Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, January 6, 2015

மதுவிலக்கு மராத்தானைப் புழுதி வாரித் தூற்றிய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை! வைகோ அறிக்கை!

மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கித் தமிழகம் நாசமாகிக் கொண்டு இருக்கின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்திற்கும் மது முக்கியக் காரணம் ஆகி விட்டது. ----------------------------------------------------------------------- அறநூல்களும், சான்றோரின் நெறிகளும், மதுவினால் சமுதாயத்திற்கு ஏற்படும் தீங்கான கேடுகளை எடுத்துக் கூறுகின்றன. ----------------------------------------------------------------------- நாட்டு நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள், அறிஞர் அண்ணா, மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர் போன்றோர் தமிழகத்தில் மதுவை அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் கோடிக்கணக்கான தாய்மார்களின் துன்பக் கண்ணீருக்கு மதுவே காரணம். சின்னஞ்சிறுமிகளையும், பெண்களையும் நாசப்படுத்தி பல நேரங்களில் கொலையும் செய்யும் கொடியோர் பெரும்பாலும் மது அருந்தியோர்தான். ----------------------------------------------------------------------- பள்ளி மாணவர்கள் மத்தியிலும் மதுப்பழக்கம் என்ற செய்தி அச்சமூட்டுகிறது. பெண்மையைப் போற்றிய தமிழகத்தில், மேட்டுக்குடி மகளிரிடத்திலும் பரவத் தொடங்கி இருப்பது அபாயத்தின் அறிகுறி. ----------------------------------------------------------------------- பாழும் நரகத்தில் தமிழகம் சிக்கி விடக் கூடாதே என்கின்ற பதற்றத்தாலும், கவலையாலும் நான் கடந்த பத்து ஆண்டுகளாக முழு மது விலக்கைத் தமிழகத்தில் அமுல்படுத்தவும், மதுவை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2004 ஆம் ஆண்டு 1200 கிலோமீட்டர் தொலைவும், 2013-14 ஆம் ஆண்டுகளில் 1500 கிலோ மீட்டர் தொலைவும், வெயிலிலும், மழையிலும் நடந்து, நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திய தாய்மார்களைச் சந்தித்து, மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க, அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகின்றேன். ----------------------------------------------------------------------- எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை; எங்கள் கட்சிக்கு ஆதரவு தேடவில்லை. மாணவர்களிடம் மது எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தினால்தான், தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று தீர்மானித்து, 2014 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள், கோவை மாநகரில் நடத்திய மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 12,000 பேர்களுள், 11,500 பேர் மாணவ, மாணவியர்கள் ஆவர். அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளின் முதல்வர்களும், தலைமை ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு நல்கினர். ----------------------------------------------------------------------- அதன்பின் கடந்த 35 நாள்களாக, தலைநகர் சென்னையில், எங்கள் இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளர் தம்பி ஈஸ்வரன் அவர்கள் தலைமையில், 1000 பேர் ஓய்வு இன்றிப் பணியாற்றி, அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மராத்தான் விண்ணப்பப் படிவங்களைத் தந்து, பதிவு எண் அட்டைகளையும் வழங்கி, 2015 ஜனவரி 4 ஆம் நாள், மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தை ஏற்பாடு செய்தோம். மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு விண்ணப்பங்களை நிரப்பித் தந்தது திகைக்க வைத்தது. ----------------------------------------------------------------------- பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் இதில் பங்கேற்பதால், அவர்களின் உடல் நலம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும், மிகுந்த கவலை நிறைந்த எச்சரிக்கையோடு முன் ஏற்பாடுகளைச் செய்தோம். 14 மருத்துவர்கள், 25 மருத்துவ உதவியாளர்கள், 8 ஆம்புலன்சுகள் ஏற்பாடு செய்தோம். ஓடுபவர்கள் பருகுவதற்காகக் குடிதண்ணீர் ஏற்பாடு செய்து, காகிதக் குவளைகளையே பயன்படுத்தினோம். காலையில் அவர்களுக்கு எளிய சிற்றுண்டி வழங்கினோம். ----------------------------------------------------------------------- மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாததால், ஒரு இடத்திலும் கட்சிக் கொடிகளைக் கட்டவில்லை; கட்சி வண்ணத்தையும் பயன்படுத்தவில்லை. அரசு விழா போல், பல வண்ணக் கொடிகள் பளிச்சிட்டன. ----------------------------------------------------------------------- தமிழக அரசின் காவல்துறை,மிக்க ஈடுபாட்டுடன், இந்த மராத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, முழு அளவில் உதவியது. காலை நான்கு மணிக்கெல்லாம் நூற்றுக்கணக்கான காவலர்கள் கடமை ஆற்றத் தொடங்கினர். ----------------------------------------------------------------------- நம்ப முடியாத அதிசயம் நிகழ்ந்தது.
----------------------------------------------------------------------- அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மாணவ மாணவிகள் ஆயத்தமாகி, பெற்றோருடன், ஆறு மணிக்கெல்லாம் மராத்தான் தொடங்கும் இடத்திற்கு வந்தது, தமிழக வரலாற்றில் இதுவரை நடைபெறாதது. ----------------------------------------------------------------------- இந்த மராத்தானுக்காக, எந்தச் சுவர் விளம்பரமும் செய்யவில்லை; தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரங்கள் தரவில்லை. பொதுமக்களின் மனதில் உள்ள பயம் காரணமாகவும், இதை நடத்துகின்றவன் மீதான நம்பிக்கை காரணமாகவும், 68,000 பேர் பதிவு செய்தனர்; 50,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் அனுப்பி வைத்தனர்; அவர்களே பிள்ளைகளை அழைத்து வந்தனர். ----------------------------------------------------------------------- இதுவரை உலகில் நடைபெற்ற மராத்தானில், நியூ யார்க் நகரில்தான் 49,000 பேர் பங்கேற்றுள்ளனர். ஆனால், சென்னை மராத்தானில் 50,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால், இது கின்னஸ் சாதனை ஆகும். ----------------------------------------------------------------------- நாம் எதிர்பார்த்ததை விடப் பலமடங்கு வந்துள்ளார்களே, நெரிசலில் சிக்கி, காயமோ, உயிர்ச்சேதமோ பிள்ளைகளுக்கு ஏற்பட்டு விடக் கூடாதே என்று நான் அஞ்சிப் பதறியது என் மனசாட்சிக்குத்தான் தெரியும். அதனால்தான், மராத்தான் பாதையில் முன் யோசனை இன்றிக் குறுக்கே வந்தவர்களை நானே சென்று விரட்டினேன். சில இடங்களில், மாணவர்கள் கீழே விழுந்தபோது, எங்கள் தொண்டர்கள் உடனுக்குடன் உதவி பாதுகாத்தனர். மாணவச் செல்வங்களே, நீங்கள் எல்லாம் என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்; உங்களை அனுப்பி வைத்த பெற்றோருக்குக் கை கூப்பி வணங்கி நன்றி கூறுகிறேன். மதுவினால் வரும் கேடுகளைக் களைய, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றப் பாடுபடுங்கள்; பள்ளிகள், கல்லூரிகளில் சாதி எண்ணங்களுக்கு இடம் தராதீர்; பல இலட்சம் மாணவர்களுள் ஐம்பது நூறு பேர் செய்யும் தவறு, அரிவாள் கத்திகளுடன் மோதும் வன்முறை, மாணவர் சமுதாயத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்; ஆசிரியர்களை மதித்து நடங்கள். பெற்றோரை வணங்குங்கள். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் கவலைப்படாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு அரசியல் கட்சிகள் வேண்டாம்; குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அரசியலைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் உரை ஆற்றியபோது, மாணவர்கள் எழுப்பிய ஆரவாரம் விண்ணை முட்டியது. ஒரு மாணவனுக்குக் கூட காயம் ஏற்படவில்லை; இந்த நாளைப் போல என் வாழ்வில் நான் என்றும் மகிழ்ந்தது இல்லை. ஆனால், ‘டைம்Þ ஆஃப் இந்தியா’ நாளிதழ், வைகோ கடற்கரையைக் குப்பைக் கிடங்காக்கி விட்டான் என்று சேற்றை வாரி வீசி இருக்கின்றது. நாங்கள் பிளாÞடிக் குவளைகளைப் பயன்படுத்தவில்லை. காகிதக் குவளைகளையே பயன்படுத்தினோம். உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன், கழிவுகளை அப்புறப்படுத்துகின்ற வேலையில், வெயிலைப் பொருட்படுத்தாமல் பகல் 12 மணி வரை கடமை ஆற்றினர். ஆனால், சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறையும், சமூகச் சிந்தனையும் எங்களுக்கு இல்லை என்று, தொண்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பழியைப் போட்டு, டைம்Þ ஆஃப் இந்தியா சாடி உள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, உலக கோடீÞவரனின் ஸ்டெர்லைட்டை எதிர்த்து, 18 ஆண்டுகளாக நான் அறப்போர் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். தற்போது மீத்தேனை எதிர்த்துக் களத்தில் நிற்கிறேன். நாங்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக, தன்னலம் இன்றி, விளம்பரம் இன்றிச் செய்த இந்த நல்ல காரியம், பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பெறவில்லை என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னால் இயன்ற பணிகளை, எனது கடமையைச் செய்கிறேன். ஆனால், டைம்Þ ஆஃப் இந்தியா பத்திரிகை, தமிழகத்தில் தொடங்கிய நாளில் இருந்து, என் மீது வன்மம் பாராட்டி வருகின்றது. இத்தனை ஆண்டுகளில், அபூர்வமாக ஓரிரு முறைதான் என் அறிக்கையை ஒருசில வரிகள் இடம்பெறும். அதையும் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும். முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க நான் கடுமையாகப் போராடியதால்தான், டைம்Þ ஆஃப் இந்தியா பத்திரிகையை இயக்கிக் கொண்டு இருக்கின்ற சில முக்கியமானவர்களுக்கு என் மீது கடுமையான வெறுப்பு உண்டு என்பதை நன்றாக அறிவேன். என் வாழ்வில் எந்தப் பத்திரிகையையும் மிரட்டுகின்ற தவறை நான் செய்தது இல்லை. பத்திரிகைச் சுதந்திரத்திற்காக, மிசாவில் ஓராண்டு, பொடாவில் 19 மாதம் சிறையில் இருந்தவன் நான். டைம்Þ ஆஃப் இந்தியா பத்திரிகை, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊதுகுழல். என் மீது பொதுமக்களுக்கு நல்லெண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு எதிர்கால வஞ்சகத் திட்டங்களைக் கொண்டிருக்கின்ற கூட்டத்தின் பிரதிபலிப்புத்தான் எங்கள் முயற்சிகளைக் களங்கப்படுத்த முயலும் போக்கு ஆகும். கடற்கரை மதுக்கூடாரமாகவும் களியாட்ட முகாமாகவும் மாறுவது டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இனிக்கிறது. தமிழகம் எப்படியாவது சீரழியாதா என்ற நோக்கமும் தெரிகிறது. அதனால்தான், மேல்நாட்டு மதுவை மையாக்கி அச்சிட்டு உள்ளனர். கொடியவன் ராஜபக்சேயை எதிர்த்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்து, வெயிலிலும் மழையிலும் நானும் 1200 தோழர்களும் போராடியபோது, சாலையோரத்து மலக்கழிவுகளை நாங்கள் அகற்றினோம். உணவு அருந்தியபின், காகிதத் தட்டுகளை, குவளைகளைப் பைகளில் சேகரித்துக் குப்பைக் கிடங்குகளில் கொண்டு போய்ச் சேர்த்தோம். இதைக் கவனித்துக் கொண்டு இருந்த மத்தியப் பிரதேச காவல்துறை ஐ.ஜி. போராட்டத்தில் கைதாகி நாங்கள் விடுதலையானபோது, என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார், இத்தகைய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் நான் பார்த்தது இல்லை; எங்கள் காவல்துறையினர் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர்; ஏன், உங்கள் ரசிகர்களாகவே ஆகி விட்டனர் என்றார். தமிழகத்தின் நன்மைக்காக, வருங்காலத் தலைமுறையின் நல்வாழ்வுக்காக, எள் அளவு சுயநலமும் இல்லாமல், தமிழ்நாட்டின் ஒரு ஊழியக்காரனாக வேலை செய்யும், என் மீது வீசப்படும் தாக்குதல்களை, நான் நேசிக்கும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கவே இந்த அறிக்கையைத் தந்து உள்ளேன்! ‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச்செயலாளர் 05.01.2015 மறுமலர்ச்சி தி.மு.க.div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

Saturday, January 3, 2015

வேலை தேடும் நண்பர்களுக்கு பையனுள்ள இணையதளங்கள் !!

careerbuilder.co.in ----------------------------------------- clickjobs.com ----------------------------------------- placementpoint.com ----------------------------------------- careerpointplacement.com ----------------------------------------- glassdoor.co.in ----------------------------------------- findtherightjob.com ----------------------------------------- employmentguide.com ----------------------------------------- JOBSTREET.COM ----------------------------------------- JOBSDB.COM ----------------------------------------- AE.TIMESJOBS.COM ----------------------------------------- NAUKRIGULF.COM ----------------------------------------- NAUKRI.COM ----------------------------------------- GULFTALENT.COM ----------------------------------------- BAYAT.COM ----------------------------------------- MONSTER.COM ----------------------------------------- VELAI.NET ----------------------------------------- CAREESMA.COM ----------------------------------------- SHINE.COM ----------------------------------------- fresherslive.com ----------------------------------------- jobsahead.COM ----------------------------------------- BABAJOBS.COM ----------------------------------------- WISDOM.COM ----------------------------------------- indeed.co.in ----------------------------------------- sarkarinaukriblog.com ----------------------------------------- jobsindubai.com ----------------------------------------- jobswitch.in ----------------------------------------- jobs.oneindia.com ----------------------------------------- freshersworld.com ----------------------------------------- freejobalert.com ----------------------------------------- recruitmentnews.in ----------------------------------------- firstnaukri.com ----------------------------------------- freshnaukri.com ----------------------------------------- mysarkarinaukri.com ----------------------------------------- freshindiajobs.com ----------------------------------------- freshersopenings.in ----------------------------------------- freshersrecruitment.in ----------------------------------------- chennaifreshersjobs.com ----------------------------------------- அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள:: ----------------------------------------- govtjobs.allindiajobs.in ----------------------------------------- timesjobs.com ----------------------------------------- naukri.com ----------------------------------------- tngovernmentjobs.in ----------------------------------------- sarkariexam.co.in ----------------------------------------- www.govtjobs.net.in ----------------------------------------- indgovtjobs.in இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற உதவும் இணையதளங்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம். ------------------------------------------------------------------ www.escholarship.tn.gov.in -------------------------------------------------------------- www.tnea.in ---------------------------------------------------------------------------- www.tndce.in ------------------------------------------------------------------------------- www.scholarshipsinindia.com ------------------------------------------ www.education.nic.in ------------------------------------------------------------------------------- www.scholarship-positions.com ------------------------------------------------------------------------------- www.studyabroadfunding.org ------------------------------------------------------------------------------- www.scholarships.com ------------------------------------------------------------------------------- www.scholarshipnet.info ------------------------------------------------------------------------------- www.eastchance.com ------------------------------------------------------------------------------- www.financialaidtips.org ------------------------------------------------------------------------------- இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். நன்றி ,

இந்த வார வரலாறு :உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். ------------------------------------------------------------------------ கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்? காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் தமிழன்.அவர்கள் இராஜ இராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவான். ------------------------------------------------------------------------ கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும். ------------------------------------------------------------------------ ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது. ------------------------------------------------------------------------ .இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர். ------------------------------------------------------------------------ சான்று : ------- தமிழா-------------மியான்மர் . சபா சந்தகன்-----மலேசியா ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா கடாலன்------------ஸ்பெயின் நான்மாடல் குமரி----------பசிபிக் கடல் சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா. ------------------------------------------------------------------------ இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர். ------------------------------------------------------------------------ இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர். ------------------------------------------------------------------------ நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------ இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன. தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.....

தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் நிலை

வருவாயை மேம்படுத்த அக்கறை காட்டாததால், நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதால், மாநிலத்தின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.ஆனால், இந்த நிதி இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. சமீபத்தில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை ஒப்புக் கொண்டுள்ளார். --------------------------------------------------------------------------------- தமிழக அரசின், 2014 - 15 பட்ஜெட் படி, *பல்வேறு வகைகளில் வருவாய், 1,27,389 கோடி ரூபாய். *வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ரூபாய். --------------------------------------------------------------------------------- கடினம்:'தமிழக அரசு ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட சில நிதி ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக, எந்தவொரு நிதிச் சுமையையும், ஏற்றுக் கொள்வது, மிகக் கடினமானது. எனினும், 'நாப்தா'வுக்கான, 'வாட்' வரியை ஏற்றுக் கொள்ள, அரசு தயாராக உள்ளது. உரத் தொழிற்சாலைகளுக்கு, மத்திய அரசு எரிவாயு இணைப்பு வழங்கும் வரை, தொடர்ந்து மானியம் வேண்டும்' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.'முதல்வரின் இந்த கடிதம், மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதை, அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. எனவே, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.பொதுவாக, அரசுக்கு, 75 சதவீத வருவாய், வணிக வரி மூலம் கிடைக்கிறது. நடப்பு ஆண்டில், 11.04 சதவீத வளர்ச்சி இருக்கும்; வருவாய் இலக்கு, 68,724 கோடி ரூபாய் என, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 'டாஸ்மாக்' விற்பனை வருவாய், 14 ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து, இதுவரை, 38,530 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்துள்ளது. இலக்கில், 56 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.இன்னமும் மீதமுள்ள, மூன்று மாதங்களில், என்ன தான் போராடினாலும், 50 ஆயிரம் - 52 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான் இலக்கை எட்ட முடியும் என்ற சூழல் உள்ளது.பதிவுத் துறையில், 10,470 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானங்கள் குறைவு, பத்திரப் பதிவுகள் குறைந்துள்ளதால், 65 சதவீத இலக்கு கூட எட்டப்படவில்லை; 6,700 கோடி ரூபாய் அளவில் தான் வருவாய் கிடைத்துள்ளது.தமிழக அரசுக்கு இந்த, இரண்டும் தான், முக்கிய வரி வருவாய் வரவுகள். --------------------------------------------------------------------------------- மதுபானம்:இதுதவிர, மதுபானங்கள் மூலம் கிடைக்கும் ஆயத் தீர்வை வரி, 6,438 கோடி ரூபாய்; மோட்டார் வாகன வரி வகையில், 5,147 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த வரிகள், வணிகவரித்துறையை ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், வரி --------------------------------------------------------------------------------- வருவாய் கடந்த ஆண்டைவிட வெகுவாகக் குறைந்து விட்டது என, அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், வருவாய் இலக்கான, 91,835 கோடி ரூபாயில், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறி. சராசரியாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என, வரி சார்ந்த ஆலோசகர்கள் கணக்கிடுகின்றனர். தற்போது, அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி தொடர்ந்தால், கடன் சுமை மேலும் கூடும். அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி, வாய்ப்புள்ள வகைகளில் எல்லாம், வரி வருவாயை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். --------------------------------------------------------------------------------- வருவாய் குறைய என்ன காரணம்? பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. வரி சார்ந்த,10 ஆயிரம் வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதை முடிவுக்கு கொண்டு வந்தால்,12 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும். இதில், அரசு கவனம் செலுத்தவில்லை.இனி வரும்காலம், வரி வசூல் கொட்டும் காலம் என, கூற முடியாது. பண்டிகைகள் பெரிதாக இல்லை. எனவே, எதிர்பார்த்த இலக்குபடி வரி வருவாய் கிடைப்பது சாத்தியம் இல்லை என்கின்றனர், வரி ஆலோசகர்கள். அரசுத் துறை உயர் நிலை அதிகாரிகள், தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக, அரசிடம் உண்மையான விவரங்களை தெரிவிக்காமல், 'வருவாய் இலக்கை நோக்கிச் செல்கிறோம்; வளர்ச்சி வேகம் சரியாகச் செல்கிறது' என, ஆவணங்களின்படி கணக்கு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. --------------------------------------------------------------------------------- 'டாஸ்மாக்' வருவாய் குறைவா? நடப்பு ஆண்டிற்கு, 'டாஸ்மாக்' மூலம், 6,040 கோடி ரூபாய் ஆயத்தீர்வை;20 ஆயிரம் கோடி விற்பனை வரி என, 26,040 கோடி ரூபாய் வருவாய் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, ஆயத்தீர்வை - 4,300 கோடி ரூபாய்; விற்பனை வரி - 14 ஆயிரம் கோடி ரூபாய் என, 18,300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 10.47 சதவீதம் உயர்வு எதிர்பார்த்ததில், 7.3.சதவீதம் குறைவாகவே உள்ளது.விலையேற்றத்தால் வருவாய் கடந்த ஆண்டை விட சற்று கூடினாலும், சரக்கு விற்பனை, 8.5 சதவீதம் குறைந்துள்ளது. --------------------------------------------------------------------------------- காசோலை கணக்கு இது! வணிக வரித்துறையில், 38,530 கோடி ரூபாய், வரி வசூல் வந்துள்ளதாக ஆவணங்கள் இருந்தாலும், பெறப்பட்ட காசோலைகள் அடிப்படையிலான கணக்கு இது. காசோலை பணம் இல்லாமல் திரும்பியதும் நிறைய உண்டு. கருவூலத்திற்கு இந்த தொகை முழுமையாக சென்றிருக்க வாய்ப்பில்லை; வளர்ச்சி காட்டுவதற்காக அதிகாரிகள் உண்மையை மறைக்கின்றனர். - ஓய்வு பெற்ற வணிக வரி அதிகாரி --------------------------------------------------------------------------------- செலவை குறைக்க வேண்டும்: வரி வருவாயை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், அரசு அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. செலவுகளை குறைக்க முயற்சிக்கலாம். இது தொடர்பாக, அரசு வருவாய், செலவு சார்ந்த சங்கங்களை அழைத்து பேச வேண்டும். வருவாயை மேம்படுத்தும் திறன் நம் ஊழியர்களுக்கு உண்டு. அதை விட்டு, ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியான நடைமுறை அல்ல; மத்திய அரசு தரும் மானியத்திலும் நாம் செலவைக் குறைத்து,பணத்தை சேமிக்க முடியும். - தமிழ்செல்வி மாநில தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் --------------------------------------------------------------------------------- இலவசங்களை ரத்து செய்ய வேண்டும்: தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். செலவில் பெரும்பகுதி மாநில வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். அவசியம் இல்லாத இலவசத் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். வருவாய் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை முறையாக பெற அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். - ஜெ.ஜேம்ஸ், தலைவர், 'டாக்ட்' (தமிழ்நாடு கைத்தொழில் குறுந்தொழில் முனைவோர் சங்கம்) கோவை. --------------------------------------------------------------------------------- பொங்கல் இலவச பொருட்கள் 'கட்?' பொங்கல் பண்டிகைக்கு, அரசு சார்பில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ரொக்கம், 200 ரூபாய், ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும். நிதி நெருக்கடியால் இந்த ஆண்டு, அதை ரத்து செய்வது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டபோது, ''இதுகுறித்து அரசு முடிவெடுக்கும்,'' என்றார். இலவச பொருட்கள் உண்டா, இல்லையா என்பதை, கூற மறுத்து விட்டார்.