Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, January 4, 2014
இந்தியாவில் இனி இரண்டு 'Time Zone': வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி "மணி நேரம்"!
குவஹாத்தி: அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.
மதிமுக வேட்பாளர் பட்டியலும் ரெடி?
விருதுநகரில் வைகோ, தூத்துக்குடியில் ஜோயல், பொள்ளாச்சியில் ஈஸ்வரன், ஈரோட்டில் கணேசமூர்த்தி எம்.பி., காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா, திருச்சியில் திருமதி ரொக்கையா
டீசல் விலையும் உயர்ந்தது : சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 பைசா உயர்வு!
பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 50 மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி சென்னையில் இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97 காசுகள் அதிகரித்து ரூ.75.68க்கும், ஒரு லிட்டர் டீசல் 61 காசுகள் அதிகரித்து, ரூ.57.93க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. மேலும் இரு தினங்களுக்கு முன் சமையல் கேஸ் சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் வைத்திருப்போரும், ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்
நாடாளுமன்றத் தேர்தல்: திருச்சி அல்லது ஸ்ரீபெரும்புதூரில் ஜெயலலிதா போட்டி?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடப் போவதாகவும் திருச்சி அல்லது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை அவர் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் கணக்கு. இதற்கான தேர்தல் பணிகளில் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் காரணமாக போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த வருடம் ஜூலை மாதம் 21-ந் தேதி நடத்தப்பட்டது. 421 மையங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
இதில் தமிழ் பாடத்துக்கு உரிய தேர்வில் 44 கேள்விகளில் அச்சுப்பிழை இருப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் தமிழ்பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உரிய தேர்வு முடிவு முதலில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் பாடத்திற்கு உரிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கடந்த 30 மற்றும் 31 தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. நேற்று ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 3 நாட்கள் தான் ஆகிறது. மொத்தம் 605 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரம் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஆணையை பள்ளி கல்வித்துறை வழங்க உள்ளது.
தே.மு.தி.க. பொதுக்குழு! கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னம்பேடில் உள்ள எல்.கே.எஸ்.கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு, கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்கிறார். பின்னர் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழத்திற்கு நரேந்திர மோடி மீண்டும் வருகை: ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் ‘வீடு தோறும் மோடி’, ‘உள்ளம் தோறும் தாமரை’ என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 12–ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
வருகிற 31–ந்தேதி தமிழகத்தில் மீனவர்களின் துயர் தீர்க்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ராமேசுவரம் பாம்பனில் கடல் தாமரை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுஷ்மாசுவராஜ் கலந்து கொள்கிறார்.
பிப்ரவரி மாதம் 15–ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.
வருகிற 20–ந்தேதி முதல் பிப்ரவரி 28–ந்தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் நியமித்து தேர்தலுக்கு தயாராகி விடுவோம். தேர்தல் பணியை சனிக்கிழமை முதல் தொடங்குகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நாங்கள் தேர்தல் பணியை சிறப்பாக செய்வோம் என்றார்.
15 வயது சிறுமியைத் திருமணம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
தருமபுரி மாவட்டம், சின்னம்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுகம் (37). ஏற்க்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வித் துறை சார்பில் விசாரனை நடத்தப்பட்டது. பின்னர், அரூர் அருகே உள்ள கே.வேட்ரம்பட்டி அரசுப் பள்ளிக்கு ஆறுமுகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரனை நடத்திய போலீஸார், திருமண வயதை எட்டாத சிறுமியை திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆறுமுகத்தைக் கைது செய்துள்ளனர்.
அண்டார்டிகா பனியில் சிக்கிய ரஷ்ய கப்பலிலிருந்தவர்கள் மீட்பு
அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது.
ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்திலிருந்து தனது பயணத்தை துவக்கிய இந்த ரஷ்ய ஆய்வுக்கப்பல், பனிப்பாறைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அதை மீட்கும் பணியில் ஈடுபட்ட மூன்று பனி உடைப்பு கப்பல்களுமே அந்த கப்பலை சென்று அடைய முடியாமல் இடையிலேயே பனியில் சிக்கி நின்று போயின.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழியாக பயணித்த மாய்சனும் இந்த வழியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பனியில் சிக்கி ஒரே இடத்தை விட்டு நகரமுடியாமல் நின்றிருந்தார். அப்போது அவரது சக பயணிகள் இருவர் இறந்து போனார்கள் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.
கொல்கத்தா பாலியல் வல்லுறவுக்கு எதிராக 3வது நாளாக ஆர்ப்பாட்டம்
கொல்கத்தாவில் 16 வயது பெண்பிள்ளை கூட்டாக -பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டமையைக் கண்டித்து மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
கடந்த அக்டோபரில் இந்தச் சிறுமி 6 பேரால் இரண்டு தடவைகள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்களுக்கு எதிராக காவல்துறையிடம் முறைப்பாடு செய்த பின்னரே, அந்தச் சிறுமி இரண்டாவது தடவையாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள்
புத்தாண்டுப் பிறப்புக்கு முதல்நாள் இரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு அவள் கொல்லப்பட்டாள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண்பிள்ளையையும் அவளது குடும்பத்தையும் காப்பாற்ற காவல்துறை தவறிவிட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை முறியடிக்க புதிய சட்டம் வந்துவிட்ட பின்னரும் களநிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முஷாரப் திடீரென மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் அரசால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், நீதிமன்றம் செல்லும் வழியில் நெஞ்சு வலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இஸ்லாமாபாத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) அவர் ஆஜராகவேண்டியிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கான காரணத்தை நீதிபதியிடம் தெரிவித்த காவல்துறை அதிகாரி, நீதிமன்றம் வரும் வழியில் முஷாரப் நெஞ்சு வலி என்றதால், அவர் உடனடியாக ராவல்பிண்டியிலுள்ள இருதயநோய்களுக்கான ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
முஷாரப் தற்போது சுயநினைவுடன் இருப்பதாகவும், ராணுவ மருத்துவர்களால் பரிசோதிக்கப்படுவதாகவும் முஷாரப் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட தேசத்துரோக வழக்கின் முந்தைய இரண்டு விசாரணைகளிலும் முஷாரப் கலந்துகொள்ளவில்லை. அப்போது அதற்கு பாதுகாப்பு காரணங்கள் காட்டப்பட்டன.
வளர்முக நாடுகளில் 'உடல்பருமன்' வேகமாக அதிகரிக்கிறது
உலகில் செல்வந்த நாடுகளைவிட, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் (வளர்முக நாடுகள்) வாழும் மக்கள் மத்தியில் உடல்பருமன் (ஒபேசிட்டி) கொண்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக பிரிட்டனின் முன்னணி சமூக நிறுவனமொன்று எச்சரித்துள்ளது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில், அளவுக்கு அதிகமாக உடல் எடை கொண்டோர் அல்லது உடல்பருமன் கொண்டோரின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் 100 கோடியாக இருந்துள்ளது.
இது, 1980-ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் என்ற அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தப் பிரச்சனை இன்னும் தீவிரமாக உள்ளது.
இந்த நாடுகளில் மக்கள் இறைச்சி மற்றும் ஏனைய கொழுப்புணவுகளை அதிகளவில் உட்கொள்கின்றனர்.
இதன்காரணமாக, சிலவகையான புற்றுநோய்கள், நீரிழிவு நோய்கள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் இந்த நாடுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளன.
இதனால் அரச சுகாதாரசேவை நடைமுறைகளின் மீது அளவுகடந்த சுமை சுமத்தப்படுவதாகவும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உடல்பருமன் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
தென்கொரியா, டென்மார்க் போன்ற நாடுகள் இவ்வாறான முன்னுதாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, செல்வந்த நாடுகளிலும் உடல்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதனையும் அபிவிருத்தி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வட-கிழக்கு அமெரிக்காவில் பனிப்புயல்: போக்குவரத்து துண்டிப்பு
அமெரிக்காவின் நியு யோர்க் மற்றும் நியு ஜெர்ஸி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு அமெரிக்காவை பெரும் பனிப்புயலொன்று தாக்கியுள்ளதை அடுத்து இந்த அவசரகால நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கான விமானசேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த பனிப்புயலால் சில இடங்களில் இரண்டு அடி உயரத்துக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வீதியில் கொட்டுவதற்காக வைத்திருந்த உப்புமூடைகள் விழுந்ததில் சிக்கிய பணியாளர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகிறார்.
பன்றியில் இருந்து மனிதர்களுக்கு மாற்று உறுப்புகள்
இன்னும் சில ஆண்டுகளில் பன்றிகளிலும், ஆடுகளிலும் மனித உறுப்புக்களை வளர்க்க முடியுமா? அதைவிட முக்கியமாக, உங்களின் பழுதான சிறுநீரகம், கல்லீரலின் மரபணுக்களுடன் ஒத்துப் போகக்கூடிய புதிய சிறுநீரகம் ஈரலை உருவாக்கமுடியுமா? இவையெல்லாம் சாத்தியம் என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள் சிலர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே அவையெல்லாம் சாத்தியம் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
டோக்யோவிலிருந்து ரூபர்ட் விங்க்பீல்ட் ஹேஸ் அனுப்பிய காணொளி.
இலங்கை உலகப் போதைப் பொருள் மையமாக மாற்றமடைந்து வருகின்றது – ஐ.தே.க
இலங்கை உலகப் போதைப் பொருள் மையமாக துரித கதியில் மாற்றமடைந்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சூதாட்டத்திற்கு ஊக்கமளிக்கும் அரசாங்கம் எவ்வாறு இளைஞர் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர் விரக்தி என்ற சொல்லை அகராதியிலிருந்தே இல்லாதொழிக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மது பயன்பாடு மற்றும் சூதாட்டம் ஆகியன அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகளவில் மது அருந்தும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் மது பயன்பாடு 20 மில்லியன் லீற்றர் மதுபானம் அதிகளவில் நுகரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் 65 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் 85 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவா அரசாங்கத்தின் போதைக்கு முற்றுப்புள்ளி திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெகு விரைவில் உலகில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படும் மிக முக்கியமான மையமாக இலங்கை மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகிய முக்கிய போதைப் பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாகவும், விரைவில் அது உலகின் முக்கிய வர்த்தக நிலையமாக மாற்றமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)


