Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 2, 2014

பாஜகவின் கூட்டணியில் வைகோ, ராமதாஸ்,விஜயகாந்த், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து!!

வைகோ (மதிமுக ) காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பாமக: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் பாஜக தலைவர் ராஜ்நாத்தை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாமகவும் பாஜக அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பச்சமுத்து, ஈஸ்வரன் : ஏற்கெனவே பாரதிய ஜனதா அணியில் இணைந்துவிட்டதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் பச்சமுத்து அறிவித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் இணைய இருக்கிறது. புதுவை ரங்கசாமி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸும் பாஜக அணியில் இணையக் கூடும் என்று தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக ஆதரவில் நடைபெற்ற வல்லபாய் படேலின் பிறந்த நாள் விழாவில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்ட போதே இது உறுதியாக தெரிய வந்தது.

பா.ஜ., கூட்டணியில் மதிமுக இடம்பெறும்: வைகோ

பா.ஜ., கூட்டணியில், மதிமுக இடம்பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதனை தெரிவித்துள்ளார். பா.ஜ., கூட்டணியில் முதல் வரவாக, தமிழகத்தில் இருந்து மதிமுக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற, சக்தி வாய்ந்த, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரசை தோற்கடிப்பதற்காக அதற்கு மாற்று சக்தியாக விளங்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம்; கூட்டணிக்கான பூர்வாங்க பேச்சு நடைபெற்று வருகிறது; பிப்ரவரி 04ம் தேதி நடைபெறம் கட்சியின் பொதுக் குழுவில் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும். நாடு முழுவதும் மோடி அலை வீசுவது உண்மை; வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தோல்வியுறச் செய்து பா.ஜ., தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையும்; மோடி நிச்சயம் பிரதமராவார்; லோக்சபா தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டால் உசிதமாக இருக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம்; மதிமுக.,வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காகவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்; வரும் லோக்சபா தேர்தலில் மதிமுக வெற்றி பெற்று தமிழக மக்களின் வாழ்வாதரத்தை பேணும் விதமாகவும், ஈழ தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும் பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன். சமீபத்தில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நான் மேற்கொண்ட பயணத்தின் போது கிராமங்களில் மக்களிடம் நல்லதொரு வரவேற்பு இருந்தது; மக்களின் கவனம் மதிமுக.,வின் பக்கம் திரும்பி உள்ளது; மக்களின் இந்த வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது; தேர்தல் பணிக்காக பொருளாளர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 3 முதல் 4 மாதங்களாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது; ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஊழலற்ற அரசியலை ஏற்படுத்துவதற்காகவும் உறுதி பூண்டுள்ளோம்; சுயமரியாதை கருதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்; கொள்கைக்கு புறம்பாக மீண்டும் அத்தகையதொரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என நானோ எனது கட்சி தொண்டர்களோ ஒரு போதும் விரும்பவில்லை. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை இந்தியாவால் கட்டப்பட்ட பத்தாயிரம் வீடுகள்

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கூறியிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும். கலந்தாய்வோடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2013 ஆம் ஆண்டில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது என்று இந்திய துணைத்தூதரகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 10,184 வீடுகளும், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக இரண்டரை இலட்ச ரூபா செலவில் திருத்தியமைப்பதற்காக 100 வீடுகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இது வரையில் பயனாளிகளுக்கு இலங்கை ரூபா 7.8 பில்லியன் (ஏறத்தாள இந்திய ரூபா 355 கோடி) நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. பிறந்துள்ள 2014 இல் மேலும் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுதி 17,000 வீடுகளும் 2015 இல் பூர்த்தியாக்கப்படும் என இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக 2013 வைகாசி 22 இல் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இம் மாகாணத்தில் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 66 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும் 400 வீடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் மற்றைய மாவட்டங்களில் விரைவில் திட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் வடமாகாணத்தில் 39,000 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகளும் கட்டி முடிக்கப்படும். மலையக வீடுகள் இந்திய வீடமைப்புதிட்டத்தின் மூன்றாவது கட்டம், மத்திய, ஊவா மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் முறையில் 4,000 வீடுகள் கட்டும் பணி சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளினால் காணிகள் விடுவிக்கப்பட்டு, தேவையான காணி பண்படுத்தல் முடிவடைந்ததும் 2014 ஏப்பிரல் மாதமளவில் ஆரம்பிக்கப்படும். இந்திய அரசாங்கத்தால் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிபுணர் ஒருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். நான்காவது கட்டம், முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாங்களே வீடுகளை கட்ட முடியாத நிலையிலுள்ள உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 4,000 வீடுகளை 2014 இல் நிர்மாணித்தலைக் உள்ளடக்கியது. முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடமாகாணத்தில் 1000 வீடுகள் கட்டும் பரீட்சார்த்தமான திட்டம் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் 2012 ஜுலை மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது. இம் முழுத்திட்டமும் இந்திய அரசின் முழுமையான மானிய உதவித்திட்டத்தின் கீழ் இந்திய ரூபா 1372 கோடியில் (இலங்கை ரூபா 30 பில்லியன்), நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது இந்திய அரசாங்கத்தால் ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய திட்டமாகும் என்றும் இந்தியத் துணைத் தூதரகம் கூறியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையின் கீழ் தேர்தல்:-

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய வட்டார முறையின் கீழ் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கமைவாக மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு, மண்முனை மேற்கு, எருவில்பற்று, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று, போரத்தீவுப்பற்ற ஆகிய 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரிய வேதி ஆயுத ஏற்றியிறக்கலுக்கான பாதுகாப்பு

சிரிய வேதி ஆயுத ஏற்றியிறக்கல் கடமையைப் பேணிக்காக்கும் சீன ராணுவ கப்பல், மத்திய தரை கடலுக்கு புறப்பட்டது என்று சீனக் கடற்படையின் செய்தித்தொடர்பாளர் லியாங் யாங் 31ம் நாள் தெரிவித்தார். இவ்வாண்டு செப்டம்பர் திங்களில் வேதிய ஆயுத தடுப்பு அமைப்பு மற்றும் ஐ.நா பாதுகாப்பவை அங்கீகரித்த சிரிய வேதி ஆயுத ஒழிப்பு தீர்மானம் மற்றும் 2118வது தீர்மானத்தின் படி, சிரியாவின் வேதி ஆயுதங்கள், சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றிச்சென்று, ஒழிக்கப்படும். சீனா, ரஷியா, டம்மார்க், நார்வை ஆகிய நாடுகள் இந்த ஏற்றியிறக்கல் கடமையைப் பேணிக்காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

36 பந்துகளில் சதம் அடித்தார் கொரே அண்டர்சன்

கோரி அண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையை நியுசிலாந்தின் கொரே அண்டர்சன் செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்லாண்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் கொரே அண்டர்சன் சதம் அடித்தார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஷகித் அப்ரிதி 37 பந்துகளில் 1996 ஆம் ஆண்டில் அடித்த சதமே உலக சாதனையாக இருந்து வந்தது. ஆட்ட நேர முடிவில் 23 வயதான அண்டர்சன் 131 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய இவர் 14 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். இரவு விடுதியில் தாக்கப்பட்ட கோமா நிலைக்கு சென்று திரும்பிய ஜெஸ்சி ரைடர் 51 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை அடித்தார். இந்த இருவரின் அதிரடி ஆட்டத்தால் 21 ஒவர்களில் நியுசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்திருந்து. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 21 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களே எடுக்க முடிந்தது.

ஷூமேக்கர் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்

மைக்கேல் ஷுமேக்கர் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல மோட்டார் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவரது மூளையிலுள்ள அழுத்தத்தை குறைப்பதற்காக, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கேனிலேயே, இந்த சிறிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் க்ரெநோபிலிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியர்கள் குழு, அவரது உடல் நிலை முன்னர் இருந்ததைவிட இப்போது மேம்பட்ட அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும் அவர் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று கூறியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை அவரது குடுபத்தாரிடம் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே நடைபெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவருக்கு அருகிலேயே உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் அவர் ஈடுபட்டிருந்தபோது, பாதையிலிருந்து விலகிச் சென்று வழுக்கி விழுந்த போது, ஒரு பாறையில் மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலை முன்னேறுவதற்கு உதவியாக மருத்துவ ரீதியாக ஆழ்நிலை உறக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் மசூதி மீது தாக்குதல்

இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களின் தாக்குதலுக்குள்ளானது. புஜபிட்டியா பிரதேசத்திலுள்ள முல்லேகம மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் குழுவொன்றினால் மசூதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகளும் உள்ளுர் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் இன ஐக்கியத்துடன் வாழும் இந்த பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவம் உள்ளுர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பௌத்த பிக்குமார்கள் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு ஆறுதல் கூறினர்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராதிகா சிற்சபேசன்

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள். மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தாங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை. இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என அவரிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் ஜெபமாலை கூறினார். "அழுத்தம் தொடரும்" ராதிகா சிற்சபேசன் போன்றோர் இலங்கையிலுள்ள பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாகவும் அவர் மேலும் கூறினார். கனடா கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டம் தொடர்பில் எடுத்த நிலைப்பாட்டுக்கு தங்களைப் போன்றோர் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என ராதிகா கூறியதாகவும் பங்குத் தந்தை ஜெபமாலை தெரிவித்தார்.
தான் கனடாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு அங்குள்ள அரசுக்கு மீண்டும் இலங்கை விஷயம் குறித்து அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களே ராதிகா சிற்சபேசனை மன்னார் பகுதிக்கு அழைத்து வந்தார் எனக் கூறும் ஜெபமாலை அவர்கள், அவரது பயணத்தின்போது பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்த கண்காணிப்போ அல்லது இடைஞ்சல்களோ ஏற்படவில்லை என்றும் பங்குத் தந்தை ஜெபமாலை கூறினார். இதனிடையே இலங்கை வந்திருக்கும் ராதிகா சிற்சபேசனை இலங்கை காவல்துறையினர் கண்காணிப்பதாகவும், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும், அவரை கைது செய்ய முயல்வதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை காவல்துறையினர் மறுத்துள்ளனர். ராதிகாவை தாங்கள் கண்காணிக்கவோ, கைதுசெய்யவோ, அச்சுறுத்தும் வகையில் நடத்தவோ இல்லை என்றும், அவரது நடமாட்டங்கள் எவையும் கட்டுப்படுத்தப்படவும் இல்லை என்றும் காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அதேபோன்று அவருக்கு எந்த பாதுகாப்பையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் அஜித் ரோஹன கூறினார்.

பேச்சுவார்த்தைகளுக்கு செல்கின்றனர் தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள்

ரெயிக் மச்சார் தெற்கு சூடான் தொடர்பில் எத்தியோப்பியாவில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு, தான் ஒரு குழுவை அனுப்புவதாக கிளர்ச்சித் தலைவர் ரெயிக் மச்சார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். எனினும் போர் நிறுத்தம் கிடையாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனிடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்(Bor) நகரை தெற்கு சூடானின் அரச படைகளிடமிருந்து, தமது படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் மச்சார் கூறுகிறார். தெற்கு சூடானில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தமது மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது என்று கூறி, கிழக்கு ஆப்ரிக்கத் தலைவர்கள் விதித்த காலக்கெடு முடிவடைந்த சில மணி நேரங்களில், போர் நகரை கிளர்ச்சிப் படையினர் தாக்கியுள்ளனர். கடந்த இரு வாரங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீருக்கு ஆதரவான படைகளுக்கும் இடையேயான மோதல்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு பிரவியுள்ளன.

சீனாவில் குழந்தைகளைத் திருடி விற்ற மருத்துவர் கைது

சீனாவின் வடக்குப் பகுதியில் மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகளைத் திருடி இடைத்தரகர்களுக்கு விற்றதாக பெண் மருத்துவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தைகளைக் கடத்தும் வலையமைப்புக்களுக்கு, அந்த இடைத் தரகர்கள் குழந்தைகளை விற்க அந்த மருத்துவர் உதவினார் என்று குற்றஞ்ச்சாட்டப்பட்டது. ழாங் ஷு ஷியா எனும் அந்த மகப்பேறு மருத்துவர் ஏழு குழந்தைகளை அந்த வகையில் விற்று சில ஆயிரம் டாலர்களை ஈட்டினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அக்குழந்தைகள் பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறந்தன என்று அந்த மருத்துவர், பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வந்த ஒரு தாய் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு புகார் செய்ததை அடுத்து, அந்த மருத்துவர் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வகையில் கடத்தப்பட்டு இடைத்தரகர்களிடம் கையளிக்கப்பட்ட ஏழு குழந்தைகளில் ஆறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன என்றாலும் அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. இதே கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது

ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கு தடை நீங்குகிறது ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.

"இளைஞர்களுக்கு விவசாயத்தில் நம்பிக்கையூட்டியவர் நம்மாழ்வார்"

தமிழகத்தின் பிரபல இயற்கை வேளாண்மை செயற்பாட்டாளர் நம்மாழ்வார் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 75. வேளான்மை சம்பந்தப்பட்ட கல்வியை அடித்தட்டு மக்களுக்கு எடுத்துச் சென்றதுதான் நம்மாழ்வார் அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு என்கிறார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். நவீன வேளான்மையின் பக்கவிளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் ராஜேந்திரன் கூறுகிறார். அவர் அளித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பல புதிய இளைஞர்கள் விவசாயத்தில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"தேவயானிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படாது "

தேவயானி கோப்ராகடே மீதான வழக்கை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா திரும்பத் திரும்ப கூறி வந்தாலும், தேவயானி மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று அமெரிக்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தன்வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை அவர் கொடுக்கவில்லை என்றும், அது தொடர்பில் விசா விண்ணப்பத்தில் அவர் கூறியிருந்ததை கடைபிடிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். நியூயார்க்கில் உள்ள இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்து கொண்டிருந்த தேவயானி கோப்ராகடே, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். தேவயானிக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 13 ஆம் தேதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும். அவருக்கு எதிரான பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியன்னா ஒப்பந்தம்
இதற்கிடையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்ஸி பவல் தனது புத்தாண்டு செய்தியில், தானும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியும் இந்தியத் தூதர் கைது செய்யப்பட்ட சூழல் குறித்து வருந்துவதாக மட்டுமே தெரிவித்துள்ளார். தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுவது குறித்து அவர் ஏதும் கூறவில்லை. எனினும் இந்த விவகாரம் இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான்சி பவல் தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ராஜதந்திரிகளுக்கு, உள்நாட்டு சட்ட முறைகளில் இருந்து வியன்னா ஒப்பந்தம், வழக்கு விலக்கு அளிப்பதாகவும், எனவே இந்தியத் தூதர் மீது அமெரிக்க சட்டத்தை பிரயோகிக்கக் கூடாது என்றும் இந்தியா வாதிடுகிறது. ஆனால் இந்தியாவின் தூதராக இருப்பவர் மட்டுமே வியன்னா ஒப்பந்தத்தின் படி முழு வழக்கு விலக்கு பெறத் தகுதியானவர் என்றும் மற்ற அதிகாரிகளுக்கு அலுவல் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே வழக்கு விலக்கு கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. வீட்டுப்பணிப் பெண்ணுக்கு குறைவான சம்பளம் கொடுப்பது அலுவல் தொடர்புடைய வேலையல்ல, எனவே இந்தக் குற்றம் தொடர்பாக தேவயானி மீது வழக்கு தொடரலாம் என்கிற நிலையை அமெரிக்கா எடுத்துள்ளது.

சென்னைக் கூட்டம் : இலங்கை மீனவர்களுக்குத் தெரியுமா ?

இலங்கையில் பெரும்பாலான மீனவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார். கடந்த பல நாட்களாக இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை சந்திப்பதற்காகவும், அவர்களது விடுதலை குறித்து விவாதிப்பதற்காகவும் இலங்கை சென்று வந்த நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். இருநாட்டு மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சென்னையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்த பிறகு இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ இக்கூட்டம் குறித்த தகவல்களை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். எனினும் இது குறித்த செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்தன என்றாலும், அரச தரப்பில் தமக்கு சென்னைக் கூட்டம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கூறப்படவில்லை என்று இலங்கை மீனவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அருளானந்தம் கூறுகிறார். படகுகளை விடுவிப்பதில் சிக்கல் இதேவேளை இருநாட்டு சிறைகளிலும் உள்ள மீனவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், உணவுப் பிரச்சினையால் சிரம்மப்படுகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைச் சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், பிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது என்றும் அவர் கூறினார். பிடிபட்ட படகுகளின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தால் மட்டுமே, படகுகளை விடுவிப்பது தொடர்பிலான வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் என இலங்கையில் வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்கள் தெளிவாகக் கூறிவிட்டன எனவும் அருளானந்தம் சுட்டிக்காட்டினார். சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு இதுவரை தமது தரப்புக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

டில்லியில் இலவச நீர் விநியோகம் வெற்றி பெறுமா?

டில்லிவாழ் மக்களுக்கு நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சாத்தியமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. அங்கு சிறுபான்மை அரசுக்கு தலமையேற்றுள்ள அரவிந்த் கேஜரிவால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறிவித்த முதல் கொள்கை முடிவில் டில்லி மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டில்லியில் நீராதாரங்கள் பெரிய அளவில் இல்லாத சூழலில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. இந்தத் திட்டத்தின் வெற்றி அண்டை மாநிலங்களின் ஆதரவை நம்பியே உள்ளது என்று கூறினார் சென்னையிலுள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் நீரியில்துறையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன். இலவசமாக இந்த அளவுக்கு நீரை வழங்குவதைவிட, குறைந்த செலவில் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை அறிவித்திருந்தால் அது வெற்றிபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்திருக்கும் எனவும் அவர் கூறினார். அதேவேளை நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக கொடுக்கப்படும்போது, அது கழிவு நீர் மேம்பாடு உட்பட பல உள்கட்டுமான வசதிகள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் டாக்டர்.பரசுராமன் வாதிடுகிறார். கழிவுநீர் மறுசுழற்ச்சி செய்யப்படுமா என்பது போன்ற விஷயங்கள் தெளிவில்லாமல் உள்ளது எனவும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.