Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, September 24, 2014

வாலிபரைக் கொன்றது வெள்ளைப் புலி

டில்லி உயிரியல் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படிருந்த ஒரு வெள்ளைப் புலி தாக்கியதால், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மதியம் உயிரழந்தார்.
விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெள்ளைப் புலி அடைத்து வைக்கப்படிருந்த பாதுக்காப்பு பகுதிக்குள் அத்துமீறி இளைஞன் நுழைந்ததாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி உயிரியல் பூங்காவின் இயக்குனர் அமிதாப் அக்னிஹோத்ரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உயிரிழந்த அந்த இளைஞனின் பெயர் மக்சூத் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டில்லியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன், அடைக்கப்பட்ட பாதுக்காப்பு வேளியை தாண்டி குதித்ததால் தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------ நேரில் பார்த்த சிலரும் இந்த தகவலை உறுதி செய்யும் வேளையில், அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துக் கொண்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றார்கள் --------------------------------------------------------------------------------- இந்த சம்பவம் மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்ததாகவும், புலியிடம் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை மீட்க எவரும் உதவ முடியாத நிலை நீடித்ததாகவும் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டவர்கள் கூறினார்கள். எனினும் அங்கிருந்த சில இளைஞர்கள் அந்த மிருகத்தின் மீது கற்களை வீசினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------- புலிகள் வேகமாக அழிந்து வருகின்றன. புலிகளின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலேயே வெள்ளைத் தோல்கொண்ட புலிகள் பிறக்கின்றன. இவை மிகவும் அரிதானவை.

தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது

??????????? -------------------------------------------------- தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி 500 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 85 காசு உயர்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ரூ.1.05ம் தொழிற்சாலைகளுக்கு ரூ.1.72ம் உயர்த்தப்படுகிறது. ----------------------------------------------------------------------------- மாநிலத்தில் மின்சார கட்டணம் நிர்ணயம் செய்ய 2003ல் ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ் நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யும். அதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், ஆணையம் வகுத்த விதிகளின்படி கட்டணத்தை நிர்ணயம் செய்யக் கோரும் மனுவை தமிழக மின்வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்கு முன்போ அல்லது அன்றோ தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 2014,15க்கான வருவாய் தேவை மற்றும் மின்கட்டண வீதத்தை நிர்ணயம் செய்வதற்கான மனுவை மின்வாரியம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 2014,15ம் நிதி ஆண்டுக்கு, ஆண்டு வருவாய்த் தேவையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. ------------------------------------------------------------------------------- மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்காலிகமாக மொத்த வருவாய்த் தேவையாக ரூ.39,818 கோடி என நிர்ணயம் செய்துள்ளது. மற்றும் 2014,15ம் நிதி ஆண்டுக்கான வருவாயாக ரூ.32,964 கோடி என தற்போது உள்ள மின் கட்டண வீதத்தின் அடிப்படையில் (மின் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மற்றும் மின் கட்டணம் அல்லாத வருவாய்) நிர்ணயம் செய்துள்ளது. மேலும் 2014,15 நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறையாக ரூ.6,854 கோடி என நிர்ணயம் செய்துள்ளது. தற்போதுள்ள மின்கட்டண வீதத்தின்படி வருவாய் பற்றாக்குறை ரூ.6,854 கோடியாகும். இதனால் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மின் கட்டணத்தை ரூ.6.805க்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிகம், நீரேற்று நீர் பாச னம், தற்காலிக வினியோகம் ஆகியவற்றுக்கு புதிய உத்தேச மின்கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------ வீட்டு உபயோக நிலையான கட்டணங்கள் 100 யூனிட் வரை ரூ.20லிருந்து ரூ.30 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மின்கட்டணம் 500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75 லிருந்து 85 பைசா உயர்த்தி ரூ.6.60 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு ஸி7லிருந்து ஸி1.05 உயர்த்தி ரூ.8.5 ஆகவும் தொழிற்சாலைகளுக்கு ரூ.5.50லிருந்து ரூ.1.72 உயர்த்தி ரூ.7.22 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிசைகள், பொதுவிளக்கு மற்றும் குடிநீர் வழங்கல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், குறுந்தொழில்கள், விசைத்தறி, தொழிற்சாலைகள், விவசாயம் என அனைத்துக்கும் உத்தேச புதிய மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக ரயில்வே துறைக்கும் கேட்பு கட்டணம் ரூ.250 லிருந்து ரூ.300 ஆகவும், மின்திறன் கட்டணம் யூனிட்டுக்கு 550 காசிலிருந்து 722 காசாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை பொறுத்தவரை நாடு முழுவதும் ஒரே கட்டணத்தை அமல்படுத்துவதால், இந்த புதிய மின்கட்டண அறிவிப்பால் பாதிப்பு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பான கருத்துக்களை அடுத்த மாதம் 23ம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளரிடம் தபால் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------ இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும், ஏழை, எளிய மக்கள் பாதிக்காதவாறு கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு மானியமாக 500 யூனிட் வரை மட்டுமே வழங்கி வரு கிறது. அதற்கு மேல் வழங்குவது கிடையாது. தற்போது வீடுகளில் அத்தியாவசிய பொருட்களாக டி.வி., பேன், மிக்சி, கிரைண்டர் என உள்ளது. சாதாரணமாக ஒரு வீட்டுக்கு இந்த பொருட்களின் அடிப்படையில் வைத்து கணக்கெடுத்து கொண்டாலே 500 யூனிட்டுக்கு குறையாமல் வர வாய்ப்புள்ளது என நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசு கூடுதல் மானி யம் வழங்கினாலும், அது ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்காது என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு, மின்வாரியம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதனை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்த பின்பே இறுதி பட்டியல் வெளியிடப்படும். தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பெரும்பாலான கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வது உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் புதிய மின் கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், ஒய்வூதியம் உயர்வால் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, யூனிட்டுக்கு 40 முதல் 85 காசுகள் உயர்த்த்தப்படுவதாகவும், ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 50 முதல் 100 யூனிட்கள் வரை 40 காசுகளும், 100 முதல் 200 யூனிட்கள் வரை 45 காசுகளும் உயர்த்தப்படுகிறது. 201 முதல் 500 யூனிட்கள் வரை 60 காசுகள் உயர்வதாகவும், 501 யூனிட்களுக்கு மேல் 85 காசுகள் உயரும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலையான மின்கட்டணம் ரூ.10 வரை உயர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.