Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, January 20, 2014

அமெரிக்காவின் இன்னொரு இந்தியப் பிரச்னை 'நரேந்திர மோடி': டைம்ஸ் பத்திரிகை

இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. இந்நிலையில், 2002 குஜராத் கலவரங்களைக் காரணம் காட்டி, பொறுப்பில் இருந்த நபர் கலவரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அமெரிக்கா மோடிக்கு விசா மறுத்து வந்தது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்தக் கலவரங்களில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று தீர்ப்புகளைக் கூறி வந்த நிலையிலும், அமெரிக்காவின் போக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தால், அது அமெரிக்காவின் இந்தியா குறித்த வெளியுறவுக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவுக்கான இன்னொரு பிரச்சனையாக இருக்கும் என்றும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

.. பாதுகாப்பு வேண்டாம் என்று கெஜ்ரிவால் .கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டம்.

டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று பிடிவாதமாக கூறியுள்ளார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலைக் கடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், உஷாராக இருக்குமாறும், பாதுகாப்பை பலப்படுத்துமாறும் டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லி காவல்துறையும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வரைச் சந்திக்க டெல்லி கூடுதல் காவல்துறை ஆணையர் திட்டமிட்டுள்ளார். கெஜ்ரிவாலிடம் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளார். அதேசமயம், தனக்கு எந்தவகையான விஐபி பாதுகாப்பும் தேவையில்லை என்று கெஜ்ரிவால் டெல்லி காவல்துறைக்குத் திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதற்காக கெஜ்ரிவாலைக் கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்திருக்க இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி செய்தியாளர் கொம்லா டுமொர் காலமானார்

பிபிசி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 41. திடீரென்று மாரடைப்பு காரணமாக லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொம்லா டுமொர் உயிரிழந்தார்.கொம்லா டுமோர், அவரது தலைமுறையில் உருவான முன்னணி ஆப்பிரிக்க ஊடகவியலாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது சொந்த நாடான கானாவின் அதிபர் ஜோன் ட்ராமனி மகாமா, 'தமது நாடு உலகுக்கு பரிசளித்த மனிதரே கொம்லா டுமொர்' என்று வர்ணித்துள்ளார். தமது நாட்டின் மிகச்சிறந்த அடையாள- தூதர்களில் ஒருவரை கானா இழந்துவிட்டது என்றும் அதிபர் கூறியுள்ளார். ஆப்பிரிக்காவுக்கான பிபிசியின் முதலாவது தினசரி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முன்னணி தொகுப்பாளராகவும் கொம்லா டுமொர் அண்மை முதல் பணியாற்றிவந்தார். அதற்கு முன்னர் கானாவில் வானொலி ஒன்றிலும் பிபிசியிலும் அவர் பணியாற்றிவந்தார். 'கொம்லா டுமொர் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்த ஒரு திறமையான ஒலிபரப்பாளர், மற்றவர்களோடு அன்புடனும் மகிழ்ச்சியாகவும் பழகியவர்' என்று பிபிசி உலகசேவையின் செய்தியாசிரியர் அன்றூ வைட்ஹெட் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் 20 படையினர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 20 படையினராவது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 30 பேர் இதில் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் அதிகம் நடக்கும் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பிராந்தியத்துக்கு அருகே ஒரு பாதுகாப்புத்துறை வளாகத்தில் இருந்து படையினரை ஏற்றிய இந்த வாகனம், புறப்படத் தயாரான போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தலிபான்கள் கூறியுள்ளார்கள். இது ஒரு தற்கொலைத் தாக்குதலா அல்லது குண்டு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் தாக்குதலில் 21 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபூலில் உணவு விடுதி ஒன்றில், நடந்த தாக்குதலில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த மேலும் விபரங்கள் வந்துள்ளன. தாக்குதலாளி விடுதியின் வாயிலில் தனது குண்டை வெடிக்கச் செய்ததுடன், அதனை அடுத்து இரு துப்பாக்கிதாரிகளும் சுட்டு இருக்கிறார்கள்.தனது துப்பாக்கியை எடுக்க முயன்ற அந்தக் கடையின் லெபனானிய உரிமையாளரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். முன்னைய தாக்குதல் ஒன்றை அடுத்து அங்கு அவர் மேலதிக பாதுகாப்பு போட்டிருந்தார். உள்ளூர் அதிகாரிகள் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், புலன்விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். பர்வான் மாகாணத்தில் கடந்த வாரம் நடந்த அமெரிக்க வான் தாக்குதலுக்கான பதிலடியாக தாம் இந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்

சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது. ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது. பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன.

ராஜபக்ஷ குடும்பத்தின் வளர்ப்பு மகள் நான் - ஹிருனிகா:-

ராஜபக்ஷ குடும்பத்தின் வளர்ப்பு மகள் நான்' என மத்திய கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எவராலும் தம்மை பிரிக்க முடியாது எனவும், ஜனாதிபதி குடும்பத்தின் வளர்ப்பு மகளே தாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தமது சகோதரர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏதேனும் முறைப்பாடு இருந்தால் உடனடியாக அழைத்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் தாம் குறிப்பிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது அரசியல் எதிர்காலம் மிகவும் சவால் மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு தடைகளை எதிர்நோக்கி வந்ததாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தையை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரையில் தாம் ஓயப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முயலைப் போன்று வேகமாக பாய்ந்து செல்லாது ஆமையைப் போன்று நிதமானமாக தமது பயணத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விக்கி VS மகிந்த - தெல்ல்லிப்பளையில் ஒரே மேடையில் மோதிக்கொண்டனர்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையே இன்று பகிரங்கமாக இடம்பெற்ற கருத்து மோதல்' அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய்சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மேதலில் ஈடுபட்டுக்கொண்டனர். முதலமைச்சர் தனது உரையில் வடக்கில் தொடரும் இராணுவப்பிரசசனம் உள்ளிட்ட விடயங்களை விலாவாரியாக முன்வைத்திருந்தார். இராணுவப் பிரசன்னத்தால் வடக்கில் மக்களின் வாழ்வு சவாலாகியிருப்பதாகவும் சிவில் நiடைமுறைக்கு வடக்கை கொண்டுவர வேண்டும் எனக் கோரியிருந்தார்.அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கு முதலமைச்சருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை. கடந்தகாலத்தில் மிக குறுகிய தூர இடைவெளியில் பல படைமுகாம்கள் காணப்பட்டன. அப்போது 75ஆயிரம் படை யினர் வடமாகாணத்தில் இருந்தார்கள். இன்று அந்த முகாம்கள் மிக குறைக்கப்பட்டுள்ளது. படையினரின் எண்ணிக் கயும் 12ஆயிரமாக குறைக்கப் பட்டுள்ளது. படையினர் முழு நாட்டிலும் இருக்கவேண்டுமென உறுதியாகத் தெரிவித்தார்.

ஓய்வுபெறவுள்ள எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்?

ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் மூலம் தெரியவருகிறது. விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதன் பின் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக கடமையாற்றும் பிரசாத் காரியவசம், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிகிகப்பட்டு இருந்தார். எனினும், ஜாலியவின் நியமனம் குறித்த அறிவித்தலை கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இதேவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்த கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற கருணாதிலக அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள தாக அரசாங்க தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம் -அ.நிக்ஸன்-

ஆட்சிமாறினால் இலங்கையில் அமைதி ஏற்படும் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என கருதுகின்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பான தங்கள் சிந்தனையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்--- -ஆட்சியை தக்க வைக்கின்ற நீண்ட நிகழ்ச்சி நிரலும் அதற்கு ஏற்ப சர்வதேச நாடுகளை தங்கள் பக்கம் வரவைக்கின்ற ஏற்பாடுகளுடன் மாத்திரமே வெளியுறவு அணுகு முறை நகர்ந்து செல்கின்றது. தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசாங்கத்திற்கு நிரந்தரமான வெளிநாட்டுக் கொள்கை என ஒன்று இல்லை. இலங்கை அரசியலமைப்பில் வெளிநாட்டு கொள்கை என கூறப்பட்டிருந்தாலும் அரசாங்கம் மாறுகின்போது அந்த கொள்கையும் மாற்றமடையாத முறையில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அதாவது எழுதப்பட்ட ஒரு நெகிழாத் தன்மையை வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கவில்லை. ஆனாலும்; ஜே.ஆர் ஜயவர்த்தனா காலத்தில் இருந்து சந்திரிகா பண்டாரநாயக்கா காலம் வரை இனப்பிரச்சினை விடயத்தில் வெளியுறவு கொள்கை என்பது ஒர் நேர் கோட்டில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கட்சி அரசியல்: இலங்கையில் தேசிய கட்சிகள் என்று கூறப்படுகின்ற இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது ஐக்கிதேசிய கட்சி. இந்த இரு கட்சிகளும்தான் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை மாறி மாறி ஆட்சி புரிந்துவருகின்றன. வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் சீனச்சார்பு அதிகமாக இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியிடம் அமெரிக்காவை முதன்மைப்படுத்திய மேற்குல நாடுகளுக்கு வளைந்து கொடுக்கும் கொள்கை அதிகமாக காணப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் சீனச்சார்பு இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் ஏற்ப செயற்படும் பண்பும் காணப்பட்டது. இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறிய 1983ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அரவனைத்துச் செல்ல வேண்டிய ஒரு நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பங்கரவாத பிரச்சினையாக முதலில் காண்பித்தவர் ஜே. ஆர்; ஜயவர்த்தனா. அதன் நீட்;சிதான் இன்றுவரையுள்ள அரசாங்கத்தில காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பது இரண்டு பிரதான விடயங்களை கொண்டிருந்தது. ஒன்று பொருளாதார ரீதியிலான தேடல், இரண்டாவது வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றை ஆட்சி தன்மைக்குள் ஒரு தீர்வை உருவாக்குதல். சர்வதேசம் ஆதுரவு இலல: சர்வதேச ரீதியாக ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா 1983 ஆண்டு இனக்கலவரம் நடைபெற்று ஓய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு அன்று கூறியிருந்தார். அதனடிப்படையில்தான்; இலங்கையின் எதிர்கால வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும் எனவும் கூறினார். 18 திருத்தங்களுடன் 1978ஆம் அவரால் உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அந்த யாப்பின் கீழான ஒற்றை ஆட்சியை மேலும் பலப்படுத்த முற்படுகின்றது. ஜே.ஆரை தொடர்ந்து பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதிகளும் அதைத்தான் விரும்பினார்கள். ஆனாலும் முன்னாள் ஜனாதிபதிகள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மை ஒன்றை கொண்டிருந்தன. ஜே.ஆர் ஜயவர்த்தனாவும் சந்திரிகாவும் வௌ;வேறுபட்ட கடசிக் கொள்கைகளை கொண்டிருந்தாலும் அரசாங்கம் என்ற தளத்தில் இருந்துகொண்டு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரே பார்வையில் சிந்தித்தனர். ஆனால் அந்த சிந்தனை இனப்பிரச்சினைக்கு நேர்த்தியான தீர்வை கொண்டு வர வேண்டும் என்று இருந்ததாக கூற முடியாது. ஆனாலும் இலங்கையின் சர்வதேச நாடுகளை ஆத்திரமடையச் செய்யும் அளவிற்கு அல்லது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்தும் முறையில் அந்த சிந்தனைகள் இருக்கவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்தான் இலங்கை வெளியுறவுக் கொள்கையின் நிலை தலைகீழாகியது. ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்:- 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் தளர்வு ஏற்பட்டு அது அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் கூட்டுச் சேர்கின்ற நிலைக்கு மேலும் தள்ளியது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அமெரிக்க எதிர்ப்பு கொள்ளை ஆரம்பித்தது என கூறினாலும் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க உதவி தேவைப்பட்ட காரணத்தினால் எதிhப்பை கொஞ்சம் அமர்த்தி வாசிக்க வேண்டிய நிலை உருவானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதற்காக அமெரிக்காவும் போருக்கு உதவவில்லை. மாறாக விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையில் 1997ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அமெரிக்க இராஜதந்திரி ரிச்சாட்ஆமிரேஜ் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகளை சேர்த்தமைக்கு காரணம் சொன்னபோது அந்த தகவல் தெளிவாக புரிந்தது. 2004 ஆம் ஆண்டு ரிச்சாட் ஆமிரேஜ் கொழும்புக்கு வந்தபோது சர்வதேச ரீதியாக அச்சறுத்தல் விடுக்கக்கூடிய பயங்கரவாதிகளை அழிப்போம் என கூறியிருந்தார். இதுதான் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதனால் இலங்கை அமெரிக்காவுக்கு எதிரான கொள்கையை பின்பற்றினாலும் அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவியது. ஆனால் போர் முடிந்ததும் தாங்கள் சொல்வதை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கேட்கும் என அமெரிக்கா நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை.