Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, September 5, 2014
ஒரு வீட்டு 314.000 யுவான் பெறப்பட்டது
லியாங்ஷன் யி தன்னாட்சி எல்லை, சிச்சுவான் மாகாணத்தில் இயன்ஷே கிராமத்தில், கிராமத்தில் 13.11 மில்லியன் யுவான் ($ 2.17 மில்லியன்) பகிர்வு, 14 ஜனவரி 2014 அன்று கிராமம் அறிமுகப்படுத்தியது, . ஒரு வீட்டு 314.000 யுவான் பெறப்பட்டது
தேயிலை விவசாயிகள் பெரிய ஆண்டு இறுதியில் போனஸ் பெரும் காட்சி
தைவான் புகைப்பட 'லென்ஸ்கள்
இந்தோனேஷியா உள்ள மக்கள் எரிமலைகள் நிழலில்
மவுண்ட் Sinabung கரோ மாவட்டத்தில், இந்தோனேஷியா வடக்கு சுமத்ரா மாகாணத்தின், ஜனவரி 20, 2014 இல் நமன் Teran கிராமத்தில் இருந்து எரிமலை வெடிப்பு புகைப்படம்
உலகின் மீகப்பெரிய நீர் தேக் அணை
சூரியன் எரிமலை புகைப்படம்
அமெரிக்காவின் நாசா அண்மையில் சூரியன் எரிமலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சூரியனின் மேற்புறம், வண்ணமிகுந்த இழுதுமீன் போலிருக்கிறது. இந்தப் புகைப்படம் நாசா வெளியிட்ட மிக தெளிவான சூரியன் எரிமலை புகைப்படமாகும்.
சீன அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர்கள் எதிர்ப்பு
ஹொங்கொங்கின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதில் சீனா புதிய விதிகளை அறிவித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி பெய்ஜிங்கின் மூத்த அதிகாரி ஒருவர் பேசிய நேரத்தில் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களும், சட்டசபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
-------------------------------------------------------------------------
மத்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கோஷமிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
--------------------------------------------------------------------------------
ஹொங்கொங் மக்கள் தங்களுடைய தலைமை நிர்வாகியை 2017ல் சுதந்திரமாக தேர்வுசெய்யலாம் என்று அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
--------------------------------------------------------------------------------
2017ல் ஹொங்கொங்குக்கான தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய நடக்கவுள்ள தேர்தலில் யார் போட்டியிடலாம் என்பதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் நேற்று ஞாயிறன்று சீனா அறிவித்திருந்தது.
--------------------------------------------------------------------------------
சீன அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு தேர்வுக் குழுவில் பாதியளவானோருக்கும் கூடுதலானவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
--------------------------------------------------------------------------------
இந்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளனது.
--------------------------------------------------------------------------------
தற்போதைய விதிகளின் பிரகாரம் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் தரப்பிலிருந்து எவருமே தலைமை நிர்வாகி பதவிக்கு போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதாகவே தெரிகிறது.
--------------------------------------------------------------------------------
ஹொங்கொங் சுதந்திர அரசியல் அலகாக உருவாக வேண்டும் என்றோ, சோஷலிஸ பாதையிலிருந்து நாடு திசை மாற வேண்டும் என்றோ விரும்புபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று சீன அதிகாரி லீ ஃபெய் கூறினார்.
--------------------------------------------------------------------------------
ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டம் நடந்த அதேநேரம் பெய்ஜிங் ஆதரவு ஆர்வலர்கள் சிலரும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். ஹொங்கொங் மக்கள் அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு பிளவுபட்டுள்ளார்கள் என்பதை இந்த போட்டி ஆர்ப்பாட்டம் எடுத்துக்காட்டியது.
--------------------------------------------------------------------------------
சீனாவில் ஒற்றைக்கட்சி கம்யூனிஸ ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கிலான அதிபர் சீ ஜின்பிங்குடைய கொள்கையின் அங்கமாகவே ஹொங்கொங் தொடர்பான சீனாவின் முடிவுகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.
--------------------------------------------------------------------------------
முன்பு பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவுடன் இணைக்கப்பட்டிருந்த ஹொங்கொங்கில் மட்டும்தான் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க முடியும்.
--------------------------------------------------------------------------------
சீனாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஹொங்கொங்கில் பேச்சு சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும் ஒப்பீட்டளவில் அதிகம்.
--------------------------------------------------------------------------------
ஆனால் சீனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய எவரும் ஹொங்கொங்கில் தலைவராக வந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் சீனா தற்போது புதிய விதிகளை அறிவித்துள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வேல்ஸில் நேட்டோ மாநாடு
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
எஸ்டோனியா சென்றுள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் டல்லின் நகரில் இருந்து கருத்து வெளியிடுகையில், கொலையாளிகளின் நடவடிக்கை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.
--------------------------------------------------------------------------------------
தன்னை இஸ்லாமிய தேசம் என்று அழைத்துக்கொள்கிற அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்கா முடிவாக உள்ளது என்று ஒபாமா கூறினார்.
--------------------------------------------------------------------------------------
சொட்லொஃப் கொல்லப்பட்டதைக் காட்டும் வீடியோவில் பிரிட்டிஷ் பணயக்கைதி ஒருவரையும் கொல்லப்போவதாக பயங்கரவாதிகள் எச்சரித்திருக்கும் நிலையில், பிரிட்டனில் நெருக்கடி நிர்வாகத்துக்கு பொறுப்பான உயர்மட்ட கோப்ரா குழு அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
வேறு சில அமெரிக்கப் பிரஜைகளும்கூட இஸ்லாமிய தேச ஆயுததாரிகளின் பிடியில் இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அமெரிக்க ராஜங்கத்துறை சார்பகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
ஜேம்ஸ் ஃபொலி என்ற வேறொரு அமெரிக்க ஊடகவியலாளரும் சென்ற மாதம் இதே பாணியில் இஸ்லாமிய தேசத்தவரால் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------
ஃபொலீ கொல்லப்பட்டதைக் காட்டிய வீடியோவில் 31 வயதான சொட்லொஃப்பும் காண்பிக்கப்பட்டிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிரியாவின் வட பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
ஜேம்ஸ் ஃபொலி கொல்லப்பட்ட வீடியோவில் பேசியிருந்தவரைப் போல சொட்லொஃப் கொலை வீடியோவிலும் முகமூடி அணிந்திருந்த நபர் இங்கிலிஷ்காரர் பாணியில் ஆங்கிலம் பேசியிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
இரண்டு வீடியோவில் வருவதுமே ஒரே ஆள்தான் என்று தாங்கள் கருதுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஃபிலிப் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் அண்மைய வான் தாக்குதல்களால் வட இராக்கில் முன்னேற முடியாமல் போனதை அடுத்து இஸ்லாமிய தேச அமைப்பினர் ஆத்திரத்தில் இந்த அமெரிக்க ஊடகவியலாளர்களைக் கொன்றிருப்பதாகத் தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------
அமெரிக்க விமானங்களை தாக்க வல்லமையில்லாத நிலையில், வேறு விதமான தகவல் யுத்தத்தை நடத்துவதற்காக அவர்கள் இப்படியான குரூரமான காரியத்தில் இறங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தொடங்கப்பட்டது 10,000 அதி பயங்கர தீவிரவாதிகள்
இந்த அமைப்பில் 10,000 அதி பயங்கர தீவிரவாதிகள் உள்ளனர். நவீன ஆயுதங்களை வைத்துள்ளனர்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸாத்துக்கு எதிராக
சிரிய அதிபர் பாஷர் அஸ்ஸாத்துக்கு எதிரான புரட்சி அமைப்பாகத்தான் முதலில் ஐஎஸ்ஐஎஸ் தொடங்கப்பட்டது. அப்போது இதன் அபாயகரமான முகத்தை யாரும் சரிவர கவனிக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------
வடக்கு ஈராக் கபளீகரம்
ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு ஈராக்கை கபளீகரம் செய்தபோதுதான் இதன் ஷாக் பின்னணி குறித்து அனைவரும் அறிந்து அதிர்ந்தனர்.
--------------------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பு
இன்று இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை இது வளைத்து விட்டது.
------------------------------------------------------------------------
சிரியா, ஈராக்கின் பலவீனமே காரணம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வசம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு சிக்கக் காரணம், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள மிகவும் பலவீனமான அரசுகளும், உள்நாட்டுக் குழப்பங்களுமே.
------------------------------------------------------------------------
எண்ணெய் விற்பனையிலும்
-------------
வெறும் தீவிரவாத அமைப்பாக மட்டும் இல்லாமல் இது எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 6 லட்சம் பவுண்டு பணத்தையும் சம்பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் பிணையாளிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலமாகவு்ம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)