Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, March 20, 2014
மதிமுக வேட்பாளர்கள்:
மதிமுக வேட்பாளர்கள்: விருதுநகர்- வைகோ, காஞ்சிபுரம்- மல்லை சத்யா, ஸ்ரீபெரும்புதூர்- மாசிலாமணி, ஈரோடு- கணேசமூர்த்தி, தூத்துக்குடி- ஜோயல், தேனி- அழகுசுந்தரம், தென்காசி- சதன் திருமலைக்குமார். மதிமுக வேட்பாளர் பட்டியலை வைகோ வெளியிட்டார்.
தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

-------------------------------------------------------------------------------------
தேமுதிக - 14, பாமக-8, மதிமுக-7, கொ.ம.தே.க-1, ஐ.ஜே.கே-1, பா.ஜ.க-8 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் வருமாறு;
-------------------------------------------------------------------------------------
பாஜக: தென் சென்னை, கன்னியாக்குமரி, கோவை, நீலகிரி(தனி), சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர் மற்றும் தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------------------
தேமுதிக: திருவள்ளூர்(தனி), வட சென்னை, மத்திய சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, திருச்சி, கடலூர், விழுப்புரம்(தனி), கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி
-------------------------------------------------------------------------------------
மதிமுக: விருதுநகர், ஈரோடு, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம்(தனி), தேனி, தூத்துக்குடி மற்றும் தென்காசி(தனி)
-------------------------------------------------------------------------------------
பாமக: அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, சிதம்பரம்(தனி), திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கிருஷ்ணகிரி
-------------------------------------------------------------------------------------
கொ.ம.தே.க: பொள்ளாச்சி
-------------------------------------------------------------------------------------
ஐ.ஜே.கே: பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கைதான இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான இரு மனித உரிமை ஆர்வலர்களை அரசு விடுதலை செய்திருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------
அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாகப் போலிசார் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
------------------------------------------------------------------------------------------------------
கத்தோலிகப் பாதிரியார் அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் கடந்த ஞாயிறன்று இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர்.
------------------------------------------------------------------------------------------------------
அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான சந்தேகத்தில் கைதானதாக அதிகாரிகள் கூறினர்.
------------------------------------------------------------------------------------------------------
இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாக தகவல்களை சேகரிக்க சென்றிருந்தபோது கைதாயினர்.
------------------------------------------------------------------------------------------------------
ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------
இலங்கையின் மீது தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
மனித உரிமை விவகாரங்களின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் உத்தேச தீர்மானமானது நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் பக்கச்சார்பானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ICRC உறுப்பினர்கள் ஜெயகுமாரியை சந்தித்தனர்:-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள், பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
இன்றைய தினமும், நேற்றைய தினமும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
------------------------------------------------------------------------------------------------
ஜெயகுமாரியின் நலன் குறித்து சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------
ஏனைய கைதிகளை பார்வையிடுவதனைப் போன்றே ஜெயகுமாரியை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------
ஜெயகுமாரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)