Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, March 5, 2014

தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு இன்று முடியும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு இன்று (புதன்கிழமை) முடியும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார் --------------------------------------------------------------------- தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்ற து. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. குழுவுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இதற்கிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும்இ அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த ்--------------------------------------------------------------------- பதில்களும் வருமாறு:- கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது?. பதில்:- தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) தொகுதி பங்கீடு முடியும். ்--------------------------------------------------------------------- கேள்வி:- மியான்மர் சென்ற பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளாரே?. பதில்:- இது அதிர்ச்சியளிக்கும் செய்தி என்று தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். என்னுடைய கருத்தும் அதுதான். ்--------------------------------------------------------------------- கேள்வி:- தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்களே?. பதில்:- இதற்கு தி.மு.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ்--------------------------------------------------------------------- கேள்வி:- ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ததற்கு தடை கேட்டு மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளதே?. பதில்:- இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்

திருச்சி: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இலங்கை கைதிகள் இருவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், வெளிநாட்டு கைதிகளை அடைத்து வைப்பதற்கான முகாம் சிறை உள்ளது. இங்கு நைஜீரியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர், 38 பேர் இந்த முகாம் சிறையில் உள்ளனர். இலங்கையைச் சேர்ந்த உமா ரமணன், நந்தகுமார் ஆகிய இருவரும், நேற்று முதல், சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். "தங்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தி இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு தாசில்தார் பெரியசாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா

உலக அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த ஆபத்தான இடமாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------- தேசிய குண்டுவெடிப்பு புள்ளி விவர மையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் உலகளவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை பொறுத்தவரை மூன்றாவது ஆபத்தான இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட பின்தங்கியே உள்ளன. ------------------------------------------------------------------------------------------------ இதன்படி, 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் 212 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 130 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 108 குண்டுவெடிப்பு சம்பவங்களும், வங்கதேசம் மற்றும் சிரியாவில் முறையே 75 மற்றும் 36 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ---------------------------------------------------------------------------- கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 241 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் ஆபாத்தான நாடாக இந்தியா மூன்றாவ்து இடத்தில் உள்ளது.

சேமிப்புக்கு ஊக்கம்: அஞ்சலகங்களில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.2 சதவீதம் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. --------------------------------------------------------------------------------- அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதம் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஷியாமளா கோபிநாத் தலைமையிலான குழுவினர் மத்திய அரசுக்கு தங்களது பரிந்துரையை அளித்தனர். --------------------------------------------------------------------------------- அதன் அடிப்படையில், நிதி அமைச்சகம், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. அதில், நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டி 0.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒன்று மற்றும் 2 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத் தொகைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வட்டி 8.2ல் இருந்து 8.4 சதவீதமாக உயருகிறது. --------------------------------------------------------------------------------- 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 8.5 ஆகவும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டுகளுக்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகவும் வட்டிவிகிதம் அதிகரித்துள்ளது. --------------------------------------------------------------------------------- பி.பி.எஃப்.பில் மாற்றம் இல்லை. பி.பிஎஃப் டெபாசிட் உச்சவரம்பு ஒரு லட்சம் மற்றும் வட்டி விகிதம் 8.7 சதவீதமாகவே நீடிக்கிறது. அதுபோல், தேசிய சேமிப்பு திட்டம் (என்எஸ்சி) மற்றும் மாதாந்திர வருவாய் திட்ட வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இங்கிலாந்து ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்தது

ஜெனீவா, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் ஆனது. ---------------------------------------------------------------------------------------------- மனித உரிமை மீறல் இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது, சிங்கள ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை இதை ஏற்க மறுக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா சார்பில் ஏற்கனவே இரு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. -------------------------------------------------------------------------------------------------- ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் மீண்டும் நேற்று முன்தினம் தொடங்கியது.சமீபத்தில் இலங்கை சென்று விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. நவி பிள்ளை நேற்று முன்தினம் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல் கனடா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் இலங்கை நிலவரம் தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். -------------------------------------------------------------------------------------------------- அமெரிக்கா தீர்மானம் தாக்கல் இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவிலான விசாரணை நடத்த கோரும் அமெரிக்காவின் வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இங்கிலாந்து, மான்டனெக்ரோ, மாசிடோனியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லை என்றும், எனவே அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் நவி பிள்ளை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை வரவேற்பதாக அமெரிக்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ------------------------------------------------------------------------------------------------- மாகாண அரசுக்கு அதிகாரம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். போர்க்குற்றங்களுக்கு காரணமான நபர்களை கண்டறிந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டப்படி அவர்களை அந்த குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும். மத சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.13–வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, இலங்கையின் வடக்கு மாகாண முதல்–மந்திரிக்கு ஆக்கபூர்வமான வகையில் அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதோடு, அந்த மாகாணத்துக்கு உரிய நிதி ஆதாரங்களையும் இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.இந்த வரைவு தீர்மானத்தின் மீது இந்த மாத இறுதியில் ஓட்டெடுப்பு நடைபெறும். ------------------------------------------------------------------------------------------- ஆதரவு திரட்டும் இலங்கை இந்த தீர்மானம் தொடர்பான இலங்கையின் பதிலை அந்த நாட்டு வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய இருப்பதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் இலங்கை மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

கேப்டன்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் விஜயகாந்த் மீது நடவடிக்கை கோரி வழக்கு: முன்னாள் ராணுவ வீரர் தொடர்ந்தார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘கேப்டன்’ என்ற சொல்லை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபாணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கேப்டன்’ என்பது ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியாகும். சினிமா நடிகரும் எம்.எல்.ஏ.வுமான விஜயகாந்த், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததில்லை. இந்நிலையில், கேப்டன் என்ற சொல்லை விஜயகாந்த் முறைகேடாகப் பயன்படுத்துகிறார். இது சட்ட விரோதமானது. இந்திய ராணுவத்தின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும். கேப்டன் என்ற சொல்லைப் பயன்படுத்த விஜயகாந்துக்கு உரிமை இல்லை. ஆகவே, விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை சாலிகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எனது புகாரின் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தண்டபாணி கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மனுதாரரின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பின், அது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை தேவைப்பட்டால் ஒரு வார காலத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. புகார் மனுக்களை காவல் துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காவல் துறையினர் செயல்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி உதயம்: மத்திய அரசு

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்காக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ------------------------------------------------------------------------------------------------ இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பிரணாப்முகர்ஜி தெலுங்கானாவுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். ------------------------------------------------------------------------------------------------ இதன் மூலம் இந்தியாவின் 29–வது புதிய மாநிலமாக தெலுங்கானா அமைவது உறுதி ஆனது. அதன் தொடர்ச்சியாக புதிய மாநிலத்துக்கான நிர்வாக பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ------------------------------------------------------------------------------------------------ இந்த நிலையில் வரும் ஜுன் மாதம் 2–ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் உதயமாகி செயல்பட தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை இன்று அறிவிக்கப்படுவதால் தெலுங்கானா உதயமாவது ஒரு நாளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------ ஜுன் 2–ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக செயல்பட தொடங்கிவிடும். மாநில நிர்வாகத்தை நடத்த உள்ள தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். ------------------------------------------------------------------------------------------------ தெலுங்கானாவின் தலைநகரமாக ஐதராபாத் இருக்கும். சீமாந்திராவுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் தலைநகரமாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------ இதற்கிடையே சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் 3 மாதங்களில் புதிய தலைநகரை தேர்வு செய்து பரிந்துரை செய்வார்கள். ------------------------------------------------------------------------------------------------ அதன் பிறகு சீமாந்திராவின் புதிய தலைநகர் எது என்பது தெரிய வரும். சீமாந்திராவுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி முன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித், கேரள கவர்னராக நியமனம்

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். நேற்று மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவை அவர் சந்தித்தார். அப்போது, இந்த முடிவு ஷீலா தீட்சித்திடம் தெரிவிக்கப்பட்டது.
கேரள கவர்னராக உள்ள நிகில் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அவுரங்காபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆகவே, அந்த பதவிக்கு ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐநா தீர்மான வரைவில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை

ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நில நாடுகள் கொண்டுவரவிருக்கும் முன்வரைவின் நகல்கள் கசிந்திருக்கின்றன.
--------------------------------------------------------------------------------------- இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் இந்த முன்வரைவு, இது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. --------------------------------------------------------------------------------------- ஆனால், இலங்கைப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த வழிமுறை மூலமாக தெளிவாகத் தெரியும் பலன் ஏதும் கிடைக்காத நிலையில், ஒரு சுயாதீனமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்திருப்பதை இத்தீர்மான முன்வரைபு வரவேற்கிறது. மேலும், இந்த முயற்சியில், ஆணையர், பொறுப்பு சுமத்துவது மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவது என்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கணித்து, இது குறித்து ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான வழிமுறைகளின் முன்னேற்றத்தையும் கண்காணித்து, இலங்கைப் போரின் இரு தரப்புகளும் போரில் இழைத்த்தாகக் கூறப்படும் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்கவேண்டும் என்றும் அது கோருகிறது. --------------------------------------------------------------------------------------- இந்த விசாரணையின் முடிவில், ஆணையர் மனித உரிமைக் கவுன்சிலின் 27வது அமர்வில் ஒரு வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்றும், முழுமையான அறிக்கையை அதற்கடுத்த, அதாவது 28வது அமர்வில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கோருகிறது. --------------------------------------------------------------------------------------- இதனிடையே, இலங்கை அரசும், இந்த குற்றச்சாட்டுகள் மீது ஒரு சுயாதீனமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்தவேண்டும் என்றும் அது கோருகிறது. --------------------------------------------------------------------------------------- மேலும், இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளையும் இலங்கை சரியாக அமல்படுத்தவேண்டும், 13 சட்டத்திருத்த்தின் அடிப்படையில், வட மாகாணத்துக்கு உரிய தேவையான வளங்களையும், ஆட்சி செய்ய தேவைப்படும் அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டும், அனைத்து மத வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கவேண்டும், இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவேண்டும், மேலும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மதச்சிறுபான்மையினர், சிவில் சமூக உறுப்பினர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இத்தீர்மானம் கோருகிறது. --------------------------------------------------------------------------------------- இத்தீர்மான முன்வரைவு குறித்து புலம்பெயர் தமிழ்த் தன்னார்வக் குழுக்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன. --------------------------------------------------------------------------------------- இலங்கை அரசும் இத்தீர்மான முன்வரைவை நிராகரித்திருக்கிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சரவைக்காகப் பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரெம்புக்கவல்ல, இலங்கைப் போரின் பின்னர் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தானே உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்மானத்துக்கு அவசியமே கிடையாது என்று கூறியுள்ளார்

தெஹிவளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

தெஹிவளையில் அமைந்துள்ள பள்ளிவாசல ஒன்றை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கொடவில நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஜ்ஸ்துல் சாபீயா என்ற பள்ளிவாசலை மூடுமாறு கோரி காவல்துறையினர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த பள்ளிவாசல் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------- கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி இந்த பள்ளிவாசல் தொடர்பில் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் குறித்த பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டது என பள்ளிவாசல் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூவர் கைது

தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நீதிமன்றம் குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மகள்களையும் இராணுவத்தில் இணைக்க விரும்பிய தந்தையை மூ தாக்க முற்பட்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. --------------------------------------------------------------------------------------- இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.

அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் :

அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிகரான வகையிலேயே தற்போதைய தீர்மானமும் அமைந்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடாத்த ஆர்வம் காட்டவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையே சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், உத்தேச தீர்மான அறிக்கையில் இன்னுமொரு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------- உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், ஓராண்டு காலத்தில் இந்த விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க மேலும் ஓராண்டு காலம் காத்திருக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களிடம் கோருவது நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் பற்றி முறைப்பாடு செய்த குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு சர்வதேச சுயாதீன விசாரணைகளை தவிர்ந்த வேறு வழி கிடையாது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.உத்தேச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட அனைவரினதும் முகத்தில் விழுந்த அறையாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள