Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 4, 2013

கமல்ஹாசன் அடுத்தது ரிலாக்ஸாக ஒரு காமெடி திரைப்படத்தில் நடிக்கிறார்.

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 திரைப்படங்களில் ஓய்வில்லாமல், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என கடும் சுமைகளை தாங்கிக்கொண்டு நடித்துவரும் கமல்ஹாசன் அடுத்தது ரிலாக்ஸாக ஒரு காமெடி திரைப்படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு உத்தமவில்லன் என பெயர் வைத்து, இயக்குனர் பொறுப்பை கமலின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்திடம் கொடுத்திருக்கிறார்கள். காமெடி படம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் தொடர்ந்து காமெடிப் படங்களில் வெற்றிகளைக் கொடுத்துவரும் இயக்குனர் ராஜேஷிடம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானத்திடமும் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது உத்தம வில்லன்

கருத்து கணிப்புகளை வெளியிட காங்., எதிர்ப்பு: பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்பதால் திடீர் முடிவு

புதுடில்லி : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றிய கருத்து கணிப்புகளில், பா.ஜ.,வுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாவதால், காங்கிரஸ் கட்சி, கலக்கம் அடைந்துள்ளது. இதனால், 'தேர்தலின் போது, கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், கருத்துக் கணிப்புகளை தடை செய்வதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'ஓட்டு பதிவு துவங்குவற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து, தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை, பத்திரிகைகளோ, 'டிவி' சேனல்களோ வெளியிடக் கூடாது' என, தேர்தல் விதிமுறை உள்ளது.

பட்டதாரிகளுக்கு HDFC Bank-ல் மேலாளர் பணி

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Sales Manager 02. Credit Manager 03. Location manager 04. Retail Assets 05. Asset Desk Manager 06. Collection Manager 07. Relationship Manager 08. Cross Sell Manager 09. Sales Quality Manager 10. Risk Analyst கல்வித்தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hdfcbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

IOCL நிறுவனத்தில் கிரேடு-IV பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் (IOCL) பொறியியல் உதவியாளர் கிரேடு-IV பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineering Assistant - Grade IV மொத்த காலியிடங்கள்: 03 கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.11900 - 32000 வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை INDIAN OIL CORPORATION LIMITED (PIPELINES DIVISION) என்ற பெயருக்கு State Bank of India, Barauni Refinery Campus Branch, Barauni, Begusarai (Branch Code: 1502) மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Human Resource Manager, Indian Oil Corporation Limited (Pipelines Division), BARAUNI – KANPUR PIPELINE, P.O. BARAUNI OIL REFINERY, DIST- BEGUSARAI, BIHAR, PIN – 851114. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

என்எல்சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate and Technician Apprenticeship Training பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கான மொத்த காலியிடங்கள்: 390 துறைவாரியான பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Technician Apprenticeship Training (TAT) - 210 02. Graduate Apprenticeship Training (GAT) - 180 கல்வித்தகுதி: TAT பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Civil Engg, Instrumentation, Chemical, Computer Science, Electronics & Communications போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். GAT பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Civil Engg, Instrumentation, Chemical, Computer Science, Electronics & Communications போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மாத உதவித்தொகை: 01. Technician Apprenticeship Training (TAT) பயிற்சிக்கு மாதம் ரூ.2530 வழங்கப்படும். 02. Graduate Apprenticeship Training (GAT) பயிற்சிக்கு மாதம் ரூ. 3560 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ மற்றும் டிப்ளமோவில் எடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: Graduate Apprenticeship Training பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Technician Apprenticeship Training பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager , Employee Development Centre, Neyveli LIgnite Corporation Limited Block : 20 , Neyveli- 607803 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2013 ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 20.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

RITES நிறுவனத்தில் சிவில் பொறியாளர் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள போக்குவரத்து, உள் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம், பொறியாளர் மற்றும் நிர்வாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் பணி I. Highways Related: 1. Team Leader cum Senior Highway Engineer 2. Resident cum Highway Engineer 3. Senior Bridge Design Engineer 4. Bridge & Structural Engineer 5. Senior pavement Specialist 6. Senior Quality/Material Expert 7. Highway Design Engineer 8. Traffic and Transportation Expert 9. Road Safety Expert 10. Quantity Surveyor 11. Survey Engineer 12. Assistant Highway Engineer 13. Assistant Bridge Engineer 14. Assistant Quality cum Material Engineer 15. CAD Expert 16. Environmental Engineer II. Building Related : 17. Building Engineer 18. Quality Control Engineer (Building) கல்வித்தகுதி: Civil Engineering/Environmental Engineering மற்றும் Diploma in Civil Engineering/Survey போன்ற துறைகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: AGM(P)/Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon – 122001 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2013 பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 06.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (இஸ்ரோ)-வில் காலியாக டெக்னீக்கல் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டெக்னிக்கல் உடவியாளர் காலியிடங்கள்: 13 கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும். பணி: டெக்னீசியன் கல்வித்தகுதி: பிட்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன், டர்னர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 21-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கெயில் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி

இந்தியன் ஆயில் நிறுவனமான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை பொறியாளர் கல்வித்தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மசகோன் டாக் நிறுவனத்தில் மேலாளர் பணி

பொதுத்துறை நிறுனமான மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக முதன்மை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chief Manager காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 44-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: 32,900 - 58,000 பணி: Manager காலியிடங்கள்: 06 வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: 29,100 - 54,500 பணி: Deputy Manager காலியிடங்கள்: 08 வயதுவரம்பு: 36-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: 24,900 - 50,500 பணி: Assistant Mananger காலியிடங்கள்: 09 வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: 20,600 - 46,500 பணி: Senior Engineer காலியிடங்கள்: 09 வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும். சம்பளம்: 16,400 - 40,500 பணி: Welfare Officer காலியிடங்கள்: 02 சம்பளம்: 16,400 - 40,500 வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். பணி: Safety Officer காலியிடங்கள்: 01 சம்பளம்: 16,400 - 40,500 வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை மும்பையில் மாற்றத்தக்க வையில் Mazagon Dock Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 31.12.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

செயில் நிறுவனத்தில் டெக்னீசியன் டிரெய்னி பணி

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டெக்னீசியன் டிரெய்னி கல்வித்தகுதி: மெட்டலர்ஜி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டைசன், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், மெசினீஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், டீசல் மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sail.shine.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கெயில் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணி

இந்தியன் ஆயில் நிறுவனமான கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை பொறியாளர் கல்வித்தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.