Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 23, 2015

மேற்கு நாடுகள் எப்படி எப்படியெல்லாம் நாம் காலம் காலமாக பயன்படுத்தி வருபவற்றுக்கு காப்புரிமை என்ற பெயரில் அச்சுறுத்துகின்றன. அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவை

நம்மாழ்வார் - மேற்கு நாடுகள் எப்படி எப்படியெல்லாம் நாம் காலம் காலமாக பயன்படுத்தி வருபவற்றுக்கு காப்புரிமை என்ற பெயரில் அச்சுறுத்துகின்றன. அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவை!

Wednesday, February 18, 2015

பஞ்சம்னா என்னவென்று தெரியுமா இந்த தலைமுறைக்கு?

பஞ்சம்னா என்னவென்று தெரியுமா இந்த தலைமுறைக்கு? 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்திருக்கின ்றன.அவற்றில் முக்கியமானதும் மறக்கமுடியாததும் 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சமே.. 1857ல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு முன்புவரை இந்தியாவைக் கிழக்கிந்தியக் கம்பனி தான் நிர்வகித்து வந்தது.சிப்பாய் கலகத்திற்குப் பிறகு 1858 இல் சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலி ருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புகைவண்டிகள், தந்தி,தானிய ஊக வாணிகம், புதிய பணப் பயிர்கள், ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப் பட்டது 1876ம்ஆண்டில் வழக்கமாக தாராளமாகப் பெய்யும் தென்மேற்கு பருவமழை சில மாவட்டங்களில் வெறும் தூரலுடனும், பல மாவட்டங்களில் அதுவும் கூட இல்லாமல் பொய்த்துப் போனது. தென்மேற்கு பருவமழை அவ்வப்போது இது போன்று பொய்த்துப் போகும்போது குளிர் காலத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை வந்து காப்பாற்றும். ஆனால் அந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப் போனது மக்கள் எதிர்பாராதது. 1876 ஆம் ஆண்டு முழுமைக்கும் 6.3 அங்குலம் மழையே பெய்திருந்தது. அதற்கு முந்தைய வருடங்களில் சராசரியாக 27.6 அங்குலம் மழை பெய்வது வழக்கம். 1877ம் ஆண்டிலும் பருவமழைகள் மிகவும் குறைந்த அளவே பெய்தது. தமிழர்களை வரலாறு காணாத வறட்சியில் ஆழ்த்தியது. அளவிற்கதிகமான வெப்பம், வறண்ட நிலங்கள், காய்ந்த புதர்கள், அனல் காற்று வீசி எங்கும் புழுதி மண் பறக்க சென்னை மாகாணத்தின் பல பகுதிகள் பாலைவனம் போன்று காட்சியளித்தன. இதுதான் 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877-தாது வருடப் பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. சந்தைப் பொருளாதாரத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை தடை செய்து, பற்றாக்குறையைப் போக்க விரும்பவில்லை. பதுக்கல் பரவலாகி, உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனதால், விவசாயிகள் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு வெகுவாகக் குறைந்து, உணவுப் பற்றாக்குறை தீவிரமடைந்தது. விவசாயம் பொய்த்துப் போகவே உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது. விற்க தானியமற்று கடைகள் மூடிக்கிடந்தன. பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர்வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களை கொண்டுவந்திறக்கினர். ஆனால் அவற்றைப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு கொள்ளை விலையில் விற்றனர். உயர்ந்த விலைகளில் விற்பதற்காக மிக குறைந்த நேரமே பெரு முதலாளிகள் கடைகளை திறந்தனர்.
மூன்று வேளை தினம் உணவருந்திய மக்கள், படிப்படியாக உணவைக் குறைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு வேளை உணவருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் தானியங்கள் வாங்க இயலாத மக்கள் காடு மலைகளில் கிடைக்கும் கிழங்கு கொட்டைகளைத் தேடி சமைத்து உண்டனர். நஞ்சு என்று ஒதுக்கப்படும் ஒரு வகையான காட்டு கூம்புக் கிழங்குகளை (ஆங்கிலத்தில் இதை Sauci root என்று எழுதியிருக்கிறார்கள்) கூட மூன்று நாட்கள் வேக வைத்தால் நச்சுத்தன்மை இறங்கி விடும் என்ற நம்பிக்கையில் வேகவைத்து உண்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே மக்கள் எறும்பு புற்றுகளைத் தேடி அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைப் கண்டதாக வருத்தத்துடன் கூறி இருக்கிறார். பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர். வயல் வேலைகள் அற்ற நிலையில், கடைகளனைத்தும் மூடப்பட்ட நிலையில், பருத்தி, நூல் சார்ந்த தொழிற்சாலைகளும் முடங்கிய நிலையில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள், துணிகள், வீட்டு கதவு, ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று பெரும்பாலான மக்கள் நாடோடிகளாயினர். கிராமங்களை காலி செய்து மக்கள் சாரை சாரையாக நடை பயணமாக பெரு நகரங்களை நோக்கி வேலைதேடிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடப்பது அனைவருக்கும் இயன்ற செயலல்ல. வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலே ஆங்காங்கே விழுந்து இறந்தனர். சாலையோரங்களில் கிடந்த சடலங்களை நாய்களும் நரிகளும் கடித்து குதறிக் கொண்டிருப்பதை பார்த்தாலும், எதுவும் செய்ய ஆற்றலின்றி மக்கள் மௌனமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். சில இடங்களில் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக்கிடங்குக ளை சூறையாடி மக்கள் பகிர்ந்துகொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்கு பெரும் சிக்கலானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வெள்ளைக்கார அதிகாரிகள் ஆங்காங்கே வேலைத் திட்டங்களை செயல்படுத்த முன்வந்தனர். பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வெள்ளைக்கார அதிகாரிகள் முயன்றனர். இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கி விட்டது . மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் துறைமுகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தினம் ஆயிரக்கணக்கானோர் படகுகளில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேயிலைத்தோட்டங்களில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இலங்கை, உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றைத் தமது கப்பல் படைகள் மூலம் வெற்றி கொண்ட தமிழர்கள், பஞ்சம் பிழைக்க இந்த நாடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் சென்றது காலத்தின்கொடூரமல்லவா.. பஞ்சத்தின் கடுமை காலனிய அரசாங்கத்திற்குத் தெளிவானது. அப்போது சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக (Famine Commissioner) இருந்தார். பஞ்சம் தீவிரமடைந்தபின், நிவாரணப் பணிகள் மெல்லத் தொடங்கின. ஆனால் நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப்பட்டனர். டெம்பிள் ஊதியம் (Temple Wage) என்றழைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தில் ஆண்களுக்கு 2 அணா, பெண்களுக்கு 1 1/3 அணா, சிறுவர்களுக்கு ¾ அணாவும் கூலியாக கொடுக்கப்பட்டது. (ஒரு அணா ஒரு ரூபாயில் 1/16 க்கு சமம்.) சாதாரண நாட்களில் ஆண்களுக்கான கூலி ஐந்து அணாவாக இருக்கவேண்டியது பஞ்சத்தால் குறைத்து இரண்டு அணாவாக கொடுக்கப்பட்டது. இந்த கூலிக்கு தானியங்கள் வாங்க இயலாததால் பல இடங்களில் கூலிக்கு பதில் தானியங்களே கொடுக்கப்பட்டன. விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திய பெண்கள் பழக்கமில்லாத குழி தோண்டும் வேலைகளை சிரமத்துடன் புழுதியில் புரண்டு செய்து கொண்டிருந்தது பஞ்சம் அனைத்துத் தர மக்களையும் ஆட்டிப்படைத்ததையே காட்டுகிறது. பல நாட்கள் பட்டினியுடன் நோய்வாய்ப்பட்டு பலவீனமான உடல் நிலையில் சிரமமான பணிகளில் ஈடுபட்ட மக்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர்விட்டனர்.. இப்பெரும் பஞ்சத்தால் பல லட்சம் பேர் மாண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணிக்கப் படவில்லை. அரசாங்கக் கணக்கின்படி பிரிட்டிஷ் மாகாணங்களில் மட்டும் 52 முதல் 55 லட்சம் பேர் மாண்டனர். ஆனால் மற்ற அறிஞர்களின் கணிப்புகள் இறந்தவர் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனக் கூறுகின்றன. ரொனால்ட் சீவாய் 61 லட்சம் எனவும், அரூப் மகாரத்னா 82 லட்சம் எனவும், டிக்பி அதிகபட்சமாக ஒரு கோடியே மூன்று லட்சம் எனவும் மாண்டவர் எண்ணிக்கையைக் கணிக்கின்றனர். பல இலட்சம் தமிழர்கள் உணவின்றி மரணத்து கொண்டிருந்த நேரத்தில் அப்போது இந்தியாவை ஆண்டவர் வைஸ்ராய் லைட்டன் பிரபு.இவர் அன்றைய விக்டோரியா மகாராணிக்கு மிகவும் பிடித்த கவிஞர். சென்னை மாகாணத்தின் பஞ்சத்தைப் பற்றி கவலைப்படாமல்.. இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா பொறுப்பேற்கும் விழாவிற்கு டில்லியில் 68000 பிரபுக்களையும், மகாராஜாக்களையும், அதிகாரிகளையும்அ ழைத்து ஒரு வாரத்திற்கு மாபெரும் விருந்தை நடத்திக்கொண்டிருந்தார் அன்றைய இந்தியாவின் நீரோ...லைட்டன் பிரபு..

Tuesday, February 17, 2015

நானும் பொறுமையாகக் காத்திருந்து பார்த்தேன்

நானும் பொறுமையாகக் காத்திருந்து பார்த்தேன். சுகுமார்ஜி இந்த இழையை ஆரம்பிப்பார் என்று. ஆனால் இன்னும் காணோம். இருந்தால் என்ன ? தொடங்கி வைத்து நாம் பலரும் சேர்ந்து பேசுவோம். ----------------------------------------------------------------------------- வேளாண் மரபுகள் என்றால் பல வித மரபு சார்ந்த வேளாண் முறைகள். பல நாடுகளில் கைக்கொள்ளப் படுபவை. நம் நாட்டிலேயே இருந்து மெல்ல மெல்ல காணாமல் போனவை. பழம் நூல்களில் இருந்து நாம் கண்டு கொள்ளாமல் இருப்பவை. பகட்டும், மினுக்கும் உள்ள சினிமா கவர்ச்சியில் நம் சிந்தையைப் பறி கொடுத்து நமது வேர்கள் பதிந்து இருக்கும் வேளாண் உலகத்தை நாம் திரும்பிக் கூட பார்க்காத காரணத்தால் அங்கு நடக்கும் எத்தனையோ மாற்றங்கள், சாதனைகள், மீள் மரபுகள், நசிக்கும் பல வழிவழி நன்மைகள் --- இப்படி எத்தனையோ இருக்கின்றன வேளாண் மரபுகளைப் பற்றி நாம் பேச முடிவெடுத்தால். ----------------------------------------------------------------------------- இது வரையில் இலக்கிய நூல்களை மட்டுமே பார்ப்பேன் என்று அட்ம் பிடிப்பவர்கள் அப்படியே அடம் பிடிக்கட்டும். தவறில்லை. ஆனால் என்ன. அவ்வப்பொழுது வேளாண் கருத்துகள் காவியங்களிலும் இலக்கிய நூல்களிலும் எப்படி கையாளப் படுகின்றன என்று சொல்லட்டுமே. ----------------------------------------------------------------------------- ஒரு சமயம் தொடர்ந்து வானொலியில் வேளாண்மைச் செய்திகள் கலந்துரையாடல்களாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது எவ்வளவு பயனுள்ள ஒரு ஒலிபரப்பை, ஒரு கல்வியை நாம் பரபரப்பூட்டும் மற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி இழந்து வந்திருக்கிறோம் என்று. இப்பவும் அந்தக் குறிப்பெடுத்த நோட் புக் இருக்கிறது. (உனக்கு வேற வேலை இல்லையா? என்கிறீர்களா) ----------------------------------------------------------------------------- சமீபத்தில் என் நண்பர் திரு குருராஜ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, நல்லதொரு தொழில் முனைவோரான அவர் கூறினார், ‘சார்! இந்த ரசாயன உரங்கள் போட்டு நம் உணவுகளே பாழாகி விட்டன. இயற்கை உரங்கள்தான் சரி. இந்தப் பாருங்க. பசுமை விகடன் என்ற இதழில் 10--10--2009ல் முதல்வருக்கு நம்மாழ்வார் கடிதம் என்ற இந்தக் கட்டுரையைப் படிங்க’ என்று கொடுத்தார். சங்கத் தமிழே பங்கம் தவிர் - என்ற அந்தக் கட்டுரை நல்லதொரு கட்டுரை. ----------------------------------------------------------------------------- அதில் சிந்திக்க வைக்கும் ஒரு கருத்து -- இப்பொழுது தமிழ் நாட்டில் சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 1400 கிலோவாம். இத்தனைக்கும் ரசாயன உரங்கள் யூரியா, டிஏபி பொட்டாஷ் எண்டோசல்பான் எல்லாம் போட்டு வதக்கி வர விளைச்சல். கரிகால் சோழன் காலத்தில் இந்த ரசாபாசம் எல்லாம் கிடையாது. இயற்கை உரங்களே முழுக்க முழுக்க. அனால் விளைச்சல் எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 4883 கிலோ. ----------------------------------------------------------------------------- எதை வைத்துச் சொல்கிறார் திரு நம்மாழ்வார்? முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் வரும் வரிகள். ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளை உட்டாக காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ அதாவது ஒரு ஹெக்டேருக்கு 12,800 கிலோ நெல். ஏக்கருக்கு 4,886 கிலோ. ----------------------------------------------------------------------------- என்ன அப்பொழுது மட்டும் உழவில் பூச்சி கிருமி பிரச்சனைகள் இல்லையா? இருந்தது. அதனை சமாளிக்க இயற்கை மருந்துகள், ஜீவாம்ருதக் கரைசல், முட்டைக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை கையாளப்பட்டன. ----------------------------------------------------------------------------- இயற்கைச் சீற்றங்கள், உரங்கள் என்பனவற்றால் ஏற்படும் பிரச்சனை உப்பு நிலம் எனப்படும் களர் நிலம். பொதுவாகக் களர் நிலத்தை நல்ல நிலமாக மாற்றத் தக்கைப் பூண்டுகள் பயன்படும் என்கிறார் ‘தமிழ்நாடு இயற்கை விவசாய இயக்கத்தின்’ இயக்குநரான ரேவதி அவகள். ----------------------------------------------------------------------------- நன்கு விளைந்த வயலோ காலங் கெட்ட காலத்தில் பெய்யும் மழை, அதைவிட அன்றாடம் மேய வரும் விலங்குகள் போன்ற ஆபத்துக்களை எதிர்நோக்கிய படியே நிற்கும். விலங்குகளைத் தடுக்க அழுகின முட்டை, பொறிச்ச முட்டை ஓடுகள் ஆகியவை கொண்ட கரைசலை வேலியோரமாகத் தெளித்து அதன் மூலம் விலங்குகளை விலகச் செய்யலாம் என்கிறார் பேராசிரியர் டாக்டர் டி நரஹரி. மின்வேலியெல்லாம் போட்டு துரத்துவதைவிட இது எவ்வளவோ மேல் ஆச்சே! உரத்துக்கு உரமும் ஆச்சு. ----------------------------------------------------------------------------- நமது சொல்லேர் உழவரான திருவள்ளுவனார் உழவு என்பதைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துகள்தாம் எவ்வளவு தற்காலப் பொருத்தம் உடையன! ----------------------------------------------------------------------------- 1037) தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும் வேண்டாது சாலப் படும். ----------------------------------------------------------------------------- பரிமேலழகர் உரை -- ----------------------------------------------------------------------------- தொடிப்புழுதி கஃசா உணக்கின் -- ஒரு நிலத்தினை உழுதவன் ஒருபலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; ப்டித்து எருவும் வேண்டாது சாலப்படும் -- அதன்கட் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவுமிட வேண்டாமற் பணைத்து விளையும். -- ----------------------------------------------------------------------------- (கஃசு -- பழங்கால அளவை, கால் பலம்) ----------------------------------------------------------------------------- 1038) ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ----------------------------------------------------------------------------- பரிமேலழகர் --- ஏரினும் எரு இடுதல் நன்று --- அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று --- இவ்விரண்டும் செய்து களைகட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. ----------------------------------------------------------------------------- காத்தல் -- பட்டி முதலியன மேயாமல் காத்தல். ----------------------------------------------------------------------------- (உழவின் அடிப்படையான ஐந்து செயல்கள் --- உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்பன) ----------------------------------------------------------------------------- பட்டி மேய்தல் என்றவுடன் அக்காவின் வரிகள் ஞாபகத்துக்கு வரவேண்டுமே! நாச்சியார் திருமொழி 14. 1, ‘பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே!’ ----------------------------------------------------------------------------- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

தனது காதலிக்கு பூவினை பரிசாக அளித்து தலைப்புச் செய்தியில் இடம் பிடித்து

அனைத்து உயிரினங்களிலும் காதல் என்ற உணர்வு இருப்பதால்தான் உயிரினங்களின் பரிணாமம் தொன்றுதொட்டு பரவி வருகிறது. காதல் என்றவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது பூ. காதலியை மகிழ்ச்சி படுத்துவதற்காக காதலன் ரோஜாவை அளிப்பது வாடிக்கை. அதனாலே, ரோஜாக்களின் விலை அதிகமாக்க் கூட விற்பனை செய்யப்படுகின்றன.
விசித்திரமாக, மனித இனத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் தனது காதலிக்கு பூவினை பரிசாக அளித்து தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது கும்பிடுப்பூச்சி ஒன்று. இந்த மிகவும் அரிய காட்சி, இந்தோனோசியாவின் பென்டன் மாகாணத்தில் உள்ள டங்கரெங் பகுதியில் நடந்துள்ளது. காலையில் நடந்த இந்த அற்புதமான நிகழ்வை புகைப்படக் கலைஞர் யூடி சௌஸ் வெகு நுட்பமாகப் புகைப்படம் பிடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்

காகிதக் கப்பலில் தண்ணீர் மீது உல்லாசப் பயணம்

மழை பெய்து வெள்ள நீர் ஓடும்போதும் அல்லது நீர் நிலைகளைப் பார்க்கும்போதும் சிறுவர்களுக்கு தோன்றுவது அதன் மீது காகிதக் கப்பல் விட்டால் எப்படி அழகாகச் செல்லும் என்ற கற்பனை ஓடும். ஆனால், உண்மையாலும் காகித்தால் கப்பல் செய்து அதில் ஓர் சவாரி செய்வது எப்படி இருக்கும். இதுவும் சாத்தியம்தான் எனும் வகையில் காகித்த்தில் சிறிய அளவிலான கப்பல் செய்து அதில் சவாரி செய்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மார்வெனா வில்சன். இவர் ஒரு கட்டுமானப் பொறியியலாளர். இவர் மட்டும் அல்ல. இவரது வம்சா வழியே பொறியாளர்கள்தான். இவரது கொள்ளு தாத்தாவான ஐசம்பர்டு கிங்டம் ப்ரூனல், பிரிட்டனின் கிரேட் வெஸ்டர்ன் ரயில்வேயையை கட்டமைத்தவர். அது தவிர, பல நீராவிக் கப்பல்களையும் அவர் வடிவமைத்துள்ளார். இதுபோன்ற ஒரு வழித் தோன்றலில் வந்துள்ள மார்வெனாவுக்கு, காகிதக் கப்பலை உருவாக்குவதில் பெரிய சிரமம் இருந்திருக்காது.
இக்காகிதக் கப்பல், ஆரிகாமி எனும் காகித்தால் தயார் செய்யப்பட்டதாகும். ஆரிகாமி என்றால் மடிக்கும் காகிதம் எனும் அர்த்தம். 100 கிலோ எடை உள்ள இக்கப்பல், சுமார் 12 அடி நீளமுடையது. ஒட்டக் கூடிய வகையிலான டேப் 500 அடி மற்றும் 10 லிட்டர் பசையின் உதவியினால் இக்கப்பல் முழுமை பெற்று தண்ணீரில் மிதக்கவும் செய்தது. ---------------------------------------------------------------------------------------------------------------------- கப்பலின் அடிப்பகுதி மட்டும், மிதப்பதற்கு ஏதுவாக மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. ஒருவழியாக காகிதமானது கப்பல் வடிவம் பெற்றபிறகு, தெற்கு லண்டனில் உள்ள சௌத்வார்க் ஏரியில் மார்வெனா உல்லாசமாக சவாரி செய்யவும் தவறவில்லை. இதனைப் பார்த்தவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்களாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- இதுபோன்ற புதிய சிந்தனைகள் மூலம், பொறியியல் துறையில் இன்னும் பல வாய்ப்புகள் நிறைந்துள்ளன என்பதை இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்று மார்வெனே பெருமையுடன் தெரிவிக்கிறார்.

ரஷியாவின் புதிய போர் இயங்திர மனிதர்

ரஷியாவின் அறிவியல் ஆய்வுப் பிரிவு அண்மையில் போரில் ஈடுபடும் வகையில் இயங்திர மனிதரை ஆய்ராய்ந்து தயாரித்துள்ளது. அதன் போர்த் திறன் மனிதனின் போர்த் திறனுக்குச் சமமாக இருக்கும். எதிர்காலத்தில் ரஷியா உயர் நிலை அறிவியல் தொழில்நுட்பத்தை முக்கியமாகக் கொண்டு இராணுவத்தை வளர்க்கும் என்று ரஷியாவின் அரசுத் தலைவர் புத்தின் இந்த இயங்திர மனிதரை முதல் முறையாகப் பார்வையிட்ட போது தெரிவித்தார்.
ரஷியாவின் அறிவியல் ஆய்வுப் பிரிவு அண்மையில் போரில் ஈடுபடும் வகையில் இயங்திர மனிதரை ஆய்ராய்ந்து தயாரித்துள்ளது. அதன் போர்த் திறன் மனிதனின் போர்த் திறனுக்குச் சமமாக இருக்கும். எதிர்காலத்தில் ரஷியா உயர் நிலை அறிவியல் தொழில்நுட்பத்தை முக்கியமாகக் கொண்டு இராணுவத்தை வளர்க்கும் என்று ரஷியாவின் அரசுத் தலைவர் புத்தின் இந்த இயங்திர மனிதரை முதல் முறையாகப் பார்வையிட்ட போது தெரிவித்தார்.

Tuesday, February 10, 2015

மேதாபட்கர் மீத்தேன் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டார்

ஞாயிறு அன்று மேதாபட்கர் மீத்தேன் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டார். அதில் ஒரு பகுதியான தஞ்சை மாவட்டம் நெய்குன்னத்தில் ஏற்பாடுகளை புதிய மன்னர்கள் சார்பில் செய்யப்பட்டுருந்தது.
ஞாயிறு மாலை நெய்குன்னம் வந்த மேதாபட்கர் மீத்தேன் திட்ட ஆய்வு பனியின் போது அதிர்வில் சோழர் காலத்து சிவன் கோவில் மண்டபம் உடைந்திருந்ததையும் கோவிலின் உள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளையும் பார்வையிட்டார். அதன்பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுகையில் அனைவரின் ஆதரவையும் கோருங்கள் ஒரு சில அமைப்புகளால் இத்திட்டத்தினை நிறுத்த முடியாது என்றும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கூறினார். (இதுவரை 366 கிராமங்கள் வரை பரப்புரை செய்துள்ளோம் 2 வருட காலமாக) மேலும் ஒவ்வொரு தகவலையும் ஆவணப்படுத்தல் வேண்டும் என்று கூறினார். அதன் பின்பு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேருரை ஆற்றினார்.... கரம் கோர்க்க 9500796349, 9865713466 விதைகளாய் புதிய மன்னர்கள்