Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, December 13, 2013
போராட்டக்காரர்கள் கொலை: தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்கு
பாங்காக், டிச 13–
தாய்லாந்து முன்னாள் பிரதமர் அபிசிஸ்ட் வெஜாஜிவா. இவர் கடந்த 2010–ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த போது மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை ஒடுக்க போலீஸ் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். அதில் 90 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்த ராணுவ புரட்சியின் போதும் 2 பேர் பலியாகினர்.
அதற்காக தற்போது அபிசிஸ்ட் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு அவர் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். இவர் தவிர தற்போது பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வரும் சுதீப் தவுக்சுபான் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2010–ம் ஆண்டில் அபிசிஸ்ட் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தார். தற்போது இவர் மீதான வழக்கு விசாரணையை கோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.
மக்கள் வாழ்இடங்களில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டும் -ஐ.நா அதிகாரி!
கூட்டணி குறித்த முடிவை எடுக்க விஜயகாந்த்திற்கு அதிகாரம்
தே.மு.தி.க.,வின் செயற்குழு கூட்டம் 12.12.2013 வியாழக்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் விஜயகாந்த்திற்கு வழங்கப்பட்டது.
மேலும், தே.மு.தி.க., அவைத்தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விழுப்புரம்: பள்ளிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் +2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை: தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், 37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் மற்றும் மதிப்பெண்கள் இக்குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும் காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in ல் 12.12.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகள், மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றில் கலந்து கொள்ளத் தகுதி உடையவர் ஆவார்கள். இத்தேர்வுகளில் கலந்து கொள்ள இவர்களுக்கு அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். 26.12.2013 வரை அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்புக் கடிதத்தில் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலக தொலைபேசி எண் 044-28413658 ல் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்
- இவ்வாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியதால் பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை இடி தாக்கியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், ஓங்கி உயர்ந்து காணப்படும் அதன் அழகு, கம்பீரம் மிக்கது.
இந்த சூழ்நிலையில் மதுரையில் வியாழக்கிழமை மாலை முதல் மழை பெய்து வந்தது. அப்போது ஏற்பட்ட மின்னலின்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியை தாக்கியது. இதில் கோபுர கலசங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதபோதிலும், சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜகோபுரத்தில் மின்னல் தாக்கியுள்ளதால் விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன.
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹர்ஷவர்த்தனிடம் பேசிய துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அவரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று ஹர்ஷவர்த்தன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். வியாழக்கிழமை மாலை அவர் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று, அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என்று பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன், டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்தப்பின்னர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக ஏற்கவில்லை. டெல்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர பாஜக தயாராக உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்பதை விளக்கினேன் என்றார். மேலும், ஆட்சி அமைப்பதற்காக குதிரைபேரத்தில் பாஜக ஈடுபடாது என்றும் கூறினார்.
இதை அடுத்து, மரபுப் படி, உறுப்பினர் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைப்பது தொடர்பான செயல்திட்டம் குறித்து விவாதிக்க வருமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், வரும் சனிக்கிழமை துணை நிலை ஆளுநரை சந்திக்க வருவதாக பதில் அளித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்றும், இந்த கூட்டணியில், ம.தி.மு.க. - பா.ம.க. சேர்வது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க தலைமையுடன் பேச்சு நடக்கிறது என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார். ஆனால், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இதை மறுத்துள்ளார். ஆனால் ம.தி.மு.க. தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது.
தமிழ் நாட்டின் அரசியல் நிலமை, எந்த எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பது குறித்தும் இருவரும் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)