Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, December 19, 2013
ராஜ்நாத்சிங் தகவல்... 2014 மக்களவை தேர்தல் பா.ஜ வேட்பாளர் பட்டியல் ஜனவரி 15ல் வெளியாகும்...
புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜ வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜனவரி 15ம் தேதியையொட்டி வெளியிடப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.நடப்பு மக்களவையின் பதவிக்காலம் மே 31ல் முடிவடைகிறது. புதிய மக்களவை ஜுன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும். புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் தேதி, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பொது தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக மக்களவை தேர்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை பாஜ மேலிடம் துரிதப்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது பற்றி, மாநில பாஜ தலைவர்களுடன் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்று முடிந்தது. இதில் வரும் ஜனவரி 15க்குள் தகுதியான வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என மாநில தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பாஜவின் முதல் வேட்பாளர் பட்டியலை ஜனவரி 15 நெருக்கத்தில் வெளியிட பாஜ திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் குறை தீர்ப்பு , அனைத்து குறைகளை அரசு மூலம் நிவர்த்தி செய்ய
தில்லி, NCT பிராந்திய அரசாங்கங்களையும் / யூனியன் பிரமதெ மற்றும் மாநில அரசாங்கத்திடம் தொடர்பான அனைத்து குறைகளை, மாநில / யூனியன் / NCT அரசு மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். குடிமக்கள் நேரடியாக மாநில அரசு தங்கள் குறைகளை நிலுவையில் குறித்த விவகாரத்தை எடுத்து அறிவுறுத்தப்படுகிறார்கள்
அனைத்து குறைகளை அரசு மூலம் நிவர்த்தி செய்ய . மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://pgportal.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்
யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயம் தொடர்பான மே 17 இயக்கத்தின் கருத்துக்கள்
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து உண்மைத்தன்மையுடன் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நெற் இணையத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்கள் வழங்கிய செவ்வி.
நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பாதீர்கள். ரவிகரன் தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை
நிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுவிஸ் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 14/12/2013 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பில் வடகிழக்கின் சமகால நிலை தொடர்பில் தூதரக அதிகாரிகளிடம் எடுத்து விளக்கியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கலந்து கொண்டு ரவிகரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமிழ்மக்களின் பல பிரச்சினைகள் பற்றி ரவிகரனால் அவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.
தாயகத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், புலம்பெயர் தமிழர் திருப்பி அனுப்பப்படுவது வருத்தமளிக்கிறது. இங்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில், எங்கள் உறவுகளை திருப்பி அனுப்ப வேண்டாமென உங்களிடமும் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி?
ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சி அமைக்க 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்தது. மேலும், தங்களுக்கு 10 நாள் அவகாசமும் கேட்டது. அதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலளிக்கப் பட்ட நிலையில், பாஜக தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அங்குள்ள பொதுமக்களிடமே கருத்துக் கேட்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு நேற்றோடு கெடு முடிவடைந்த நிலையில் அதிரடியாக துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ஷிண்டே, சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அடுத்த 2 நாட்களுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிடில், டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற நிலையில், இன்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூடி விவாதித்து முடிவெடுக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் குடியரசுத்தக்லைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வதா அல்ல்லது ஆம் ஆத்மி கட்சியின் முடிவுகளுக்காக வரும் திங்கட்கிழமை வரை காத்திருப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப் படும் எனத் தெரிகிறது.
இந்தியப் பெண் துணைத்தூதர் கைது: வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா
நியூயார்க்: இந்தியப் பெண் துணைத் தூதர் கைது செய்யப் பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்நாத்சிங்குடன் அன்புமணி சந்திப்பு! பாஜக அணியில் பாமக இடம்பெற்றது!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகி உள்ளது...
சிரியாவிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை கடலில் அழிக்க முடிவு , உலக நாடுகளின் உதவியுடன்
டமாஸ்கஸ், டிச.19-
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மீது சிரியா ராணுவம் ரசாயன குண்டுகளை வீசியது. அதில் சுமார் 700 பேர் பலியாகினர்.
இது சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாரானது. ரஷியாவின் முயற்சியால் ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதித்ததால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, ஐ.நா.சபை பிரதிநிதிகள் சிரியாவில் உள்ள ரகசிய கிடங்குகளில் சோதனை நடத்தி ரசாயன ஆயுதங்களை கண்டுபிடித்து கைப்பற்றினர். அதை கப்பலில் எடுத்து சென்று கடலில் வீசி, செயல் இழக்க செய்து அழிப்பதற்கு சர்வதேச ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.வி.கேப் ரே என்ற கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மனித இனத்துக்கே கடும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய சிரியா வசமுள்ள ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, நார்வே, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.
ரசாயன ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக 3 ஆயிரம் கண்டெய்னர்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அவற்றை கடற்பகுதிக்கு கொண்டு செல்ல தேவையான வாகனங்களை ரஷ்யா வழங்குகிறது. அவை பத்திரமாக கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை அமெரிக்காவின் ஜி.பி.எஸ். கருவிகளும், சீனாவின் நவீன கண்காணிப்பு கேமராக்களும் தொடர்ந்து கண்காணிக்கும்.
பேரழிவை விளைவிக்கக் கூடிய இந்த ஆயுதங்களை ரஷ்ய வாகனங்கள் கொண்டு செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய வகையில் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட 10 ஆம்புலன்ஸ்களை கூடவே அனுப்பி வைக்க சீனா சம்மதித்துள்ளது.
சிரியா வசம் உள்ள கடுகு விஷவாயு, சரின் மற்றும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிப்புக்குள்ளாக்கும் இதர ரசாயன ஆயுதங்கள் சுமார் ஆயிரம் டன்னுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்துள்ளது. அவற்றை இம்மாதம் 31-ம் தேதிக்குள் சிரியாவில் இருந்து வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் முழுமூச்சாக எடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற இந்த நிறுவனம், சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணிக்காக 13.47 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட முன்வந்துள்ளது. மேலும், இந்த பணிக்காக தங்கள் நாட்டின் சார்பில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதில் ஜப்பான் அரசு அக்கறை காட்டி வருகிறது.
இந்த தொகையை கொண்டு சிரியா வசமுள்ள பெரும்பாலான ரசாயன ஆயுதங்களை அடுத்த (2014) ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாகவும், ஒட்டுமொத்த ஆயுதங்களை ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள்ளாகவும் அழித்துவிட ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடும் கண்டனம் :மொல்லா தூக்கிலடப்பட்டது தொடர்பான பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு ஷேக் ஹசினா
டாக்கா, டிச. 19-
இனப்படுகொலைகள் நடந்தன 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற சண்டையின்போது . மைனாரிட்டியாக உள்ள இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்த போரின்போது 350 பொது மக்களை கொன்றதாக ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு, அப்துல்காதர் மொல்லா(75) மீதான மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அதன்பின்னர் மொல்லா கடந்த 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டார். இதையடுத்து வங்காளதேசத்தில் நடந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மொல்லா தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த 16-ம் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் ஷெர் அக்பர் கான் கொண்டு வந்த இந்த தீர்மானம் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
பாகிஸ்தானின் இந்த அடாவடியை கண்டு 1971-ம் ஆண்டு இந்தியா முன்நின்று பாகிஸ்தானுடன் நடத்திய வங்காள தேச பிரிவினைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது வாரிசுகளும் கொதிப்படைந்தனர்.
பாகிஸ்தானின் செயலை கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடனான தூதரக உறவுகளை வங்காள தேசம் முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தலைநகர் டாக்காவில் உள்ள பகிஸ்தான் நட்டின் உயர் தூதரகம் அருகே ஆர்ப்பாடம் நடத்த நேற்று ஏராளமானவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை வழிமறித்த போலீசார் தூதரகம் அருகே நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
அங்கேயே நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பாகிஸ்தானுடனான உறவுகளை வங்காள தேச அரசு
முறித்துக் கொள்ளாவிட்டால் நாளை (இன்று) மாலை 3 மணியளவில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், வங்காள தேசத்தை கண்டித்து பாகிஸ்தான் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து கூறிய ஷேக் ஹசினா, "1971-ம் ஆண்டு வன்முறை வெறியாட்டஙங்களை நடத்தியவர்களுக்கு எங்கள் நாட்டில் நிழல் அளிக்க மாட்டோம்.
வங்காள தேசத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் வங்காள தேச விடுதலைப் போரின் வெற்றியை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நிரூபனமாகி விட்டது" என கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி ரகசிய கூட்டணி: பா.ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி, டிச.19-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால் ஆதரவை ஏற்பதற்கு, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு 18 நிபந்தனைகள் விதித்த அரவிந்த் கெஜ்ரிவால், பொதுமக்களின் கருத்துகளை கேட்டு ஆட்சியமைப்பதாக தற்போது அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் தேர்தலுக்கு முன்னே ரகசிய உடன்பாடு வைத்திருந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா சட்டமன்ற கட்சித்தலைவர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "கடுமையான விலைவாசி மற்றும் ஊழல்களால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று அந்த கட்சிக்கு தேர்தலுக்கு முன்னே தெரியும். எனவே, சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ரகசிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டன" என்று கூறினார்.
மேலும், ஆட்சியமைக்க 18 நிபந்தனைகளை விதித்த ஆம் ஆத்மி கட்சியினர், எங்களின் 14 கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பினார். அவை வருமாறு:-
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் உங்களால் ஆட்சியை அமைக்க முடியுமா? முடியாதா? காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சியமைக்க முடியாதென்றால், இன்னும் எத்தனை நாட்கள் தேவை என்று துணை நிலை ஆளுநரிடம் தெளிவாக கூற முடியுமா?
முறையான அரசு அமையாததால் டெல்லி அரசு இயந்திரம் முற்றாக செயலிழந்து விட்டது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்குமா?
ஆம் ஆத்மிக்கான ஆதரவின் பின்னணியில் உள்ள ரகசிய பேரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மக்களிடம் வெளிப்படையாகக் கூற முடியுமா? காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களுக்கு இடையிலான இந்த விளையாட்டை எப்போது முடித்துக் கொள்வார்கள்?
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், ஆலோசகருமான பிரசாந்த் பூஷன் தீவிரவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இந்த நாடும், டெல்லி மக்களும் இதுபோன்ற தேசவிரோத சக்திகளை ஏற்றுக் கொள்வார்களா?
தற்போது நிறைவேற்றப்பட்ட லோக்பால் மீது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சேபனை இருந்தால், நீங்கள் விரும்பும் வகையிலான லோக்பால் சட்டத்துக்காக ஏன் போராட்டத்தை தொடங்கவில்லை? என்பது உள்பட 14 கேள்விகளை அப்போது அவர் எழுப்பினார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகை
ஜனாதிபதி ஒருநாள் சுற்றுப்பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். பகல் 11.30 மணிக்கு விமானத்தில் சென்னை வரும் அவர், சென்னை எம்.ஆர்.சி.நகர் லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்ஜினீயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பிற்பகல் 1 மணிக்கு அங்கிருந்து , நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு வருகிறார். அங்கு புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பற்கேற்கிறார். பிற்பகல் 2.30 மணிஅளவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, விமானநிலையம் சென்று, டெல்லி புறப்பட்டு போகிறார்.
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வருகையையொட்டி, சென்னையில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 3 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள் மற்றும் 11 துணைகமிஷனர்கள் உள்பட 3,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
ஜனாதிபதி வரும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து வருகிறார்கள். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொள்ள, மாணவர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவ பிரதிநிதிகள் முன்கூட்டியே கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
பொங்கல் பண்டிகைக்கு வெட்ட தயாராக உள்ள செங்கரும்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும், விவசாயிகளால் விவசாயத்திற்கு கைகொடுக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின்போது, வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, சூரியனுக்கும், வினாயகருக்கும் பொங்கல் படையலிடும்போது, பொங்கல் பானைகளில் மஞ்சள்கொத்து கட்டுவதும், அருகே செங்கரும்பு, வாழைப்பழம் வைத்து, தேங்காய் உடைத்து வழிபடுவதும் வழிவழியாக தமிழர்கள்; செய்து வரும் பாரம்பரிய பழக்கமாகும்.
மேலும் பொங்கல் தினமான தை-1ந்தேதிக்கு அடுத்தநாள் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கலின்போதும், காணும் பொங்கலின் போதும் செங்கரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
மற்ற நேரங்களில் தேடினாலும் கிடைக்காத செங்கரும்பு மார்கழி, தை, மாசி மாதங்களில் அதிகஅளவில் எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படும். இதற்கு காரணம் தைப்பொங்கலை மையமாக வைத்;து செங்கரும்பு சாகுபடி செய்யப்படுவதுதான்.
பொங்கல் பண்டிகைக்காக அதிக அளவு செங்கரும்பு மதுரை மாவட்டம் மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆலைக் கரும்பு கூட அதிகம் விளையாத காவிரி பாசனப் பகுதியான அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
காவிரிப் பாசனப் பகுதியாக இருந்த போதிலும் அரசர்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகள் மூலமே செங்கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
அரசர்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு சுமார் 50 ஏக்கருக்குமேல் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட தொடர்மின்வெட்டு காரணமாக செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சவே சிரமப்பட்ட விவசாயிகள், ஜெனரேட்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி செங்கரும்பை காப்பாற்றி, பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்தனர். அப்போது 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.250-க்கு விற்பனையாகும் என்று நினைத்த அரசர்குளம் விவசாயிகளுக்கு வெளியூர்களில் இருந்து வந்து அறந்தாங்கி பகுதியில் விற்பனைக்காக இறங்கிய கரும்புகளால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு ஆயிரக்கணக்கான கட்டுகள் செங்கரும்புகள் விற்பனைக்காக வந்தது. இதனால் ஆயிரம் கரும்பு கட்டுகள் விற்கும் பகுதியில் பத்தாயிரம் கரும்பு கட்டுகள் வந்து இறங்கியதால், கரும்பு கட்டின் விலை பல மடங்கு குறைந்ததுடன், ஆயிரக்கணக்கான கரும்பு கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கியதுடன், அவற்றை விறகாக எரிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட அரசர்குளம் பகுதி விவசாயிகள் பலர் இவ்வாண்டு செங்கரும்பு சாகுபடி செய்யாமல், நெற்பயிர் சாகுபடிக்கு மாறினர். இதனால் இவ்வாண்டு சுமார் 25 ஏக்கர் அளவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் பொங்கல் பண்டிகைக்காக இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்க உள்ளது.
இதுகுறித்து அரசர்குளம்கீழ்பாதியைச் சேர்ந்த செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி திருப்பதி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கரும்பு சாகுபடியை தொடங்கினோம். கரும்பு சாகுபடிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதனால் மின்சார இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு இருந்தால் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யமுடியும். எனது உறவினர் வைத்துள்ள ஆழ்துளை கிணறு மூலம் நான் எனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். நெற்பயிரைப் போன்றே உரம், பூச்சி மருந்து செலவு, களை அகற்றும் செலவு, பாத்தி அமைக்கும் செலவு உள்ளது.
கரும்பு ஒரு வருடத்து பயிர். பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே செங்கரும்பு பயன்படும் என்பதால், அப்போது நிர்ணயிக்கப்படும் விலையே எங்களின் லாப-நஷ்டத்தை தீர்மானிக்கும். கரும்பு கட்டு நல்ல விலைக்கு விற்றால், ஆண்டு ஒன்றிற்கு ஏக்கருக்கு செலவுகள் போக சுமார் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்;ந்த கரும்பு விவசாயி சுப்பிரமணியன்; கூறியதாவது:
நாங்கள் பல வருடங்களாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு என்னைப் போன்ற கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு காரணமாக இப்பகுதியில் செங்கரும்பு சாகுபடி பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும் நான் பாரம்பரியாக செய்து வரும் செங்கரும்பு சாகுபடியை விட முடியாமல், தற்போதும் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளேன். இன்னும் சில தினங்களில் கரும்பு வெட்டும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு அறந்தாங்கி பகுதியில் கரும்பு கட்டுகளை அதிகம் விற்காலம் என்ற எண்ணத்தில் மேலூர் கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி பகுதிக்கு ஆயிரக்கணக்கான கட்டுகள் கரும்புகளை கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மிகமிக குறைந்த விலைக்கே கரும்பு விற்பனையானது. இதனால் மேலூர் மற்றும் அரசர்குளம் விவசாயிகள் மிகுந்த இழப்பிற்கு உள்ளாகினர்.
மேலும் கரும்பு விற்பனை குறைந்ததாலும், விலை குறைந்ததாலும் அரசர்குளம் பகுதியில் பல விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பை வெட்டாமல் விட்ட நிலையும் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தேவையாக உள்ள செங்கரும்பு விற்பனையாகாவிட்;டால், அவற்றை விறகாக எரிக்கும் நிலைதான் இங்கு உள்ளது. ஆனால் மேலூர் பகுதியில் கரும்புச்சாறு பிழிய செங்கரும்பை பயன்படுத்துவதால் அங்கு பொங்கலுக்கு செங்கரும்பு விற்காவிட்டாலும், விவசாயிகளுக்கு இழப்பு இல்லை.
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கரும்புச்சாறு பிளிய ஆலைக்கரும்பு பயன்படுத்தும் நிலையே உள்ளது. இதனால் நாங்கள் பொங்கல் பண்டிகை விற்பனையை மட்டுமே நம்பும் நிலையில் உள்ளோம். எனவே பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை முறைப்படுத்தி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நாவிற்கு இனிய சுவைதரும் செங்கரும்பு தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையோடு பின்னிப்பிணைந்ததாக உள்ளது. ஆனால் அந்த செங்கரும்பை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலைதான் இனிமையானதாக இல்லை என்றால் அது மிகையில்லை.
பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய கோரி ஜனாதிபதியிடம் மனு
சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் நா.ராஜாராமன், இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைச்செல்வன் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அம்மனுவில், ‘’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தப்பட்டது என விசாரணை அதிகாரியான தியாகராஜன் சமீபத்தில் கூறியிருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருக்கும் அவரது கருணை மனுவின் மீது மறுப ரிசீலனை மேற்கொண்டு பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)