Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 6, 2014

அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி -

அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது. எனினும், இந்த முயற்சி தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவு இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வன்னிலையில் நிலைநிறுத்தப்படவிருந்தனர். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் வடக்கின் மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாடசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்கப்படவில்லை. வட மாகாணசபையின் கல்வி அமைச்சும், மாகாணசபை நிர்வாகமும் இந்தத் திட்டத்திற்கு இணங்கியிருந்தது. வட மாகாணசபையின் இந்த்த் தீர்மானம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை

கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலைகழக மாணவர்கள் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளனர். கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், அதாவது இவைகளை உணர் உறுப்புகள்(Antennae) என்று அழைக்கின்றனர். இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும். இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerci) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும்.
இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ்(trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள். இந்த திரகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும். இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம். எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!...

இலங்கைக்கு ஒன் அரைவல் வீசா இல்லை: இந்தியா அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி கிடையாது என இந்தியா அறிவித்துள்ளது. இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா முறைமை நீடிக்கப்பட உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த வீசா சலுகை நீடிக்கப்படவில்லை. இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா முறைமை காணப்பட்டது. எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. சில மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக இலங்கை முதலான நாடுகளுக்கு வீசா சலுகை வழங்கப்படவில்லை என்பது பற்றிய தகவல்களை இந்தியா வெளியிடவில்லை.

மைக்ரோசாஃப்டின் புதிய தலைவர் நாதெல்ல சத்யா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். எனினும் அவர் உருவாக்கிய அந்த மென்பொருள் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எனும் பதவியை அவர் ஏற்கிறார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நாதெல்ல சத்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த நாதெல்ல சத்யா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்கிறார். ஸ்டீவ் பால்மர் பதவி விலகியதை அடுத்து நாதெல்ல சத்யா அந்தப் பொறுப்புக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாஃப்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, சத்யாவே நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதற்கு மிகச்சிறந்தவர் என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார். இதற்கு முன்னர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் க்ளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் பிரிவுகளின் தலைவராக நாதெல்ல சத்யா இருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து பங்குச் சந்தைகளில் மைக்ரோ சாஃப்ட் பங்குகளின் மதிப்பு அதிகரித்தன. நாதெல்ல சத்யா இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு பிறந்தார். மங்களூர் பல்கலைகழகத்தில் மின்பொறியியல் பட்டம் பயின்ற பின்னர் கணினி தொழில்நுட்பம் மற்றும் வர்த்தமேலாண்மை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். சன் மைக்ரோ சிஸ்டம்ஸில் முதலில் பணியாற்றிய நாதெல்ல சத்யா, 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

செனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட மாட்டாது – ஜீ.எல்.பீரிஸ்

செனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் சில சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், செனல்4 ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளின் போது வழக்குத் தொடர்வதனை விடவும் மிகவும் காத்திரமான சில தந்திரோபாயங்களின் மூலம், பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சார்பில் செனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டுமென ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், வழக்குத் தொடர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அதற்கு மாற்று வழிகளை அரசாங்கம் பின்பற்றி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா துணைப் பொது செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-

ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைப் பொது செயலாளர் ஹோலியாங் சூ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய பசுபிக் அபிவிருத்திப் பிரிவின் தலைவராகவும், பிராந்திய வலயத்தின் பிராந்திய பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர், வட மாகாணத்திற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கண்காணிப்பு மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா இந்தியா ஜப்பான் நாடுகளின் அதிகரித்து வரும் உலக அளவிலான இராணுவ பலம் ஐரோப்பாவை எச்சரிக்கிறது:

ஆசிய நாடுகளாகிய சீனா இந்தியா ஜப்பான், ஆகியவற்றின் உலக அளவில் பல மடைந்துவரும் தற்போதைய இராணுவ நிலைப்பாடு, ஜரோப்பாவை எச்சரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக லண்டன் நகரில் நேற்றைய புதன் கிழமை வெளியாகிய சர்வதேச யுத்த தந்திர வல்லுனர்களடங்கிய ஸ்தாபனத்தின் வருடாந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகம் தழுவிய வகையில் 171 நாடுகளின் இராணுவப்பலம், அங்குள்ள போர்க்கருவி உற்பத்தியாக்கும் தொழிற்சாலைகள், இராணுவ உபகரணங்களுக்காக அந்நாடுகள் வருடம் ஒன்றிற்கு செலவிடும் தொகை போன்ற முழுமையான தகவல்கள் மூலம், உலக இராணுவ சமநிலை மேலான நிதானமான பொருளடக்கக் கண்ணோட்டத்தை அந்த அறிக்கை கொண்டுள்ளது. ஆசியக் கண்டத்தை சகல வழிகளிலும் கலவரத்திலாற்றும் அமைதியற்ற பாதுகாப்பு நிலைமையாலும், நாடுகளுக்கிடையே காணப்படும் அரசியல் அழுத்தங்களாலும் ஆசிய நாடுகள் தங்கள் இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. அதில் சீனா, ஆசியாவில் மட்டுமல்லாது உலகில் மிகத்தரமான இராணுவப் பலம் பொருந்திய (Super Power) நாடாக மாறிவருகிறது. சென்ற வருடத்தில் போர்க்கருவிகளுக்கு மட்டும் பதினோராயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.. பல போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக்கூடியதும், விமானங்கள் இறங்கி ஏறக்கூடியதுமான பிரமாண்டமான மேற் தளங்களையுடைய போர்க்கப்பல்களை உற்பத்தியாக்கியும், இந்திய நாட்டின் உற்பத்தியான மிக்-29-K ரக போர் விமானங்களை வெற்றிகரமாக விமானப்படையினர் உபயோகித்தும் தம் இராணுவப் பலத்தை இந்தியா அதிகரித்துக் கொண்டுள்ளது. இதற்காக 2013 இல் மட்டும் மூவாயிரத்து அறுநூற்று முப்பது கோடி அமெரிக்க டொலர்களை இந்தியா செலவிட்டுள்ளது.
ஜப்பான் நாடானது சீனாவின் மேற்குக் கடற்பிராந்தியத்தில் தன் வலிமையை அதிகரிக்கச் செய்வதற்கு, சென்ற வருடத்தில் மட்டும் முப்பத்தைந்து போர் விமானங்களை விமானப் படையினருக்குத் தந்து அவர்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. ஜயாயிரத்து நூற்றுப்பத்து கோடி அமெரிக்க டொலர்களை சென்ற வருடம் பாதுகாப்பு நிதிக்காக் ஒதுக்கியுள்ளது. மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக நடைமுறையில் இருந்துவரும் சிக்கனமான செலவீட்டுத்திட்டத்தின் மத்தியிலும், அமெரிக்கா 60 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை இராணுவ ஆயுதங்களுக்கும் துருப்பினரது பராமரிப்பிற்கும் செலவு செய்துள்ளது. ஜரோப்பா தனது சேமிப்புத் திட்டத்தின் கீழ் பல கோடி ஆயிரம் யூரோக்களை சேமிக்கும் நோக்கில் தன் இராணுவப் பலத்தை நவீனப்படுத்தும் பாதையிலிருந்து விலகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஐரோப்பிய செய்தியார் மகேந்தி-

ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியவில்லை:-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மீது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாது விடின் நாட்டுக்கு பாதிப்பு அல்லது கெடுதி ஏற்பட இடமில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகாநாமஹேவா கூறினார்.
கொழும்பில் நடத்தப்பட்ட மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும் இஸ்ரேலுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை. இது போலவே இந்த பிரேரணை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாதுவிடின் இலங்கைக்கு எதுவும் நடைபெறாது என்றும் அவர் கூறினார். இலங்கையானது ரோம் நியதிச்சட்டத்தை ஏற்று கையொப்பமிடவில்லை. இதனால் சர்வதேச குற்றச்செயல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகளை நேரடியாக மேற்கொள்ளும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். ஆயினும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும் சாத்தியம் உள்ளதென மகாநாமஹேவா கூறினார். எனவே, இலங்கைக்கு இப்படியான தீர்மானம் வருமிடத்து அதனை தோற்கடிக்க நட்பு நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டுமென மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.