Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, March 30, 2013

தமிழ் ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டசபை தீர்மானத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி, மார்ச் 30- இலங்கை விவகாரம் தொடர்பாக கடந்த 27-ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை 'நட்பு நாடு' என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்ததீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற் றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:-தமிழக சட்டசபை தீர்மானத்தைநீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பதில்:-தமிழகத்தில், மற்ற கட்சிகள் மட்டுமின்றி எங்கள் கட்சியினரிடமும் கடுமையான உணர்வுகள் நிலவுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உணர்வுகள், உலகில் பலரும் கொண்டுள்ள உணர்வுகளுடன் உடன்பட்டுள்ளன. அதே சமயத்தில், இலங்கையுடன் நாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. கேள்வி:-இலங்கையை நட்பு நாடு அல்ல என்று அறிவிப்பீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-பொருளாதார தடை விதிக்க பரிசீலிப்பீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-தமிழ் ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-அப்படியானால், சட்டசபை தீர்மானத்தின் 3 அம்சங்களையும் நிராகரிக்கிறீர்களா? பதில்:-இந்த கோரிக்கைகளை ஏற்கும் கேள்விக்கே இடம் இல்லை. அது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது அல்ல. மற்ற மாநிலங்களின் நிலை என்ன? மற்ற சட்டசபைகளும் உள்ளன. அவையெல்லாம் இதைஆதரிக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரித்தால், அது வேறு விஷயம். ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆதரித்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அந்த மாநிலம் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு மத்தியமந்திரி சல்மான் குர்ஷித் கூறினார்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு

தூத்துக்குடி,மார்ச்.30- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். காற்று மற்றும் நீர் மாசுபடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆர்.டி.ஓ.,விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்ததை அடுத்து, ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையில் முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்

மார்ச் 30- உலகத்திற்கே அமைதியைப் போதித்த புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் புத்த மதத்தினர், தற்போது வன்முறையில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், வியாழன் அன்று இரவு, இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகே உள்ள பெப்பிலியானா என்ற இடத்தில், முஸ்லிம் ஒருவரின் கடை அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Thursday, March 28, 2013

திருச்சியில் பரபரப்பு காங்கிரசார்–மாணவர்கள் பயங்கர மோதல் கொடி, பேனர்கள் கிழிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

திருச்சியில் காங்கிரசார்–மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கொடி, பேனர்கள் கிழிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் உண்ணாவிரதம், ரெயில் மறியல் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சி, கரூர், பெரம்பலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே எல்.கே.எஸ்.மகாலில் நேற்று காலை நடைபெற்றது.இதற்காக திருச்சி, கரூர், பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டம் நடந்த மகால் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே வரவேற்பு பேனர்களையும், கட்சி கொடிகளையும் கட்டி இருந்தனர். பேனர், கட்சி கொடி கிழிப்பு காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ஞானதேசிகன் கூட்ட அரங்குக்கு வந்ததும், கூட்டம் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கட்சி நிர்வாகிகளும் மாநிலத்தலைவரை வரவேற்க வெளியில் காத்து இருந்தனர்.அப்போது தமிழீழ ஆதரவு கல்லூரி மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் காங்கிரஸ் கூட்டம் நடைபெற இருந்த அரிஸ்டோ ரவுண்டானா அருகே திரண்டனர். அவர்கள் கையில் கறுப்பு கொடிகளை கொண்டுவந்திருந்தனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு கறுப்பு கொடி காட்ட திட்டமிட்டிருந்தனர்.திடீர் என்று மாணவர்கள் அங்கிருந்த காங்கிரஸ் கட்சி பேனர்களையும், கொடிகளையும் ஆவேசத்துடன் கிழித்து எரிந்தனர். இலங்கை தமிழர் படுகொலைக்கு காங்கிரசே காரணம் என்று கூறி, கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தை கண்ட போலீசார் அங்கு ஓடி சென்று மாணவர்களை கைது செய்ய முயற்சித்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதி. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மாணவர்களை இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று பகல் சந்தித்து பேசினார்.மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழக சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

28.03.2013: சென்னை: இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இனப் படுகொலைக்கும், சர்வதேச விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். தனி ஈழத்துக்கு இலங்கைத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியிலும், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, தமிழக சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையை, "நட்பு நாடு' என சொல்வதை, இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் மீதான, அடக்கு முறையை, இலங்கை நிறுத்தும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்பு கவுன்சிலில், இலங்கை மீதான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகத்தில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம் குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கைத் தூதர் கரியவாசத்தைக் கைது செய்ய வேண்டும்: வைகோ

சென்னை: "இலங்கைத் தூதர் கரியவாசம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்துள்ளதால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மன்மோகன்சிங்கிற்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய இ-மெயில் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்ற ஒரு அறிக்கையை, மார்ச் 19ல் தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைளுக்கும் அனுப்பியுள்ளார். இந்தியாவில் வாழ்கிற ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநில மக்களிடம் தமிழர்களுக்கு எதிராகக் குரோதத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில், நச்சுக்கருத்துக்களை விதைத்து உள்ளார். இலங்கைத் தூதர் கரியவாசம் இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்துள்ளதால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Wednesday, March 27, 2013

டில்லியில் லாரி உரிமையாளர் நடத்திய பேச்சு...தோல்வி:ஸ்டிரைக் தொடரும் என அறிவிப்பு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வி அடைந்ததால், வரும், 1ம் தேதி முதல், திட்டமிட்டபடி, நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்' என, லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்."டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்; மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகைஉயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, "அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்' என, அழைக்கப்படும், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், வேலை நிறுத்த அறிவிப்பைஏற்கனவே வெளியிட்டிருந்தது.அதன்படி, "வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல், நாடு முழுவதும், 75 லட்சம் லாரிகள் ஓடாது; லாரிகளை இயக்க மாட்டோம்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

Tuesday, March 26, 2013

ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் -மார்ச் 25, 2013 at 4:57:04 PM தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த,அனைத்து மக்களின் ஆதரவோடு, மத்திய அரசை வலியுத்தும் போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அரசியல் சார்பற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப்படுவார்கள் என்று கூறிய கூட்டமைப்பினர், அதனை அடுத்து போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதுவரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு முடிவடைந்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுடனான சந்திப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் சார்புள்ளவர்கள் தங்கள் கூட்டமைப்பில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

விஷவாயு கசிவு எதிரொலி:ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் -மார்ச் 26, 2013 at 8:26:29 AM ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தூத்துக்குடி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ரசாயன வாயுக்கசிவு காரணமாக அந்த ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராட்டங்களும் வலுத்துள்ளன. கடந்த 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு வாயுக் கசிவு காற்றில் கலந்ததை அடுத்து தூத்துக்குடியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒருபகுதியான நேற்று ஆலையை முற்றுகையிட்ட மீனவர்கள், உடனடியாக தொழிற்சாலையை இழுத்துமூட வலியுறுத்தினர். இதற்கிடையே வைகோ தலைமையில் மதிமுகவினரும் பிற அமைப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி கைதாகினர். அப்போது பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், வாயுக்கசிவில் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த வடமாநில ஊழியர் ஒருவர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. அவரது இறப்பை முறையாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர நேற்றிரவு ஸ்டெர்லைட் ஆலையின் பேருந்தை மறித்த வழக்கறிஞர்கள், ஆலையின் பெயரை கறுப்பு மையால் அழித்தனர். வழக்கறிஞர்களின் சாலை மறியல் போராட்டத்தால் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கட்சி சார்பற்ற முறையில் நாளை மறுநாள் தூத்துக்குடியில் பேரணி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது அணியை மீண்டும் உருவாக்க முலாயம் சிங் தீவிரம்

புதுடில்லி: மூன்றாவது அணி அமைக்கும் நடவடிக்கைகளில், சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்' என, கட்சி தொண்டர்களை உசுப்பேற்றியுள்ள, முலாயம், ஐ.மு., கூட்டணி அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும், மறைமுகமாக ஈடுபட்டுள்ளார். தி.மு.க., வாபஸ்: காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., சமீபத்தில் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து, டில்லியில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், காங்., நிம்மதியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பிரதமர் பதவி மீது, ஆசை வந்து விட்டது. அதற்கு, இதுதான் சரியான நேரம் என, கணக்கு போட்டுள்ள அவர், அதற்கு ஏற்றார்போல் காய்களை நகர்த்தி வருகிறார்.

அரசியல் காழ்புணர்ச்சியால் எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்' : விஜயகாந்த் கருத்து

சென்னை: ""தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும்கட்சி எடுத்த நடவடிக்கையாக கருதுகிறேன். இதை கண்டித்து, வரும், 30ம்தேதி, தே.மு.தி.க., சார்பில், மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்,'' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் ஊழல்; தளபதி லஞ்சம் வாங்கியது அம்பலம் : சி.பி.ஐ., அறிக்கை

புதுடில்லி :ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை தான் என சிபிஐ.,யின் முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004-2005 ம் ஆண்டில் தியாகி, அவரது உறவினர்கள் மூலம் லஞ்சம் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, March 25, 2013

மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்

தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த,அனைத்து மக்களின் ஆதரவோடு, மத்திய அரசை வலியுத்தும் போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அரசியல் சார்பற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப்படுவார்கள் என்று கூறிய கூட்டமைப்பினர், அதனை அடுத்து போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இதுவரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு முடிவடைந்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுடனான சந்திப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் சார்புள்ளவர்கள் தங்கள் கூட்டமைப்பில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Wednesday, March 13, 2013

ராஜபக்சேவை கண்டித்து தொடர் போராட்டம் : அண்ணாமலை பல்கலைக்கு விடுமுறை

ராஜபக்சேவை கண்டித்து மாணவர்கள் ஈடுபட்டு வரும் தொடர் போராட்டம் எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மறுதேதி அறிவிக்கும் வரை காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு பத்திரிகை குறிப்பில், ‘’மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக மருத்து வம், பல் மருத்துவப் புலங்களை தவிர, ஏனைய அனைத்து புலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிய ர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடுபட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 4-ம் ஆண்டு, 5-ம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் 6-வது நடைமேடையில் புறப்பட தயாராக நின்ற சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மாணவர்களின் திடீர் போராட்டத்தில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்களிடம் நிலைய மேலாளர் மணிவண்ணன், மற்றும் ரெயில்வே போலீசார் சமாதானம் பேசினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இன்று காலை செங்கல்பட்டு ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

நெல்லையில் 3-வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: மேலும் ஒரு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

இலங்கை போரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது குறித்து ஐ.நா சபை பொது விசாரணை நடத்தி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாக முடியும் வகையில் இருப்பதால் சர்வதேச தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் சேவியர் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். பல்கலை கழக மாணவர்கள் நேற்று 2-வது நாளுடன் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டனர். நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் இன்று கல்லூரி முன்பு 3-வது நாளாக தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அவர்கள் கல்லூரி முன்பு போடப்பட்டுள்ள பந்தலில் இன்று சோர்வடைந்த நிலையில் படுத்துள்ளனர். இதுபோல நெல்லை புது பஸ் நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி பகுதியில் சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று 3-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் இன்று பல்கலைகழக மாணவர் ஒருவரும், பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் கூடுதலாக கலந்து கொண்டனர். இதனால் அங்கு 15 மாணவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் 11 பேர் சோர்வடைந்து பந்தலிலேயே படுத்த நிலையில் உள்ளனர். நெல்லை சட்டக்கல்லூரி முன்பும், நெல்லை புது பஸ் நிலையம் முன்பும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று ஜான்ஸ் கல்லூரி, இந்து கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத பந்தல் முன்பு கூடி ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், இலங்கை தமிழர் ஆதரவு அமைப்பினரும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சினையால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில் உண்ணாவிரத போராட்டம் சாகும் வரை தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா. நடவடிக்கை கோரி பேட்டை ம.தி.தா. கல்லூரி மாணவர்களும் இன்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். 3-ம் ஆண்டு மாணவர் முத்துராஜ் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் மாணவர்கள் சக்திவேல் முருகன், சுதாகர், மாடமகாராஜா, மாணவிகள் சத்யா, செல்வி, மாரிசெல்வி, பிரேமா உள்பட 20 மாணவிகளும், 30 மாணவர்களும் கலந்து கொண்டனர்.