Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 17, 2014
தேமுதிகவில் 5 வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், தேமுதிக முதல் கட்டமாக, 5 தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பதினாறாவது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது என இந்த மாதம் 6ஆம் தேதி அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலம் கடந்தும் தொகுதி உடன்பாட்டில் எந்தவிதமான இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த அறிவிப்பை இக்கட்சி வெளியிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். தனது பிரசாரத்தின்போது கூட்டணியில் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து பேசிய அவர் ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் மட்டும் செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.
---------------------------------------------------------------------------------------------
அதைபோல் பணம் பெற்றுக் கொண்டு தங்களது கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி அதை அவர் வன்மையாக கண்டித்தார்.
---------------------------------------------------------------------------------------------
வெளியிடப்பட்டுள்ள தேமுதிகவின் முதல் பட்டியலில், நாமக்கல் தொகுதியில் மகேஷ்வரன், மதுரை தொகுதியில் சிவமுத்துக்குமார், திருவள்ளூர் தனி தொகுதியில் யுவராஜ், திருச்சி தொகுதியில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் மற்றும் வடசென்னை தொகுதியில் சவுந்திரபாண்டியன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளும், தேமுதிக கோரும் அதே தொகுதிகளை கோருவதால் மட்டுமே இழுபறி தற்போதும் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
ஆரம்பம் முதலே கூட்டணியில் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு நடுவே சமரசம் செய்வதில் காலம் கடத்தி வருவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
---------------------------------------------------------------------------------------------
14ம் தேதியான இன்று இறுதி முடிவு எட்டப்படும் என தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கூறி வந்துள்ள நிலையில், அது இன்றும் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் புதுவையில் 18 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி
நடைபெறும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின்போது இந்த இருகட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
-----------------------------------------------------------------------------------------
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய ஒன்பது தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
இந்த 18 தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------
இந்த இருகட்சிகளுக்கான மக்களவை தேர்தல் அறிக்கையை, கட்சிகளின் தலைமைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன என்றும், அவற்றின் தமிழாக்கப் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைமை வரும் 16ஆம் தேதி வெளியிடும் என தா பாண்டியன் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------
அதேபோல் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமது கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கையின் தமிழாக்க பிரதி எதிர்வரும் 17ஆம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------
இந்த இரு கட்சிகளின் மாநில தலைவர்களும் கூட்டாக வெள்ளியன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியதோடு, போட்டியிடும் இந்த 18 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் வேறு எந்த கட்சிகளுக்கும் தாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் கூறினர்.
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு:-
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
நியூஸ் எக்ஸ் என்னும் ஊடகம் இது தொடர்பான தகவலை ஒளிபரப்புச் செய்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் போது எவ்வாறு படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது பற்றி இராணுவச் சீருடை தரித்த படைவீரர் ஒருவர் விபரிப்பதாக இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை இரண்டு தரப்பினரும் நிராகரித்திருந்தனர்.
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------
ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser, INFORM, Human Rights Documentation Centre based in Colombo) அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (CPR) இயக்குணர்.(Director of the Centre for Peace and Reconciliation (CPR) based in Jaffna) முனித உரிமைகள் பாதுகாவலர்.
---------------------------------------------------------------------------------------------------
இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்து கரிசைனை செலுத்தியதோடு அந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் இரவுப் பொழுதில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.
பள்ளிப்படை நோக்கிய பயணம் (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)
பள்ளிப்படை நோக்கிய பயணம் (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)
--------------------------------------------------------------------------------------------------------------------
உலகை ஓர் குடையின் கீழ் ஆண்ட நமது பாசத்திற்குரிய மன்னன் , வீர வேங்கை, சுந்தர சோழனின் அன்பு புதல்வன், தமிழ் குலத்தின் முதல்வன், தமிழனின் கட்டிடக்கலையை உலகம் பார்த்து வியக்க செய்த பொறியியல் வித்தகன், அருள்மொழி என்ற ராஜ ராஜ சோழனின் சமாதி சென்று வந்த அனுபவமே இந்த பயணக்கட்டுரை.
--------------------------------------------------------------------------------------------------------------------
உலகை ஆண்ட அந்த ஒப்பற்ற மன்னன் சமாதியின் இன்றைய நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை. நேற்று முளைத்த சில தலைவர்களுக்கும், சாதிய சிந்தனையை வளர்த்தவர்களுக்கும், நடிகர்களுக்கும் சாலையின் மையத்தில் வெண்கல சிலை, தங்க சிலை ! ஒன்றுமே செய்யாத இன்றைய விளம்பர அரசியல்வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசு செலவு செய்து சிலை வைக்கும் பொழுது, உலகை ஆண்ட ஒப்பற்ற மன்னனின் சமாதியை இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிலையில் வைத்திருப்பது கொடுமைங்கிருந்து கிளம்பினோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------
செல்லும் வழியெங்கும் சோழர்காலத்துக்கு வித்துகள். வழியெங்கும் நாம் கதைகளிலும் நாவல்களிலும் படித்த ஊர்களின் பெயர்கள். அவை பம்பை படையூர், ஆரிய படையூர். இந்த இரண்டு ஊர்களும் சோழர்காலத்தில் படைகளுக்கு போர் பயற்சி அளிக்கும் ஊர்கள். அந்த ஊர்களை கடந்து செல்லும் பொழுது அந்த அழகான பெயரை பார்த்து மெய் சிலிர்த்தோம் அட டா !! எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் ? எந்த ஊரில் நாம் இருகின்றோம்?, என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம். அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர் பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் ? ஏன் இந்த பூரிப்பு ? என்று சிந்தித்தால், பொன்னியின் செல்வனில் கல்கியும் உடையாரில் பாலகுமாரனும் எப்படியெல்லாமோ வர்ணித்து, இந்த பெயரை கேட்டாலே புல்லரிக்கும் ஓர் உணர்வை நமக்குள் விதைத்து விட்டார்கள். சோழர் வரலாறு படித்த அனைவருமே குந்தவை, ராஜ ராஜ சோழன் இருவரையும் தமிழ் குலத்தில் வாழ்ந்த இந்த மண்ணின் தெய்வமாகவே நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் வந்த உணர்வு தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
வண்டியை நிறுத்துவிட்டு இறங்கி நடந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊரின் பெயர் சிவபாதசேகர மங்களம் என்று. சிவபாதசேகரன் என்பது நமது மாமன்னன் ராஜ ராஜ சோழனின் இன்னொரு பெயர் என்பது நாம் அறிந்ததே. இறங்கி சமாதி இருக்கும் இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ஒரே நேரத்தில் இன்பமும் துன்மும் கலந்து எங்களை ஆட்கொண்டது. அந்த உணர்வை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. சொல்ல முற்பட்டாலும் சொல்ல முடியாமல் வார்த்தை இன்றி தவிக்கின்றேன். இது சோழன் வாழ்ந்த இடம். அவர் பாதம் பட்ட புண்ணிய பூமி. இங்கே நம் பாதம் பட நமக்கு தகுதி உள்ளதா??? என்ற எண்ணமே எங்களின் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.குடிகொண்டது.
இறுதியாக அந்த இடத்தை அடைந்தோம். அந்த பகுதியை பார்த்தவுடன் நான் அன்று இருந்த நிலையை இன்று எண்ணி பார்க்கும்பொழுது பாலகுமாரன் ஐயா உடையார் 6வது பாகத்தின் முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உடையார் நாவலை முடித்தவுடன் அவர் இருந்த நிலையை குறிப்பிடும் பொழுது, ” நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று ” என்பார். கிட்ட தட்ட அதே போன்றதொரு நிலையைத் தான் நான் சமாதி இருப்பதாக சொல்லப்படும் இடத்தை நுழையும் பொழுது உணர்ந்தேன்.உள்ளே நடக்க கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின, “சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது. ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா ! அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா??? என்று என் கால்கள் நடக்காமல் பின்னிகொண்டன. அந்த லிங்கத்தை தொட்டுக்கொண்டே சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்துவிட்டேன்.!!
--------------------------------------------------------------------------------------------------------------------
பின்னர் ஒரு 90 வயதை கடந்த ஒரு முதியவர் வந்தார். அங்கே சூடம் ஏற்றி காட்டினார்.
அங்கே வந்த எங்களுக்கு அவர் கல்கண்டு கொடுத்தார். கொடுத்துவிட்டு எதோ என்னால் முடிந்தது, நமது பேரரசரை காண வருபவர்களுக்கு எதாவது கொடுக்கவேண்டும். சும்மா அனுப்பக் கூடாது. அதனால் என் வசதிக்கு என்னால் முடிந்ததை தருகிறேன் என்றார். நாங்கள், “நம் தமிழ் மன்னனுக்காக நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது. இது நமது ராஜ ராஜ சோழன் வழங்குவது. இதற்கு விலைமதிப்பே இல்லை” என்று சொல்லி அந்த கல்கண்டை உண்டோம்.
எம் கண்களை கலங்க வைத்த செய்தியும்
சற்றுமுன் ஆங்கிலத்தில் நாம் படித்த செய்தி..இங்கே உங்களுக்காக தமிழில் மொழிப் பெயர்த்துள்ளோம்...
படிக்கும்போதே எம் கண்களை கலங்க வைத்த செய்தியும் கூட
14 வயது சிறுவன் தன் மாற்றந் தந்தையால் 6 முறை சுடப்பட்டு இருக்கிறான். காரணம் அவன் தன் தாயின் இரண்டாவது கணவனால் கற்பழிக்கப்பட இருந்த தன் தங்கையினை காப்பாற்ற போராடியதே. அச்சிறுமிக்கு சிறு காயங்கள்கூட இல்லாமல் காப்பாற்றிய சிறுவனின் துணிச்சலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
-----------------------------------------------------------------------------------------------------------
அச்சமயம் அவன் அம்மா வேலைக்கு சென்றிந்தார். தற்சமயம் அச்சிறுவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான். மருந்துவர்கள் அவனுக்கு அதிக செலவு வைக்கும் ஓர் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவன் பிழைக்க முடியும் என்று கூறி இருக்கிறார்கள். அவனின் ஏழை தாயாரால் அவ்வளவு பணம் திரட்ட முடியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------
முகநூல் நிறுவனம், இச்செய்தியை ஒரு முறை பதிவு செய்வதற்கு 45 சென்ட்ஸ் தர முன் வந்துள்ளது. ஆகவே நாம் அனைவரும் இதை பகிர்வதின் மூலம் அச்சிறுவனுக்கு உதவ முடியும். அது மட்டும் அல்லாமல் இதன் மூலம் அந்த வீர சிறுவனுக்கு ஓர் #சல்யுட் போடலாம். தயவு செய்து இப்பதிவினை அதிகமாக பகிரவும். #மனிதனாய் இருக்க பணம் தேவை இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------
இச்சிறுவன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்..........!!!!!!!!!!!!!!
தோல் நோய்களைக் குணமாக்கும் குருவாயூரப்பனின் "வாகை சார்த்து' தூள்!
தோல் நோய்களைக் குணமாக்கும் குருவாயூரப்பனின் "வாகை சார்த்து' தூள்!
-----------------------------------------------------------------------------------------------------
கேரள மாநிலம், குருவாயூரி லுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள். ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள். அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள். அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர். அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது. திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, புல்லாங்குழலுடன் பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான். இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------
இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம். பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான். அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்தி ரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.
-----------------------------------------------------------------------------------------------------
அவனும் அதிலிருந்து தேவையானபோதெல் லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.
-----------------------------------------------------------------------------------------------------
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான். அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை. பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான். அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.
-----------------------------------------------------------------------------------------------------
சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான். திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப் பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனா கக் காட்சி தருவேன். ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------
இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்.
மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.
மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.
--------------------------------------------------------------------------------------------------------------
டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.
--------------------------------------------------------------------------------------------------------------
இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).
--------------------------------------------------------------------------------------------------------------
மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.
--------------------------------------------------------------------------------------------------------------
நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------
திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------
இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------
தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.
கண்களில் ஏற்படும் புற்றுநோய் பற்றிய தகவல்கள்:-
கண்களில் ஏற்படும் புற்றுநோய் பற்றிய தகவல்கள்:-
புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கண்களில் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம் பரம்பரை. மற்றொன்று மரபணு மாற்றம் என்று சொல்லலாம். கண்களில் ஏற்படும் புற்றுநோயை ‘ரெடினோ பிளாஸ்டோமான்னு என்று அழைக்கப்படும்
இது பெரும்பாலும் சின்ன குழந்தைகளை பாதிக்கும். இவர்களின் கருவிழியில் வெள்ளை படலம் படர்ந்து, இரவில் மிருகங்களின் கண்கள் ஒளிர்வது போல் இருக்கும். மாறுகண் பாதிப்பு இருப்பது போல் தோற்றமளிக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
சில குழந்தைகளுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். இந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. கண்களில் வரும் இந்த புற்றுநோய் கவனிக்காமல் இருந்தால், நாள்பட அது மற்ற உறுப்புகளையும் பாதித்து, கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இதனை 3 வழி முறைகளில் குணப்படுத்தலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாவது
---------------------------------------------------------------------------------------------------------------------------
அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. இதனால் சில சமயம் கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது
---------------------------------------------------------------------------------------------------------------------------
இன்ட்ரா எட்ரியல் கிமோதெரபி: கண்பார்வைக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இன்ட்ரா கிமோதெரபியில், லேசர் கதிர்களை கண்களுக்கு வெளியே செலுத்துவோம். அது புற்றுநோய் கட்டியில் ஊடுருவி சென்று அதனை அழிக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாவது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பிராகி தெரபி: கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு செலுத்துவோம். இது புற்றுநோய் கட்டியை மட்டும் தாக்கும். முகத்தில் மற்ற பாகங்களை பாதிக்காது. அதே சமயம் கண் பார்வையும் காப்பாற்ற முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். பெரியவர்களை பொறுத்தவரை, நாற்பது வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படும். மெலனாமா புற்றுநோய்‘ என்று அழைக்கப்படும் இந்த நோயின் பாதிப்பு கருவிழி முழுதும் வெள்ளை படலம் படர்ந்து இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)