Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, May 13, 2014

இந்திய ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நிலை படுமோசம்"

இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில், ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமை முறை உட்பட பல்வேறு தொழிலாளர் உரிமை மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் நடப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு எஃப் ஐ டி ஹெச் (Federation Internationale de Droits Human) என்ற மனித உரிமை தொண்டு நிறுவனம் ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது.

நூற்றாண்டு பழமையான கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகிறார்கள்

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே காலியாக உள்ள அர்ச்சகர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரி பொதுவான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பொலிசார் மீது கண்ணிவெடித் தாக்குதல்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நிலக் கண்ணி வெடியில் சிக்கி காவல்துறையினர் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கத்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியின் ஊடாக காவல்துறையின் சிறப்புப் படையினர் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாவோயியக் கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பை அடுத்து பொலிசார் மாவோயியவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டையொன்றும் நடந்துள்ளது.

இந்திய தேர்தலில் பாஜக வெற்றி: எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள்

நடந்துமுடிந்துள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், வாக்களித்த மக்களிடம் நடத்தப்படும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன.

"எமக்கு உதவி வேண்டாம்: சொந்த நிலங்களே வேண்டும்" என்கின்றனர் சம்பூர் மக்கள்:-

எமது கஸ்ரங்களுக்கு உதவி வேண்டாம். எம்மை சொந்த நிலத்திற்கு செல்ல விடுங்கள் என சம்பூர் மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விட்டுள்ளனர். சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை கிழமை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் தங்கியிருந்த மணல்சேனை, பட்டிக்குடியிருப்பு ஆகிய முகாங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தஅ போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
ம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் உள்ளனர். இவர்களை சனிக்கிழமை (10) நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்று பார்வையிட்டோம். கடுமையான வெயிலில் அந்த மக்கள் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருக்க முடியாமல் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். மூதூரிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றால்இ சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைக்கு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம் எங்களை எமது சொந்த இடங்களுக்கு அனுப்பினால் எங்களுடைய அரைவாசி வருத்தம் குறைந்து விடும் என அந்த மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
700 குடும்பங்களைச் சேர்ந்த 3000பேர் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்கு போக முடியாது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை இங்குள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்க வந்த நிறுவனம் ஒன்றினை இராணுவம் வழங்க அனுமதி கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது. இதேபோல், மீன் வியாபாரியோ, உடு துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியோ இந்த முகாமுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி நினைத்தால் அந்த மக்களின் நிலத்தை அவர்களுக்கு உடன் வழங்க முடியும். தமது சொந்த குடும்ப தேவைகளுக்காக அந்த நிலத்தை வைத்துக்கொண்டு 3000 மக்களின் வாழ்வை சீரழிக்காமல் அவர்களின் பரிதாப நிலையை கருத்திற்கொண்டு சம்பூர் மக்களின் நிலத்தை அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது எனவும் இதன் போது சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார். இம் மக்களுடனான சந்திப்பில் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்களான இராமலிங்கம் ராமேஸ்வரன், வேலாயுதம் மோகன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், வவுனியா தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் (பாபு), கூட்டமைப்பின் பிரமுகரான வேலாயுதம் நாகராசா (சங்கர்) ஆகியோரும் கலந்து கொணடனர்.

மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு:-

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. ------------------------------------------------------------------------------- இந்திய இலங்கை மீனவர் சமூகங்களுக்கு இடையில் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கைக் கடற்பரப்பில் தொடர்ந்தும் மீன்பிடிக்க அனுமதியளிக்குமாறும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில வாரங்களுக்காகவேனும் அனுமதிக்க வேண்டுமெனவும் இந்திய மீனவர்கள் கோரியுள்ளனர். ------------------------------------------------------------------- இவ்வாறு அனுமதியளிப்பதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என யாழ்ப்பாண மீன-----வர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ------------------------------------------------------------------- இந்த நிலையில் இரு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கை

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------- இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கடந்த 6ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் இரு தரப்பிற்கும் இடையில் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------- குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------- சீனாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்