Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, December 20, 2013
சீனாவுக்கு எதிராக கூட்டு சேர்க்கிறது ஜப்பான்
கடல் மற்றும் வான் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஜப்பானுக்கும் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே டோக்யோவில் நடந்த கூட்டத்தின் முடிவில் கோரப்பட்டுள்ளது.
சீனா எல்லைப் பிரச்சனைகளில் கடும்போக்காக நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில் இத்தீர்மானம் வந்துள்ளது.
தென் சீனக் கடலில் தான் உரிமைகோரும் தீவுகளுக்கு மேல் பறக்கும் விமானங்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா சமீபத்தில் அறிவித்தது. இந்த தன்னிச்சையான அறிவிப்பை தாம் மதிக்கப்போவதில்லை என்று அமெரிக்காவும் ஜப்பானும் அறிவித்துவிட்டன.
ஜப்பானுக்கும் ஆசியான் பிராந்திய கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தின் போது, தனது அண்டை நாடுகளாக இருக்கும் இந்த கூட்டமைப்பின் நாடுகளுக்கு, உதவி மற்றும் கடனாக 20 பில்லியன் டாலர்களை அளிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.
வலுவான சீனாவை எதிர்கொள்ள ஆசியான் நாடுகளை ஜப்பான் நாடிச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவில் முஸ்லிம் மாகாணத்தில் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி
சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு.
ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இது மிகச்சமீபத்தியது.
இந்த சம்பவங்களுக்கு முஸ்லீம் பிரிவினைவாதிகளே பொறுப்பு என்று பொதுவாக போலிசார் பழி சுமத்துகின்றனர்.
ஆனால் இதை இந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் இன முஸ்லீம்கள் மறுத்து, இந்த சம்பவங்களைக் காரணம் காட்டி தங்கள் மீது மேலும் ஒடுக்குமுறை நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர்
சீனாவின் நிலா வாகனம் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது
சீனாவின் ஆளில்லா வாகனம் நிலவில் இறக்கிய விண்கலனை எடுத்த படம்
நிலவுக்கு சீனா அனுப்பிய ஆளில்லா வாகனம், ஜேட் ராபிட், அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
ஜேட் ராபிட், அதை நிலவில் தரையிறக்கிய கலனிலிருந்து பிரிந்து சென்று சில மீட்டர்கள் தூரம் சென்று, பின்னர் கலனை அது படமெடுத்து அனுப்பியது. அதே போல அந்த விண்கலனும் அந்த வாகனத்தைப் புகைப்படமெடுத்தது.
இந்தப் புகைப்படங்கள் பீஜிங் ஏரோஸ்பேஸ் கட்டுப்பாடு மையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டன. அவை வந்தடைவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் லி கெகியாங்கும் பார்த்தனர்.
இந்த வாகனம் நிலவில் மூன்று மாதங்கள் இருந்து நிலவின் புவியியல் பரப்பை ஆராய்வதுடன், இயற்கை வளங்கள் அங்கு இருக்கின்றதா எனபதையும் ஆராயும்.
இந்த வாகனத்தை தரையிறக்கிய விண்கலன், அங்கு ஒரு ஆண்டு தங்கியிருந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
நிலவில் பத்திரமாக ஒரு கலனை தரையிறக்கிய நாடுகள் பட்டியலில், அமெரிக்கா மற்றும் முந்தைய சோவியத் ஒன்றியத்துக்குப் பின்னர் சீனா மூன்றாவது நாடாகச் சேர்கிறது
நவீன அடிமை குற்றங்களைத் தடுக்க பிரிட்டன் திட்டம்
பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே
நவீனகால- அடிமை முறை மற்றும் மனிதக் கடத்தல்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசாங்கம், கடுமையான தடை நடவடிக்கைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே முதலில் முன்வைத்திருந்தார்.
இவ்வாறான மனிதக் கடத்தல்கள் மற்றும் நவீனகால- அடிமை முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைக் காலத்தை 14 ஆண்டு சிறையிலிருந்து ஆயுள்கால சிறையாக உயர்த்துவதற்கு கடந்த ஆகஸ்டில் அவர் பரிந்துரை செய்திருந்தார்.
புதிய திட்டத்தின்படி, அடிமை முறை- ஒழிப்புக்கான ஆணையாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.
இவ்வாறான குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் பற்றி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரான்க் ஃபீல்ட் மேற்கொண்ட மீளாய்வு அறிக்கையும் வெளியிடப்படுகின்றது.
பிரிட்டனில் நவீனகால- அடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இருப்பதாக அவரது அறிக்கை கணக்கிட்டுள்ளது.
உயர்ந்த மனிதரின் பெரிய சிலை திறப்பு
பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள மண்டேலாவின் உருவச் சிலை
நெலசன் மண்டேலாவின் உடல் கடந்த ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
டயானா மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பு இல்லை- லண்டன் போலிஸ் முடிவு
1997 ஆகஸ்டில், விபத்து நடந்த நாளன்று, தாங்கள் தங்கியிருந்த பாரிஸ் ரிட்ஸ் ஹோட்டலிலிருந்து இளவரசி டயானாவும் நண்பர் டோடியும், வெளியே வரும் காட்சி (ஹோட்டல் சி.சி.டி.வி படம்)
பிரிட்டிஷ் இளவரசி டயானா 16 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் கார் விபத்தொன்றில் இறந்த சம்பவத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் ராணுவ ரகசிய அதிரடிப் படையின் வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் போலிசார் முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த பாரிஸ் விபத்தில் பிரிட்டிஷ் இளவரசி டயானாவும், அவரது நண்பர் டோடி அல் பேயதும் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்று எழுந்த புதிய குற்றச்சாட்டுகளை விசாரித்த லண்டன் பெருநகரப் போலிசாருக்கு ராணுவ அதிரடிப்படையின் ஆவணங்களைப் பார்வையிட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த ஆவணங்களைப் பார்வையிட்ட பின்னரே இந்த முடிவுக்குத் தாங்கள் வந்ததாகவும் போலிசார் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
2008ம் ஆண்டில் நடந்த ஒரு மரண விசாரணை, இந்த ஜோடிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் , ஹென்ரி பால், குடிபோதையில் மிகவேகமாக, கவனக் குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டு அவர்கள் கொல்லப்பட்டதாக முடிவுக்கு வந்தது.
டயானா 1997 ஆகஸ்டில் நடந்த இந்த விபத்தில் கொல்லப்பட்டார். அப்போது அவர் இளவரசர் சார்லஸிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 36.
அவரோடு பயணம் செய்த அவரது நண்பர் டோடி அல் பேயது, லண்டன் நகரில் பெரிய சூப்பர் மார்க்கெட்டான , ஹேரட்ஸ் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான, மொஹமது அல் பேயதின் மகன். அவருக்கு அப்போது வயது 42.
இந்த இருவரும் நெருக்கமாக இருந்ததாக அப்போதைய பத்திரிகைச் செய்திகள் கூறின.
இந்த விசாரணை முடிவு பற்றி மொகமது அல் பேயது "ஏமாற்றமடைந்திருப்பதாக" மொகமது அல் பேயதின் சார்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவித்திருத்திருக்கிறார்.
ஜெர்மனியின் அரச தலைவராக மீண்டும் ஏங்கலா மெர்க்கல்
மீண்டும் அரச தலைவராக பதவியேற்றுள்ளார் ஏங்கலா மெர்க்கல் அம்மையார்(நடுவே)
ஜெர்மனியின் அரச தலைவராக ஏஞ்சலா மெர்க்கல் அம்மையார் மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது தேர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அங்கு தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களான பிறகும், அட்சி அமைவதில் இழுபறி நிலவியது.
ஏங்கலா மெர்க்கல் அவர்கள் தான் தலைமை தாங்கும் வலது மத்தியசாரி கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் மத்திய இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட சோஷியல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டாக ஆட்சி அமைக்கிறார்.
சோஷிய ஜனநாயகக் கட்சியினர் சில முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளை பெற்றிருந்தாலும், மிகவும் முக்கியமான நிதி அமைச்சகப் பொறுப்பு, மெர்க்கல் அவரின் நெருங்கிய கூட்டாளியின் வசம் உள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதி ஒழுக்கம் தேவை எனும் ஜெர்மனியின் கடும் நிலைப்பாடு உறுதியாக மாறாது என்பதையே இதைக் காட்டுகிறது பெர்லினிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதிக ஓய்வூதியம் கோரும் ஹாலந்து பாலியல் தொழிலாளர்கள்
ஹாலந்து சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளர்கள்
நெதர்லாந்தில் பாலியல் தொழிலாளர்கள் ,தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான ஓய்வூதிய உரிமைகள் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
நெதர்லாந்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம்.
பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே, தங்களது இளமையில், கடுமையான உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடுகிறார்கள், அவர்களது தொழிலும், அதிக காலம் நீடிப்பதில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.
நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.
மியான்மாரில் அதிகரிக்கும் கஞ்சா சாகுபடி : கவலையில் ஐ நா
மியான்மாரில் இந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கஞ்சா உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஐ நா கூறுகிறது.
கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவுடன் பர்மிய அதிகாரிகள்---------
இதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்ற அளவீடுகள் குறித்த அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய விடயங்கள்
மாற்று பணப் பயிருக்கு வழியில்லை என்கிறார்கள் விவசாயிகள் -----------
போதைப்பொருள்
விவசாயிகள் தமது வாழ்வாதாரங்களுக்கு மாற்றுவழி இல்லாத காரணத்தாலேயே, அவர்கள் கஞ்சா பயிரிடுகிறார்கள் என்றும் ஐ நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தென்கிழக்காசியவில் கஞ்சா பயிரிடப்படுவது குறித்த தனது வருடாந்திர ஆய்விலேயே ஐ நா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மாரில் 870 டண்கள் அளவுக்கு கஞ்சா உற்பத்தி இருக்கும் என அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.
இரண்டாவது இடம்
மாற்று பணப் பயிருக்கு வழியில்லை என்கிறார்கள் விவசாயிகள்
இந்த அளவை வைத்துப் பார்க்கும் போது, உலகளவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து கூடுதலாக கஞ்சா பயிரிடபடும் இடமாக மியான்மார் உள்ளது.
ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கான கிராக்கியும், பர்மாவின் வட கிழக்குப் பகுதியிலிருக்கும் ஷாண் மலைப் பிரதேசத்திலுள்ள ஏழ்மை நிலையும், அங்கு மாற்று பணப் பயிர்களுக்கான வாய்ப்பு இல்லாததுமே கஞ்சா பயிர் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் மட்டும் 5500 டண்கள் அளவுக்கு கஞ்சா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று கடந்த மாதம் ஐ நா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 49 சதவீதம் உயர்வு என்றும் ஐ நா அறிக்கை கூறுகிறது.
ஹிட்லருக்கு வழங்கப்பட்ட கௌரவக் குடியுரிமையை ரத்து செய்தது ஜெர்மன் நகர்
அடாஃல்ப் ஹிட்லருக்கு அளிக்கப்பட்டிருந்த கௌரவ குடியுரிமையை, தெற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு சிறிய நகரம் விலக்கிக் கொண்டுள்ளது.
அந்த நடவடிக்கையை எடுக்க அங்குள்ள கவுன்சில் முன்னர் மறுத்திருந்தாலும், இப்போது பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக
ஹிட்லரின் கௌரவ குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையை இப்போது டியட்ராம்செல் நகரம் எடுத்துள்ளது.
ஹிட்லருக்கும் அவரை அரச தலைவராக நியமித்த பால் வான் ஹைண்டன்பர்க் ஆகிய இருவருக்கும் எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் கௌரவக் குடியுரிமையை அந்த நகரம் வழங்கி கௌரவித்திருந்ததை ஆவண ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
எனினும் அதை ரத்து செய்ய கடந்த வாரம் உள்ளூர் கவுன்சிலின் உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். சரித்திரத்தை மாற்றி எழுதும் வேலை தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து கூட்டப்பட்ட இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் அந்த நகரசபை உறுப்பினர்கள் தங்களது முந்தைய முடிவுக்கு மன்னிப்பு கோரியது மட்டுமல்லாமல், இந்த இருவரின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
லண்டன் நாடகக் கொட்டகை கூரை இடிந்து பலர் காயம்
லண்டன் நகரில் நாடகக் கொட்டகை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 88 பேர் காயமடைந்தனர்.
இதில் ஏழு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
நாடகம் நடந்து கொண்டிருந்த இந்த மத்திய லண்டன் கொட்டகையில், வியாழனன்று மாலை ஜிஎம்டி நேரப்படி 8.15 மணிக்கு, கூரை இடிந்து விழுந்த போது, சுமார் 720 பேர் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
கூரை இடிந்து விழுந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.
கொட்டகையில் இருந்த அலங்காரமான பிளாஸ்டர் வேலைப்பாடுடன் கூடிய கூரைப்பகுதி இடிந்து விழுந்த போது ஒளி விளக்குத் தூணும் இடிந்து விழுந்தது என்று கூறப்படுகிறது.
யாரும் கொல்லப்படவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் வண்டிகளும், போலிசாரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த அப்போல்லோ தியேட்டர் 1901ல் திறக்கப்பட்டது. " தெ க்யூரியஸ் இன்சிடண்ட் ஒப் தெ டாக் இன் தெ நைட்-டைம்" ( The curious incident of the Dog in the Night-Time )என்ற நாடகம் விபத்து நடந்தபோது நடந்துகொண்டிருந்தது.
கூடுவாஞ்சேரியில் ம.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை
கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டு நல்லூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (48). ம.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். மேலும், ம.தி.மு.க.வில் ஊராட்சி கழக செயலாளராகவும், இலக்கிய அணி புரவலராகவும் உள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் இவர் 8–ம் வகுப்பு படிக்கும் தனது மகள் கீர்த்தனாவை டியூசனுக்கு விட ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றார். வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் மாந்தோப்பு உள்ளது. அதன் அருகே மகளுடன் சென்றபோது மாந்தோப்பில் பதுங்கி இருந்த 6 பேர் திடீர் என சம்பத்தை சுற்றி வளைத்தனர். அனைவரின் கையிலும் அரிவாள் உருட்டுக்கட்டை இருந்தது.
கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள் சம்பத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
அரிவாள் வெட்டில் சம்பத்தின் தலை, முகம், கை, தோள்பட்டை உள்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.
தனது கண்முன்னே தந்தை வெட்டப்பட்டதை பார்த்த கீர்த்தனா கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சம்பத்தை உடனடியாக அருகில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தி வருகிறார். செங்கல்பட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம்: தமிழக அரசு உத்தரவாதம்
தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீசின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அந்த நினைவு கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை விளார் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம்: தமிழக அரசு உத்தரவாதம்
தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீசின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அந்த நினைவு கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை விளார் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சின்ன வெங்காயம் விலை சரிவு
அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.25 ஆக சரிந்தது.தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. மாசி, வைகாசி பட்டங்கள் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் 22,800 ஏக்கரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் டன் உற்பத்தியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் 17,050 ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தாமதமானதால் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.
சாகுபடி பரப்பளவு குறைந்தது, கையிருப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு எகிறியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேவை அதிகரித்திருந்ததாலும், தாங்கள் அறுவடை செய்த வெங்காயத்தை சேமிக்க வழியின்றி உடனுக்குடன் அறுவடை செய்த வயலிலேயே வியாபாரிகளிடம் விற்றனர். பெரம்பலூர் உழவர் சந்தையில் அதிகப்பட்சமாக கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் ரூ.60க்கும், ரூ.70க்கும், கிராமங்களில் ரூ.80க்கும் விற்கப்பட்டது.
தற்போது சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம் அடைந்துள்ளதால் கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது. பெல்லாரி வெங்காயமும் இதே விலைக்கு விற்கப்படுகிறது. வயலில் அறுவடை செய்த நிலையிலேயே விலைக்கு விற்கப்படுவதால், மார்க்கெட்களிலும் ஈர வெங்காயமா கவே விற்கப்படுகிறது.
சின்ன வெங்காயம் விலை சரிவு
அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.25 ஆக சரிந்தது.தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. மாசி, வைகாசி பட்டங்கள் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் 22,800 ஏக்கரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் டன் உற்பத்தியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் 17,050 ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தாமதமானதால் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது.
சாகுபடி பரப்பளவு குறைந்தது, கையிருப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு எகிறியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தேவை அதிகரித்திருந்ததாலும், தாங்கள் அறுவடை செய்த வெங்காயத்தை சேமிக்க வழியின்றி உடனுக்குடன் அறுவடை செய்த வயலிலேயே வியாபாரிகளிடம் விற்றனர். பெரம்பலூர் உழவர் சந்தையில் அதிகப்பட்சமாக கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் ரூ.60க்கும், ரூ.70க்கும், கிராமங்களில் ரூ.80க்கும் விற்கப்பட்டது.
தற்போது சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம் அடைந்துள்ளதால் கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது. பெல்லாரி வெங்காயமும் இதே விலைக்கு விற்கப்படுகிறது. வயலில் அறுவடை செய்த நிலையிலேயே விலைக்கு விற்கப்படுவதால், மார்க்கெட்களிலும் ஈர வெங்காயமா கவே விற்கப்படுகிறது.
ஓரின சேர்க்கை விவகாரம்: நடிகை திரிஷா கருத்து
ஓரின சேர்க்கை பிரச்சினை பற்றி நடிகை திரிஷா, ‘‘இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம். ‘செக்ஸ்,’ அவரவர் விருப்பம். இவரோடுதான் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
‘செக்ஸ்’ விஷயத்தில், பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவரவர் இஷ்டம். இவர்தான் ‘பார்ட்னர்’ என்று மற்றவர்கள் பலவந்தப்படுத்த கூடாது’’என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார்
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர் விஜய், ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் விஜய்யை வைத்து ‘வசந்த வாசல்’ என்ற படத்தை தயாரித்த எம்.ராஜராம், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த எஸ்.சவுந்திரபாண்டியன், ‘மின்சார கண்ணா’ படத்தை தயாரித்த ஆர்.சாந்தா கே.ஆர்.ஜி., ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், ‘விஷ்ணு’ படத்தை தயாரித்த எம்.பாஸ்கர் அவருடைய மகன் பாலாஜி பிரபுவுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி கௌரவித்தார். மனிதநேய அடிப்படையில் இந்த பணத்தை விஜய் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்தது.
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி காலமானார்
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி புதுடெல்லியில் மரணமடைந்தார்.
கடந்த மே மாதம் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கலைச்செல்வி படுகாயம் அடைந்தார். குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கலைச்செல்விக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுதது அவர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
நாராயணசாமி கலைச்செல்வி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்
எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், திருக்கடையூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தனது நிலையை தாமாகவே தெரிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைமையோ, தேசியத் தலைமையோ அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணிக்காக தமிழருவி மணியன் மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் நிச்சயம் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்.
ஆட்சிக்கு வந்த நூறு நாள்களில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் எனக் கூறிவிட்டு, தற்போது வரை மின் தட்டுப்பாடு நிலவுவது வருத்தத்துக்குரியது. ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இன்னும் குழப்பங்கள் ஏற்படும் என்றார்.
Subscribe to:
Posts (Atom)










