Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 16, 2013
மத்திய, மாநில அரசு துறைகளில் பல்வேறு வேலைகள்
மத்திய, மாநில அரசு துறைகளில் பல்வேறு வேலைகளுக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (விளம்பர எண்: 10/2013)
1. எஸ்சி.,எஸ்டி வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையத்தில் ஆலோசகர் (சுருக்கெழுத்தாளர்): 1 இடம்
2. ஸ்டாப்நர்ஸ்: 1 இடம்
3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 1.
4. மிஷின்மேன் (ஆப்செட்): 24 இடங்கள்
5. ஆர்டிஸ்ட் ரீடச்சர்: 2 இடங்கள்
6. சீனியர் ஆர்ட்டிஸ்ட்: 1 இடம்.
7. டிடிபி ஆபரேட்டர்கள்: 8 இடங்கள்.
8. வெல்டர்: -1
9. மெஷின் டூல் மெயின்டெனன்ஸ்:-1
10. ஸ்கீல்டு வொர்க்கர் (எலக்ட்ரானிக்ஸ்)-1
11. ஸ்கீல்டு வொர்க்கர் (எலக்ட்ரீஷியன்)-1
விண்ணப்பத்தில் விளம்பர எண், பணியின் சீரியல் எண், விண்ணப்பிக்கும் பணி, பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பெயர், பதிவு எண், பெயர், பிறந்ததேதி, தந்தை பெயர், முகவரி, தேசியம், ஜாதி, முன்னாள் ராணுவத்தினரா? மாற்றுத்திறனாளியா? மற்றும் தகுதி விவரங்கள், முன் அனுபவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு தாளில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.12.2013
சிஆர்பிஎப்-ல் கான்ஸ்டபிள் பணி: 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) காலியாக உள்ள 157 கான்ஸ்டபிள் அந்தஸ்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
கான்ஸ்டபிள் ( டிரேட் மற்றும் டெக்னிக்கல்).
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. டிரைவர்: 57 இடங்கள்
2. பிட்டர்: 19 இடங்கள்
3. பக்லர்: 14 இடங்கள்
4. டெய்லர்: 10 இடங்கள்
5. காப்ளர்: 6 இடங்கள்
6. கார்பென்டர்: 3 இடங்கள்
7. கார்டெனர்: 2 இடங்கள்
8. பெயின்டர்: 1 இடம்
9. பைப் பேண்ட்: 1 இடம்
10. பிராஸ் பேண்ட்: 3 இடங்கள்
11. குக்: 11 இடங்கள்
12. வாட்டர் கேரியர்: 6 இடங்கள்
13. வாஷர் மேன்: 8 இடங்கள்
14. சபேகரம்சாரி: 7 இடங்கள்
15. பார்பர்: 2 இடங்கள்.
16. பக்லர்: (பெண்) 1 இடம்
17. குக்: (பெண்) 2 இடங்கள்
18. வாஷர்வுமன்: (பெண்) 1 இடம்
19. ஹேர் டிரஷர்: 2 இடங்கள்
மாதிரி விண்ணப்பம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.crpf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2013.
டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணி :வயது: 18 முதல் 42க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான டெரிட்டோரியல் ராணுவத்தில் பணிபுரிய தகுதியான ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
ஆபீசர் (லெப்டினென்ட்) சம்பளம்: ரூ.15,600-39,000. வயது: 18 முதல் 42க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.
எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 9.2.2014.
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர்
இந்திய ரிசர்வ் வங்கியில் ஏற்பட்டுள்ள அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’ பணிக்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் பணியாற்றியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
உதவி மேலாளர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’. 34 இடங்கள்
தகுதி: ராணுவம்/கப்பல் படை/ விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவப்படைகளான பிஎஸ்எப்., சிஆர்பிஎப், ஐடிபி, சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள்ஸ், ஆர்பிஎப், எஸ்பிஎப், பாதுகாப்பு காவல் படை, சிறப்பு எல்லை படை மற்றும் ஊர்க்காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் (கோடு எண்: 17) மட்டும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் மாஸ்டர்/விசா, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது இன்டெர்நெட் பேங்கிங் மூலமாக கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2013.
ஆப்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.12.2013.
பிரின்ட் அவுட்டை சாதாரண தபாலில் அனுப்ப கடைசி நாள்: 24.12.2013.
Assistant Manager in Reserve Bank
மேற்கு மண்டல மத்திய அரசு துறைகளில் வேலை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அழைப்பு
மேற்கு மண்டல மத்திய அரசு துறைகளில் குரூப் ‘சி‘ மற்றும் குரூப் ‘டி‘ பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.
1. கால்நடை இனப் பெருக்க பண்ணை யில் மில்க் ரிக்கார்டர்: 1 இடம்
2. நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் (நிலை-1): 3 இடங்கள்
3. நோய் தாக்காமல் விலங்குகளை பாதுகாக் கும் மையத்தில் டெக்னீஷியன்: 3 இடங்கள்
4. தாவரங்கள், விலங்குகள் பாதுகாக்கும் மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: 15.
5. வேளாண்மை மற்றும் கூட்டுறவு மையத்தில் ஜூனியர் கெமிஸ்ட்: 7 இடங்கள்
6. இந்திய வன அளவை ஆபீசில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 1 இடம்
7. மைனர் போர்ட் சர்வே நிறுவனத்தில் பொட்டானிக்கல் அசிஸ்டென்ட்: 3
8. மீன்ஆய்வுத்துறை ஜூனியர் பிஷ்ஷிங் டெக்னாலஜிஸ்ட்: 1 இடம்
9.இந்திய தொல் பொருள்துறை ஆய்வு புதுடெல்லி ஆபீசில் உதவி கல்வெட்டு இயலாளர்: 3 இடங்கள்
10. ராணுவ பணி மனையில் டிராப்ட்ஸ் மேன் (கிரேடு-1). 3
11. பிலிம் டிவிஷனில் எடிட்டர்: 3 இடங்கள்
12. மத்திய சுற்றுலாத்துறையில் தகவல் உதவியாளர்: 3
13. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 1 இடம்
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.sscwr.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2013.
மரண தண்டனைக்கு எதிரான உயிர்வலி
மன்னார்குடி, டிச.16–
மன்னார்குடியில் தமிழின உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் மரண தண்டனைக்கு எதிரான உயிர்வலி என்ற ஆவணப்படத்தின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெங்கட்ராமன் தலைமை தாங்கினர். லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் செந்தில் குமார் வரவேற்றார்.
முன்னாள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொங்கு தமிழர் இயக்க செயலாளர் பாரதிச்செல்வன், திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாஸ், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் அய்யப்பன், அகில இந்திய தலித் மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் கலந்து கொண்டு ஆவண படத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் வெளியிட்டுள்ள கருத்தால் எனது மகனுக்கும் ராஜீவ்காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது 23 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த பின்னர் தெரியவந்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க காரணமாக இருந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நாடு முழுவதும் தூக்குதண்டனை பெற்ற பலர் அப்பாவிகளாக உள்ளனர். அவர்களிடம் மறுவிசாரணை செய்து தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக போராட முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்க வேண்டும்
வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் இலங்கை தமிழர் முகாமுக்கு இன்று சென்றார்.
அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் துயரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களை இதுபோல் நீண்ட காலமாக அகதிகளாக முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மத்திய அரசு, ஒன்று, அவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும். அல்லது, அவர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்து தர வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும்.
இலங்கை கடலோர காவல்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் சம்பவங்களும் வன்மையாக கண்டிக்கத் தக்கது இவ்வாறு அவர் கூறினார்.
கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்!
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் நேற்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. இனவெறியை எதிர்த்து 27 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த மண்டேலாவை தென்னாபிரிக்க தந்தை என்று போற்றுகின்றனர்.
அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்ற மண்டேலா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 6ஆம் திகதி உயிரிழந்தார். மண்டேலா மறைவையடுத்து பல நாடுகளில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு அந் நாடுகளின் தேசிய கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.
மேலும் மண்டேலா மறைவையடுத்து 10 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி ஜாக்கோப் ஜூமா அறிவித்திருந்தார். இந்நிலையில் மண்டேலா நினைவு இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அரசு கடந்த 10ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.
அதிபர் ஜாக்கோப் ஜூமா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ், கிளின்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். உலகிலேயே மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்தது இன்று மண்டேலாவின் சொந்த கிராமமான கிழக்கு கேப் டவுனில் இருக்கும் குனு கிராமத்தில் அவரது சொந்த வீட்டின் அருகே நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று இலட்சக்கணக்கான தென்னாபிரிக்க மக்கள் சாலையின் இரு புறமும் திரண்டு நின்று கண்ணீரோடு வழியனுப்பி வைக்க மண்டேலாவின் உடல் அரச வாகனத்தில் குனுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தங்களது நேசமிகு தலைவரின் இறுதி ஊர்வலத்தை பூக்கள் தூவியும், கண்ணீரால் நனைத்தும் வழியனுப்பிய காட்சி இந்த நூற்றாண்டில் இனவெறிக்கு எதிராக போராடிய ஒரு தலைவனுக்கு கிடைத்த உண்மையான பாராட்டுகள் என உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் தென்னாபிரிக்க மரபுப்படி, அரசு முறைப்படியும் நல்லடக்க நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணிக்கே தொடங்கின. இதில் மண்டேலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், மகள்கள் மகாசிவி மற்றும் லிண்டிவி சிசிலு, அவரது மனைவி கிரேசா மாச்சல், முன்னாள் மனைவி வின்னி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நிகரகுவா துணை அதிபர், தான்சானியா முன்னாள் அதிபரின் மனைவி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தென்னாபிரிக்கா முழுவதிலும் இருந்து பிரமுகர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் ஊர்வலமாக திரண்டு வந்து மலர்க்கொத்துகளையும், பூக்களையும் வாரி இறைத்தனர்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க மதியம் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. உங்களை பத்திரமாக அனுப்பி வைத்து உள்ளோம். அங்கே உங்கள் ஆத்மா ஓய்வு பெறட்டும் என அதிபர் ஜாக்கோப் ஜூமா உருக்கமாக குறிப்பிட்டார்.
தேசிய புலிகள் கணக்கெடுப்பு: 8 நாள்களுக்கு மூடப்படும் முதுமலை, ஆனைமலை
அகில இந்திய அளவில் காடுகளில் வசிக்கும் புலிகள் கணக்கெடுப்பு பணி கரரணமரக முதுமலை புலிகள் கரப்பகம் வரும் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 8 நரள்களுக்கு மூடப்படுகிறது என முதுமலை புலிகள் கரப்பக துணை இயக்குநர் சி.சந்திரன் தெரிவித்தரர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மரவட்டத்தில் முதுமலை புலிகள் கரப்பகம், நீலகிரி வடக்கு கேரட்டம், நீலகிரி தெற்கு கேரட்டம் மற்றும் கூடலூர் வனக்கேரட்டம் ஆகியவை அடங்கிய வனப் பகுதிகளில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதரல், முதுமலை புலிகள் கரப்பகம் வரும் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 8 நரள்களுக்கு மூடப்படுகிறது.
இந்த நரள்களில் பரர்வையரளர்கள் எவரும் முதுமலை புலிகள் கரப்பகத்தைப் பரர்வையிட சுற்றுலரப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் உள்ள ஆனைமலை, ஆழியாறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லவும், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலை பகுதியில், அடர்ந்த காடுகளுக்குள் உள்ள கோட்டூர் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை
இந்திய மக்களிடம் பேராதரவு பெற்றுள்ள விளையாட்டு எது என்றால், சந்தேகமில்லாமல் கிரிக்கெட்தான். கிரிக்கெட் விளையாட்டிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அரசும் தனியார் அமைப்புகளும் வேறெந்த விளையாட்டிற்கும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து சரியான பதில்களோ நடவடிக்கை களோ இல்லை என்றாலும், கிரிக்கெட் விளையாட்டை தேசத்தின் அடையாளம், புதிய மதம், பக்தி, கடவுள் என்றெல்லாம் உயர்த்திக்கொண்டே போகும் போக்கு நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாகப் பார்க்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஆட்டத்திலிலிருந்து அவர் ஓய்வுபெற்றதும், அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சச்சினுக்கு அவரது தந்தையும் அண்ணனும் அந்த ஆர்வத்தை வளர்க்கும் சக்திகளாக விளங்கினர். உரிய பயிற்சிகளின் மூலம் தன் திறமையை வளர்த்துக்கொண்டு மும்பையில் நடந்த போட்டிகளிலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் நன்றாக ஆடி ரன்களைக் குவித்தார். அதன் விளைவாக, 1989-ஆம் ஆண்டு தனது 16-வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆடினார்.
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை நேர்த்தி யாகவும், புதுவிதமாகவும் அனைவரும் வியக்கும்படியும் இருந்தது. பந்துவீச்சிலும் அவர் தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை விஞ்சும் வகையில் சச்சினின் ஆட்டம் அமைந்தது. டெஸ்ட் போட்டிகள் எனப்படும் 5 நாள் போட்டிகளிலும், 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய டெண்டுல்கர் பல போட்டிகளிலும் சதங்கள், அரை சதங்கள் என ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். அதுவரை, கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளை சச்சின் முறியடித்து புதிய சாதனைகளை அவர் படைத்தார்.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்து 15ஆயிரத்து 921 ரன்களை எடுத்துள்ளார். அதுபோல 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18ஆயிரத்து 426 ரன்களைக் குவித்துள்ளார். உலகக் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்ட்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100. பந்துவீச்சின் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்ற மூத்த வீரர்களுடன் தொடங்கிய அவரது பங்கேற்பு, டோனி, ஷேவாக் என இளைய வீரர்கள் வரை 24 ஆண்டுகள் தொடர்ந்தது. இதில் அவருக்கு சரிவுகள் ஏற்பட்ட காலமும் உண்டு. அவற்றிலிலிருந்து தன் திறமைகளால் மீண்டு வந்து மீண்டும் மீண்டும் சாதனைகளைப் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அதனால்தான் 40 வயது வரையிலும் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் நீடிக்க முடிந்தது.
சச்சினின் விருப்பப்படி அவர் பங்கேற்ற கடைசிப் போட்டி அவரது சொந்த மண்ணான மும்பையில் நடைபெற்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்து ரசிகர்களிட மிருந்தும் கிரிக்கெட் விளையாட்டிலிலிருந்தும் 2013 நவம்பர் 16-ந் தேதி பிரியா விடைபெற்றார் சச்சின். அன்றைய தினமே இந்திய அரசு அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்தது.
விளையாட்டு வீரர் ஒருவர் பாரத் ரத்னா விருது பெறுவது இதுவே முதல் முறை. 40 வயதில் ஒருவர் இந்த விருதை பெறுவதும் முதல் முறை. கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கர், விருது பெறுவதிலும் சாதனை படைத்திருக்கிறார். அவரைப் போல இன்னும் பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களை இந்திய அரசு கௌரவப்படுத்தி, அனைத்து விளையாட்டுகளுக்கும் சரிசமமான அளவில் ஊக்கம் அளித்து இளைஞர்களின் திறனை வளர்க்கவேண்டும்.
20 நாட்களுக்கு மின்சார ரயில் ரத்து
மேல்மருத்தூரில் இருந்து விழுப்புரம் இடையே காலை 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் 16.12.2013 திங்கள்கிழமை முதல் 20 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் விழுப்புரத்தில் இருந்து பகல் 1.45க்கு மேல்மருத்தூர் புறப்படும் ரயிலும் 20 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் சரக்கு என நினைத்து ஆசிட்டை குடித்த குடிமகன் பலி!
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஜெயபால் (22). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 27ந் தேதி அளவுக்கு மேலே குடித்து விட்டு போதையில் தடுமாறியபடியே வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் கழிவறை சுத்தம் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த ஆசிட்டை “டாஸ்மாக்” சரக்கு என நினைத்த ஜெயபால் தண்ணீர் கலக்கமல் குடித்துள்ளார்.
குடித்த சிறிது நேரத்தில் வயிறு எரியத்தொடங்கியதும், ஐயோ அம்மா என்று அழுதுள்ளார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக ஜெயபாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெயபால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கந்தம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை: கலைஞர் திட்டவட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவு உரை ஆற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி இல்லை. திமுக மீது வீண் பழி சுமத்தி ஆ.ராசாவுக்கு களங்கம் கற்பித்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால் கனிமொழியும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. காங்கிரசின் செயலை மறந்து விடமாட்டோம். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக வேறு. இப்போது உள்ள பாஜக வேறு. இதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை திமுக அமைக்கும் குழு முடிவு செய்யும் என்றார்.
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம்
பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சட்ட பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி திட்டத்தை 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மரண தண்டனை பெற்றுள்ளவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 14 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவர்கள் கருணை மனு மீதான பரிசீலனை 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது விசாரணை முடிந்துள்ளது. ஜனவரி மாதம் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்றார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: சிங்கப்பூர் பிரதமர் வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இது குறித்து டோக்கியோவில் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு. வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு (33) என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 33 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில், 400 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிப்பதால், தமிழர்கள் தங்கியுள்ள விடுதிகளில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இது குறித்து டோக்கியோவில் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு. வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்களுடைய சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து வரும் அதே நேரத்தில், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு (33) என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 33 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கலவரத்தில், 400 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிப்பதால், தமிழர்கள் தங்கியுள்ள விடுதிகளில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி ஆட்சி அமைய வாய்ப்பு?
டெல்லியில் புதிய அரசு அமைய வரும் 18.12.2013 புதன்கிழமையோடு கெடு முடிவடைவதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
டெல்லியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ 10 நாள் அவகாசம் கேட்டது. மேலும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 18 நிபந்தனைகளுக்கு பாஜக காங்கிரஸ் கட்சிகள் பதில் அளிக்குமாறு கூறியது.
இதற்கிடையில், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றும், ஆகவே டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் பிடித்தனர்.
Subscribe to:
Posts (Atom)











