Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, April 4, 2014
ஜெனீவா தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்ணைக் கவ்வவைக்க முடியும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------
அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்ததாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------------
ஜெனீவாவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமும் நாட்டுக்கு எதிரானது அல்ல, அவை இறுதிகட்ட போரின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிரானவையே என அவர் கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
நாட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக ஜெனீவா தீர்மானம் காணவில்லை என்றும், போர் நிறுத்த காலமான 22.2.2002 முதல் போர் முடிவடைந்த 19.5.2009 வரையிலான பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
இலங்கை அரசுடன் தமது கட்சிக்கு பல விஷயங்களில் முரண்பாடு இருந்தாலும், ஆட்சியிலிருந்து வெளியே வருவது சரியான நிலைப்பாடு இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------
அரசாங்கத்தின் அணுகுமுறையையே தாங்கள் குறை கூறுவதாகவும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.
ஐ.நா தீர்மானம் காரணமாக இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை – அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமாக இலங்கையில் மிக நீண்ட காலமாகவே இன சமூகங்களுக்கு இடையில் பிரிவினை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே இலங்கையில் இன சமூகங்களுக்கு இடையில் பிளவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் ஐக்கியத்தை வலியுறுத்தியே இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் ஸ்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பொறிமுறைமையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக மட்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிரியா, பர்மா, லிபியா, மாலி, ஹெய்டி, தென் சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டிருந்தது என சிசன் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)