உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000 வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
அந்த மரபணுவை விஞ்ஞானிகள் எடுக்க பயன்படுத்திய வழி குறித்த விவரங்கள் ‘நேச்சர்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, December 21, 2013
மிகப் பழைய மனித மரபணு கிடைத்துள்ளது
உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000 வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
அந்த மரபணுவை விஞ்ஞானிகள் எடுக்க பயன்படுத்திய வழி குறித்த விவரங்கள் ‘நேச்சர்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன
தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு, ஆனால் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாமல்போன ஆண் ஈக்களின் ஆயுள்காலம் 40 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.
மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆப் சயன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக வீடுகளில் காணப்படும் வீட்டு ஈக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக ஆண் ஈக்கள் மத்தியில் பரவச்செய்தனர். அந்த ஹார்மோன்களால் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் கலவிக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாமையால் அவற்றால் கலவியில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகரித்ததையும் இந்த ஆய்வாளர்கள் அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்தனர்.
இப்படி தொடர்ந்து மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், கலவியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து போயின.
இதில் கலவியில் ஈடுபட்ட சாதாரண ஆண் ஈக்களுடன் ஒப்பிடும்போது, கலவியில் ஈடுபட அனுமதிக்கப்படாத ஆண் ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 40 சதவீதம் குறைவதை கவனித்த இந்த ஆய்வாளர்கள், ஆண் ஈக்களின் ஆரோக்கியமான நீடித்த ஆயுளுக்கும் அவற்றின் பாலியல் திருப்திக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ராஜபாளையம் நாய்கள் சர்வதேச முத்திரை பெறுமா?
ராஜபாளையம் நாய்களிடம் நடத்தப்படும் ஆய்வுகள் எதிர்காலத்தில் வீரிய கலப்பின நாய்களை உருவாக்க வழிவகுக்கும்
தெற்காசியாவிலேயே முதல் முறையாக குறிப்பிட்ட இரண்டு நாய் இனங்கள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழகத்திலுள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்கள் குறித்து சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் இயல்புகள் பட்டியிலப்படவுள்ளன.
இந்த ஆய்வுகளை ஹரியானா மாநிலம் கர்னாலிலுள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்கின்றன.
இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் பல வகை ஆடுகளில் இப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நாய் இனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ராஜபாளையம் பயிற்சி மற்றும் கள ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர்.எஸ்.கதிர்வேல்.இந்தியாவிலுள்ள நாட்டின-நாய்கள் உலகிலுள்ள மற்ற நாயினங்களை விட நோய் எதிர்ப்பு சக்தியையும் வேட்டையாடும் மற்றும் காவல்காக்கும் திறன்களையும் அதிகமாகக் கொண்டவை என்பதால் அவை குறித்த சிறப்பு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
ராஜபாளையம் வகை நாய் இனத்தின் தனித்துவம் மற்றும் சிறப்பியல்புகள் குறித்து வரலாற்றில் பல சான்றுகள் இருப்பதாகவும், கலாச்சார ரீதியிலும் இதற்கு தமிழகத்தில் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரிய கதிர்வேல்.
அதேபோல் வேட்டையாடுவதில் சிப்பிப்பாறை வகை நாய்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதாலும் இந்த இரு இனங்கள் குறித்த ஆய்வுகள் இப்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மேலும் பல வீரிய கலப்பின நாய்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் டாக்டர் கதிர்வேல் தமிழோசையிடம் கூறினார்.
பால்வெளியைப் படம்பிடிப்பதற்கான ஐரோப்பியத் திட்டம்
விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிகவும் பேரார்வம் மிக்க ஒரு திட்டம் என்று தம்மால் வர்ணிக்கப்படும் திட்டத்தை ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
பிரன்ஞ் கியானாவில் இருந்து கயா என்னும் விண் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
இது சுற்றுவட்டப்பாதையை அடைந்தபின்னர், அங்கிருந்து எமது பால்வெளிப் நட்சத்திரக் கூட்டத்தை முப்பரிமாணத்தில் படம்பிடித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் வரைபடங்களைத் தரும்.
கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் நகர்வை அளந்து, அது அந்த வரைபடத்தை தயாரிக்கும்.
நட்சத்தரங்களில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் அவற்றின் துணைக்கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள லட்சக்கணக்கான புதிய விசயங்களையும் இது கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்தப் பால்வெளி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானபோது இருந்த நிலைமைகள் குறித்து, காலத்தால் பின்சென்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் இந்தத் தொலைநோக்கி உதவும் என்கிறார் பெரியார் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் ஐயம்பெருமாள்
உலகின் முதல் ரோபோ விண்வெளி மனிதன் விஞ்ஞானியுடன் பேசுகிறான்
உலகின் முதலாவது ரோபோ-ஆஸ்ட்ரானாட் (விண்வெளி ஆய்வுக்கான ரோபோ இயந்திர மனிதன்) விண்வெளியில் இருந்துகொண்டு உரையாடிவருவதாக ஜப்பான் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டில் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கிரோபோ என்ற ஜப்பானின் சிறிய ரோபோ, இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள ஜப்பானிய கட்டளை அதிகாரி கோய்ச்சி வக்காட்டாவுடன் ரோபோ இயந்திர மனிதன் உரையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கிரோபோவின் உரையாடல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்காவிட்டாலும், மனிதர்களைப் போல பதிலளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரோபோவை தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போகப்போக புதிய விடயங்களையும் கற்றுக்கொள்வதற்கு இந்த கிரோபாவால் முடியும்.
கிரோபோவுக்கும் கிரோபோவைப் போன்ற ரோபோ விண்வெளி வீரர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நெடிய விண்வெளி பயணங்களின் போதான துணையாக மட்டுமல்லாமல் பூமியிலும், வயோதிபர்களுக்கும் தனிமையில் வாழ்பவர்களுக்கும் இந்த ரோபோ பெருந்துணையாக இருக்கும் என்றும் அதனை வடிவமைத்தவர்கள் நம்புகின்றனர்.
வவுனியா அட்டம்பகஸ்கட சிறார் இல்லத்தை மூடிவைக்க உத்தரவு
வவுனியா அட்டம்பகஸ்கட சிறார் இல்லத்தை நடத்திவந்த பௌத்த பிக்குவை சிறார் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது
வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடத்தப்படவில்லை என்று சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சிறுவர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அந்த இல்லத்தின் நிர்வாகியான பௌத்த மதகுரு கல்யாணதிஸ்ஸ தேரரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் வி.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவரது சார்பில் வாதாடிய சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சார்பில் சட்டத்தணிகளான இராஜகுலேந்திரா மற்றும் வி.என்.தம்பு ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்குகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைமடுவிலிருந்து யாழுக்கு குடிநீர்: வடமாகாணசபைக்கு விவசாயிகள் கண்டனம்
கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பாதகமான பல விடயங்கள் குறித்து வடமாகாண சபை கவனத்தில் கொள்ளவில்லை என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளத் தலைவர் செ.சிவப்பிரகாசம் புதனன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
'இந்தத் திட்டம் பற்றி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு என்ன சொல்லப்போகின்றோம், இந்தத் திட்டத்தில் நாங்கள் உங்களுக்கு உறுதியாக இருப்போம். இதனை நாங்கள் ஏற்கவில்லை. இதனை உடனடியாக நிறுத்துவோம் என்று மாகாண சபையில் இருந்து எங்களுக்கு இன்றுவரையில் எந்த பதிலும் வரவில்லை. மாறாக, இரணைமடு குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். ஆகவே, எங்களுக்கு மாகாண சபையோ அரசியல்வாதிகளோ எவரும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பக் கூடிய வகையில் அவர்கள் நடந்துகொள்ளவில்லை. இறுதியாக, உறுதியாக, தெட்டத்தெளிவாக நாங்கள் எங்களுடைய தீர்மானத்தை முன்னெடுப்போம். இந்தத் திட்டத்தை எங்களால் நிறுத்த முடியும். அதை நாங்கள் செய்து காட்டுவோம். இதுதான் எங்களுடைய கருத்து, முடிவு என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செ.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட பெரியபரந்தன் விவசாய அமைப்பின் தலைவர் யோகநாதன், இரணைமடு குளத்தின் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்டத்து மக்களுக்கே காணாமல் இருக்கும்போது இங்கிருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிப்பது பொருத்தமற்ற செயலாகவே நாங்கள் கருதுகின்றோம் என்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே இந்தக் குளத்தை அபிவிருத்தி செய்து அதிக நீரைப் பெற்று அதனை இந்த காணிகளுக்கு வழங்க வேண்டும். எங்களுடைய விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் காணாமல் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இராமநாதபுரம் விவசாய அமைப்புத் தலைவர் சிவமோகன், 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு இப்போது நீர் வழங்கப்படுகின்றது. இன்னும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலத்திற்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருந்தும் நீர் வழங்கப்படாமல் இருக்கின்றது இந்த நிலையில் இங்கிருந்து தண்ணீரை எவ்வாறு வெளியில் கொண்டு செல்ல முடியும் என்று வினா எழுப்பினார்.
இரணைமடு குளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதனை அபிவிருத்தி செய்யுங்கள். அதில் அதிக நீரைச் சேமிப்பதற்கும் அதன் மூலம் எங்களுடைய விவசாய நிலங்கள் பயனடைய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம். இந்த அபிவிருத்திக்கென வருகின்ற பணத்தை வேண்டாம் திரும்பிப் போகட்டும் என்று நங்கள் ஒருபோதும் கூறவில்லை என்றும் சிவமோகன் கூறினார்
இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற 21 விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தென் சூடானில் தாக்குதல்: 3 இந்திய அமைதிப் படையினர் பலி
தென் சூடானில் அமைதிக்குலைவு
தெற்கு சூடானின் ஜோங்லெய் மாகாணத்தில் ஐநா மன்ற வளாகத்தின் மீது நடந்த தாக்குதல் ஒன்றில், அங்கிருந்த மூன்று இந்திய அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்.
இத்தகவலை நியுயார்க்கில் நடந்த ஐநா மன்ற அமைதிகாப்புக் கூட்டம் ஒன்றில் ஐ.நா மன்றத்துக்கான இந்தியத் தூதர் அசோக் முக்கர்ஜி வெளியிட்டார்.
சம்பவம் நடந்த அகொபோ நகரில் இருக்கும் ஐ.நா மன்ற கட்டிடத்தில் 43 இந்திய அமைதிப் படையினர் இருந்தனர் .
அந்த கட்டிடத்தில் புகலிடம் கோரியிருந்த 32 டிங்கா இன சிவிலியன்களை , நுயெர் இனக் குழுவினர் இலக்கு வைத்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்தக் கட்டிடத்தில் இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு இனக்குழுக்களிடையே ஏற்படக்கூடிய சாத்தியக்கூறான உள்நாட்டுப் போர் குறித்து ஐ.நா மன்றம் கவலை வெளியிட்டுள்ளது.
தென் சூடானில், அதிபர் சல்வா கீர், அவரது முன்னாள் துணை அதிபர் ரியக் மச்சார் அதிரடிப் புரட்சி ஒன்றைத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டியதிலிருந்தே அங்கு பெருங்கொந்தளிப்பு நிலவுகிறது.
ஞாயிறன்று வெடித்த இந்த மோதல்களில் இது வரை சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
Subscribe to:
Posts (Atom)