சண்டிகாரில் செயல்பட்டு வரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Post Graduate Institute of Medical Education & Research) காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Lower Division Clerk - 63
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமலும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளுக்கு குறையாமல் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
02. Stenographer - 13
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளுக்கு குறையாமல் கேட்டு எழுதி அதனை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்கள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 07.12.2013 தேதிப்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 இதனை பவர்ஜோதி அக்கவுன்ட் எண்: 32211 613319 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.pgimer.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pgimer.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, December 5, 2013
மருத்துவ கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் பணி..
சண்டிகாரில் செயல்பட்டு வரும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Post Graduate Institute of Medical Education & Research) காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Lower Division Clerk - 63
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமலும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளுக்கு குறையாமல் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
02. Stenographer - 13
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளுக்கு குறையாமல் கேட்டு எழுதி அதனை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்கள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 07.12.2013 தேதிப்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 இதனை பவர்ஜோதி அக்கவுன்ட் எண்: 32211 613319 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.pgimer.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pgimer.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
யுரேனியம் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி
யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள டிரெய்னி(operational) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12
பணி: டிரெய்னி பணி
கல்வித்தகுதி: பிட்டர், எலக்ட்ரிசியன், டர்னர், பாய்லர் அட்டன்டண்ட் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ucil.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
நன்கொடை ரசீது மூலம் தேமுதிக கட்சி வளர்ச்சிக்காக நிதிவசூல் மும்முரம்: ரூ.50 லட்சம் திரட்ட உத்தரவு
அடுத்த ஆண்டு, மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலை சந்திக்க அகில இந்தியாவிலும் உள்ள கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒரு வேகம் தென்படுகிறது.
இந்த நிலையில், விஜயகாந்தை நிறுவனர் தலைவராகக்கொண்ட தே.மு.தி.க. ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், டெல்லியில் உள்ள சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் உள்பட புதுடெல்லி, ராஜேந்திர நகர், ஜங்புரா, மாள்வியா நகர், பாலம், ஜனக்புரி, ராமகிருஷ்ணபுரம் போன்ற 11 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. விஜயகாந்தும் 5 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருடைய மனைவி பிரேமலதாவும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில், அவரிடம், “பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு வைக்கப்போகிறீர்கள்?” என்று நிருபர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வோம்.
என்னுடைய தலைமையை ஏற்க யார் வந்தாலும் அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டது, அரசியலில், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. மிகவும் மும்முரமாக உள்ளது.
இதையொட்டி, கட்சி வளர்ச்சி நிதியாக நிதி வசூலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. தே.மு.தி.க.வுக்கு தமிழ்நாட்டில் 59 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையில், அந்தந்த மாவட்ட பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ரூ.5000, 10 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என்று, ரசீது புத்தகங்களை வைத்துக்கொண்டு நிதி திரட்டி வருகிறார்கள். அதிகபட்சமான ஒரு லட்சம் ரூபாய் ரசீதைவைத்துத்தான் முதலில், தங்கள் கட்சிக்காக நன்கொடை கேட்டு வருகிறார்கள்.
நன்கொடை கேட்கும்போது, காசோலையாகவும், கேட்பு வரைவோலையாகவும் (டி.டி.) தரவேண்டும் என்று கோருகிறார்கள். ஒவ்வொரு ரசீதின் பின்புறத்திலும் “தே.மு.தி.க.வின் வளர்ச்சி தமிழகத்தின் எழுச்சி” என்று மேற்புறத்தில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
அதற்கு கீழே, அன்பு, அறம், ஆற்றல், இயன்றதைச் செய்வோம்! இல்லாதவர்க்கே! லஞ்சம், ஊழல், வறுமையை ஒழிப்போம்!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் கொடுப்போம்! தமிழர் நலன் காத்திடுவோம்! தமிழக உரிமையை நிலைநாட்டிடுவோம்! படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்!
விவசாயிகளுக்கு நல்ல விதை, தரமான உரம், நல்ல விளைச்சலோடு, நல்ல விலையும் கிடைக்க செய்வோம்! தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்போம்! சாதி, மத, பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம்!
சிறந்த கல்வி, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்கச்செய்வோம்! நேர்மையான நீதி, தூய்மையான நிர்வாகம் மற்றும் துரிதமான செயல்பாடு அமைய செய்வோம்! ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை, சமபங்கு, சமவாய்ப்பு பெற்றிட வழிசெய்வோம்! உழைக்கும் தொழிலாளர்களின் நலன் காப்போம், அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்!” என்று அச்சிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா முழு அடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு
தெலுங்கானாவுக்கு பதிலாக, ராயல தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று தெலுங்கானா முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆந்திர மாநில பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர பா.ஜனதா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி கூறியதாவது:-
தெலுங்கானாவை ஆதரிப்பதாகவும், ராயல தெலுங்கானா யோசனையை எதிர்ப்பதாகவும் மந்திரிகள் குழுவிடம் நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். பல ஆண்டுகளாக மக்கள் ஒன்றாக வாழும் ராயலசீமாவை பிரிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் காஷ்மீர் மக்கள்
இந்தியாவிற்கு எண்ணற்ற பிரச்சினைகள் எத்தனையோ இருப்பினும் எல்லாவற்றிற்கும் தலையாய பிரச்சினையாக கருதப்படுவது காஷ்மீர் பிரச்சினைதான். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் இதுநாள் வரையில் தீர்க்கப்படாமல் நெடுந்தொடர்போல் நீடிக்கிறது இப்பிரச்சினை.
காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகள் இந்தியாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, அதன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999ல் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் நேருக்கு நேர் சண்டையிட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலிகொண்ட இந்த போர்களின் முடிவில் எல்லை தொடர்பாக சில ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதிலும், முழுமையான தீர்வுக்கு வழி ஏற்படவில்லை. மாறாக, இருதரப்பு உறவில் விரிசல்தான் அதிகரித்தது. அவ்வப்போது எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு சிறுசிறு தாக்குதல்களும் நடப்பதால் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது.
1999-க்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் முன்வந்ததால் ராணுவ மோதல்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து, உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் ஆயுதப் போட்டியும் தலைதூக்கிவிட்டது.
இந்த பதட்டத்திற்கு மத்தியில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்ததால், அமைதி பேச்சுவார்த்தைக்கும் வேட்டு வைத்துவிட்டது பாகிஸ்தான் ராணுவம். இதனால் காஷ்மீருக்காக மீண்டும் மோதும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் போக்கிலேயே அதன் அடுத்தகட்ட செயல்பாடுகள் அமைந்தன.
சமீபத்தில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இருநாட்டு பிரதமர்களும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காரசாரமாக பேசிக்கொண்டனர். அதன்பின்னர் எல்லையில் பதட்டம் தணிய ஆரம்பித்தாலும், அவ்வப்போது வெளியாகும் அறிக்கை மோதல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளன.
இதன் உச்சகட்டமாக, காஷ்மீருக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே 4-வது முறையாக எந்த நேரத்திலும் போர் ஏற்படும் என்று நவாஸ் ஷெரீப் இப்போது கூறியிருக்கிறார். தான் மடிவதற்குள் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்தே தீருவதாக அவர் சூளுரைத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி புதிய புயலை கிளப்பியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற மிரட்டும் தொனியில் நவாஸ் பேசவில்லை என்று அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படியும், ஐ.நா. தீர்மானத்தின்படியும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நவாஸ் தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களில் பதிலடி கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது, கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.
இதுபோன்ற வாய்ச்சவடால்கள் புதிய சர்ச்சைகளையும், விவாதங்களையும் மட்டும் தான் உருவாக்கும். அமைதியிழந்து இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மைக்கும் வழிகோலாது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கூறி வந்தாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது ‘சாண் ஏறினால் முழம் வழுக்கும்’ என்ற முதுமொழிக்கேற்ப, ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுகிறது. இந்த நிலை மாற இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?
மதுக்கடைகளை மூட வேண்டும்: வைகோ கோரிக்கை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக்கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகையில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன.
ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடையச் செய்கிறது. மதுக்கடைகள் இருக்கும் பகுதியில் பெண்கள் சென்றுவரவே அச்சப்படுகிற நிலைமை இருப்பதால், பொதுமக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனம் மூலம் அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 25–ல், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31–குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருக்கும் 504 மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் பேராபத்தை தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை மூட வலிறுத்தி, 1,200 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டேன். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் அழுகையும், கண்ணீருமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.
பேரழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் தமிழ்ச் சமுகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது. மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரே வழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது தஞ்சாவூரில்தான் என்றால் அதன் பெருமையும் முள்ளிவாய்க்கால் முற்றமும்
தமிழ்நாட்டு மாநிலத்தில் தஞ்சாவூர் வயலும் வயர்சார்ந்த இடமாக காணப்படும் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இடம்தான் தஞ்காவூர். சோழர் அட்சிகாலத்தில் தலைநகரமாக விளங்கியதும் இந்த தஞ்சாவூர்தான். தஞ்சாவூரில் உலக வரலாற்கு புகழ்மிக்க இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருங்கோயில் தஞ்சாவூரின் வரலாற்றினை எடுத்து சொல்கின்றது. அத்துடன் அல்லாமல் தமிழுக்கு என்று முதன்முதல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமும் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்தான் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டின் கலை பண்பாட்டினை வளர்ப்பதற்காக தென்னக பண்பாட்டு மையமும் தஞ்சாவூரில்தான் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் மெல்லிசைக்கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்பூரா போன்ற கருவிகள் இங்குதான் செய்யப்படுகின்றது. இவ்வாறு தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க தொன்மைகளும் பண்பாடுகளும் கொண்ட தங்சாவூரில் அமையப்பெற்றதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.
இந்த நினைவுமுற்றம் தஞ்சாவூரில் அமைப்பதற்கான காரணங்கள் பல உண்டு. ஆனால் தமிழர்களின் வரலாற்று சின்னமாக இன்றும் காணப்படும் தஞ்சாவூர் ஈழத்திமிழர்களின் வரலாற்று சின்னத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது இந்த ஊரில் வாழ்பவர்கள் பிறந்தவர்களை பெருமைகொள்ள வைக்கின்றது. இப்படிப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க முற்றமாகும். இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களின் வீரம், போர் உயிர்கொடை, தியாகிகளின் வரலாற்றினை பறைசாற்றி நிக்கின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டு இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 6ம் நாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகர்பகுதியில் அதாவது தஞ்சைமையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விளார் சாலையில் திருச்சி - நாகபட்டினம் நெடுஞ்சாலைக்கு அருகில் விளார் தஞ்சாவூர் வீதியில் மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் பூங்காவும் அதனை சார்ந்த நீர்தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்சுற்று மதிலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உலகத்தமிழர் இலச்சினைகள் பொறிக்கப்பட்டு மின்விளங்குகள், நீர் விசிறிகள், பச்சைபுற்கள், பூக்கன்றுகள், பெரிய சிறிய பச்சை மரங்கள் என ஒரு பூங்காவிற்குள்ள அனைத்தும் வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கின்றது.
உள்ளே செல்வதற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாற்றினையும் அவர்களின் வாழ்வியலினையும் சித்தரிக்கும் சிற்ப கல்லு மதில்போல காட்சிதருகின்றது. அந்த சுவரில் உள்ள பேசும் சிற்பங்கள் இடமிருந்து வலமா பார்க்கும் போது தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இயற்கை எழில்மிக்க வாழ்இடத்தில் குருவிகள் கூடுகட்டி சந்தோசமக வாழ்வதையும் பறையடிக்கும் ஒரு மனிதன் தமிழரின் பண்பாட்டினையும் குருவிகூட்டங்களில் வாழ்வு தமிழரின் குடும்ப ஒற்றுமையான வாழ்வியைலையும் எடுத்து நிக்கின்றது.
அதன்பின்னர் தமிழரின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த சிங்களவர்களின் அடக்குமுறையினை காட்டும் விதமாக சிறையில் குட்டிமணி தங்கத்துரையினர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் கண் படையினரின் காலால் மிதிக்கப்படும் காட்சி கருங்கல்லில் சிலையாய் வரையப்பட்டுள்ளது. அதன் அடுத்தபகுதி தமிழர்களின் வரலாற்று பொக்கிசமான யாழ்நூலகம் 1981 ஆம் ஆண்டு சிங்கள காடையனர்களினால் எரிக்கப்பட்ட வரலாற்றினை அவ்வாறே சொல்லிநிக்கின்றது. பொதுசன நூலகம் யாழ்ப்பாணம் என்று யாழ் நூலகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கீழ் சரஸ்வதி அமர்திருப்பதும் சுற்றிவர தீ பற்றி எரிவதுமான காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தமிழர்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள், தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சமாதான புறாக்கள் மேலே பறக்கின்றன, தமிழர் மேல் குண்டுகளை போட்டபடி இவ்வாறான ஒரு சிற்பம் காட்டி நிக்கின்றது. அதன்பின்னர் தமிழர்களின் இடம்பெயர்வு, வாழ்ந்த இடம் இழந்து அகதியாக ஊர் ஊராக அலையும் தமிழரின் காட்சி...
இவ்வாறு வளாகத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் தமிழீழ விடுதலைக்காக தீக்குளித்த ஈகிகைளின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. உடல்பல ஆயினும் ஒன்றே தமிழ்மணம் ஊர்பல ஆயினும் ஒன்றே தமிழினம், கடல் தடை ஆயினும் ஈழம் எம் தமிழ் நிலம், கரை இரண்டேயாயினும் ஒன்றே குலம்! ஒரேகுலம்!
தீக்குளித்த ஈகிகளின் விபரம்
02.03.2009 அன்று தமிழ்நாடு வாணியம் பாடி சீனிவாசன்,
08.02.2009 அன்று சென்னையினை சேர்ந்த அமரேசன்
22.03.2009 அன்று சிவகாசியினை சேர்ந்த மாரிமுத்து
02.03.2009 அன்று கொத்தமங்கலத்தினைசேர்ந்த பாலசுந்தரம்.
05.03.2009 அன்று சென்னையினை சேர்ந்த ஸ்ரீதர் என்று அழைக்கப்படும் எழில்வளவன்.
17.03.2009 அன்று அன்னவல்லியினை சேர்ந்த ஆனந்த்.
15.12.1995 அன்று பெரம்பலூரினை சேர்ந்த அப்துல் ரவூப்.
02.02.2009 அன்று மலேசியாவினை சேர்ந்த ஸ்டீபன் செகதீசன்.
18.02.2009 அன்று கடலூரினை சேர்நச்த தமிழ்வேந்தன்.
23.04.2009 அன்று திருப்பூரினை சேர்ந்த சுப்பிரமணி
29.01.2009 அன்று சென்னையினை சேர்ந்த முத்துக்குமார்.
02.02.2009 அன்று பள்ளப்பட்டியினை சேர்ந்த இரவி.
17.03.2009 அன்று காட்டுநாகலேரியினை சேர்ந்த இராசசேகர்.
17.04.2009 அன்று சென்னையினை சேர்ந்த கரூர் சிவானந்தம்.
25.02.2009 அன்று சிவகாசியினை சேர்ந்த கோகுலக்கிருட்டிணன்.
07.02.2009 அன்று சீர்காழியினை சேர்ந்த இரவிச்ந்திரன்.
07.02.2009 அன்று மலேசியாவினை சேர்ந்த இராசா.
18.04.2009 அன்று சீகம்பட்டியினை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
12.202009 அன்று ஜெனீவாவினை சேர்ந்த முருகதாசன்.
22.02.2009 அன்று சென்னையினை சேர்ந்த சிவப்பிரகாசம்
ஆகிய ஈகிகளின் உருவம் கற்சிலையாக பொறிக்கப்பட்ட நீண்ட சிலை ஒருபுறம் மறுபுறத்தில் தமிழினத்தின் மீது சிங்கள அரசு படையினர் மேற்கொண்ட இனஅழிப்பின் கொடூரங்கள் சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.
அதில் இருந்து...
இனவெறி சிங்களவன் கொலைவெறி ஆடினான்.
இளந்தமிழ் மாணவர் விழி இமை மூடினான்
கனல் எறி நஞ்சுக்குண்டுகள் கொண்டினான்
கழுத்தை நாக்கை மார்வை வெட்டினான்...
என்ற கவிதையுடன் தொடர்புடை பேசும் சிற்பம் முள்ளிவாய்க்கால் அவலத்தினை சொல்லிநிக்கின்றது.
நந்தமிழ் மாந்தர் தலைதனி ஆனதே
நமதுயிர்ப் பனையின் உயிர்பறி போனதே
செந்தமிழ் நிலமிசை கொடும்பகை குதித்ததே
செத்தார் உடலையும் செருப்பு மதிக்குதே....
என்ற கவிதையுடன் டாங்கிகளுடன் படையினர் நகர்வதையும் கைகள் கட்டப்பட்டு சப்பாத்து காலால் தமிழன் மிதிபடுவதையும் பேசும் சிற்பங்கள் பேசுகின்றன.
வெடித்த கொத்துக்குண்டுகள் எத்தனை
வெறியன் அழித்த பிஞ்சுகள் எத்தனை
அடித்துக்கொன்ற மாடுகள் எத்தனை
அம்மணம் ஆக்கிப்போட்டவர் எத்தனை...
என்ற கவிதையுடன் கொத்துக்குண்டுகள் தமிழ் வாழ் இடங்களில் மேல் விழுவதும் மாடுகள் சிறுவர்கள் பெரியவர்கள் அதில் உயிரிழப்பதும் அடுத்து கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அம்மணமாக கிடக்கும் தமிழர்களின் உடலங்கள் சிங்களவர்களின் இனப்படுகொலையின் உண்மை சாட்சியாக பேசுகின்றது.
அழிந்து கிடந்தன காட்டின் மரங்கள்
அடுக்கிக் கிடந்தன தமிழர் பிணங்கள்
கிழிந்து நிடந்தது தமிழர் தேயம்
கிடந்தது நெருப்பில் மாந்த நேயம்...
என்று பனைமரங்கள் படையினரின் குண்டடிபட்டு கிடக்கின்ற காட்சியும் மனித பிணங்கள் கட்டுக்கட்டாக போட்டப்பட்டுள்ள காட்சியினையும் பேசும் சிற்பங்கள் மக்கள் பார்வையில் கண்ணில் கண்ணீரினை சிந்த வைத்தது...
முறைகெடச் சிங்கள இனவெளி பாய்ந்தது
முள்ளியவாய்க்காலில் அறªநிற சாய்ந்தது
நிறைமுன் வேலி தமிழினம் பா£த்தது
சிவந்து சிவந்து கார்திகை பூத்தது...
என்ற கவிதையுடன் ஒப்பிட்ட தமிழர்கள் சிறையில் அடைக்கப்ட்ட காட்சி அதாவது முள்கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்ட கோரத்தினை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள்...
கணம்தோறும் ஆயிரம் பிணங்கள் விழக்கண்டோம்
காற்றேலாம் அழுகுரல் தினம் எழக் கண்டோம்
பிணங்களைத் தகரிகள் மதித்தலும் கண்டோம்
பெற்றோர் உறவுகள் கொதித்தாலும் கண்டோம்...
என்று மனித பிணங்களை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் எவ்வாறு படையினரால் டாங்கிகள் கொண்டு நசித்துக் கொல்லும் காட்சி பேசும் சிற்பங்களாக முள்ளிவாய்க்காலின் சாட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளது..
நாடிழந்த தலையும் அடிமையா தமிழன்?
நாய்கள் தின்னும் பிணமா தமிழன்?
கோடி வலிமை கோடி தாங்குவோம்?
கொற்ற மணித்தமிழ் ஈழம் வாங்குவோம்....
என்ற கண்ணூடான காட்சியனை தாவது முள்ளிவாய்க்கால் மண்ணில் பிணங்கள் கொத்துக்கொத்தாக கிடப்பதனையும் அதனை நாய்கள் தின்னுவதையும் காட்சிபடுத்துவதோது அகதியாக கையில் பாத்திரத்துடன் கஞ்சிக்காக காத்திருக்கும் நிலையில் இடப்பெயர்வு தமிழனுக்கு தொடர்ந்தவண்ணம் உள்ளதையும் காட்டிநிக்கின்றது..
இவை அனைத்தினையம் தாங்கி இடதுபுறத்தில் அமைந்துள்ள சிற்பம் பார்ப்பவர்கள் கண்ணை கவரும் ஈர்க்கும், ஈகவைக்கும், தமிழர்களின் வரலாற்றினை தெரியாதவர்களை புரியவைக்கும். குறிப்பாக இவ்வாறும் நடந்ததா என்று கூட ஏங்கும் அழவிற்கு அந்த பேசும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.
இவை இரண்டிற்கும் நடுவில் ஒரு மேடை அதில்தான் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தமிழ்பாவை கையில் தீபத்தினை ஏந்தியவாறு நிக்கின்றாள். இதற்கு கீழ் அறையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் பார்வதி அம்மாளின் உடலின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழரின் அழிவு என்பதை இலட்சினையாக காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பின்னால்தான் மாவீரர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக தமிழர்களின் வரலாற்று சுவடுகள், தமிழீழ தமிழர்களின் வரலாற்று சுவடுகள், இனப்படுகொலையின் பேசப்படாத வரலாறுகள் நடுவில் தாங்கியவாறு மண்டபம் அமையப்பெற்றுள்ளது. இதில் குறிப்பாக தமிழக தமிழர்களின் வரலாறு கி.மு 1000 ஆம் ஆண்டு என்று சொல்லப்படும் தொல்பழங்காலம் தொடக்கம் கி.மு 500 தொடக்கம் கி.பி 250 வரையான சங்ககாலம், கி.பி 250 தொடக்கம் கி.பி.575 வரையான களப்பியர் காலம், கி.பி. 250 தொடக்கம் கி.பி 919 வரை பல்லவர் காலம் (அதாவது தமிழகத்தை பல்லவர் ஆட்சிசெய்த காலம்), கி.பி 575 தொடக்கம் கி.பி 966 வரை தமிழ்நாட்டை முதலாம் பாண்டிய பேரரசு ஆட்சிக்காலம், கி.பி 846 தொடக்கம் கி.பி 1279 வரை பிற்கால சோழபேரரசு காலம், கி.பி 1190 தொடக்கம் கி.பி 1311 பிற்கால பாண்டிய பேரரசு காலம், கி.பி 1335 தொடக்கம் மாபார் சுல்தானியம் காலம்.
கி.பி. 1529 தொடக்கம் கி.பி 1736 வரை தமிழகத்தை நாயக்கர் ஆட்சிசெய்த காலம், கி.பி 1676 தொடக்கம் கி.பி 1855 வரை தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலம், கி.பி 1698 தொடக்கம் கி.பி 1855 கர்நாடக நாவாபுகளின் காலம், கி.பி 1801 தொடக்கம் கி.பி 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் என்று இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெற்ற 15.08.1947 ஆம் நாள் வரையிலான இந்தியாவில் தமிழக விடுதலையும் தமிழகத் தமிழர்களின் வரலாறும் எத்தனையோ தமிழ்நாட்டவர்கள் அறிந்துகொள்ளமுடியாத தகவல்களும் ஒளிப்படங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் தமிழீத்திலும் காலூன்ற ஆங்கிலேய வல்லாதிக்கம் முயன்ற காலத்தில் அதை எதிர்த்து துணிவுடன் பேராடி மாண்ட மறைந்த மாவீரர்கள், அதைதொடர்ந்து தமிழீழ விடுதலை போரின் களத்தில் புகழை நிலைநிறுத்தி மண்ணில் வீழ்ந்த மாவீரர்கள், தமிழ்நாட்டில் மொழிகாக்கும் போரில் உயிர்தியாகம் செய்த மானமறவர்கள் மற்றும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்தியாகம் செய்த தீரர்கள், இந்திய துணைக்கண்ட விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள், ஒளிப்படங்கள் ஆகியவற்றை தாங்கி அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த முற்றம் எழுப்பப்பட்டுள்ளது.
‘கங்கை கொண்டான் கடராம் வென்றான்’ இலங்கை உள்ளிட்ட நாடுகளை ஒருங்கிணைந்து ஆண்டான் என்று தமிழர்களின் வெற்றிக்கு ஆதாரமாய் வரலாற்றில் எத்தனையோ பக்கங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்று முனைவர் ம.நடராசன் சொல்லியுள்ளார்.
தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்துகொள்ளும் அளவிற்கு காணப்படும் அதேவேளை தமிழீழ தமிழர்வரலாற்று சுவடுகளும் ஒளிப்படங்களுடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது இதனை அழிப்பதற்காக தமிழ்நாட்டு அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டு தமிழர்களின் வரலாற்றினை எடுத்துசொல்லும் முள்ளிவாய்க்கால் முற்றம் மறுபுறம் ஈழத்தமிழர்களின் அவலத்தினையும் அவர்களின் வரலாற்றினையும் சிலைகற்களாகவும் ஒளிப்படங்களாகவும் ஆவணம் செய்துள்ளது. தமிழீழத்திற்காக போராடிய இலட்சக்கணக்கான தமிழ்மக்களையும் மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் முள்ளிவாய்க்கால் முற்றம்.
தாயகத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவிற்கொள்ள தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை சிங்கள படையினர் அழித்தார்கள். மாவீரர்கள் என்ற நாமம் கூட இல்லாம் செய்து ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் விடுதலை உணர்வினை இல்லாமல் செய்வதற்கு இன்றும் துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி மாவீரர் துயிலும் இல்லங்களில் நாங்கள் எவ்வாறான உணர்வுடன் ஈகையுடன் செல்கின்றோமோ அந்த உணர்வினை இந்த கார்த்திகை மாதத்தில் கொண்டுவந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் அந்த முற்றத்தில் நிற்கும் போது ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் நினைவுகள் மனங்களில் நிறைந்திருந்தது.
தாயகத்தில் கார்த்திகை மாதம் என்றால் அது மாவீரர்களின் மாதம். அப்படிப்பட்ட நாளில்தான் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. தஞ்சையில் விளார் சாலையில் ஆங்காங்கே கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் அந்த மூன்று நாட்களும் மாவீரர் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட வண்ணம் இருந்தன. அணையா சுடராக பாலச்சந்திரன், சாள்ஸசின் நினைவு சிலைமுன் சுடர் எரிந்துகொண்டே இருந்தது. இரவு நேரத்தில் கண்ணை கவரும் ஒளியமைப்பு செய்யப்பட்ட இந்த சிற்பங்கள் மாவீரர் மண்டபங்கள் பூங்கவின் மரங்கள் எல்லாம் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும் உணர்விகை கொண்டுவந்து, இப்படிப்பட்ட உணர்வு மிக்க பேசும் சிற்பங்கள் பார்ப்பவர் கண்ணில் நீர்வடியும். தமிழர்களின் வரலாறு இப்படியா என வியப்புடன் அறியவைக்கும் ஒளிப்பட ஆதாரங்கள்.
ஈழத்தமிழர்களின் மனங்களில் உறையவைக்கும் உணர்வுகளுக்கு அப்பால் தமிழ்நாட்டு தமிழர்கள் அதனை பார்த்துவிட்டு உணரவைக்கம் அளவிற்கு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர்கள் விபரம்...
05.06.1974 ஆம் ஆண்டு நஞ்சை படைக்கலம் ஆக்கிய முதல் போராளி என்ற பொன் சிவகுமரான் படமும் வரலாற்று குறிப்பும்.
25.07.1983 ஆம் ஆண்டு கண்ணை கொடுத்து உயிரைக்கொடுத்து மண்ணைக்காத்த சிறைமறவர்களான ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி
27.11.1982 ஆம் ஆண்டு அன்று முத்தமிழ் வளர்த்த மதுரை நகரில் விடுதலை வளர்க்கும் தலைவர் மடியில் விடியலுக்காக மடிந்த முதல்புலி லெப்ரினன் சங்கர்.
10.10.1987 அன்று எதிரியை முறியடித்து மாண்ட முதல் மானத்தமிழிச்சி 2ஆம் லெப்ரினன் மாலதி.
20.05.2008 அன்று தமிழீழ தேசியத்ததலைவரின் நம்பிக்கைள ஒளி புலிகளில் இவன் சிகரற்ற புலி பிரிகேடியர் பால்ராஜ்.
15.02.2009 அன்று எரிமலை நெருப்பில் நீந்தி ஈழம்காத்தவன் தமிழேந்தி. கேணல் தமிழேந்தி அவர்களின் படம்.
05.07.1987 அன்று முதல் கரும்புலி இவன் மூச்சு ஆயிரம் புலியின் வீச்சு கப்டன் மில்லர்.
16.08.1994 அன்று தன்னையும் தகர்த்து எதிரிபோர்க்கப்பலையும் மூழ்கடித்து அடிமை விலங்கை உடைத்தவர் கப்டன் அங்கயற்கண்ணி.
26.09.1987 அன்று தண்ணீரும் தாகத்தில் செத்தது திலீபன் உண்ணாப்பேரின் நினைவுச் சின்னம் தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன்.
14.12.2006 அன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தேசத்தின்குரல் வழிகாட்டும் விரல்.
19.04.1988 அன்று போர்நிறுத்தம் கோரிய தமிழீழ அன்னை. இவள் உண்ணாதிருந்து உயிர்கொடை தந்தாள் தன்னை, அன்னை பூபதி.
16.01.1993 அன்று அறுந்தன இந்தியாவின் சூழ்ச்சிவலைகள். கடலில் தமிழர் மானம் காத்த தமிழீழ மலைகள் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வேங்கைகள்.
05.10.1987 அன்று இந்திய வஞ்சனை இவர்களுக்கு நஞ்சினை தந்தது. பன்னிருவேங்கைகளாம் லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்கள்.
02.11.2007 அன்று சிரிப்பாகவும் நெருப்பாகவும் பூத்து உதிர்த்தவன் இவன். சாவுக்கு எதிரில் சிரித்துக்கொண்டே சாய்த்தவன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்கள்.
14.02.1987 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப்ரினன் கேணல் பொன்னம்மான்.
13.03.1988 அன்று இந்திய இரண்டகத்தில் சிந்திய தமிழர் குருதி எதிரியை வீழ்த்த இவர் பெயர் கண்ணிவெடி லெப்ரினன் கேணல் ஜொனி.
20.02.2009 அன்று தமிழர் வான்படை உயரப்பறந்தது. எதிரியைப் பொசுக்கு உயிரைத் துறந்தது கேணல் ரூபன், லெப்ரினன் கேணல் சிரித்திரன்.
15.05.2009 அன்று தமிழீழத்தின் நெருப்பாறு தனி வரலாறு இவன். வரலாறு பிரகேடியர் சொர்ணம்.
05.04.2009 அன்று அன்னை மண்ணை உயிராய் நினைத்தான். ஆனந்தபுரத்தில் சாவோடு இணைந்தான் பிரிகேடியர் தீபன்.
04.04.2009 அன்று பெண் போராளிகளின் திசைகாட்டி ஆனந்தபுரத் தாக்குதலில் இறுதியில் விதையாக தீர்ந்தவள் பிரிகேடியர் துர்க்கா.
04.04.2009 அன்று நாடு பேற்றும் பெண்புலி போராளி நான்காம் போரில் நீத்த பிரிகேடியர் விதுசா.
18.05.2009 அன்று அமைதிப்புறாவை அழித்தனர் அம்மா. வெள்ளைக்கொடியில் குருதி சாயம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோரின் படங்களுடன் தந்தைக்கேற்ற தனையன் என்ற சாள்ஸ்சின் படமும், மார்பு காட்டியமகன் பாலச்சந்திரன், பார்வதி அம்மையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆகியோரின் ஒளிப்படங்களும் வரலாற்று சிறுகுறிப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளது.
அணையா விளக்கு...
இவற்றுக்கு அப்பால் உலகத்தின் பார்வையினை திருப்பிய அனைத்து தமிழ் மக்களின் மனங்களிலும் பதிந்த பாலச்சந்திரன் எவ்வாறு சுடப்பட்டு கிடந்தானே எவ்வாறு படையினரால் பிடிக்கப்பட்டு வாயில் பிஸ்கற்ரினை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தானோ அதேபோல் ஒரு பாரிய கல்லில் இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
பாலச்சந்திரன் எவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டு பச்சை மண்மூட்டை அடுக்கிய இடத்தில் வைத்து பிஸ்கட்டினை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் காட்சியினை மிகவும் தத்துரூபமாக சிற்பிகள் அதனை செதுக்கியுள்ளார்கள். அத்துடன் பாலச்ந்திரனின் நெஞ்சில் நான்கு குண்டுகள் பாய்ந்தபடி இவ்வாறு கீழ்விழுந்து கிடந்தானோ அதேபோல் அவன் நெஞ்சில் துளையிடப்பட்டுள்ள காட்சியும் சிலையாக காணப்படுகின்றது. அண்ணனையும் தம்பியையும் ஒரேகல்லில் சிற்பி செதுக்கியுள்ளார். இவர்களில் சாள்ஸ் எவ்வாறு போர்த் தளபதி என்ற வீரத்துடன் நிக்கின்ற சிற்பம், வீரச்சாவடைந்து கிடக்கின்ற காட்சி, இந்த சிலைக்கு முன்னால் அணையா விளக்கு எரிந்துகொண்டே இருக்கின்றது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிற்பிகள் சிறப்புற செதுக்கியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டாலும் அதனை முடக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. விடுதலை உணர்வும் தமிழன் என்ற உணர்வும் இருந்துவிடகூடாது என்பதற்காக தாயகத்தில் சிங்களவன் செய்யும் அடக்கு முறைக்கு அப்பால் ஒரு சுதந்திர நாடு என்று சொல்லப்படும் இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழர் மீதான அடக்குமுறை என்பது துப்பாக்கி ஏந்திய படையினரின் அடக்குமுறையிலும் விட மேலாகக் காணப்படுகின்றது.
சுதந்திரம் என்று சொல்லப்படும் சொல்லுக்கு அர்த்தமற்ற தமிழர்களாக தமிழ்நாட்டில் தமிழர்களை மத்திய அரசும் மாநில அரசும் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அடக்குமுறையின் உச்சம், உணர்வுகள் மழுங்கடிக்கப்படவேண்டும் என்று சிங்கள வெறியனின் செயல் தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கம் வேளை, அதனைவிட மோசமாக தமிழ்நாட்டில் சட்ட அடக்குமறையினை தமிழக அரசும் மத்திய அரசும் மேற்கொண்டிருக்கின்றது.
தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டவடிவங்களை திசைதிருப்பி அதன் ஊடாக அவர்களை அடக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றது தமிழக அரசு இது. அண்மையில் தமிழ்நாட்டில் மாணவர்களின் விடுதலை போராட்ட உணர்வினை வெளிப்படுத்தவிடாமல் அவர்களை கைது செய்துள்ளதும் அவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் விடுவதுமான செயல்காளில் ஈடுபட்டுள்ளார்கள்.
உலகத்தமிழர்களின் எதிர்பார்பிற்கு அப்பால் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் அழிந்துவிடா வரலாற்று சின்னமாக இருக்கவேண்டும் என்பதில் உலகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதில் உறுதியாக இருக்கின்றது. இதற்காக உதவி செய்தவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் இன்று தமிழக அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் தமிழ்நாட்டு முதல்வர் சூட்சுமமாக ஈடுபட்டுள்ளார். ஒருபக்கத்தில் ஆதரவாக பேசுவதும் தமிழ்நாட்டில் இன உணர்வாளர்களை அடக்குவதும் கைது செய்வதும் போராட்டங்களை முடக்குவதுமான அடக்குமறையின் உச்சகட்டக செயற்பாடுகளை நிழல்வடில் முன்னெடுத்துவருகின்றமையினை உலகத்தில் உள்ள ஈழத்திமழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சுதந்திரம் வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும். பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காக போராடுவதை தவிர எமக்குவேறு வழி எதுவுமில்லை என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக உலகத்தில் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழனும் தமிழீழ விடுதலைக்காகப் தொடர்நதும் போரடுவோம்.
-சுபன் (தஞ்சாவூர்)
நன்றி: ஈழமுரசு

Subscribe to:
Posts (Atom)