Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 23, 2014

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியோடு தேர்தலுக்கு முன்னரோ இல்லை தேர்தலுக்குப் பின்னரோ நேரடியாகவோ, மறைமுகாவோ, கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் மதிமுக கூட்டு சேராது என்றார் வைகோ. மோடி அலை நாடெங்கும் மோடி அலை வீசுவதாக தெரிவித்த வைகோ, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு பரிமாணம் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் என்றும் அவர் கூறினார். பாஜக கூட்டணியில் மதிமுக பின்னர் பேசிய மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "தே.ஜ. கூட்டணியில் மதிமுக இணைய வந்திருப்பது மகிழ்ச்சி என்றார். மோடி சென்னை வருகை கூட்டணிக்கான பூர்வாங்கப் பேச்சு தொடங்கியுள்ளது, இந்த பேச்சுவார்த்தை தொடரும். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நரேந்திர மோடி சென்னை வரும் போது மதிமுக தலைவர் வைகோ மோடியை நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்.

பா.ஜ., மாநில தலைவர் வலியுறுத்தல் :வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்'

ஈரோடு: தமிழகத்தில் வறட்சி நிலவுவதால், அனைத்து வேளாண் கடன்களையும், தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும், தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோட்டில், உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: வாஜ்பாய் ஆட்சியில், 58 சதவீத நிதி, விவசாயம், கிராம முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டது. அதில், விவசாயிகள் கடன் நிவாரணம், இன்சூரன்ஸ் திட்டம் உள்ளிட்ட, ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 120 கோடி மக்களுக்கு, உணவளிக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு, வெற்றி பெற முடியாது. அரசியல்வாதிகள், மக்களின் வேலைக்காரர்கள். அவர்களை, முறையாக வேலை வாங்க வேண்டியது, விவசாயிகளின் கையில்தான் உள்ளது. விவசாயிகள் கடன் கட்டவில்லை என, அவர்களது வீடு, டிராக்டர்களை, அரசு, ஜப்தி செய்கிறது. ஆனால், முன்னாள் எம்.பி.,க்கள் பலர், பதவி இல்லாத நிலையிலும், அரசாங்க வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர். அவர்களை, காலி செய்ய வைக்க முடியாத மத்திய அரசு, விவசாயிகளின் சொத்துக்களை, ஜப்தி செய்கிறது. வேளாண் தொழில் பாதிக்கப்பட்டால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து, நாடு சீரழியும். திருச்சியில், டிராக்டர் ஜப்தியை எதிர்த்து, சாலை மறியல் செய்த, 250 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில், வறட்சி நிலவுவதால், அனைத்து, வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். உண்ணாவிரதத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாஜலம் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

மோடி அலையால் மேற்கிந்தியாவில் பா.ஜ., முன்னிலை : கருத்து கணிப்பில் தகவல்

புதுடில்லி : மேற்கு மற்றும் ம்த்திய இந்தியாவில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி, பலம் பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளதாக தேர்தல் கருத்து கணிப்புக்கள் கூறுகின்றன. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி தலைமையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளப் போகும் பா.ஜ., குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக மாபெரும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 335 லோக்சபா இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் வீசத் துவங்கி உள்ள மோடி அலை காரணமாக இந்த மாநிலங்களில் பா.ஜ., பெரிய அளவில் வெற்றியை பெற்று, பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. கிழக்கு, தெற்கு, மேற்கு அல்லது மத்திய பகுதி மாநிலங்களைக் கொண்டு சென்னை கணித கழக இயக்குனரும், பேராசிரியருமான ராஜீவ் கரந்திகர் கூறியுள்ள புள்ள விபரப்படி, லோக்சபா தேர்தலில் பிராந்திர மற்றும் சிறிய கட்சிகள் சுமார் 107 முதல் 195 இடங்கள கைப்பற்றும் என கூறப்படுகிறது.

36 மணி நேரம் ரோட்டிலேயே தர்ணாவில் ஈடுபட்டு கெஜ்ரிவால் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 8 ஜரவா இனப் பெண்கள் மீட்பு - கடத்தல்காரர்கள் கைது:அந்தமானில்

போர்ட் பிளேர்: அந்தமானில் கடத்தப்பட்ட 8 ஜரவா இனப் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கடத்திய ஆண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எட்டு பேரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாக அந்தமான் எஸ். பி சின்மய் பிஸ்வால் கூறியுள்ளார். அருகி வரும் இனக் குழுதான் இந்த ஜரவா என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரன் திக்ரி என்ற இடத்தில் இவர்களை அடைத்து வைத்திருந்த தகவல் கிடைத்ததும் ஜரவா இனத்தவரின் நலக்குழு ஒன்றும், போலீஸ் படையும் விரைந்து சென்று அவர்களை மீட்டன. முதலில் நான்கு பெண்களையும், அவர்களுடன் தங்கியிருந்த 4 ஆண்களையும் போலீஸ் குழு மீட்டது. பின்னர் இன்னொரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் மீது ஜரவா இன மக்கள் கடும் கோபமடைந்து தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போலீஸார் தலையிட்டு அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட பெண்களை ஜரவா இனத்தவரோடு, படகு ஒன்றில் போலீஸார் ஜாகோனா என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல், அந்தமான் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி- எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்குப் போட்டுள்ளனர். ஜரவா இனமானது அழியும் நிலையில் உள்ள ஒரு ஆதி அந்தமான் இனமாகும். இந்த இனத்தில் தற்போது மொத்தமே 417 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மண்டேலா காதில் பித்தளை முயல்

நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தமது படைப்பு என்பதை குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் மறைத்து வைத்திருந்த ஒரு பித்தளை முயலை நீக்குமாறு, தென்னாப்ரிக்க
அந்தச் சிலையின் கௌரவத்தை பேணும் வகையில், எவ்வளவு விரைவாக சிற்பிகள் தாங்கள் வைத்த அந்த முயலை நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்ய வேண்டும் என்று தென்னாப்ரிக்க அரசின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். மண்டேலாவின் அந்தச் சிலையில் தங்களது பெயர்களையும் கையெழுத்தையும் பொறிக்க அதிகாரிகள் மறுத்த காரணத்தாலேயே, அந்த முயலை சிலையில் தாங்கள் சேர்த்ததாக சிலையை வடிவமைத்த சிற்பிகள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கூற்றை தென் ஆப்ரிக்க அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார். தங்களது பெயரையோ அல்லது கையெழுத்தையோ பொறிக்க அந்தச் சிற்பிகள் அனுமதி கோரி விண்ணப்பிக்காத போது, அரசு அதற்கு மறுத்தது என்று கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார். அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊட்டியில் தேடப்பட்ட புலி சுட்டு வீழ்த்தப்பட்டது

கடந்த இருவாரங்களுக்கும் மேலாக ஊட்டி மலைப்பகுதியில் மனிதர்களையும் மிருகங்களையும் கொன்ற புலியை புதனன்று இரவு வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் மலைச்சிகரமான தொட்டபெட்டாவுக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் அந்தப் புலி குறைந்தது மூன்று பேரை கொன்றுள்ளது. அதேபோல கால்நடைகளும் அந்தப் புலியின் தாக்குதலுக்கு இரையாயின. இதையடுத்து அந்தப் புலியை பிடிக்க வனத்துறையினர், நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். புதனன்று மாலை அந்தப் புலி கப்பச்சி எனும் கிராமத்தில் மாலை ஆறு மணியளவில் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றது. அதன் உடலை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முற்படுவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அதை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கினர்.
அடித்துக் கொன்ற பசுமாட்டை இழுத்துச் செல்ல அந்தப் புலி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வனத்துறையினர், அது தென்பட்டதும் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த முயன்றபோது அந்த ஆட்கொல்லிப் புலி தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டது என்று உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தப் பகுதி வனத்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டது. அதன்போது, சிறப்பு அதிரடியினர் சுமார் 30 தோட்டாக்களைச் சுட்டனர் என்றும் அதில் அந்தப் புலி கொல்லப்பட்டுள்ளது என்றும் நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி சுகிர்தராஜ் கோயில்பிள்ளை செய்தியாளர்களிடம் கூறினார். கொல்லப்பட்ட புலி சுமார் எட்டு அடி நீளம் என்றும் அதற்கு எட்டு முதல் பத்து வயது வரை இருக்கலாம் என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர். கடந்த இருவாரங்களுக்கும் மேலாக இந்தப் புலியை பிடிக்க பல இடங்களில் அதிநவீன கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. வனத்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் புலியின் அச்சம் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாடசாலைகளும் மூடப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை - ஜேர்மன் தீர்பாயத்தின் ஜெனீவா ஊடக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது:-

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்ததாகவும், இலங்கையின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிரந்தர மக்கள் தீர்ப்பாய பொதுச் செயலாளர் கியன்னி டோக்னொனி இந்த அறிக்கையை விட்டு பேசுகையில், இலங்கை ராணுவமும், காவல்துறையும் மக்களை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைகள் செய்தன என்றும், பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது என்றும் கூறினார். இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறியுள்ள டோக்னொனி, இறுதி கட்டப் போரின்போது ஜனவரி முதல் மே மாதம் வரை பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டில் இருந்து தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும், புலம் பெயர்ந்த தமிழர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் பல கட்டங்களாக இனப்படுகொலைகள் நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், போரின் போது இலங்கை ராணுவத்திற்கு இங்கிலாந்து அரசு ஆயுத உதவிகள் செய்தது என்று தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற ஜேர்மன் தீர்ப்பாயத்தின் இன்றைய (22.01.14) ஊடக மாநாட்டின் நேரடி ஒலிபரப்பு நிறைவு பெற்றது. அந்த மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதற்கான தீர்ப்பின் சாராம்சத்தை தீர்ப்பாயத்தின் நீதியாளர்கள் தெளிவுபடுத்தினர். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை - ஜேர்மன் தீர்பாயத்தின் தீர்ப்பு: - சேரன் - இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வரும் சிங்கள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆவர். இவர்களுள் சிலர் புலமையாளர்களாகப் பல்கலைக்கழகம் சார்ந்து இயங்குபவர்கள். இவர்களுடைய முன் முயற்சியாலேயே இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயத்தின் முதலாவது அமர்வு அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஜனவரி 2010இல் இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் போர்க்குற்றங்களும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் இடம்பெற்றன என்பதும் அதற்கான பொறுப்பாளிகள் இலங்கை அரசும் அதனது படைகளும் என்ற குற்றச்சாட்டு தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாகக் கடமை புரிந்தவர்களுள் எகிப்து நாட்டைச் சேர்ந்த புகழ்மிகு பெண்ணியவாதியும் நாவலாசிரியருமான நவால் அல் சாடவி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக முன்னர் பணியாற்றிய ரஜிந்தர் சர்க்கார், தாய்லாந்தில் நீண்டகாலமாகப் பௌத்தம், சமாதானம், சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பணிபுரிந்து வரும் துறவி சுலக் சிவரக்ஸா ஆகியோரும் இருந்தனர். தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் ஆவணச் சாட்சியங்களையும் தீர்ப்பின் முழு விபரத்தையும் Ifpsl .org/images/files/peoples, tribunals on Srilanka. pdf என்னும் இணையதளத்தில் பார்வையிட முடியும். மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன என்று தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இரண்டாவது அமர்வு பிரேமன் நகரில் இடம்பெற்றது. டிசம்பர் மாதம் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் அமர்வுகள் காலைமுதல் இரவுவரை இடம்பெற்றன. இந்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு. முதலாவது குற்றச்சாட்டு, இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பது. இரண்டாவது குற்றச்சாட்டு, இந்த இனப்படுகொலைக்கு அமெரிக்க, பிரித்தானிய, இந்திய அரசுகள் உடந்தையாக இருந்தன என்பது. இனப்படுகொலை என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிப்பை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்கவில்லை. பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே அதற்கான வித்து வீசப்பட்டுவிட்டது எனபதும் இனப்படுகொலை எவ்வாறு மெல்லமெல்ல ஈழத்தமிழர்கள் மீது ஏவப் பட்டது என்பதும் ஜனவரி 2009 முதல் மே 2009 வரை இடம்பெற்றவை இந்த இனப் படுகொலையின் தர்க்க ரீதியான உச்ச விளைவு என்று நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இத்தகைய குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கவும் இலங்கை, இந்திய, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கு ஆறுமாத காலம் முன்னராகவே அழைப்பு அனுப்பப்பட்டிருந்த போதும் அவர்கள் தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளுக்கான அழைப்பை தீர்ப்பாயத்தின் தலைமைப் பணிமனை ரோம் நகரிலிருந்து அனுப்பியிருந்தது. எனினும் இந்த அரசுகளின் உத்தியோக பூர்வமான நிலைப்பாடு, வாதங்கள் எவையெவை என்பதை அவர்களின் உத்தியோக பூர்வமான ஆவணங்களில் இருந்து தொகுத்துச் சமர்ப்பித்திருந்தார் அயர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர். தீர்ப்பாயத்தின் அமர்வுகள் இரு தொகுதிகளாக இடம்பெற்றன. முதலாவது தொகுதி அமர்வுகள் பகிரங்கமானவை. அனைவரும் கலந்துகொண்டு சாட்சியமளிப்பவர்களையும் நீதிபதிகளையும் பார்க்க முடியும். பதிவு செய்ய முடியும். இரண்டாவது தொகுதி அமர்வுகள் ரகசியமானவை. நீதிபதிகளும் சாட்சிகளும் அவர்களது வழக்குரைஞர்களும் மட்டுமே பங்கு பெற முடியும். இலங்கைப் படையினரால் சித்திரவதைக்குள்ளானோர், பாலியல் வன்முறைக்காளானோர், சாட்சியமளித்துவிட்டு மறுபடியும் இலங்கைக்குத் திரும்ப வேண்டியவர்கள், வேறு பல காரணங்களால் பகிரங்கமாக சாட்சியம் தரத் தயங்கியவர்களுக்கு இத்தகைய இரண்டாவது தொகுதி அமர்வுகள் வாய்ப்பையும் பாதுகாப்பையும் வழங்கின. In - Camera Sessions என அழைக்கப்படும் இத்தகைய அமர்வுகள் இடம்பெறுவது வழமையானதே. முதல்நாள் காலை அமர்வின்போது இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை பற்றியும் அதற்கு உடந்தையாக இருந்த அரசுகள் பற்றியும் விளக்கமானதொரு குற்றப்பத்திரிகையைப் பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் அண்ட்ரூ ஹிக்கின்பாட்டமும் அமெரிக்க வழக்குரைஞர் கரேன் பார்க்கரும் முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து பிரேமன் நகரத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ், Corporate watch என்னும் அமைப்பைச் சேர்ந்த ஃபில் மில்லர் ஆகியோர் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், பிரித்தானியக் காலனித்துவம் நடைமுறைப்படுத்திய ஒற்றையாட்சி முறை, இனப்படுகொலையின் மூலங்கள் என்பன பற்றி ஆதாரங்களுடன் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் வட - கிழக்குப் பகுதிகளில் அரசால் முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், அவற்றின் திட்டமிட்ட விரிவாக்கம், தமிழ் மக்களின் ‘இனத்துவச் சுத்திகரிப்பில்’ இத்தகைய திட்டங்கள் பயன்படுத்தப்பட்ட முறைமை பற்றி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 1956ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற படுகொலைகள், இனவழிப்புக் கலவரங்கள், பாலியல் வன்கொடுமைகள் பற்றிய ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. முனைவர் என். மாலதி, கனடாவின் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் அன்டன் ஃபிலிப், லண்டனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் புனிதா செல்வரத்தினம் ஆகியோர் இந்த அமர்வில் பங்குகொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற ‘முள்ளிவாய்க்கால்’ தொடர்பான விசாரணைகளின் போது இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) இருவரும் முக்கியமான சாட்சியங்களை வழங்கினர்.
போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலித் தலைவர்களான நடேசன், புலித் தேவன், கே.பி போன்றோருடனும் இலங்கை அரசின் அமைச்சர் பஸிஸ் ராஜபக்ஸ, அமெரிக்கத் தூதர், இந்தியத் தூதர் போன்ற பல்வேறு தரப்பினரோடும் தான் தொடர்பில் இருக்க நேர்ந்தமை பற்றி விளக்கிய கஜேந்திரகுமார், செஞ்சிலுவைச் சங்கத்தூடாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையின் கீழோ தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளிருந்த மக்கள் வெளியேறுவதற்கு இடம்தர விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்திருந்தனர் எனவும் இது தொடர்பாகத்தான் பஸிஸ் ராஜபக்ஸவுடன் உரையாடிய பொழுது இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இதற்கு ஆதரவான எத்தகைய பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடைந்த நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைய முன்பு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றியும் விவரித்தார். இந்த விவரங்களை எல்லாம் இப்போதுதான் பொதுவெளியில் தான் கூறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிபதியின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார். இத்தகைய விவரங்கள் எல்லாம் இந்திய, அமெரிக்க அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தனவா எனத் தீர்ப்பாயத்தின் தலைவர் கேட்டபொழுது அவர்களுக்கு இவை தொடர்பான முழு விவரங்களும் தெரிந்திருந்தன எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள், போரின் இறுதிக்கட்டங்களில் மக்கள் பட்ட அவலங்கள் குறித்து வேறு பலரும் In - Camera அமர்வுகளில் சாட்சியம் அளித்தனர். முதல்நாளின் இறுதி அமர்வாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கலம் மக்ரேயின் சாட்சியமும் சானல் 4 தொலைக்காட்சிக்காக அவர் இயக்கியிருந்த NO FIRE ZONE எனும் ஆவணப்படத்தின் பல காட்சிகள் திரையிடப்பட்டன. அதன் பிற்பாடாகத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தனது பதில்களை வழங்கினார். இனப்படுகொலைக்கு இவற்றை விடவும் மேலதிகமாக என்ன ஆதாரங்கள் தேவை? என அவர் கேள்வி எழுப்பினார். தீர்ப்பாயத்தின் இரண்டாம் நாள் அமர்வுகளில் பெரும்பான்மையானவை பகிரங்க அமர்வுகளாக இல்லாது தனியறைக்குள்ளேயே இடம்பெற்றன. மருத்துவமனைகளையும் பொதுமக்கள் பெருமளவு கூடியிருந்த பொது இடங்களை ஏவுகணைகள் வீசித் தாக்கியமை, போரின்போதும் இறுதிக் கட்டங்களின் போதும் வன்னியிலிருந்த ஊடகவியலாளர்கள் பட்ட அவலங்கள், அனுபவங்கள் அவற்றிடையே அவர்களது பங்களிப்பு, மருத்துவர்கள், தாதியர் போன்றோரின் நேரடி அனுபவங்கள், போரின் பின்னர் அரசு மேற்கொண்டு வரும் கட்டாயக் கருத்தடை பற்றிய சாட்சியங்கள் என ஏராளமானவற்றைக் கேட்கிற வாய்ப்பு நீதிபதிகளுக்குக் கிடைத்தது. இனப்படுகொலையின் பல்வேறு அம்சங்களையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஆவணங்களும் சாட்சியங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. சாட்சியங்களினதும் ஆவணங்களினதும் தொகுப்பை தீர்ப்பாயம் வெளியிட இருக்கிறது. பிற்பகல் அமர்வுகளில் அமெரிக்கா, இந்தியா பிரித்தானியா ஆகிய நாடுகள் எவ்வாறு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது பற்றிய வாதங்களும் அவற்றுக்கு ஆதாரம் தரும் ஆவணங்களும் தீர்ப்பாயத்திடம் வழங்கப்பட்டன. இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசு எவ்வாறு உடந்தையாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் வாதிட்டார் சிங்கள எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பாஷண அபேவர்த்தன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே எட்டப்பட்ட சமாதான ஒப்பந்தத்தையும் அதன் பின்னரான பேச்சுவார்த்தைகளையும் முறியடிக்க முன்நின்று தொழிற்பட்ட முக்கியமான சக்தி அமெரிக்க அரசுதான் என்று பாஷண வலியுறுத்தினார். (அவருடைய வாதச் சுருக்கம் தனியே தரப்பட்டுள்ளது.) அவரைத் தொடர்ந்து நிஜிஞீ எனும் ஜெர்மானிய அரசின் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளராக இலங்கையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த றைன்ஹார்ட் போல்ஸ், போர்க் காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜெர்மன் அரசும் எத்தகைய கண்ணோட்டத்துடன் இருந்தனர் என்பதையும் அமெரிக்க அரசின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகத்தான் ஜெர்மனியும் ஐரோப்பிய ராஜ்யமும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டி முற்பட்டது என்பதையும் விளக்கினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பணியாற்றிய ஒரேயொரு வெளிநாட்டு நிறுவனம் GTZ மட்டும்தான் என அவர் தெரிவித்தார். எனினும் தங்கள் நிறுவனத்தின் நடைமுறைகளும் கொள்கைகளும் இலங்கை அரசின் கோட்பாடுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய நிர்பந்தமான சூழல் நிலவியது என அவர் மேலும் விவரித்தார். போரின் இறுதிக் காலக்கட்டத்தின்போது கூடத் தொடர்ச்சியாகவும் விரிவாகவும் செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ்நெற் (TamilNet) இணையதளத்தின் பொறுப்பாசிரியர் ஜெயா தன்னுடைய விவரமான சாட்சியத்தின்போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்ட மைக்கான ஆதாரங்களுக்கான ஒளிப்படங்களைச் சமர்ப்பித்தார். அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதுவராக 1994 - 2000 வரை பணியாற்றிய புரூஸ் ஹெய்க் ( Bruce Haigh) சாட்சியமளிக்கிறபோது அவுஸ்திரேலியா அரசு எப்போதுமே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை விசுவாசமாகப் பின்பற்றி வருவதால் இலங்கை தொடர்பாகவும் இதே நிலைமைதான் இருந்தது என்றார். “தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும்” என்பதே பொதுவான கோட்பாடாக இருந்தது எனத் தொடர்ந்து விவரித்த புரூஸ் ஹெய்க், இலங்கைக்கு ஆயுத வழங்கல் இடையூறில்லாமல் தொடர்வதற்கு அவுஸ்திரேலிய அரசு முக்கியப் பங்காளியாக இருந்தது என்று கூறினார். ஐரோப்பிய, ஜெர்மன், அவுஸ்திரேலியச் சாட்சியங்களின்படி அமெரிக்காவின் தீவிரமான அழுத்தமும் செயற்பாடுகளும்தான் இந்த நாடுகளின் இலங்கை தொடர்பானதும் தமிழர் தொடர்பானதுமான கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பலத்த தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன என்று அறியக் கிடைக்கிறது.
ழத் தமிழர் இனப்படுகொலைக்கு இந்திய அரசு எவ்வாறு உடந்தையாக இருந்தது என்பதைப் பற்றி விரிவான ஆதாரங்களை மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியும் உமரும் சமர்ப்பித்திருந்தனர். “இலங்கை அரசின் இராணுவ வெற்றியே வடக்கில் சுமுகமான நிலைமையை ஏற்படுத்தும்” என்று பிரணாப் முகர்ஜி ஜனவரி 27, 2009இல் கூறியதை மேற்கோள் காட்டித் தமது வாதத்தை முன்வைத்தனர் அவர்கள். ஜனவரி - மே 2009 வரை இந்திய அரசின் முக்கியமான பங்களிப்பாக இருந்தது சர்வதேச அழுத்தத்திலிருந்து எழுந்த போர் நிறுத்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்கும் மழுங்கடிப்பதற்கும் வழியமைத்தமைதான். இதற்கு ஆதாரங்களிலொன்றாக பெப்வரி 7, 2009இல் டென்மார்க் வெளியுறவு அமைச்சர் இந்தியத் தலைவர்களைத் தொடர்பு கொண்டபோது ‘நாங்கள் எம்மாலான சிறப்பு முயற்சிகளையெல்லாம் செய்கிறோம், கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறியிருந்தமையையும் இதே வகையாகக் கனடிய, அவுஸ்திரேலிய அரசுகளின் தலையீட்டையும் கவனத்தையும் மழுங்கடித்துவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டனர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபை கூடத் தேவையில்லை என்று தடுத்தது இந்தியஅரசுதான் என அவர்கள் ஆதாரத்துடன் குறிப்பிட்டார்கள். “இலங்கைக்கு எதிராக நாங்கள் பாதுகாப்புச்சபையைக் கூட்டி ஒன்று சேரத் தேவையில்லை. அது நல்லதல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான இருதரப்பு இராஜதந்திர விவகாரமாக இதனைப் பார்ப்பதே பொருத்தமானது. எனச் சிவசங்கரமேனன் குறிப்பிட்டிருந்தமை விக்கி லீக்ஸ் ஆவணங்களில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். தொகுப்புரை வழங்கிய அண்ட்ரூ ஹிக்கின் பாட்டம் அவர்களின் வாதங்கள் முக்கியமானவை. 1. ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் மையநோக்கமாக இருப்பது அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் அடையாளத்தையும் அழிப்பதுதான். இந்த இனப்படுகொலையின் ஊற்று மூலங்களைப் பிரித்தானியக் காலனித்துவத்தில் இனங்காண முடியும். 2. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் செயற்பட்ட வேளையில் அதற்கு எதிராகவும் சுதந்திரப் போராட்டத்தில் அக்கறையற்றதாகவும் சிங்கள அரசையும் பெரும்பான்மையான சிங்கள மக்களையும் காலனித்துவ அரசு பேணி வந்தது. இந்த அடிப்படையான கோட்பாட்டுப் பிளவை இந்திய ஆளும் வர்க்கம் உணர்ந்து கொள்ளவில்லை. 3. சமூக இணைவு நிலையையும் கூட்டு மனோபாவத்தையும் திட்டமிட்டுச் சிதைத்துள்ளது இலங்கை அரசு. 4. பாலியல் வல்லுறவு, கட்டாயக் கருத்தடை என்பன இனப்படுகொலையின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டமை. 5. ஐ.நா. அவை, அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்பு. 9.12.2013, செவ்வாய்க்கிழமை தீர்ப்பாயத்தின் பன்னிரண்டு நீதிபதிகளும் பல மணிநேரக் கலந்தாலோசனையின் பிற்பாடு தங்களுடைய தீர்ப்பை வழங்கினார்கள்: இனப்படுகொலை! மக்கள் தீர்ப்பாயம் இத்தாலியிலுள்ள ரோம் நகரில் மையங்கொண்டு இயங்கி வரும் மக்கள் தீர்ப்பாயம் வியட்னாம் போர்க்கால கட்டத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, வியட்னாமில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்வதற்காக பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழான் போல் சார்த்தர் ஆகியோரால் துவங்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயத்தின் தொடர்ச்சியாகும். ரஸ்ஸல் - சார்த் தீர்ப்பாயம் என்று இவை குறிப்பிடப்பட்டு வந்தாலும் அமைப்பிலும் செயன்முறைகளிலும் இவை பொதுமக்கள் நலன் சார்ந்த தீர்ப்பாயங்கள்தான். இவற்றின் தீர்ப்புகள் உலக நாடுகளையும் அரசுகளையும் சர்வதேசச் சட்டம் சார்ந்து எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. எனினும் அற விழுமியங்கள் சார்ந்தும் தார்மீகக் கடப்பாட்டின் அடிப்படையிலும் இத்தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் கண்டனங்களுக்கும் பெரும் வலு இருக்கிறது. பொதுமக்கள், மனித உரிமை நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட இனக்குழுமங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பல தளத்தினரும் அரசுகளுக்கு எதிரான முறைப்பாடுகளை மக்கள் தீர்ப்பாயத்தின் முன் கொண்டு செல்ல முடியும். உலகின் பல பாகங்களிலிருந்து பல்வேறு மொழிகள் பேசும் அறிஞர்கள், புலமையாளர்கள், சர்வதேசச் சட்டங்களில் ஆழ்ந்த அறிவு மிக்கோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பிலுமிருந்து நீதிபதிகள் மக்கள் தீர்ப்பாயத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 1979 ஜூன் மாதத்திலிருந்து ரோம் நகரில் இயங்கி வருகிற மக்கள் தீர்ப்பாயம் நிறுவனம் பெற்ற ஆண்டு 1966. ஈராக் மீதான அமெரிக்க யுத்தம், லத்தீன், அமெரிக்க நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த படுகொலைகள், இனப்படுகொலை, அமெரிக்க அரசின் ஆதரவுடன் சிலியில் நடந்த இராணுவப் புரட்சி (1974 - 76), பல்வேறுபட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்களின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் போபாலில் நிகழ்ந்த அழிவு, பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அரசின் வன்கொடுமைகளும் இனவழிப்பும் போன்ற ஏராளமான மனிதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் தீர்ப்பாயம் தீர விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அனைத்துலக மானுடத்தின் மனச்சாட்சியாக இருந்து வருகிற அமைப்பு மக்கள் தீர்ப்பாயம் என்று கூற முடியும். அனைத்துலக அமைப்புகள், ஐக்கிய நாடுகள் அவை, அனைத்துலக நீதிமன்றங்கள் எல்லாமே நாடுகளுக்கும் அரசுகளுக்கும் சார்பாகத் தொடர்ந்து இயங்கி வருவதால் பலஸ்தீன மக்கள், ஈழத்தமிழர்கள், குர்தீஷ் மக்கள் போன்ற நூற்றுக்கணக்கான நாடற்ற இனக் குழுமங்களுக்கும் மக்களுக்கும் இப்போதைக்கு மக்கள் தீர்ப்பாயங்களை நாடுவதைவிட வேறு செயல்வழி இல்லை. காலச்சுவடு:-

பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்:-

பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இந்த ஆண்டில் இலங்கைக்க விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் பாப்பாண்டவர் பிரான்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பு தொடர்பில் 2015ம் ஆண்டில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வார் எனவும், எனினும் இந்த ஆண்டில் விஜயம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் வத்திக்கான் பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெட்ரிக்கோ லம்பார்டி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாப்பாண்டவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எழுத்து மூலமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் பாப்பாண்டவரைச் சந்தித்து ஜனாதிபதியின் அழைப்பு குறித்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் வெண்பனியில் உக்ரேன் தலைநகரில் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பலர் பலி பலர் காயம்:-

கொட்டும் வெண்பனியில் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்திற் தோன்றிய கலவரத்தில் ( Ukraine ) உக்ரேன் நாட்டின் தலைநகர் Kiew வில் ஜந்து உயிர்கள் பலியானதுடன் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றுள்ளனர்.. ஆட்சியாளர்களும் எதிரணியினரும் புதன் கிழமை காலை நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு ஒருவரை ஒருவர் பரஸ்பரமாய் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Ukraine பிரஜைகளின் இறப்பிற்கு ஜனாதிபதி விக்ரர் ஜனுகோவிட்ச்சும் ( Wiktor Janukowitsch ) உள் நாட்டு மந்திரி விற்றலி சகாற்ஷெங்கோவும் (Vitali Sachartschenko) பொறுப்பாளிகளென எதிரணி கூறுகிறது. அராஜகப் புரட்சியையும் நாட்டைத் துண்டாடும் நடவடிக்கைகளையும் எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும், பயங்கரவாதப் புரட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கையின் விளைவிற்குப் பொறுப்பாக வேண்டுமெனவும், முதன் மந்திரி நிக்கொலி அசரோ ( Nikoli Asarow ) கூறியுள்ளார். புதன் கிழமை காலை Ukraine இன் Dynamo Stadium இல் குழுமி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்த எதிரணியினரை Ukraine இன் பிரத்தியேகப் பொலிஸ் பிரிவினர் கண்ணீர்ப் புகை சகிதமும், மின்னும் கைக்குண்டு கொண்டும் ( Flash Granate ) தாக்கிக் கலைக்க முயன்றனர். எதிரணியினர் கற்களையும் எரிகுண்டுகளையும் வீசிப் பொலிசாரைத் தாக்க, பொலிசார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜந்து பேர் இறந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களை நிலை குலையச் செய்துள்ளது. எதிரணியினரை மைதானத்திலிருந்து கலைக்கும் நடவடிக்கை இன்று இரவு நிகழலாம் என, அங்கு இன்னும் கூடி நிற்பவர் மத்தியில் கலவரம் கலந்த நம்பிக்கை தோன்றியுள்ளது.. மனித குல சுதந்திரம் குலையும்போது சட்டமும் சம்பிரதாயமும் நிலை தளர்வது இயல்பாக இருப்பினும் இரு தரப்பினரும் இரத்தப் பெருக்கு ஏற்படும் செயலில் ஈடுபடாது பொறுமை காத்து பேச்சு வார்த்தைக்குத் தயாராக வேண்டுமென ஜேர்மன் வெளிவிவகார செயலர் வி(F)ராங் வோல்ரர் ஸ்ரைன் மயர் ( Frank Waltar Steinmeir ) கூறியுள்ளார்.

சிரியாவிற் போரிடும் இருதரப்பினரும் கடும் சொற் பிரயோகங்களாலும் சுவிசில் மோதிக்கொண்டனர்:-

அரசியல் முரண்பாடு காரணமாக சிரியாவிற் போரிடும் இரு தரப்பினரும் மிகவும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களால் தம் பகைமை உணர்வை சுவிஸ் நாட்டில் இடம் பெறும் மகாநாட்டில் வெளிப்படுத்தினர். பேச்சு வார்த்தைகளின் முதல் கட்டமே இருதரப்பினருக்குமிடையே உள்ள தூரத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
பஷார் அல் அசாத் ( Baschar Ali Assad ) இன் வெளிவிவகாரச் செயலர் புரட்சியாளரை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளென்றும், மறு முனையில் தேசிய எதிர்க் கூட்டணியின் தலைவரான அகமட் அல் ஷர்ப ( Ahmal Ali-Dscharba ) தனது முறைக்கு, அரசாங்கத்தை போர் முறைகளை மீறும் நாசிக் கூட்டத்திற்கு ஒப்பிட்டும் உரக்கப் பேசினர். 2011 ஆம் 2013 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் Baschar Al Assad இன் அரசாங்கத்தால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பதினோராயிரம் சிரியப் பிரஜைகளின் ( Photo ) படங்களும் எதிரணியால் காட்டப்பட்டது. அக்காலத்தில் சிரியாவை விட்டுத் தப்பிச் சென்ற போராளிகள் நாட்டிற்கு வெளியே கொண்டு சென்ற படங்கள் அவையெனவும் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து உரையாற்றிய அமெரிக்க வெளிவிவகார செயலர் John Kerry, தன் சொந்த பிரஜைகளைக் கொண்டு குவிக்கும் ஒருவர் அந்த நாட்டை தொடர்ந்து ஆள முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதென்றார். சித்திரவதைகளும், எரி குண்டுகளும், அதிவேக யுத்த ஏவுகணைகளும் ( Scud Rockets ) ஒரு நாட்டை ஆள முடியாது என்றும் குறிப்பிட்ட அமெரிக்க வெளி விவகார செயலர் ஜோன் கெரி, அமையப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் பிரச்சனைப்படும் இருதரப்பினரும் விரும்பாத எவரும் இடம் பெறுதல் பொருந்தாது என்றும் கூறினார். முஸ்லீம் புரட்சியாளர் பக்கம் பார்வையைச், செலுத்திய அவர் ஆயிரம் பயங்கரமான தீவிரவாதக் குழுக்கள் தம் வெறுப்பு நிறைந்த ( Hate-Filled ) கொள்கைகளைப் பரப்புவதற்காக மக்களிற்குத் துன்பம் தருவதற்கான இடம் புதிய சிரியாவில் அமையலாகாது. என்றார். மூன்று வருட கடும் யுத்தத்தின் பின் இந்தப் பேச்சுவார்த்தை இடம் பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இப்போர் முடிவிற்கு கொண்டு வரப்படல் வேண்டும் மெனவும் சிரியாவின் வெளி நாட்டுச் செயலர் வாலிட் அல் மெளலீம் ( Walid Al Maullim ) கூறினார். இவர் ஜ நா சபையின் பொதுச் செயலர் Ban Ki Moon இன் தடையை கருத்திற் கொள்ளாது பத்து நிமிடங்களுக்குப் பதில் இருபது நிமிடங்கள் பேசி முடித்தார். இந்த இரு தருப்பினரினதும் சந்திப்பு ஒரு புதிய துவக்கத்திற்கு வழிவகுக்கக் கூடுமென Ban Ki Moon தன் உரையில் குறிப்பிட்டார். இவர்களை விட இந்த மகாநாட்டில் கலந்து கொண்ட உலக நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள். வெள்ளிக் கிழமையிலிருந்து இரண்டு பிரிவினர் களுக்குமிடையே நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பிக்க உள்ளது. இப் பேச்சு வார்த்தை அதிசயிக்கத்தக்க முடிவை இன்றே கொணராது என்பதும், பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்பது மிக முக்கிய அரசியல் நோக்கம் எனவும் ஜேர்மன் வெளிவிவகார செயலர் வி(F)ராங் வோல்ரர் ஸ்ரைன் மயர் ( Frank Waltar Steinmeir ) உட்பட்ட ராஜதந்திரிகளின் கருத்தாக அமைந்தது.. 2011 ஆம் ஆண்டிலிருந்து சிரியாவில் போர் இடம் பெறுவதும், போரில் 11,000 பேர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமையும், மொத்தமாக ஒருலட்சத்து முப்பதாயிரம் மக்கள் இறந்தமையும் குறிப்பிடப்பட்டது. ஈரான் ஜனாதிபதி Hassan Rohani சுவிஸ் நாட்டின் Davos நகரில் இடம் பெறும் மகாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்படும் சமயம் Genf II மகாநாடு. எவ்விதத்திலும் தனக்குப் பருத்த நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லையென்றும், இந்த மகாநாடு புரட்சிக்காரருக்கெதிரான போரை முடிவிற்கு கொண்டுவர வழி சமைக்காதெனவும் கூறியுள்ளார். ஐரோப்பிய செய்தியாளர் மகேந்தி:-

என் மகன் விடுதலை ஆவான்! பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உறுதி!

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது போல், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனும் விடுதலையாகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவரது தாய் அற்புதம்மாள் தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு 2000ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்தார். இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் 15 பேருக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்குக்கும் பொருந்துவதால் பேரறிவாளன் விடுதலை ஆகிவிடுவார் என தான் நம்புவதாக அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார். சென்னை புத்தகக் கண்காட்சியில் மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்களையும், படங்களையும் கொண்ட கடையை வைத்துள்ள அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது, தூக்கு தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அது நீதிபதிகளின் மனநிலையையும், காவல்துறையினர் வழக்கை பதிவு செய்யும் பிரிவுகளையும் பொருத்தே கொடுக்கப்படுகிறது. பேரறிவாளனுடன் கைது செய்யப்பட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் 4 பேரை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே எனது மகன் வரும் 29ஆம் தேதி விடுதலை அடைவான் என்று நம்புகிறேன் என்றார். மேலும்,ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். (நக்கீரன்)

மன்னார் மனித புதைகுழி விசாரணைகள் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு:-

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த பகுதியில் மனித எச்சங்களைத் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 36 முழுமையான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எச்சங்கள்; கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த புதைக்குழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று 22 ஆம் திகதியுடன் 11 தடவைகள் தோண்டப்பட்டன. நேற்று புதன்கிழமையும் இரண்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 42 மனித எச்சங்கள் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன என மீட்பு குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரியொருவர் தெரிவித்தார். அதற்கு அப்பால் சிறுவர்களின் பற்கள், பெண்கள் அணியும் முத்துமாலைகளின் முத்துகள், உடைந்த வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, 'மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம்' மேற்படி புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் அங்கம் வகிக்கும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரத்ன நேற்று முன்தினம் (21.01.14) தெரிவித்தார். அத்துடன், இந்த மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்களுக்கு உரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 'குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரிய அளவிலான தடையப்பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை' என்றார். இந்த புதைகுழி இன்று வியாழக்கிழமை 12 ஆவது தடவையாக தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்