Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, March 26, 2013
ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு
பதிவு செய்த நாள் -மார்ச் 25, 2013 at 4:57:04 PM
தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த,அனைத்து மக்களின் ஆதரவோடு, மத்திய அரசை வலியுத்தும் போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக அரசியல் சார்பற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப்படுவார்கள் என்று கூறிய கூட்டமைப்பினர், அதனை அடுத்து போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுவரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு முடிவடைந்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுடனான சந்திப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் சார்புள்ளவர்கள் தங்கள் கூட்டமைப்பில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
விஷவாயு கசிவு எதிரொலி:ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
பதிவு செய்த நாள் -மார்ச் 26, 2013 at 8:26:29 AM
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தூத்துக்குடி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ரசாயன வாயுக்கசிவு காரணமாக அந்த ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராட்டங்களும் வலுத்துள்ளன.
கடந்த 23 ஆம் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு வாயுக் கசிவு காற்றில் கலந்ததை அடுத்து தூத்துக்குடியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒருபகுதியான நேற்று ஆலையை முற்றுகையிட்ட மீனவர்கள், உடனடியாக தொழிற்சாலையை இழுத்துமூட வலியுறுத்தினர். இதற்கிடையே வைகோ தலைமையில் மதிமுகவினரும் பிற அமைப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி கைதாகினர். அப்போது பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வாயுக்கசிவில் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த வடமாநில ஊழியர் ஒருவர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. அவரது இறப்பை முறையாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர நேற்றிரவு ஸ்டெர்லைட் ஆலையின் பேருந்தை மறித்த வழக்கறிஞர்கள், ஆலையின் பெயரை கறுப்பு மையால் அழித்தனர்.
வழக்கறிஞர்களின் சாலை மறியல் போராட்டத்தால் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கட்சி சார்பற்ற முறையில் நாளை மறுநாள் தூத்துக்குடியில் பேரணி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது அணியை மீண்டும் உருவாக்க முலாயம் சிங் தீவிரம்
புதுடில்லி: மூன்றாவது அணி அமைக்கும் நடவடிக்கைகளில், சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரும். அதற்கு தயாராக இருக்க வேண்டும்' என, கட்சி தொண்டர்களை உசுப்பேற்றியுள்ள, முலாயம், ஐ.மு., கூட்டணி அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும், மறைமுகமாக ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க., வாபஸ்: காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., சமீபத்தில் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து, டில்லியில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், காங்., நிம்மதியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பிரதமர் பதவி மீது, ஆசை வந்து விட்டது. அதற்கு, இதுதான் சரியான நேரம் என, கணக்கு போட்டுள்ள அவர், அதற்கு ஏற்றார்போல் காய்களை நகர்த்தி வருகிறார்.
அரசியல் காழ்புணர்ச்சியால் எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்' : விஜயகாந்த் கருத்து
சென்னை: ""தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும்கட்சி எடுத்த நடவடிக்கையாக கருதுகிறேன். இதை கண்டித்து, வரும், 30ம்தேதி, தே.மு.தி.க., சார்பில், மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்,'' என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் ஊழல்; தளபதி லஞ்சம் வாங்கியது அம்பலம் : சி.பி.ஐ., அறிக்கை
புதுடில்லி :ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை தான் என சிபிஐ.,யின் முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004-2005 ம் ஆண்டில் தியாகி, அவரது உறவினர்கள் மூலம் லஞ்சம் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)