Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, June 24, 2014

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், சட்டக்கல்லூரி மாணவி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ------------------------------------------------------------------------------- தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை சட்டக்கல்லூரி மாணவியான சுகந்தி என்பவர் சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். -------------------------------------------------------------------------- திங்கட்கிழமை தந்தை ஆனந்த் உள்ளிட்ட சிலருடன் சுகந்தி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தார். இவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ------------------------------------------------------------------------- அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் கூற, ஏற்க மறுத்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பழ.நெடுமாறன், மாணவி சுகந்தி உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பதுளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
----------------------------------------------------------------------- தலைநகர் கொழும்பை அண்டிய பாணந்துறை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோ லிமிட் என்ற உடுதுணிக் கடை தீக்கிரையான சம்பவத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ----------------------------------------------------------------------- அவ்வேளையில், கொழும்பிலிருந்து தொலைவில் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பதுளை நகரில் இருந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். ----------------------------------------------------------------------- இதனையடுத்து ஹெலிகாப்டரில் உடனடியாக விரைந்த ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏஎச்எம் பௌசி உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். ----------------------------------------------------------------------- இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் பொலிஸ் மா அதிபர் என்.பி. இலங்ககோன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். ----------------------------------------------------------------------- முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் வன்முறைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்வதாக இதன்போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார். ----------------------------------------------------------------------- '(ஜனாதிபதி) பொலிஸ்மா அதிபருக்கு எங்களுக்கு முன்னால் மிகக்கடுமையான உத்தரவை பணித்தார்... அதாவது சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது, அவர்கள் எந்த மதத்தையோ தரத்தையோ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்' என்றார் அமைச்சர் ரிசாத் பதியுதீன். ----------------------------------------------------------------------- இதனிடையே, அண்மைக்கால அசம்பாவிதங்கள் தொடர்பில் உயர்மட்டக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் குறுந்தகவல் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.