Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, December 17, 2013
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர்
இந்திய ரிசர்வ் வங்கியில் ஏற்பட்டுள்ள அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’ பணிக்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் பணியாற்றியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
உதவி மேலாளர் (செக்யூரிட்டி) கிரேடு ‘ஏ’. 34 இடங்கள்
தகுதி: ராணுவம்/கப்பல் படை/ விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவப்படைகளான பிஎஸ்எப்., சிஆர்பிஎப், ஐடிபி, சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள்ஸ், ஆர்பிஎப், எஸ்பிஎப், பாதுகாப்பு காவல் படை, சிறப்பு எல்லை படை மற்றும் ஊர்க்காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் (கோடு எண்: 17) மட்டும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் மாஸ்டர்/விசா, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது இன்டெர்நெட் பேங்கிங் மூலமாக கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2013.
ஆப்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 21.12.2013.
பிரின்ட் அவுட்டை சாதாரண தபாலில் அனுப்ப கடைசி நாள்: 24.12.2013.
சிறீலங்காவில் யுவதியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர்!
சிறீலங்கா அரசின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களனி பிரதேச சபையின் உறுப்பினரான மில்ரோய் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதான யுவதியை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருமண வைபவம் ஒன்றில் நடந்த விருந்துபசாரத்தின் போது சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர் இந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்
வேலைகொடு அல்லது உதவித்தொகை வழங்கிடு: மாற்றுத்திறனாளிகள் பேரணி
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும். உதவிக்தொகை வழங்குவதில் கடும் விதிமுறைகளை நீக்கிட வேண்டும். உதவித்தொகை பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 16.12.2013 திங்கள்கிழமை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.
சிங்கப்பூர் சிறையில் உள்ளோரை மீட்க புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு
சிங்கப்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் 3 பேரை மீட்க வேண்டுமென திங்கள்கிழமை ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
சிங்கப்பூர், தேக்காவில் டிச.8-ம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஓணாங்குடி ஊராட்சி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ச. குமாரவேல் உயிரிழந்தார்.
இச்சம்பத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்துவிடுதியைச் சேர்ந்த அ. வேல்முருகன், கி. சரவணன், மழையூர் அருகேயுள்ள தீத்தான்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் கோவிந்தராஜ் (30) (படம்) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிறையில் உள்ள மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
கறுப்பு பண விவாரம்: ராம் ஜெத்மலானியின் மனு ஏற்பு
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், 2 மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த லீச்டென்ஸ்டீன் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் மீது மத்திய அரசு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ள நிலையில், அப்பணத்தை பதுக்கி வைத்திருப்ப வர்களின் பட்டியலை வெளியிட மறுக்கிறது. எனவே, கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை உடனடியாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிடுமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து கீழ் நீதிமன்றம் கடந்த 2011 வருடம், ஜூலை மாதம், 4ந்தேதி தனது உத்தரவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை துரிதமாக வெளியிடக் கூறியது. இத்தீர்ப்பு வெளியாகி 2 வருட காலம் முடிந்த பின்பும் இதுபற்றி மத்திய அரசு மற்றும் இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் சிறிதும் கவலைப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு அலட்சியமாக கருதிவிட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறும் உச்சநீதிமன்றத் திடம் கோரியுள்ளார்.
இவரது மனுக்களை ஏற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், தனது விசாரணையை வரும் ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் அவர் தாக்கல் செய்துள்ள 2 மனுக்களும் பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
நடிகர் அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த வாலிபர்கள்
நடிகர் அஜீத் வீடு சென்னை திருவான்மியூர், சீ வேர்டு சாலையில் உள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், 2 மர்ம வாலிபர்கள், அஜீத்தின் வீட்டு முன்பக்க இரும்பு கதவை தட்டினார்கள். அஜீத்தை பார்க்க வேண்டும் என்று காவலாளியிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
அந்த நேரம் பார்த்து வெளியில் சென்றிருந்த நடிகர் அஜீத் காரில் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரகளை செய்த ஆசாமிகள் உற்சாகமாகிவிட்டனர். தல வந்துட்டார், தல வந்துட்டார், என்று சந்தோஷ கூச்சலிட்டபடியே, அஜீத்தின் காருக்கு பின்னால், வீட்டுக்குள் ஓடினார்கள். காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அஜீத் காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் போய்விட்டார்.
இதற்கிடையில் இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரையும், திருவான்மியூர் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர். பிடிபட்ட வாலிபர்கள், தாங்கள் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் என்றும், அவரை பார்ப்பதற்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் பெயர் கண்ணன் (வயது 29), இன்னொருவர் பெயர் வெற்றி (31). இருவரும் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள். போதையில் இருந்ததால், அவர்கள் இருவரும், நேற்று இரவு திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் தப்பான நோக்கத்தில் அஜீத் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிய வந்ததாலும், அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படாததாலும், எச்சரித்து விடுவித்து விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
மதிமுகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்ததா? இல.கணேசன் பதில்
பாரதீய ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வைகோ சென்ற வாரம் டெல்லிக்கு வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்து 4 மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக சொன்னார். அவர் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் சொல்லி வருவது மோடி பிரதமராக வேண்டும் என்பதே. எனவே, வைகோவின் சந்திப்பு நியாயமான ஒரு ஊகத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. ஆனால் கூட்டணிக்காக பேசினார்களா என்பதை அதிகாரபூர்வமாக என்னால் உறுதிப்படுத்த முடியாது
காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் போன்றவர்கள் எடுத்து வரும் முயற்சிகள், தனிப்பட்ட முயற்சிகள். அவரது முயற்சிகளுக்கும், பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு, இல.கணேசன் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)


