Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 7, 2014

ம.தி.மு.க.வுடன் கூட்டணி சமரசம்: மோடி கூட்டத்தில் வைகோ பேசுகிறார்

பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. இணைந்ததும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ம.தி.மு.க. தொண்டர்கள் பா.ஜனதா தலைவர்கள் படத்தையும் இணைத்து விளம்பரங்கள் செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மாமல்லபுரத்தில் கீதா உபதேசத்தில் அர்ஜுனனுக்கு கண்ணன் தேர் ஒட்டுவது போல் பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர். அதில் வைகோ தேர் ஓட்டுவது போலவும், தேரில் மோடி இருப்பது போலவும் தத்ரூபமாக அமைத்துள்ளனர். மோடி விடும் அம்பில் இருந்து தாமரை, பம்பரம் ஆகிய சின்னங்கள் வெளி வருவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே போல் பல்வேறு இடங்களில் மோடி–வைகோ படங்களுடன் பிரசாரத்தை துவங்கி விட்டனர். இந்த நிலையில் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் உரசலும், மோடி கூட்டத்தில் வைகோ பங்கேற்க மாட்டார் என்ற தகவலும் ம.தி.மு.க. தொண்டர்களிடையே சோர்வை உருவாக்கியது. இந்த நிலையில் கூட்டணி சிக்கலை தீர்ப்பதில் தமிழருவி மணியன் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர் இந்த பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திட்டமிட்டப் படி மோடி கூட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி பா.ஜ.க. தலைவர்களும் வைகோவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திட்ட மிட்டப்படி மோடி கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசுவார் என்று ம.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நிஷா பிஸ்வாலை சந்திக்க மறுத்த மகிந்த

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலை சந்திக்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நிஷா பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது. நிஷா பிஸ்வாலை சிறிலங்கா அதிபர் சந்திக்காமைக்கு, கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று, அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. எனினும், கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள், திட்டமிட்டே இந்தச் சந்திப்புத் தவிர்க்கப்பட்டதாக நம்புகின்றன. பிஸ்வால் மூலம் அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் நேரடியாக கடுமையான செய்தி ஒன்றை பரிமாறிக் கொள்வதை தவிர்க்கவே சிறிலங்கா அதிபர், அவரைச் சந்திக்காமல் விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாட்டை பிஸ்வால் கொழும்பில் தமது சந்திப்புகளின் போது வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

10வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள ஃபேஸ்புக்

உலகம் முழுவதிலும் 120 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவரால் ஃபேஸ்புக் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கும், இணையத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது உருவாக்கப்பட்டது. உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய ஃபேஸ்புக், இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று தான் கற்பனைகூட செய்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார். மொபைல் சந்தையில் தனது கவனத்தை மந்தமான அளவிலேயே ஃபேஸ்புக் கொண்டிருந்தபோதிலும், பாதிக்கும் மேலான தனது விளம்பர வருவாய் மொபைல்களின் மூலம் பெறப்படுவதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது. மற்ற சமூக வளைத்தளங்களான பின்ட்ரெஸ்ட், டுவிட்டர், ஸ்னாப்சாட் போன்றவற்றின் வரவால் இளைஞர்களின் இடையே ஃபேஸ்புக்கிற்கான வரவேற்பு குறையும் என்று கருதப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் தனது 80 சதவீத வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழக்கும் என்று அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கணிப்புக்கு ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்து சவால் விட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் 13 முதல் 17 வயதுக்கு உள்பட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழந்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

180 நாட்டுப் பிரஜைகளுக்கு இந்தியா வர விசா விதிகள் தளர்கின்றன – இத் திட்டத்தில் இலங்கை சேர்க்கப்படவில்லை -

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளை ஊக்குவிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் குடிமக்கள் மட்டும் இந்த திட்டத்தை உபயோகப்படுத்த முடியாது. இந்த திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது பின்லாந்து, சிங்கபூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளின் குடிமக்களுக்கு இந்த வசதியை இந்தியா வழங்கி வருகிறது. இந்த ‘வந்த-பின்-விசா திட்டத்தை 180 நாடுகளுக்கு விரிவுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கு தேவையான உள்கட்டமைப்பை தயார் செய்ய அந்தந்தத் துறைகளுக்கு ஐந்திலிருந்து 6 மாத காலம் வரை பிடிக்கலாம். அடுத்த சுற்றுலா காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியும் என்று நம்புகிறோம்”, என்றார் திட்டத் துறை அமைச்சர் ராஜிவ் ஷுக்லா. மின்னணு வழி செயல்படும் ‘வந்த-பின்-விசா’ திட்டம் இந்தியாவின் 26 முக்கிய விமான நிலையங்களில் அமல்படுத்தப்படும். இந்த விசா அந்த சுற்றுலா பயணி வந்தடையும் தேதியிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இணையம் மூலம் சுற்றுலாப் பயணிகள் விசா விண்ணப்பிக்கவும், விசா கட்டணத்தை செலுத்தவும் ஒரு இணையதளத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. பின் மூன்று நாட்களுக்கு பிறகு அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம். பாகிஸ்தான், சுடான், ஆப்கானிஸ்தான், இரான், இராக், நைஜீரியா, இலங்கை மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் ஏன் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து ராஜிவ் ஷுக்லா எந்த காரணமும் தெரிவிக்கவில்லை