தேசவிரோத கட்சியாகச் செயற்பட்டு தமிழ் மக்களுக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் பெரும் துரோகத்தனங்களைச் செய்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தற்போது தமிழ் மக்களிலும் தமிழரின் வரலாற்றுச் சின்னங்களிலும் அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்து வருகின்றமையானது மோசடியான ஒரு நடவடிக்கை என்று யாழ். குடாநாட்டிலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இசைப்பிரியா தொடர்பில் போர்க்குற்ற காணொளியொன்று வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது.
ஈழ விடுதலைப் போராடத்தை நேரடியாகவே காட்டிக்கொடுத்த ஈ.பி.டி.பி பல போராளிகளின் வீரமரணத்திற்கும் காரணமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஏதோ போராட்டத்தில் பற்றுள்ளவர்கள் போன்றும் கொல்லப்பட்வர்களுக்கு இரக்கம் வெளியிடுபவர்கள் போன்றும் இவர்கள் காட்டிக்கொள்வது தங்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஈ.பி.டி.பி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதன் மூலமே கட்சியைத் தக்க வைக்க முடியும் என்று டக்ளஸ் தேவாநந்தா கருதுவதாகவும் அதன் வெளிப்பாடாகவே தமிழ் மக்களுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவாக கருத்து வெளியிட அவர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆனால், எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து அவர்கள் செயற்பட்டாலும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது என்றும் யாழ்.குடாநாட்டிலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு ஆதரவானதுபோன்ற அறிக்கையொன்றை ஈ.பி.டி.பி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு சங்கிலியன் பூங்கா காணியை வழங்க முடியாது என்று தாங்கள் மறுத்துவிட்டதாக ஈ.பி.டி.பி தெரிவித்திருக்கின்றது.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 7, 2013
மோசடியின் உச்சத்தில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி
தேசவிரோத கட்சியாகச் செயற்பட்டு தமிழ் மக்களுக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் பெரும் துரோகத்தனங்களைச் செய்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தற்போது தமிழ் மக்களிலும் தமிழரின் வரலாற்றுச் சின்னங்களிலும் அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்து வருகின்றமையானது மோசடியான ஒரு நடவடிக்கை என்று யாழ். குடாநாட்டிலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இசைப்பிரியா தொடர்பில் போர்க்குற்ற காணொளியொன்று வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது.
ஈழ விடுதலைப் போராடத்தை நேரடியாகவே காட்டிக்கொடுத்த ஈ.பி.டி.பி பல போராளிகளின் வீரமரணத்திற்கும் காரணமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஏதோ போராட்டத்தில் பற்றுள்ளவர்கள் போன்றும் கொல்லப்பட்வர்களுக்கு இரக்கம் வெளியிடுபவர்கள் போன்றும் இவர்கள் காட்டிக்கொள்வது தங்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஈ.பி.டி.பி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதன் மூலமே கட்சியைத் தக்க வைக்க முடியும் என்று டக்ளஸ் தேவாநந்தா கருதுவதாகவும் அதன் வெளிப்பாடாகவே தமிழ் மக்களுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவாக கருத்து வெளியிட அவர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆனால், எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து அவர்கள் செயற்பட்டாலும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது என்றும் யாழ்.குடாநாட்டிலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு ஆதரவானதுபோன்ற அறிக்கையொன்றை ஈ.பி.டி.பி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு சங்கிலியன் பூங்கா காணியை வழங்க முடியாது என்று தாங்கள் மறுத்துவிட்டதாக ஈ.பி.டி.பி தெரிவித்திருக்கின்றது.
சமையல் கியாஸ் விலை ரூ.10 உயரும்: டீசல் விலை மாதம் தோறும் ஒரு ரூபாய் உயர்கிறது - மத்திய அரசு முடிவு
இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மாதம் தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்துள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 11 இழப்பு ஏற்படுகிறது.
அது போல சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ. 555 வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு டீசல், சமையல் கியாஸ் விலையை உடனே அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மாதம் தோறும் டீசல் விலை 50 காசு உயர்த்தப்படுவதை இனி ஒரு ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 10 வரை அதிகரிக்க மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிக அதிக அளவில் இருக்காது. சிறிய அளவிலேயே உயர்த்தப்படும்’’ என்றார்.
மத்திய அரசு பெட்ரோலியம் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது. இந்த தொகை முழுவதும் படிப்படியாக மக்கள் தலையில் சுமத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல்: 5 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டி
அறிக்கையில்,"ஜங்க்புரா தொகுதியில் சிவா; வசீர்பூர் தொகுதியில் ஈஸ்வரி; ஜனக்புரி தொகுதியில் சொர்ணம்; புதுடில்லி தொகுதியில் மணி; கல்காஜி தொகுதியில் ராமு போட்டியிடுவர். டில்லி மாநில நிர்வாகிகள் அயராது உழைத்து இவர்களுக்கு வெற்றித்தேடி தர வேண்டும். பொதுமக்களுக்கு, தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
போதும்ப்பா... நிறுத்து!' பொதுக்கூட்டத்தில் ராகுலை இடைமறித்த பஞ்சாயத்து தலைவர்
ஜம்மு:ஜம்முவில், காங்., துணை தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது, அவரை இடைமறித்து பேசிய, பஞ்சாயத்து தலைவர் ஒருவர், ''போதும் நிறுத்துங்க... மாநில அரசு, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை. முதலில் அதிகாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள்,'' என, பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Posts (Atom)