Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 29, 2014

ஒளி, வாயு, நீரில்லாமலும் வாழும் நுண்ணுயிர்கள்

கடலுக்கடியில் மிக ஆழத்தில் துளையிட்டு ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இது போன்ற மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழும் மிக நுண்ணிய உயிரினங்கள் பற்றி புதிய பார்வைகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர். ----------------------------------------------------------------------- இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர். ----------------------------------------------------------------------- பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ----------------------------------------------------------------------- சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது. -------------------------------------------------------------------- இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. --------------------------------------------------------------------------- இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. --------------------------------------------------------------------------- “ நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.அப்படிக் கண்டுபிடிக்கும்போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட் --------------------------------------------------------------------------- சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்த்தாம். --------------------------------------------------------------------------- இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன எனப்தைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர். --------------------------------------------------------------------------- இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர். --------------------------------------------------------------------------- இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.