Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 25, 2013

சென்னையில் கார் விபத்து: புதுச்சேரி முதல்–மந்திரி ரங்கசாமி உயிர் தப்பினார்

முதல்–அமைச்சர் ரங்கசாமி கார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்த என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் நள்ளிரவில் முதல்–அமைச்சர் வீட்டு முன்பு திரண்டனர். புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி சென்னை எழும்பூரில் நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், மீண்டும் கார் மூலம் புதுவை திரும்பி கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்பு போலீசாரின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 9.15 மணியளவில் கார் சாந்தோம் சர்ச்சை கடந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வேகமாக வந்த கார் முதல்–அமைச்சர் ரங்கசாமியின் காருக்கு முன்பாக சென்ற போலீசாரின் பாதுகாப்பு வாகனத்தில் மோதியது. தொடர்ந்து பின்னால் வந்த முதல்–அமைச்சர் ரங்கசாமியின் கார் மீதும் மோதியது. இதில் போலீசாரின் பாதுகாப்பு வாகனம் பலத்த சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த போலீசார் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் முதல்–அமைச்சரின் காரின் முன்புறம் பலத்த சேதம் அடைந்தது. ஆனால், காரில் இருந்த ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த போலீசார் ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள புதுவை அரசு விடுதியில் இருந்து மாற்று கார் கொண்டு வரப்பட்டு அதில் முதல்–அமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்பினார். ரங்கசாமி கார் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர். இதேபோல் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர் செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர் கிழக்கு கடற்கரை சாலை அனுமந்தை டோல்கேட் அருகே திரண்டனர். ரங்கசாமியின் கார் நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்தது. அப்போது அவரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடல்நலம் குறித்து விசாரித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். நள்ளிரவு 12.15 மணிக்கு ரங்கசாமி தன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் கதறி அழுதனர். இதனையடுத்து முதல்–அமைச்சர் ரங்கசாமி அவர்களிடம் தனக்கு எந்த காயமோ பாதிப்போ இல்லை என்றும் சிறிய விபத்துதான் என்றும் கூறினார். மேலும் அனைவரும் வீடு திரும்பும்படியும் கேட்டு கொண்டார்.

ஒடிசா முதல்–மந்திரி நவின் பட்நாயக்குடன் ஜெகன்மோகன் சந்திப்பு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசு முயற்சிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மாநில மக்களின் கருத்தை கேட்காமல் மத்திய– மாநில காங்கிரஸ் அரசு ஒருதலை பட்சமாக முடிவு எடுப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யும்போது அதனை எதிர்க்க அவர் முடிவு செய்துள்ளார். தனது போராட்டத்துக்கு தேசிய தலைவர்களின் ஆதரவை பெறும் முயற்சியாக ஜெகன் மோகன்ரெட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல் கட்டமாக டெல்லி சென்ற அவர் கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு திரட்டினார். நேற்று ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றார். மாலையில் பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்– மந்திரியுமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஓட்டுக்காக முறைகேடாக ஆந்திர மாநிலத்தை பிரிக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்காவிட்டால் மற்ற மாநிலங்களுக்கும் இதேநிலை ஏற்படும். எனவே தெலுங்கானா மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை எதிர்க்க வேண்டும்’’ என்று நவீன்பட்நாயக்கிடம் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார். ‘‘உங்களது போராட்டத்துக்கு எனது ஆதரவு இருக்கும்’’ என்று நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக ஜெகன்மோகன் ரெட்டி பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார். ஜெகன்மோகன்ரெட்டி இன்று மும்பை சென்றார். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாயத்துறை மந்திரியுமான சரத்பவாரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பின்னர் சிவசேனா தலைவர் உத்தம் தாக்ரேவையும் சந்திக்கிறார். நாளையும், நாளை மறு நாளும் ஆந்திராவில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்திக்கிறார். 30–ந்தேதி முதல் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் யாத்திரையை மேற்கொள்கிறார்.

இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசாங்கம் தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் தீவிர முயற்சி

போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் இனத்தைக் கருவழித்த இனவாத சிங்களம், அத்துடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களின் பூர்விக நிலங்களை அடையாளம் கண்டு அழித்துவருவதுடன், தமிழர்களின் சமய சின்னங்களையும் அழிப்பதில் தீவிர முயற்சிளை மகிந்த அரசாங்கத்தின் கும்பல் ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேல் எவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காசாவில் மேற்கொண்டு வருகிறதோ அதை ஒத்த நடவடிக்கையையும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. போர் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பட்ட உதவிகளை வழங்கிய நாடுகள் இன்று போர் முடிவடைந்த பின்னரும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீதான் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள மகிந்த அரசாங்கம் இவ்வாறான நாடுகளை பின்பற்றிவருகிறது. கடந்த ஐந்து மாத காலத்தில் தொடர்ச்சியாக தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் சமய அடையாளங்களை அழித்தொழிப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 01.06.2013 அன்று ஒரே இரவில் கிரான்குளத்தில் சிறி செல்லக்கதிர்காமம், மாங்காட்டுப்பிள்ளையார், பண்டிருப்பில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டதுடன், விக்கிரகங்களும் சேதமாக்கப்பட்டன. இவ்வாறான சம்பவம் ஒன்று 04.06.2013 அன்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் இருந்த இயேசுநாதனின் திருச்சொரூப உருவம் உடைத்து சேதமாக்கப்பட்டது. ஆலயங்களில் கொள்ளையும், அழித்தொழிப்புக்களும் இடம்பெறும் அதேசமயத்தில் ஆலயங்களைக் கைப்பற்றி இராணுவ முகாங்களை அமைப்பதிலும் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் சிறீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தையும் மீளப் பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.