Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, May 13, 2014
இந்திய ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நிலை படுமோசம்"
இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில், ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமை முறை உட்பட பல்வேறு தொழிலாளர் உரிமை மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் நடப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு எஃப் ஐ டி ஹெச் (Federation Internationale de Droits Human) என்ற மனித உரிமை தொண்டு நிறுவனம் ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது.
நூற்றாண்டு பழமையான கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்
இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே காலியாக உள்ள அர்ச்சகர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரி பொதுவான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பொலிசார் மீது கண்ணிவெடித் தாக்குதல்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நிலக் கண்ணி வெடியில் சிக்கி காவல்துறையினர் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கத்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியின் ஊடாக காவல்துறையின் சிறப்புப் படையினர் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாவோயியக் கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பை அடுத்து பொலிசார் மாவோயியவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டையொன்றும் நடந்துள்ளது.
இந்திய தேர்தலில் பாஜக வெற்றி: எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள்
நடந்துமுடிந்துள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், வாக்களித்த மக்களிடம் நடத்தப்படும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன.
"எமக்கு உதவி வேண்டாம்: சொந்த நிலங்களே வேண்டும்" என்கின்றனர் சம்பூர் மக்கள்:-
எமது கஸ்ரங்களுக்கு உதவி வேண்டாம். எம்மை சொந்த நிலத்திற்கு செல்ல விடுங்கள் என சம்பூர் மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விட்டுள்ளனர்.
சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை கிழமை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் தங்கியிருந்த மணல்சேனை, பட்டிக்குடியிருப்பு ஆகிய முகாங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தஅ போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,ம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் உள்ளனர். இவர்களை சனிக்கிழமை (10) நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்று பார்வையிட்டோம். கடுமையான வெயிலில் அந்த மக்கள் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருக்க முடியாமல் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.
மூதூரிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றால்இ சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைக்கு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம் எங்களை எமது சொந்த இடங்களுக்கு அனுப்பினால் எங்களுடைய அரைவாசி வருத்தம் குறைந்து விடும் என அந்த மக்கள் எம்மிடம் தெரிவித்தனர். 700 குடும்பங்களைச் சேர்ந்த 3000பேர் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்கு போக முடியாது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை இங்குள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்க வந்த நிறுவனம் ஒன்றினை இராணுவம் வழங்க அனுமதி கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது.
இதேபோல், மீன் வியாபாரியோ, உடு துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியோ இந்த முகாமுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி நினைத்தால் அந்த மக்களின் நிலத்தை அவர்களுக்கு உடன் வழங்க முடியும். தமது சொந்த குடும்ப தேவைகளுக்காக அந்த நிலத்தை வைத்துக்கொண்டு 3000 மக்களின் வாழ்வை சீரழிக்காமல் அவர்களின் பரிதாப நிலையை கருத்திற்கொண்டு சம்பூர் மக்களின் நிலத்தை அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது எனவும் இதன் போது சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.
இம் மக்களுடனான சந்திப்பில் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்களான இராமலிங்கம் ராமேஸ்வரன், வேலாயுதம் மோகன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், வவுனியா தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் (பாபு), கூட்டமைப்பின் பிரமுகரான வேலாயுதம் நாகராசா (சங்கர்) ஆகியோரும் கலந்து கொணடனர்.
மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு:-
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
-------------------------------------------------------------------------------
இந்திய இலங்கை மீனவர் சமூகங்களுக்கு இடையில் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கைக் கடற்பரப்பில் தொடர்ந்தும் மீன்பிடிக்க அனுமதியளிக்குமாறும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில வாரங்களுக்காகவேனும் அனுமதிக்க வேண்டுமெனவும் இந்திய மீனவர்கள் கோரியுள்ளனர்.
-------------------------------------------------------------------
இவ்வாறு அனுமதியளிப்பதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என யாழ்ப்பாண மீன-----வர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
-------------------------------------------------------------------
இந்த நிலையில் இரு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கை
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கடந்த 6ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் இரு தரப்பிற்கும் இடையில் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------
குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
சீனாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்
Friday, May 9, 2014
கடலிலும் தங்கவேட்டை...கதறும் சுற்றுச்சூழலியலாளர்கள்!
உலகின் எந்த மூலையில் இயற்கை வளங்கள் இருந்தாலும், அவற்றை கண்டுபிடித்து மனித பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிற சம்பவம். காடுகள், மலைகள், சமவெளிகள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களில் இயற்கை வளங்களான தாதுக்கள், கனிமங்களை வெட்டியெடுத்தான் மனிதன். அதில் தங்கம், வைரம், தாமிரம், இரும்பு, நிலக்கரி, பெட்ரோலியம் என பூமியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பட்டியலின் நீளம் அதிகம். கனிமங்களை தேடுவதில் கடலை மட்டும் விட்டு வைத்திருந்தான். அதிலும் சில இடங்களில் கடலின் நடுப்பகுதியில் பெட்ரோலியத்துக்காக குழாய்கள் இறக்கப்பட்டிருந்தாலும் சில நாடுகளே இந்த முயற்சியில் இறங்கியிருந்தன.இந்நிலையில், தற்போது தாமிரம், தங்கத்தை எடுப்பதற்கான பணிகளில் இறங்கிவிட்டது பப்பூவா நியூ கினியா. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் கடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் தன் பணிகளை செவ்வனே அது தொடங்கியுள்ளது.
சமீபத்தில் கனடா நாட்டு Nautilus Minerals என்ற தனியார் நிறுவனம், பப்பூவா நியூ கினியா ஆழ்கடல் பகுதியில் கனிமங்களை தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் தங்கம், தாமிரம் மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.கடலில் வாழும் பல உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் சுமார் 1500 மீட்டர் (1.5 கிலோமீட்டர்) ஆழத்தில் இந்த பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆழ்கடலில் இருக்கும் பவளப் பாறைகள், குன்றுகள், மணல் பகுதியில் ராட்சத இயந்திரங்களையும் இறக்கியுள்ளது. இதற்காக பல விலையுயர்ந்த கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டிலிருந்து கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான முயற்சி நடந்து வந்தது. ஆனால் விதிமுறைகள், அது இதுன்னு பல தடைகளுக்கு பின்னரே தற்போது தொடங்கியுள்ளது.
சர்வதேச கடல்படுகை ஆணையமும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது. வருங்காலங்களில் கடல்மட்ட பகுதியில் கனிமங்கள் எடுப்பதற்கான விதிமுறைகளையும், வழிமுறைகளையும் உருவாக்கி வருகிறது ஆழ்கடல் பகுதியில் கனிமங்கள் எடுப்பது இதுவே முதல் முறையென்றாலும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டால் தான் விளைவுகள் என்னவென்று அறிய முடியும் என்று கனிமங்களை வெட்டியெடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
பூமியில் எந்த பகுதியையும் விட்டுவைக்காத மனிதன், அடுத்து கனிமங்களுக்காக பயணிக்கும் இடம் செவ்வாய் கிரகமோ, சந்திர கிரகமாகவோ இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி எதையும் சாத்தியமாக்கும் முனைப்பில் வேகமாக இயங்கிக்கொண்டு வருகிறது. ஆங்காங்கே இயற்கை வளங்களை சுரண்டி எடுத்துக்கொண்டிருப்பதன் விளைவை உலக வெப்பமயம், பருவகால மாற்றம் என அனுபவித்துக் கொண்டு வருகிறோம். இப்போது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விலும் கைவைத்துவிட்டோம். தொடர்ந்து ஆழ்கடல் பகுதியும் சுரண்டப்படும்போது, வனவிலங்குகள் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வருவதுபோன்று, கடல்வாழ் உயிரினங்களும் இடம் பெயரும் காலம் வருவதற்கு வெகுதூரம் இல்லை.
do not drink any product of Frooti, added his blood contaminated with HIV (AIDS)
Urgent forward
NOTE:
Important msg from Delhi police to all over India:
For the next few weeks do not drink any product of Frooti, as a worker from the company has added his blood contaminated with HIV (AIDS). It ws shown yesterday on NDTV... Pls forward this msg urgently to people you care... Take Care!!
Share it as much as u can.
Wednesday, May 7, 2014
சர்ச்சைக்குறிய மூலப்பொருளை நீக்க கோகோ கோலா ஒப்புதல்
நியூயார்க்: உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தனது குளிர் பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்' அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை கோகோ கோலா நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, மவுண்ட் அன்ட் டியூ போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பதை அறிந்ததால் உலகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆன் லைனில் கோகோ கோலா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து மனுக்கள் குவிந்தன. சர்ச்சைக்குறிய மூலப்பொருளை நீக்க கோகோ கோலா ஒப்புதல் இதையடுத்து ‘பிவிஒ'வை நீக்கும் முடிவை கோகோ கோலா எடுத்துள்ளது. இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட ரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் கோகோ கோலா நிறுவனத்துக்கான செய்தித்தொடர்பாளர் ஜாஷ் கோல்ட் தெரிவித்தார். கோகோ கோலாவின் இந்த முடிவு, தனியார் நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த பொருள் கலக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு தடை உள்ளது. கடந்த ஆண்டே பெப்சி நிறுவனம் இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டது நினைவு கூறத்தக்கது.
ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறவே முடியாது: ராஜபக்சே திட்டவட்டம்
கொழும்பு: ஈழத் தமிழர் வாழும் இலங்கையின் வடபகுதியில் இருந்து ராணுவ முகாம்களை அகற்றவே முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜபக்சே கூறியுள்ளதாவது: ஈழத் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறவே முடியாது: ராஜபக்சே திட்டவட்டம்! இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் நாடு முழுவதும் ராணுவம் முகாம்களை அமைத்து நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றது. தமிழர்கள் வாழும் வடபகுதியில் மட்டுமல்ல சிங்களவர் வாழும் அம்பாந்தோட்டையிலும் ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்களை மூடிவிட தயாராக இல்லை. அதே நேரத்தில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை படிப்படியாக பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றபடி குறைக்கப்படும். இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.
ராகுல், ராப்ரி தேவியின் தொகுதிகள் உள்பட 64 தொகுதிகளில் இன்று 8ம் கட்ட லோக்சபா தேர்தல
மொத்தம் 64 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 543 இடங்களை கொண்ட மக்களவைக்கு 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
--------------------------------------------------------------------------------------
இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 8வது கட்டமாக சீமாந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 7 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகள் என 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த 64 தொகுதிகளில் மொத்தமுள்ள 1737 வேட்பாளர்களின் தலைவிதியை 18.47 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
----------------------------------------------------------------------------
இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தொகுதியிலும், பா.ஜ.க பொதுச் செயலாளர் வருண் காந்தி அதே மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் முகமது கைப் பூல்பூர தொகுதியிலும், காஷ்மீர் முன்னாள் முதலமைசரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவருமான முசாபர் உசேன் பெய்க் பாரமுல்லா தொகுதியிலும், ஒய்.எஸ்.ஆர்.
-------------------------------------------------------------------------------
காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயாம்மா விசாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனார். அதே போல பிகாரில் லோக் ஜன் சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஹாஜிபூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி சரண் தொகுதியிலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியும் போட்டியில் உள்ளனர். இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா மண்டி தொகுதியிலும்), முன்னாள் முதல்வர் பிரேம் குமாரின் மகனும் தற்போது எம்.பியுமான அனுராக் தாகூர் ஹமீர்பூரிலும் மற்றும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் புரந்தேஸ்வரி, பல்லம் ராஜு ஆகியோரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இந்த 64 தொகுதிகளில் 2009ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------
இந்த வாக்குப் பதிவுக்குப் பிறகு கடைசி கட்டமாக வரும் மே 12ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல்: ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுடன், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
Monday, May 5, 2014
எப்படி கண்டறிவது?
எப்படி கண்டறிவது?
சமையல் காஸ் சிலிண்டர் மீது, ஜனவரி - மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டு ஆய்வு A--14 என, குறிப்பிடப்படும். இதில் A என்பது முதல் காலாண்டையும் 14 என்பது காஸ் சிலிண்டரின் உறுதி தன்மை காலாவதி ஆண்டையும் (2014) குறிப்பிடுகிறது.ஏப்ரல் - ஜூன் வரையான இரண்டாம் காலாண்டு ஆய்வு B--14 என்றும், ஜூலை - செப்டம்பர் வரையான மூன்றாம் காலாண்டு ஆய்வு C--14 என்றும், அக்டோபர் - டிசம்பர் வரையான நான்காம் காலாண்டு ஆய்வு D--14 எனவும் சிலிண்டரின் மேல் பகுதியில் குறிப்பிடப்படும்.'காலி சிலிண்டரில் எல்.பி.ஜி., நிரப்பும் போது, சிலிண்டரின் நம்பகத்தன்மையை பரிசோதனை செய்து காஸ் நிரப்ப வேண்டும். காலாவதியான காஸ் சிலிண்டர்களை புழக்கத்தில் விடக்கூடாது' என்பது கண்டிப்பான விதிமுறை. ஆனால், சில நேரங்களில் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், விதிமுறையை முறையாக கடைபிடிப்பதில்லை. காலாவதியான காஸ் சிலிண்டரிலும் காஸ் நிரப்பி புழக்கத்தில் விடுவதாக கூறப்படுகிறது. இவற்றை, நுகர்வோர் புறக்கணித்து, டீலருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். சிலிண்டர் சப்ளை செய்யும் முன்பாக, டீலர்களும் இதை பரிசோதித்து, ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அந்த நிறுவனங்கள், காலாவதி சிலிண்டர்களை புழக்கத்திற்கு அனுப்புவதை, மத்திய அரசு தடுக்க வேண்டும் என்கின்றன, நுகர்வோர் அமைப்புகள்.
Friday, May 2, 2014
Thursday, May 1, 2014
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் சிவிலியன் மோட்டார் டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------
பணியின் விவரம்:
-----------------------------------------------------------------------------------
1. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 3 இடங்கள் (பொது).
-----------------------------------------------------------------------------------
தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி. இலகு மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு ஆட்டோ மொபைல் பழுது பார்ப்பும் அறிந்திருப்பது அவசியம்.
-----------------------------------------------------------------------------------
வயது: 27.4.2014 அன்று 18 முதல் 32க்குள்.
-----------------------------------------------------------------------------------
2. பல்நோக்கு பணியாளர்: 13 இடங்கள். (பொது - 7, எஸ்டி - 2, ஒபிசி - 4)
-----------------------------------------------------------------------------------
தகுதி: மெட்ரிகுலேசன்.
-----------------------------------------------------------------------------------
வயது: 27.4.2014 அன்று 18 முதல் 25க்குள்.
-----------------------------------------------------------------------------------
எழுத்துத்தேர்வு, திறனறியும் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
-----------------------------------------------------------------------------------
விண்ணப்ப கட்டணம்:
-----------------------------------------------------------------------------------
ரூ.50. இதை 'General Manager, High Explosives Factory, Khadka, Pune' என்ற பெயருக்கு புனேயில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
-----------------------------------------------------------------------------------
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://ofbindia.gov.in/units/index.php?unit=hef என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
-----------------------------------------------------------------------------------
The General Manager,
High Explosives Factory,
Khadki,
PUNE,
MAHARASHTRA.
PIN: 411 003.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 42 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள்
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள எக்னாமிஸ்ட், செக்யூரிட்டி ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------
பணியின் விவரம்:
----------------------------------------------------------------------------------------------
1. எக்கனாமிஸ்ட்: 2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1).
----------------------------------------------------------------------------------------------
வயது: 31.12.2013ன்படி 21 முதல் 35க்குள்.
----------------------------------------------------------------------------------------------
தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் (எஸ்டி வகுப்பினருக்கு 55 சதவீதம் போதுமானது) மற்றும் பொருளியல் பாடத்தில் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் (எஸ்டி வகுப்பினருக்கு 50 சதவீதம் போதுமானது) மற்றும் கம்ப்யூட்டர் அறிவு, 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------
சம்பளம்: ரூ.19,400 - 700/ 1 - 20100 - 800/ 10 - 28100.
----------------------------------------------------------------------------------------------
2. செக்யூரிட்டி ஆபீசர்: 40 இடங்கள் (பொது - 20, எஸ்சி - 6, எஸ்டி - 3, ஒபிசி - 11)
----------------------------------------------------------------------------------------------
வயது: 31.12.2013ன்படி 21 முதல் 35க்குள்.
----------------------------------------------------------------------------------------------
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் இந்திய ராணுவம் அல்லது கப்பற்படை அல்லது விமானப்படையில் குறைந்தது 5 ஆண்டுகள் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது துணை ராணுவப்படையில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------
சம்பளம்: ரூ.14,500 - 600/ 7 - 18700 - 700/ 2 - 20100 - 800/ 7 - 25700.
----------------------------------------------------------------------------------------------
விண்ணப்ப கட்டணம்:
----------------------------------------------------------------------------------------------
பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி. மற்றும் எஸ்டியினருக்கு ரூ.100. இதை நெட் பேங்கிங் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் ஜூனில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
----------------------------------------------------------------------------------------------
விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.
----------------------------------------------------------------------------------------------
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.5.2014.
Subscribe to:
Posts (Atom)










