Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, January 24, 2014
வண்டலூரில் மோடி கூட்டத்தில் கலந்து கொள்வேன்: வைகோ அறிவிப்பு
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
இதில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.என். லெட்சுமணன், மோகன் ராஜுலு, மாநில செயலாளர் வானதிசீனிவாசன், சரவண பெருமாள், சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., சதன்திருமலைக்குமார், மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது வண்டலூரில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8–ந்தேதி நடைபெறும் நரேந்திரமோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்றுக் கொண்ட வைகோ நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, எங்களது ஒரே இலக்கு 578 தமிழக மீனவர்களை கொன்று குவித்தபோதும் பாராமுகமாய் இருந்த காங்கிரசை, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்பதுதான்.
காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமை பெற்று இருப்பது பா.ஜனதா. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றி பெறும்.
வருகிற தேர்தல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி: ரங்கசாமியுடன் பா.ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை
புதுவை மாநிலத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரசுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஒரு சுற்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் லட்சுமணன், தேசிய செயலாளரும் தமிழக அமைப்பு செயலாளருமான மோகன்ராஜுலு ஆகியோர் புதுவை வந்தனர்.
ஓட்டல் அண்ணாமலையில் தங்கி இருந்த பாரதிய ஜனதா தலைவர்களுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவை முதல்–அமைச்சருமான ரங்கசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் பொது செயலாளர் பாலன், செயலாளர்கள் ஜெயபால், ஞானம், வக்கீல் பக்தவச்சலம், பாரதிய ஜனதா மாநில தலைவர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் இருந்தனர்
பழங்குடி சமூகத்திற்கு வெளியே காதலித்த பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு தண்டனை
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த பழங்குடி பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பழங்குடியினத்தை சாராத ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர் இந்த தண்டனையை அளித்துள்ளனர்.
20 வயதான அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இழந்த மரியாதையை மீட்பதாக கூறி தவறிழைக்கும் ஜோடிகளை கொலை செய்ய இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் அனுமதி அளிப்பது அடிக்கடி நடக்கும் ஒரு செயலாக நீடிக்கிறது.
2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது. அந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ள பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பிர்பம் என்ற பக்கத்து கிராமத்தில் பழங்குடியினத்தை சாராத ஒரு ஆணுடன் உறவு வைத்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
காதல் செய்த குற்றம்’
‘'கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களுக்கு இடையில் இந்தக் காதல் தொடர்பு இருந்தது. திங்கட்கிழமையன்று இந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்க அந்த பெண்ணின் இல்லத்திற்கு அந்த நபர் வந்ததை கண்டதும் கிராமத்தினர் தங்களின் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். அதில் விசாரணை நடக்கும் பொழுது இருவரும் கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்'', என்று பிபிசியிடம் கூறினார் பிர்பம் காவல்துறை உயர் அதிகாரி சி.சுதாகர்.
காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு இந்திய பணம் 25000ரூபாய் அபராதத்தை கிராமத்தின் தலைவர் விதித்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத்தொகை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. பின் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான அந்த கிராமத்தின் தலைவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டார் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார். அவளது குடும்பத்தினால் பணம் கட்ட இயலவில்லை, அதனால் அந்த பெண்ணை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று அந்த தலைவர் கூறியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்த கட்டப்பஞ்சாயத்து தலைவர் உட்பட இதுவரை 13 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்தாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் புதன்கிழமை மாலைதான் காவல் துறையை அணுகினர். புதன்கிழமையன்று அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2010ஆம் ஆண்டில் பிர்பம் என்ற இந்த கிராமத்தில் குறைந்தது 3 பெண்களையாவது நிர்வாணமாக கிராமத்தினர் முன்னர் நடக்க கிராம பெரியவர்கள் உத்தரவிட்டதாக, காவல் துறையினர் கூறுகின்றனர். அந்த பெண்கள் அவர்கள் பிறந்த பழங்குடி இனத்தை சாராத ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது.
பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவில் பொதுவான ஒரு செயல் என்றும், அதில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படாமல் சென்றுவிடுகின்றன என்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்தச் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னமும் காவல்துறையின் அக்கறையின்மை காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர்.
அமெரிக்க பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை
வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அமெரிக்க பெண்கள் பாதிப்பு அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 27 அமெரிக்க இந்திய பெண்கள் 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது.
என்னை பிரதமராக தேர்வு செய்தால் ஏற்றுக் கொள்வேன்: ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட மாட்டார் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் அறிவித்தார். ஆனாலும், கட்சியினர் மத்தியில் ராகுல் பிரதமார் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும், தனி நபரை பிரபலப்படுத்தும் முயற்சியாகும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள தான் தயாராக இருக்கிறேன். கட்சிக்குள், பிரதமராவது யார் என தேர்வு செய்வது எம்.பி.க்கள் உரிமை. அதை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி.க்களால் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதே போல் என்னையும் தேர்வு செய்தால் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.
விஜயகாந்த், பிரேமலதா சென்னையில் போட்டியிட விருப்ப மனு
டெல்லி: ‘‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு அளித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் 23.01.2014 வியாழக்கிழமை முதல் விருப்ப மனு கொடுக்கலாம்'' என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 1-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 23ம் தேதி காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் சுதீஷ் இதை தொடங்கி வைத்தார். விருப்ப மனுக்களை வாங்குவதற்காக காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர். பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.
அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வாதிகாரியாக இனம் காட்டுகிறது-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் நடவடிக்கைகள் அவருக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன. மேலும் மேலும் அதிகாரத்தைத் தம்வசப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அவரைச் சர்வாதிகாரி என்று அடையாளங்காட்ட அனுசரணையாக இருந்து வருகின்றன. அண்மைக்காலங்களில் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றே சகல நாடுகளிலும் குரல் எழும்பி வருகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமை; கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் :
ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் தொலைபேசியில் சந்திப்பு தொடர்பாக உரையாடியதாக அரசாங்க தகவல்கள் கூறின.
இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என அரசாங்கம் கூறிய நிலையில் தற்போது ஜெனீவா மாநாட்டை முன்னிட்டு சந்திப்பதற்கான எற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை – காவல்துறை
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் சுமார் 42 பேரின் உடல் எச்சங்கள் மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் தொடர்ந்தும் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
உக்ரெயின் அரசாங்கம் பதவி விலகாவிடில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க முடியாது - எதிரணி எச்சரிக்கை:-
Ukraine இன் முன்னாள் ஜனாதிபதி ரி (T)மோஷெங்கோ (Timoschenko), அரசாங்கம் ராஜினிமா செய்வதற்காக இறுதிச் சந்தர்பமாக இன்று மாலை வரை நேரம் குறித்துள்ளார். தரப்பட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கம் ராஜினாமா செய்து கொள்ளத்தவறின் இரத்தாறு Kiew நகரில் பெருகுவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ருஷ்ய நாட்டின் உடைவிற்குப் பின் இதுவரையில் காணாத சனத்திரள் வீதிகளில் இறங்குமென்றும், சுதந்திரத்திற்கான உத்வேகம் ( Janukowitsch ) ஜனுக்கோவிற்ச் இன் ஆயுத மிரட்டலைவிடப் பலம் பொருந்தியதென உணரவைக்கப்படும் என விற்றலி கிலிற்ஷ்கோ தெரிவித்துள்ளார்
சுதந்திர சதுர்க்கத்தில் குழுமி உள்ள மக்கள் தங்களைச் சுற்றி வெண்பனியால் நிரப்பப்பட்ட கோணிகள், தகரப்பீப்பாக்கள், வேறு பல தளபாடங்கள் கொண்டு தற்காலியப் பாதுகாபுத்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர், மைதானத்தைச் சுற்றி tyre கள் எரிக்கப்படுவதால் விளையும் கரும் புகை, சுதந்திர சதுர்க்கத்தை நிரப்பியும், விரும்பத்தகாத மணத்திப் பரப்பியும் நிற்கும் நிலையில் மைதானம் ஒரே பரபரப்பாகக் காணப்படுகிறது.
முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலரும், கிலிற்ஷ்கோ போன்ற எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களும் மூன்று மணி நேரமாக, ஜனுக்கோவிற்ச்சுடன் நடாத்திய பேச்சு வார்த்தை எவ்வித பயனும் அளிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதியும் தற்சமயம் சிறையில் இருக்கும் பெண் ஜனாதிபதியுமான Timoschenkao, எதிரணிக்கு சகலரும் ஒத்தாசையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, பாதுகாப்புப் படையினரை எதிரணிக்கு சார்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்களைத் திருப்பி இப்புரட்சியின் வெற்றிக்கு உதவி புரியுமாறும் அறை கூவல் விடுத்துள்ளார்.
இறுதியாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளின் பிரகாரம் புரட்சி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. அத்தோடு பல இளம் யுவதிகளும் இளம் வாலிபர்களும் படையினரால் கடத்தப்பட்டு இரகசியமான சிறைகளில் அடைக்கப்பட்டும் வருகின்றனர்.
உக்ரேனின் பிரதமர் நிக்கோலை அஷரவ் ராஜினாமா செய்யக்கோரி, உக்ரேன் பாராளுமன்றத்தின் அவசரகாலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கீயிலுள்ள ( Kiew ) ஜனாதிபதி விக்ரர் ஜானுகோவிற்ச்சிற்கு அறியத்தரவும் பட்டுள்ளது.
ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி:-
சிரியாவின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியும் ஒமாமாவின் மௌனமும் - அவர் மீதான விமர்சனங்களும்:-
அமெரிக்க ஜனாதிபதி Barack Obama இன் அரசியல் நிலை பலதரப்பட்ட விமர்சனங்கள் மத்தியில் மிகவும் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ளது.
சிரியா யுத்தத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை எவ்விதத்திலும் வெற்றி அளிக்காததும், Barack Obama தன் அதிகாரத்தை உபயோகிக்காது மெளனம் சாதித்ததும் விமர்சனங்களுக்கு முக்கிய கருவாக அமைந்துள்ளது.
வெளிவிவகாரச் செயலராக முன்னைய அமெரிக்க அரசாங்கத்திற் கடமையாற்றிய Hillary Clinton, சர்வதேச விடயங்களில் அமெரிக்கா சற்று தீவிர ஊக்கத்தோடு செயற்பட வேண்டிய காலகட்டமிது எனக் குறிப்பிட்டுள்ளார். இரசாயன ஆயுதங்களைத் தன் சொந்த மக்கள் மேல் உபயோகித்துக் கொல்லும் நாட்டு அரசாங்க விடயங்களில் தலையிடுவதற்கும், அச் செயலை உடனடியாக நிறுத்தாது போகின் ஆயுதத் தாக்குதலை நிச்சயம் நட்ததப் போவதாக மிரட்டுவதற்குமான சரியான நியாயம் அமெரிக்கா பக்கம் இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் Barack Obama ஆல் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது. மத்திய கிழக்கு அரசியற் பிரச்சனைகளில் அமெரிக்கா தீவிரமாக இயங்குமென்றும், அணு ஆலைப் பிரச்சனை சம்பந்தமாக ஈரானுடன் நெருங்கிய பேச்சு வார்த்தையை நடத்துமென்றும் Irak - Afghanistan நாடுகளிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ளுமென்றும் கூறிய விடயங்களை, அந்த விஞ்ஞாபனத்தில் சுட்டிக் காட்டியதுபோல் நடந்து கொண்டமையும் எவ்வித எதிர்வாதமுமில்லாத Obama வின் வெற்றிகளாகும்.
சுதந்திரத்திற்கான Noble பரிசு பெற்ற போது பேசிய பேச்சிலும் Obama வின் அரசியல் சித்தாந்தம் தெளிவாக அமைந்திருந்தது. அப் பேச்சின் போது ஆயுதம் தரியாத சொந்த மக்களைக் கொல்லும் அரசாங்கத்தின் கொடூரத்தை அல்லது உள்நாட்டுக் கலகத்தை ( Civil War ) நிறுத்துவதற்கு மனிதாபிமான முறையிலான பிற நாட்டின் இரானுவ நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அழுத்தமாகக் கூறியிருந்தார். மேற் கூறிய போர்ச் செயலிற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளையம் கையாளாது இருந்தால் நம் அறிவிற்கு உகந்த்தாக அமையாது,. அல்லாமலும் அது மிகவும் மோசமான இழப்புக்கள் மலிந்த நேரம் தாமதித்த தலையீட்டிற்கும் வழி வகுக்கும் என்றும் கூறியிருந்தார்.
மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக் யுத்தத்திலும், Afghanistan இலும் நடாத்திய அர்த்தமற்ற போர்களினால் பெற்ற கசப்பான அனுபவத்தால், சொந்த தேசத்தைக் கட்டியெழுப்பி, அதில் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களையும், கல்வி மருத்துவ வசதிகளையும், சம உரிமையையும் பெற்றுத்தரும் வேலைத்திட்டத்தில் Obama அரசாங்கம் அதிக ஊக்கமெடுப்பது நியாயமாகப் படினும், அமெரிக்கா தன் அரசியல் இரானுவப் பலத்தை முறையாகப் பாவிப்பின் சிரியா யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரலாமெனும் உண்மையை அலட்சியம் செய்வது மனிதாபிமானமில்லை என்கிறது மேற்கத்தேய சார்பு விமர்சகர்களின் பார்வை.
கச்சதீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை:
கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மேலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதல்களிலில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாத்திடும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று (23.01.14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆதன் போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடல் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் அவரவர் நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள முழு இறையாண்மையை அந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைப் பிரச்சினையும், கச்சத் தீவு யாருக்கு சொந்தம் என்பதும் ஏற்கெனவே முடிந்து போன பிரச்சினை.
கச்சத் தீவுப் பகுதியைப் பொறுத்தமட்டில் இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் அங்கு செல்லலாம். அங்குள்ள அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை நம் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை.
இந்தச் சூழலில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதபடி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆத்துடன்;, இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)







