Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 12, 2014

சாப்பிட்ட தட்டுகளைக் கழுவும் பில் கேட்ஸ்

கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் இளைய சமுதாயத்தினர் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------ அவரது முதலீடுகளின் வாயிலாக ஒவ்வொரு வினாடியும் 114.16 அமெரிக்க டொலர்களை வட்டியாக ஈட்டி வரும் பில் கேட்ஸ், இணையத்தினூடாக நேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------ அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ------------------------------------------------------------------------------------------------------ தினமும் இரவில் நான் சாப்பிட்ட தட்டுகளை நானே சுத்தம் செய்து வைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு விஷயம் உங்களுக்கு மன நிறைவை தருகிறது, என்றால் அதை செய்யுங்கள். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்றாகக் கூட இருக்கலாம். என்று தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------ மற்றுமொரு கேள்விக்கு, இப்போதும், தெருவில் 100 டொலர் தாள் கிடந்தால் அதை குனிந்து எடுக்க ஒரு நிமிஷம் கூட நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் தொழிலாளர் நலன் காக்க புதிய நடவடிக்கை

கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்வுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினர் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர். --------------------------------------------------------------------------------------------- அந்நாட்டில் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பிலான நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வலியுறுத்திய பிறகே இந்த பிரகடனம் வந்துள்ளது
கடந்த ஆண்டில் மட்டும் கட்டாரில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 185 நேபாள நாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் நல அமைப்பான ஐ எல் ஓ வுடன் இணைந்து, தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையிலான இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பிரகடனத்தின்படி, உலக்க் கோப்பைப் போட்டிகளுக்கான கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், மேம்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- ஆனால் இந்தப் புதிய பிரகடனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்று சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.புதிதாக வெளியிடபட்டுள்ள பிரகடனத்தின்படி கட்டாரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். --------------------------------------------------------------------------------------------- அதேபோல் வேலை செய்யும் இடத்தில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. --------------------------------------------------------------------------------------------- தொழிலாளர்கள் தமது குறைகளை தெரிவிப்பதற்கும் அவசர உதவி கோரியும் விண்ணப்பிக்கவும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

வடமாகாண ஆட்சியாளர்களுடன் ஐ நா அதிகாரி சந்திப்பு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் கூடிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதன் மூலம், அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைப் போக்குவதற்கும் விருப்பம் கொண்டுள்ளதாக ஐ நா வின் உயரதிகாரி கூறியுள்ளார். -------------------------------------------------------------------------------------------------------- யாழ்ப்பாணத்துக்கு பயணம் விஜயம் செய்த ஐநா மன்றத்தின் துணைத் தலைமைச் செயலரும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநனருமான ஹாயோ யிங் சூ வட மாகாண முதலமைச்சரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் வட மாகாணம் உட்பட பல பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் ஐ நா கூடுதலாக ஈடுபட முடியும் எனவும், அதற்காக ஆராய்வதற்காவே இந்தப் பயணத்தை தான் மேற்கொண்டதாக சூ அவர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார். -------------------------------------------------------------------------------------------------------- தங்களால் முடிந்த அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலே அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் முனைவதாக ஐநா அந்த உயரதிகாரி தம்மிடம் தெரிவித்தாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று ஐ நா வின் துணைத் தலைமைச் செயலரிடம் தான் வற்புறுத்தியுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். -------------------------------------------------------------------------------------------------------- அதேவேளை தமது தரப்பிலிருந்து ஐ நா அதிகாரியிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். -------------------------------------------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் போது, ஹாயோ யிங் சூ வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கைமீது சர்வதேச விசாரணை: பிரித்தானியா:-

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------ இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் தெரிவித்தார். ------------------------------------------------------------------------------------------------------ இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------------ இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------------------ நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்திரத்தன்மை போன்ற விடயங்களுடன் சிந்தித்து அரசாங்கம் இது தொடர்பில் செயற்பட வேண்டும். அதேபோன்றுஇ சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக இந்த பிரச்சனையில் தலையீடுகளை மேற்கொள்ள ஏனைய நாடுகளால் முடியும் என அவர் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------------------ அத்தோடு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தான் இது தொடர்பில் கடந்த இரண்டு தடவையும் ஆதரவாக பிரித்தானியா வாக்களித்து. இந்த விவாதம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------------------ எமது இராணுவம் பாரியளவில் குற்றங்கள் புரிந்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயற்பட்டோம் . அதேபோன்றுஇ உள்ளக தேசிய விசாரணையொன்றும் முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ------------------------------------------------------------------------------------------------------ அத்துடன் ஆப்கானிஸ்தானில் எமது நாட்டு இராணுவம் புரிந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். இவ்வாறு தேசிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார். ------------------------------------------------------------------------------------------------------ இலங்கைக்கு எதிரான தடைகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்குமா? என்று கேள்வி எழுப்பட்டபோது இதனை யாரும் செய்ய மாட்டார்கள். எனது அறிவிற்கு எட்டிய வகையில் சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்புவது இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க அல்ல என அவர் பதில் அளித்தார்.

இனப்படுகொலைக்கான தீர்வு எது? ஜெனீவாமீது குவியும் கவனம்!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் என்பது முக்கியமானதொரு மாதமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டினதும் மார்ச் மாதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தை இந்த உலகம் தமது தேவைகளுக்காகவும் அரசியலுக்காகவும் எவ்வாறு பலியிட்டதோ அதைப்போலவே இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. நிறைவேறாத எதிர்பார்ப்புக்களுடன் ஒவ்வொரு மார்ச் மாதங்களும் கடந்து செல்லுகின்றன. இதுவரையான ஜெனீவா மாநாடுகளில் இலங்கைக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக ஒரு படியைக் கடந்த சின்னத் திருப்தியை மட்டுமே அடைய முடிகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர இருக்கிறது.
-------------------------------------------------------------------------------- ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன? முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் போராட்டமும் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைக்கோரும் போராட்டமும் இன்னமும் ஓயவில்லை. முற்றிலுமாக அடித்து தகர்க்கப்பட்ட பொருளாதார கட்டமைப்பை இன்னமும் எட்டவில்லை. அழிக்கப்பட்டவற்றை மீள அமைக்க முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலயங்களை நிரந்தர வலயங்களாக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருக்கிறது. உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள வீடுகள் அழிக்கப்படுகின்றன. -------------------------------------------------------------------------------- காணிப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இராணுவ முகாங்களுக்காக காணிகள் அபரிக்கப்பட்டன. இப்போது கரும்புத் தோட்டங்களுக்காக, பயிர்ச் செய்கைகளுக்காக என்று பலதரப்பட்ட காரணங்களைச் சொல்லி மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கு எல்லைகளில் நில அபகரிப்பு நாளும் பொழுதுமாக அதிகரிக்கப்படுகிறது. தமிழ் மக்களை அவர்களின் தாயகத்திலிருந்து அழிக்கவும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் உச்ச கட்டமான நில - இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. -------------------------------------------------------------------------------- ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் புதிய புதிய வடிவங்களில் உருவாக்கட்டுக்கொண்டே இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வைத்து மாபெரும் குற்றங்கள் நிறைந்த போரின் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள்மீது எத்தகைய இனப்படுகொலை மேற்கொளள்ப்பட்டதோ அதோபோலவே தொடரும் இன ஒடுக்குமுறையை சிங்களப் பேரினவாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக தமிழ் மக்களை இந்த தீவிலிருந்து அழிக்கும் ஒடுங்கச் செய்யும் உளவியல் அரசியல் போரை செய்து தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். -------------------------------------------------------------------------------- முள்ளிவாக்காலுடன் ஈழப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. போராட்டத்தின் வடிவங்கள் மறலாம் இலட்சியம் மாறாது என்று தலைவர் பிரபாகரன் சொன்னதைப்போலவே இந்த உளவியலை போரை எதிர்கொள்ள வேண்டிய யுகத்திற்கு ஈழத் தமிழனம் தள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல தரப்பட்ட தரப்புக்களை உருவாக்கி இந்தப் போரை செய்து கொண்டிருக்கிறார். அவரின் முன்னணி அமைப்புக்களாக பொதுபலசேனா, இராணுவ பாலய போன்ற அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போரை இனவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றார். -------------------------------------------------------------------------------- ஆயுதப்போராட்டமற்ற ஒருபோராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழலுக்கள் ஈழத் தமிழினம் இருக்கிறது. இந்தப் போராட்டம் என்பது ஒவ்வொரு ஈழத் தமிழரிலும் தங்கியிருக்கிறது. தான் வாழும் நிலத்திற்காகவும் தன்னை சுற்றியுள்ள மக்கள் கூட்டத்திற்காகவும் எமது குழந்தைகளாக எதிர்காலச் சந்ததிக்காகவும் இலட்சிய அறத்தோடு வாழ வேண்டிய போராட்டம். விடுதலைப் புலிகளைப் போன்ற அமைப்பொன்று ஈழத் தமிழர்களுக்காக உருவாக்கிய நிழல் அரசை இழந்த ஈழத் தமிழ் சமூகம் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட அரசின் கீழ் எத்தகைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டும் என்பதுவே இந்தப் போராட்டம். -------------------------------------------------------------------------------- ஆயுதகளற்ற, புலிகளற்ற இன்றைய ஈழம் உலகத்தைப பார்த்து பல்லாயிரம் கேள்விகளை எழுப்பி நிற்கிறது. ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்திரித்தவர்கள்மீது ஈழத் தமிழர்கள் எதற்காக ஆயுதம ஏந்திப் போராடினார்கள் என்பதை வெளிப்படையாக இடித்தச் சொல்லுகிறது. இன்று ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்தான் ஈழத் தமிழர்கள் நடத்திய பல வகையான போராட்டங்களின் நியாயத்தை உணர்த்துவதாகவும் இப்போராட்டம் ஆயுதப்போராட்ட முறியடிப்போடு முடிந்துபோக முடியாது என்பதை உணர்வ்துவதாகவும் உள்ளது. -------------------------------------------------------------------------------- சுதந்திர இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஒடுக்கபட்டபோது தனிநாடு கோரிய போராட்டம் தொடங்கப்பட்டது. இன்று விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளபோது தங்கள் வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததிக்காகவும் ஈழத் தமிழினம் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட எந்த சமூகமும் போராட வேண்டிய நிர்பந்த்திற்கு ஆளாகியிருக்கிறது. தமிழர்களை நிம்மதியாக வாழ விடாமல் ஒடுக்கி அழிக்கும் திட்டத்தை மகிந்த அரசு தொடரும் வரையில் ஈழத் தமிழர்கள் போராட வேண்டியது தவிர்க்க இயலாதது. -------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஏன் அஞ்;சுகிறது? -------------------------------------------------------------------------------- வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியது முதல் யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்கiளை மதிப்பிடும் நடவடிக்கை முதல் பல்வேறு விடயங்களை மகிந்த ராஜபக்ச செய்திருப்பது எல்லாம் குற்றச் செயல்களிலிருந்து தப்பிக்கவே. இடையிடையே சில வல்லமை படைத்த நாடுகள் வலுவற்ற நாடுகளை அடக்க நினைப்பதாகச் சொல்லுகிறார். சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டை பிளவுபடுத்த நினைப்பதாகச் சொல்லுகிறார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறார் என்று தென்படுகிறது. -------------------------------------------------------------------------------- சில உலகநாடுகள் இலங்கைமீது கொடுக்கும் அழுத்தத்தைவிடவும் அதிகமான நிலையில் இலங்கை அரசின் அச்சம் காணப்படுகிறது. ஏனெனில் இலங்கை அரசு இழைத்திருப்பது அத்தகையதொரு மாபெரும் போர்க்குற்றம். மாபெரும் இனப்படுகொலை. தான் இழைத்த குற்றங்கள் என்னவென்று இலங்கைக்குதத் தெரியும். இந்த சூழ்நிலையிலும் நாங்களும் போர்க்குற்றம் செய்யத் தகுதி உடையவர்கள் என்பதுவே இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாதமாக இருக்கிறது. அவர் உலகப் போர்க்குற்றங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார். -------------------------------------------------------------------------------- இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்தையோ, அல்லது இலங்கை அரச படைகள் இழைத்த போர்க்குற்றங்களையோ இலங்கை அரசு மாத்திரமல்ல எந்தவொரு சிங்களக் கட்சியும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்காக அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்பப்பவர்களாகவும் ஸ்ரீலங்கா என்ற தங்கள் தாய்நாட்டின்மீது பற்றுக்கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்ற - இனப்படுகொலையின் மனித உரிமை மீறல்கள் குறித்தெல்லாம் எந்தவிதமான அக்கறையும் இல்லை. -------------------------------------------------------------------------------- நாட்டில் குண்டுவெடிப்புக்கள் ஓய்ந்துள்ளபோதும் ஜெனீவாவில் ஆறுமாத்திற்கு ஒரு தடவை குண்டுவெடிப்புக்கள் நடப்பதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுகிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் மகிந்த ராஜபக்ச இத்தகைய எண்ணத்தில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வேடிக்கை என்னவெனில் இலங்கை அரசு தானே ஒரு விசாரணையை நடத்த முயல்கிறது. அது எப்படி இருக்கும்? இங்கு இனப்படுகொலையாளிகளும் அதை விசாரிப்பவர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். அங்கு நீதி என்பது எப்படியிருக்கும்? -------------------------------------------------------------------------------- விசாரணையும் நீதியும் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை அரசின் யுத்த இழப்பை மதிப்பிடும் நடவடிக்கை இலங்கை அரச படையினரை காப்பாற்றம் விதமாகவும் விடுதலைப் புலிகள்மீது அனைத்து குற்றங்களையும் சுமத்தும் விதமாகவும் இருந்தது. ஜெனீவாவில் அந்த விபரங்களை கொடுத்த ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பலியெடுத்த, அதற்கு முன்புவரை பல லட்சம் மக்களை கொன்ற இலங்கை இராணுவத்தையும் அதனை ஆண்டவர்களையும் காப்பாற்ற இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய போர்க்குறறம் மற்றும் இனப்படுகொலையை செய்த இலங்கை அரசு நடத்தக்கூடிய எந்தவொரு கணக்கெடுப்பும் விசாரணையும் அவ்வாறு அமைந்திருக்கும் என்பது வெளிப்படையானது. -------------------------------------------------------------------------------- குற்றம் செய்த படைகளுக்கு தண்டணை வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் கூறுகிறார். இழைக்கப்பட்ட குற்றங்கள் ஒரு அரசியல் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும். அதன் போரிடும் மனோபாவத்தை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஒரு சில நபர்களுக்கு எதிரான தனிப்பட்ட அநீதி அல்ல. ஒரு இனத்திற்கு எதிரான மாபெரும் அநீதி. இந்தக் குற்றங்களுக்காக காரணங்கள் வெளிப்படையானவை. அவற்றக்கான தீர்வுகளும் வெளிப்படையானவை. -------------------------------------------------------------------------------- வரலாற்றில் இந்த அநீதி தொடரலாம் இருக்கவும் மீண்டும் ஒரு தடைவ அந்த ஊழி நடக்காமல் இருக்கவும் உலகில் வேறு ஒரு இனம் இவ்வாறு ஒடுக்கப்படாமல் இருக்கவும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது அவசியமானது. இலங்கை அரசும் தொடர்;ந்தும் தமிழ் மக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. சிங்கள இனவாதிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒடுக்கப்படும் ஈழமக்களுக்கு கிடைக்கும் நீதியென்பது இழப்புக்களிலிருந்து மீள்வதற்கும் சமகாலத்திற் மெற்கொள்ளப்படும் பழிவாங்கல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கும் நீதியான விசாரணையும் அதனால் பெறப்படும் தீர்வும் அவசியமானது. -------------------------------------------------------------------------------- எப்படியான தீர்மானம் வேண்டும்? ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக சில மென்ரகமான தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. சுயாதீன விசாரணை, மீள்குடியேற்றம், வடக்கு மாகாணசபைத் தேர்தல், இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்களை தவிர்க்க இலங்கை கடுமையாகக் போரடிய அதேவேளை தீர்மானங்களை நிறைவேற்ற உலகம் எங்கும் தமிழ் மக்கள் கடுமையாக போராடினார்கள். இந்த தீர்மானங்களுக்கான எதிர்வினையை 2013மார்ச்சிற்குப் பின்னரான காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைளுடன் தொடர்புடுத்திப் பார்க்க வேண்டும். -------------------------------------------------------------------------------- ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரிலும் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான போரிலும் பங்காளியாகவும் நடத்துனராகவும் உள்ள அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆண்டுதோறும் மார்ச்சில் அமெரிக்கா இந்த வகையான தீர்மானத்தைக் கொண்டு ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் பகைடையாட்டம் செய்கிறது என்றும் அவர்கள் சொல்லுகின்றனர். புலிகள் அழிக்க அமெரிக்கா உதவியது என்றும் அமெரிக்கா உலக நாடுகளில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்றும் கூறி இலங்கை அமெரிக்காவின் தீர்மானத்திலிருந்து தப்பிக்கொள்ள முயற்கிறது. -------------------------------------------------------------------------------- எப்படியான விசாரணை வேண்டும்? என்பதும் எப்படியான தீர்மானம் வேண்டும் என்பதும் இங்கு முக்கியமானது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ளச் செய்வதே பெரும்போராட்டமாக அமைந்துள்ளது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அந்த இனப்படுகொலையை செய்ய கொடூரமான போர்க்குற்றங்கள் நடத்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்வதென்பது பாதிக்கப்பட்ட இனத்தின் பெரும் போராட்டமாக அமைந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக உலகம் பார்க்கும்வரையில் அங்கு நடந்தது இனப்படுகொலை என்பது ஏற்றுக்கொள்ளாது. -------------------------------------------------------------------------------- ஒரு போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்திரித்து தமது அரசியல் நலன்களை சாதிப்பதுவே உலகத்தின் அரசியல் ஒழுக்கம் ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால்வரை நடந்த போராட்டத்தின் நியாயத்தையும் இன்றுவரை தொடரும் போராட்டத்தின் நியாயத்தையும் இணைத்துப் பார்ப்பது அவசியமானது. இரண்டுக்குமான நீதியும் விசாரணையும் ஒன்றாகவே அமையும். ஈழத் தமிழர்களை ஒரு இனமாகவும் அந்த இனத்திற்கு எதிரான அழிப்புக்கள் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக பல்வெறு வடிங்களில் தொடர்கின்றது என்பதையும் அந்த இனம் சுயாதீனமாக வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதே அதிலிருந்து தப்பிக்கொள்தற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கும் என்பதையும் உலகத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான தீர்வு எது? இலங்கை அரசினை மத்திய அரசாகக் கொண்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வலி வடக்கில் அழிக்கப்படும் வீடுகளை பார்க்க முடியாத அதிகாரம் படைத்தவராக உள்ளார். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் தனது ஒடுக்குமுறை நடவடிக்கை;ககு பாதகமற்ற அதிகாரங்களைக் கொண்டதாகவே வடக்கு மாகாண சபை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிட்டப்பட்ட வடமாகாண சபையினால் சிறு துரும்பையும் அசைக்க முடியாது. ஏனெனில் வடக்கு இராணுவத்தின் ஆட்சிகொண்ட பகுதி. இராணுவமும் இலங்கை அரசும் வடக்கில் மேற்கொள்வது தமிழின நில ஒடுக்குமுறை மற்றும் உரிமை ஒடுக்குமுறை. -------------------------------------------------------------------------------- ஈழத் தமிழர்கள் மாபெரும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான யுத்தத்திற்கு முகம் கொடுத்தார்கள். மனித உரிமை கூட்டத் தொடர் என்படும் நிகழ்வில் மனித உரிமை மீறல்கள் நடந்தது இனப்படுகொலை நடந்தது போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்ய கடுமையாக போராட வேண்டியுள்ளது. இதுவே உலகின் இன்றைய மனித உரிமைகளின் நிலவரமாகும். கியூபாகூட அமெரிக்காவை எதிர்பார்பதற்காக மாபெரும் போர்க்குற்றங்களை இழைத்த இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது. உண்மையில் இலங்கை - ஈழ யுத்தம் என்பது இனவொடுக்கமுறை குறித்த பெரும்பாடங்களை இந்த உலகத்திற்கு அளிக்கிறது. -------------------------------------------------------------------------------- ஒடுக்கப்பட்ட ஒரினத்தினை இந்த உலகம் எவ்வாறெல்லம் தனது அரசியலுக்காக பலியிடுகிறது என்பதும் மனித உரிமை என்பது அவரவர் நாட்டு அரசியலுக்கு ஏற்ப உருவாக்கப்படுகிறது என்பதும் முக்கியமானது. ஈழப் பிரச்சினை என்பது உலகப் பிரச்சினையாக மாறியுள்ளபோதும் ஈழத் தமிழர்களுக்கு உண்மையில் நடந்த அநீதியையும் அவர்கள் கோரும் நீதியையும் உலகம் வழங்க மறுக்கிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய போராட்டம் என்பது உலகமயப்பட்ட ஈழப் பிரச்சினையின் மெய்யான தோற்றத்தை ஏற்றுக்கொள்ளச்செய்தலும் அதற்கான சரியான தீர்வை பெறுவதுமாகே இருக்க வேண்டும். -------------------------------------------------------------------------------- இனப்படுகொலை மற்றும் இன ஒடுக்குமுறை என்பன அரசியல் பிரச்சினையினால் ஏற்பட்டது. போர்க்குற்றம் என்பது இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடே. எனவே அதற்கான தீர்வு என்பது ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதே. இலங்கை - ஈழப் பிரச்சினையில் சிங்களப் பேரினவாத ஒடுக்கமுறையிலிருந்து விடுபடுவதென்பது தனி ஈழத்திலேயே சாத்தியமானது. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்திற்கான தீர்வு என்பது இதுவாகவே இருக்கும். இந்த தீர்வு எட்டாதவரை இன ஒடுக்குமுறை;காக ஈழத்தில் இன அழிப்பும் நில அபகரிப்பும் முடிவுறாது.