாகம்" என்ற யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்கள் அனைவரும் இலங்கையை ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு நாடு திரும்பியுள்ளனர். -------------------------------------------------------------------------------- இந்நிலையில், திரிசுந்தரர்கள் மீதான இந்த குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த யாகம் தமிழக அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதா? என விசாரிக்கவேண்டும் என தமிழீழ ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை டி.ஐ.ஜி.யிடம் இன்று மனு அளித்துள்ளனர். -------------------------------------------------------------------------------- தமிழக முதல்வருக்கு எதிராக அநாகரிகமான தாக்குதலை நடத்திய இலங்கை அதிபருக்கு ஆதரவாக தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்கள், யார் அளித்த துணிச்சலில் பேரில் இவ்வாறு செயல்பட்டுள்ளார்கள்? என்று தமிழர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.