Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, November 13, 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு: தஞ்சையில் வைகோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். அதற்கு வைகோ நான் பிரச்சினை எதுவும் செய்ய வரவில்லை. என்னை கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்றார். பின்னர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில் தான் இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த நினைவு முற்றத்தின் காம்பவுண்டு சுவர், நீருற்று, பூங்கா ஆகியவற்றை அதிகாரிகள் இடித்து சேதப்படுத்தி உள்ளார்கள். இதனை மன்னிக்க மாட்டேன். இந்த நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் உள்ளிட்டோர் சிலை உள்ளது. அதனை இடிக்க அதிகாரிகளுக்கு எப்படிதான் மனம் வந்ததோ. இந்த நினைவு முற்றம் தமிழர்கள் சொத்து. இது இடிக்கப்பட்டது திட்ட மிட்ட செயல். இதனை நீதிமன்றத்தில் சந்திப்போம். இவ்வாறு வைகோ கூறினார். பின்னர் அவர் அங்குள்ள மாவீரன் மன்றத்தில் அமர்ந்து இருந்தார். அவருடன் தொண்டர்களும் உட்கார்ந்து இருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவுற்றம் இன்று காலை அதிகாரிகளால் முன்னறிவிப்பு எதுவும் இன்றி இடிக்ப்பட்டு எல்லை போட்டுசென்றுள்ள நிலையில் அதனை மக்கள் உணர்வாளர்கள் அகற்றி முற்றுகையிட்டுள்ளார்கள் இன்னிலையில் சற்று முன்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். காவல்துறையினர் கைதுசெய்துள்ளதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலைய காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிப்ளமோ தகுதிக்கு இந்தியன் ஆயில் கழத்தில் உதவியாளர் பணி

கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள Engineering Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineering Assistant Grade IV (Mechanical) காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.11,900 - 32,000 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். பணி: Engineering Assistant Grade IV (Electrical) காலியிடங்கள்: 01 சம்பளம்: ரூ.11,900 - 32,000 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்து 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2013

இந்தியன் ஆயில் கழகத்தில் பணி

குஜராத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேற்கு மண்டல பைப்லைனில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineering Assistant பிரிவு: மெக்கானிக்கல் சம்பளம்: ரூ.11,900 - 32,000 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: Engineering Assistant பிரிவு: எலக்ட்ரிக்கல் சம்பளம்: ரூ.11,900 - 32,000 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: Technical Assistant காலியிடங்கள்: 09 சம்பளம்: ரூ.10,500 - 24,500 கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 10.12.2013 தேதிப்படி 26-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் அனுபவம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2013

ONGC நிறுவனத்தில் டெக்னீசியன் உதவியாளர்

Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Asst Technician and Jr. Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 13 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: 01. Assistant Technician (Electronics) A2 Level - 08 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Electronics/ Telecom/ E&T Engineering பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: 02. Jr Fireman W1 Level - 05 வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் Fireman Training மற்றும் Driving License வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் written test, personal interview, physical standard test, physical efficiency test மற்றும் driving test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. மேலும் விண்ணப்பிக்கும் முறை, இதர சலுகைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013

இலங்கை அரசு போர்க்குற்றங்களை மறைக்க நினைக்கிறது:ஆஸி., செனட்டர் குற்றச்சாட்டு

சிட்னி : இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் அந்நாட்டு அரசு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்களையும், மனிதஉரிமை மீறல்களையும் மறைக்க விரும்புவதாக ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் குற்றம்சாட்டி உள்ளார். இலங்கை போரின் போது ஏராளமான போர் குற்றங்கள் புரிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடந்துவது சர்வதேச அளவில் பல நாடுகளிடையே கண்டனத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், அங்கு சென்று வந்த ஆஸ்திரேலிய செனட்டர் இலங்கை அரசு குறித்து வெளிப்படையான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது

இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு

போர்ட் லூயிஸ்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது. இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்குகிறது. இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். தமிழக தலைவர்களின் வற்புறுத்தலால், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது, மொரீஷியஸ் நாடும் சேர்ந்துள்ளது. இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுப்புற சுவர்கள் இடிப்பு!

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுப்புற சுவர்கள் நான்கு பாரிய இயந்திரங்கள் கொண்டு தமிழக ஆட்சியாளர்களினால் இடிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்கள் மற்றும் பூங்காக்கள் இடிக்கப்பட்டுள்ளதுகடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த இந்த முற்றம் அது கட்டி முடிக்கும் வரை எந்த இடையூறும் ஏற்படாத நிலையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எல்லா நடவடிக்கையினையும் சட்டபூவர்வமாக எதிர்கொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் பல்வேறு அரசின் அழுத்தங்கள் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கடந்த 6ஆம் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை திறந்துவைத்து அதன் நிகழ்வுகைள நடத்தியிருந்தார் .