Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, February 8, 2014
அமெரிக்க உளவுநாயை சிறைப் பிடித்ததாக தாலிபன்கள் அறிவிப்பு - டுவிட்டரில் படம் வெளியீடு
அமெரிக்காவின் உளவு நாய் ஒன்றை சிறைப் பிடித்துள்ளதாக தலிபான்கள் தமது சமூகவலைதளமான டுவிட்டரில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் படையினர், தங்களைப் பற்றி துப்பறிய அனுப்பப்பட்ட அமெரிக்க படையைச் சேர்ந்த உளவு நாய் ஒன்றை சிறைபிடித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கறுப்பு நிறப் பெல்ட் அணிந்துள்ள நாய் ஒன்றின் புகைப்படம் ஒன்றை தங்களது டுவிட்டர் இணைய பக்கத்தில் தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்துடன் கூடிய செய்தியில், சம்பந்தப் பட்ட அந்த உளவு நாயை கடந்த டிசம்பரில் பிடித்ததாகவும், நாய் மீது ஒரு டார்ச் விளக்கு, சிறிய கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டடு இருந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றில் அமளி, அவை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு-
பாராளுமன்றில் அமளி நிலவியதாகவும், அவையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றில் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதனால் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 18ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மின்சாரப் பிரச்சினை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது உரையில் வேறும் விடயங்கள் பற்றி பேசப்பட்டது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பால் விலைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவை நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர பிரதி சபாநாயகர் முயற்சித்த போதிலும் முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அவை நடவடிக்கைகளை எதிர்வரும் 18ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதரவினை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த முயற்சியின் ஓர் கட்டமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் அமைச்சர் பீரிஸ் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீ (றுயபெ லுi) இன் அழைப்பினை ஏற்று அமைச்சர் பீரிஸ் சீனா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு உரிமைப்புரிமை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனா கடந்த நவம்பர் மாதம் மனித உரிமை பேரவை அமர்வுகளில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு சீனா பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
US போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே ராப் பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து சரணடைந்தவர்களை தேடினார்?
இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் பத்த்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை சென்றிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர்.
வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது.
இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை இலங்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐலன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரி;ல் வழக்குத் தொடரப்பட்டவர்கள் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 2009ம் ஆண்டில் குறித்த நபர்கள் இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக 13 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. எனினும், இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம், சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்துள்ளது. காவல்துறையினரின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து பலவந்தமான அடிப்படையில் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சாட்சியங்கள், வாக்கு மூலங்கள் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் போன்ற அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தள்ளது. செய்மதித் தொலைபேசிகள், ஜீ.பி.எஸ் கருவிகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
விளையாட்டுப்போட்டிக்கு விருந்தினராக யாரை அழைப்பது - தர்மசங்கடத்தில் கிளிநொச்சி அதிபர்கள் :
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது எல்லா பாடசாலைகளிலும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.; பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அந்த கல்விச் சமூகமே விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளில் மகிழ்ச்சியாக இருக்க அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மிகவும் தர்மசங்கடத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் பல அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் யாரை விருந்தினராக அழைப்பது என்பதிலேயே அதிபர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பலர் அதிபர்கள் தெரிவி;துள்ளனர். வடக்கு மாகாண சபையை சேர்ந்தவர்களை அழைப்பதா அல்லது மத்திய அரசின் ஆளும்தரப்பைச் சேர்ந்தவர்களை அழைப்பதா என்பது தொடர்பிலேயே பாடசாலை அதிபர்கள் இந்த பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
வடக்கு மாகாண சபை தெரிவு செய்வதற்கு முன் மத்திய அரசின் ஆளும்தரப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் தங்கள் பாடசாலைக்கு பௌதீக வளம் மற்றும் பல்வேறு உதவிகளை பெற்று பாடசாலையின் கல்விச் செயற்பாட்டை முன்னேற்றியுள்ளதாகவும் பாடசாலைகளில் நிலவிவந்த பல தீர்க்க முடியாத பிரச்சினைகளை இவர்களைகொண்டு தீர்வுகளை பெற்றுக்கொண்டதாகவும் இதற்கான நன்றியுணர்வாக அவர்களை சார்ந்தவர்களை விருந்தினராக அழைத்தால் தாங்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி நிலை ஏற்படலாம் என தெரிவிக்கும் பல அதிபர்கள் மறுபுறம் மத்திய அரசின் ஆளும்தரப்பை சார்ந்தவர்களை விடுத்து வடக்கு மாகாண ஆளும்தரப்பை சேர்நதவர்களை விருந்தினராக அழைத்தால் தங்களிடம் உதவிகளை பெற்று பாடசாலையினை வளர்த்துவிட்ட நிலையில் தற்போது நன்றி மறந்தவர்களாக அதிபர்கள் உள்ளனர் என்ற குறைக்கு உள்ளாக வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கும் பல அதிபர்கள் இந்த வருடாந்த இல்ல மெய்வலுநர் போட்டி நிகழ்வுகள் மூலம் தாங்களே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அழைக்காமலும் செய்ய முடியாது அழைத்தாலும் நிம்மதியாக செய்ய முடியாது என்றநிலையில் தங்களின் நிலைமை காணப்படுவதாக பல அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளன
Subscribe to:
Posts (Atom)


