Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 22, 2013

டெல்லி பல்கலை.யில் 360 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

டெல்லி பல்கலைக் கழகத்தில் 360 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: உதவி பேராசிரியர். மொத்த இடங்கள்: 360 வயது வந்தோர் தொடர் கல்வி-2, ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்-3, அரேபிக்-3, உயிர் வேதியியல்-1, உயிர் இயற்பியல்-1, அம்பேத்கார் ஆராய்ச்சி மையம்-2, வணிக பொருளியல்-2, வேதியியல்-11, கிளஸ்டர் இன்னோ வெஷன் மையம்-16, வணிகவியல்-14, கம்ப்யூட்டர் சயின்ஸ்-6, ஈஸ்ட் ஆசியன் ஸ்டடீஸ்-3, பொருளியல்-13, கல்வி-10, ஆங்கிலம்-9, சுற்றுப்புறச்சூழலியல்- 6, பைனான்சியல் ஸ்டடீஸ்-4, புவியியல்-3, நிலத்தியல்-4, ஜெர்மானிக் மற்றும் ரோமன் ஸ்டடீஸ்-10, இந்தி-18, வரலாறு-5, சட்டம்-61, நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல்-2, மொழியியல்-3, மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்-23, கணிதம்-8, நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியம்-10, இசை-11, ஆபரேஷனல் ரிசர்ச்-3, பெர்சியன்-2, தத்துவம்-9, இயற்பியல் மற்றும் அஸ்ட்ரோ பிசிக்ஸ்- 17, பிளான்ட் மாலிகுலார் பயாலஜி- 2, அரசியல் அறிவியல்- 12, உளவியல்-4, பஞ்சாபி-4, சமஸ்கிருதம்-16, ஸ்லோவானிக் மற்றும் பின்னோ உக்ரியன் ஸ்டடீஸ்-5, சமூகவியல்-3, சோஷியல் வொர்க்- 6, புள்ளியியல்-5, உருது-4, விலங்கியல்-4. மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.12.2013.

ராணுவத்தில் ஹவில்தார்கள் பட்டப்படிப்புன் பி.எட் படித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவத்தின் கல்விப் பிரிவில் குரூப் எக்ஸ் மற்றும் குரூப் ஒய் பிரிவில் ஹவில்தாராக பணியாற்ற பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த பணியிடங்கள்: அறிவியல் பிரிவு: 218. கலைப்பிரிவு: 52 இடங்கள். கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்--ல் பி.எஸ்சி/கம்ப்யூட்டர் பாடத்தில் பிசிஏ. ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருந்தால் மற்ற பாடங்களில் ஏதேனும் ஒன்று துணைப் பாடமாக இருக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.indianarmy.gov.in இணையதளத்தை பார்க்கவும். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 23.2.2014. விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.2013.

சேலம் இரும்பு ஆலையில் 55 பணியிடங்கள்

சேலம் இரும்பு ஆலையில் மெடிக்கல் ஆபீசர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னிகளை தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம்: 1. மெடிக்கல் ஆபீசர்: 2 இடங்கள் தகுதி: எம்பிபிஎஸ்சுடன் மருத்துவக்கல்லூரி அல்லது மருத்துவமனை அல்லது மருத்துவ நிறுவனத்தில் டாக்டராக ஓராண்டு முன்அனுபவம். 2. அட்டெண்டென்ட்: 53 இடங்கள் தகுதி: எஸ்எஸ் எல்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ அல்லது எஸ்எஸ் எல்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ அல்லது எஸ்எஸ்எல்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ. விண்ணப்ப கட்டணத்தை செயில் இணையதளத் தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செலானை பதிவிறக்கம் செய்து அக்கவுன்ட் எண்:33182116230என்ற கணக்கில் செலுத்தவும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். http://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2013.

இந்துஸ்தான் காகித ஆலையில் அப்ரன்டிஸ்

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காகித கழகத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலை-1 Engineering Graduate Apprentices தகுதி: பி.இ.,/பி.டெக்., நிலை-2 Technician (Diploma) Apprentices. தகுதி: டிப்ளமோ. நிலை-3 Technician (Vocational) Apprentice: தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிளஸ் 2. கூடுதல் விவரங்களுக்கு www.hindustanpetroleum.com என்ற இணையத்தை பார்க்கவும். கடைசி நாள்: 30.11.2013.

முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு

இந்திய ராணுவ அகாடமி, கப்பல் படை அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று பணியில் சேர Combined Defence Service Examination-I 2014 யுபிஎஸ்சி தேர்வு 2014ம் ஆண்டு பிப்.9ம் தேதி நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (அ) இந்திய மிலிட்டரி அகாடமி: மொத்த இடங்கள்-250. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (ஆ) கப்பல் படை அகாடமி: மொத்த இடம்-40. கல்வித்தகுதி: பி.இ. (இ) விமானப்படை அகாடமி: 32 இடங்கள். தகுதி: டிகிரி அல்லது பி.இ. (ஈ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (ஆண்கள்). 175 இடங்கள். தகுதி: ஏதே னும் ஒரு பட்டம். (உ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (பெண்கள்). 12 தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. விபரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.12.2013.

சபரிமலை- ஆந்திராவில் இருந்து 128 சிறப்பு ரயில்

ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு 128 சிறப்பு ரயில்களை இயக்க தென்மத்திய ரயில்வே போர்டு ஏற்பாடு செய்துள்ளது. ஐதராபாத், காக்கிநாடா, நிஜாமாபாத், விஜயவாடா, மசூலிபட்டனம், நரசபூர், கரீம்நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நவ.25ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தென்மத்திய ரயில்வே தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அய்யா பழ நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் இன்று காலை விடுதலை

அய்யா பழ நெடுமாறன், வழக்கறிஞர் நல்லதுரை, புதுக்கோட்டை ஜெயசீலன் உள்ளிட்ட 83 பேரும் இன்று காலை 9:௦௦க்கு விடுதலையாகினர்.. ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்க சென்றனர் தற்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்பட 83 பேருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை பிணை வழங்கியது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 9.05 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 83 பேர் விடுதலையானார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோமானது என்றும் கூறினார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த உலக செஸ் : கார்ல்சன் வெற்றி

சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில், 9வது சுற்றில் 28வது காய் நகர்த்தலில் விஸ்வ நாதன் ஆனந்தை தோற்கடித்து கார்ல்சன் வெற்றி பெற்றார். 3வது முறையாக ஆனந்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன் .

நடிகர் வாசுவிக்ரம் திமுகவில் சேர்ந்தார்

நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனும் நடிகருமான வாசுவிக்ரம் திமுகவில் வியாழக்கிழமை சேர்ந் தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். பின்னர் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

திருச்சி சிறையில் இருந்து பழ.நெடுமாறன் விடுதலை

திருச்சி சிறையில் இருந்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 8-ந் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலம் தமிழக அரசு திறப்பு விழாவிற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சென்றதும் அவசரமாக 6 ந் தேதியே திறக்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி 8,9,10 ஆகிய மூன்று நாட்களும் விழா நடந்தது. அதிலும் பல பிரச்சனைகளை முற்றம் திறப்புக் குழு சந்திக்க வேண்டியிருந்தது. சில வழக்குகளும் போடப்பட்டது. இந்த நிலையில் 13 ந் தேதி அதிகாலை தஞ்சை மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் தலைமையில் 200 போலிசாருடன் வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முற்றத்தின் முன்பக்கம் இருந்த சுற்று சுவர் மற்றும் பூங்கா, நீா் ஊற்று, மரங்களை உடைத்து அப்புறப்படுத்தி இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்று பெயா் பலகை வைத்தனர். முற்றத்தின் சுற்று சுவர் இடிக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த உணர்வாளர்கள் நெடுஞ்சாலைத் துறை வைத்த வேலி மற்றும் பெயர்பலகைகளை உடைத்தனர். இதனால் போலிசாருக்கும் உணர்வாளர் களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 நபர்களை போலிசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு புதன்கிழமை மாலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்த னையற்ற ஜாமின் வழங்கியது. அதையடுத்து இன்று 22.11.2013 சிறையில் இருந்து விடுதலை ப்பெற்றார்கள்.

தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை தமிழகத்தில் முன்னெடுக்க இருக்கும் மாணவர்கள்

தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளனர். இது குறித்து மாணவர்களின் அறிக்கை வருமாறு : இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம். ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம். ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம். கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள், தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம் . இந்த நகர்வின் மூலமாக : 1)தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும்.. 2)பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்.. 3)நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிக்கவும் .. தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்க இருக்கிறோம்! எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம். இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்வோம். பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்போம் . இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும். இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் . ஜனவரி 1 முதல் 15 வரை மாதிரி பொதுவாக்கெடுப்பு நடக்கும் . தமிழீழமே தீர்வு என்பதை அதன் முடிவு தீர்மானிக்கட்டும் ! இவ்வாறு மாணவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாயகத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம் - படையினரின் கெடுபிடிகளும் அதிகரிப்பு

தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று 21 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் ஆரம்ப சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. தமிழர் தாயகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சில இடங்களில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் இந்த மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். ஆனால், தொடர்ந்து அந்த இடங்களில் வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாமையால் அந்த இடங்களில் ஆரம்ப நிகழ்வாக சுடரேற்றல் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஒன்றுகூடிய மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வுகளில் தீபமேற்றியுள்ளனர். இந்த ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எத்தகைய இடர்கள் வந்தாலும் மாவீரர்களை நினைவுகூருவார்கள் என்று நம்பிய படையினர் இவற்றை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக புலனாய்வுத் துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் என்ன தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை தாங்கள் அனுஸ்டிப்போம் என்று சபதமெடுத்துள்ள தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நேற்றைய ஆரம்ப வணக்க நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வடமராட்சியின் சில இடங்களிலும் தீவகம் மற்றும் வலிகாமத்தின் சில இடங்களிலும் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதேவேளை, தென்மராட்சியில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு சமீபமாக நேற்று மாலை ஒன்றுகூடிய சில இளைஞர்கள் மாவீரர்களின் நினைவாக மலர்தூவி வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற படையினர் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது பிள்ளைகளான வீர மறவர்களை நினைத்து வீடுகளில் தீபமேற்றி ஆரம்ப வணக்க நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணம் எங்கணும் நேற்று பெரும்பாலான மக்கள் தமது வீடுகளில் நேற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். சிறிலங்கா படையினர் எத்தகைய தடைகளைப் போட்டாலும் தமிழர் தாயகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு தமிழ் மக்களின் நேற்றைய மாவீரர் தின தொடக்க நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா படையினரின் நடமாட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழுவதும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா படையினர் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். வீதிகளில் சென்ற இளைஞர், யுவதிகள் மறிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். - தாயகத்திலிருந்து செந்தமிழன்