Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 9, 2014

ரூ500 கோடியில் களம் இறக்கப்படும் ஜப்பான் நிறுவனம்!ராகுல் 'இமேஜ்' பில்டப்புக்காக

ஒப்பற்ற தலைவராக்க வியூகம் நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல் மீதான இந்த விமர்சனத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றவும் ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. டென்ட்சு இந்தியாவுடன் ஒப்பந்தம் இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்தியா (Dentsu India) என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ500 கோடி ராகுலின் இமேஜ் பில்டபுக்காக இந்நிறுவனத்துடன் ரூ. 500 கோடிக்கு ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது என்ன செய்யும் டென்ட்சு இந்தியா? இந் நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்குமாம். புதிய கோஷம் "சாமானியனுக்கும் அதிகாரம்' என்பதை தேர்தல் முழக்கமாக அறிவிக்கவும் இந்த நிறுவனம் காங்கிரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ராகுலுக்காக சர்வே மேலும் ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும் வகையில் இருக்க, இந்த நிறுவனம் சர்வேயும் நடத்தி வருகிறது. அனேகமாக பிப்ரவரி முதல் ராகுல்காந்தியின் புதிய கோணத்தை எதிர் பார்க்கலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆம் ஆத்மி அலுவலகம் சூறை; பாரதீய ஜனதா மீது பிரசாந்த் பூஷன் கடும் தாக்கு, பாதுகாப்பை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பின் போது, காஷ்மீரில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ராணுவம் தேவையா இல்லை வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனைக்குரிய கருத்துக்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பூஷனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை சிலர் தாக்கினர். அவர்கள் கட்சியின் அலுவலகத்தை செங்கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியுள்ளனர். கட்சியின் தொண்டர்களையும் தாக்க முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்து ரக்‌ஷா தளத்தை சேர்ந்தவர்கள் என பேனர்களை ஏந்தியவாறு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சுமார் 35 பேர் வந்தனர். அவர்கள் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக கடும் கோஷம் எழுப்பினர். அவர்க ளே தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு மீது கற்களை வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டருகே வாழ்க்கை

காஷ்மீரைப் பிரிக்கும் கட்டுப்பாட்டுக்கோடு உலகில் மிகவும் அதிக அளவில் ராணுவ மயமாக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் ஒன்று. இந்த 740 கிமீ நீளமுள்ள கட்டுப்பாட்டுக்கோட்டின் இந்தியப் பகுதியின் நெடுகே புகைப்படச் செய்தியாளர் அபிட் பட் பயணம் செய்து, அப்பகுதி மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தனித் தனி நாடுகளாக இருக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்தக் கட்டுப்பாட்டுக் கோடு, இரு நாடுகளிடையே மோதலுக்குக் காரணமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய மூன்று போர்களில், இரண்டு , காஷ்மீர் தொடர்பானவை -- முதலில் 1947-48லும், பிறகு இரண்டாவது முறையாக 1965லும் இந்த மோதல்கள் நடந்தன. ஆனாலும் இந்தப் போர்கள் ஒரு தீர்க்கமான முடிவைத் தராததால், 1971ல் மீண்டும் போர் மூளும்வரை , இருக்கும் நிலையே நீடித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பின்னர் இரு தரப்பினருக்குமிடையே 1972ல் ஏற்பட்ட உடன்பாடு ஆகியவைகளை அடுத்து கட்டுப்பாட்டுக் கோடு உருவானது.
இரு அண்டை நாடுகளுக்கிடையே இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சமீப மாதங்களில் நடந்த பயங்கர மோதல்கள் காரணமாக இரு நாட்டுறவுகள் மேலும் பாதிக்கப்பட்டன. இந்த வன்முறையில் இரு தரப்பிலும் பல படையினர் கொல்லப்பட்டனர். ஆகஸ்டில் ஐந்து இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்தக் கட்டுப்பாட்டுக் கோடு, காடடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் அணுகமுடியாத நிலப்பரப்பு ஊடாகச் செல்கிறது. சில இடங்களில் ஒரே கிராமத்தை இரண்டாக இந்தக் கோடு பிளக்கிறது.
பாகிஸ்தானத் தரப்பிலிருந்து ஊடுருவலைத் தடுக்க இந்தியா 2004ல் கட்டிய முள்வேலி. அவ்வப்போது இரு தரப்புகளும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடும். ஆனால், 2013ல்தான் துப்பாக்கிச் சூடு மிகவும் கடுமையாக இருந்தது.
சர்ச்சைக்குரிய இந்த எல்லைப்புறத்தின் நெடுகே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன
ஆனால் எல்லை ஊடாக நடக்கும் ஷெல்லடித் தாக்குதல்கள் இங்கே ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்திருக்கின்றன.யூரி நகரில் வரிக்கும் ( படத்தில் காணப்படும்) இர்ஷாத் அஹ்மத் போன்ற உள்ளூர் மக்கள் இந்த ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர்.
கட்டுப்பாட்டுக் கோட்டருகே திறந்த வெளிப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார் சைய்மா சால்க்கோ. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக தாங்கள் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்ததாகக் கூறுகிறார் அவர்.

"இந்தியாவில் இருக்கும் தன் நாணயங்களைக் கொண்டுவர இலங்கை முயற்சி"

இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்தற்போது புத்தகயாவிலுள்ள ஆலய நிர்வாகத்தினருடன் மத்திய வங்கி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் கூறுகிறார். இந்த நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியளிப்பதைத் தவிர புத்தகயாவிலுள்ள ஆலயத்தினரால் ஏதும் செய்ய முடியாது என்று தமாரா விஜேசூரிய கூறுகிறார். இந்நிலையில் இந்தியத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையர்களை, இந்திய நாணயங்களையே காணிக்கையாக செலுத்த பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கா "தொடர்ந்து கவலை"

அமெரிக்க அரசு இலங்கையில் , போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்பு சுமத்துவதிலும், நல்லிணக்கத்தை எட்டுவதிலும் போதிய முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும் நிலை குறித்து தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் கூறினார். சுமந்திரன் பேட்டி 'போர்க்குற்ற விசாரணைகோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்' போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப், நேற்று, செவ்வாய்க்கிழமை , இலங்கைக்கு தனது விஜயத்தைத் தொடங்கிய நிலையில், அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திய சந்திப்பில், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் , இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் , ஒரு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்று கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஒருவர், இலங்கையில் பல்வேறு மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடப்பதாகக் கூறப்படும் நில அபகரிப்புகள், மத ரீதியான நோக்கமுடைய தாக்குதல்கள் , ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகள் விசாரித்துத் தீர்வு காணப்படாதது, ஆகியவைகள் காரணமாக, ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று தங்களைக் கணிக்க வைத்திருப்பதாக அவர் கூறினார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு சுமத்தும் வழிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் அமெரிக்கா , 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் , ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் , மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் கொண்டுவரும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

"சர்வதேச அழுத்தம் என்பது எறும்புக் கடி போன்றது' ஸரீபன்ரெப்ற்கு சவால் விடுத்துள்ள மகிந்த – கோத்தா

இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஸரீபன்ரெப்பிற்கு சவால் விடுக்கும் அல்லது அவமதிக்கும் நடவடிக்கைகளாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப் பயனத்தை ஆரம்பித்தார். மறுமுனையில் ஸரீபன்ரெப் இலங்கையில் இருக்கும் போதே வடக்கில் புதிய இராணு முகாம் திறப்பு, படையினரை பலப்படுத்தல், முகாம்களுக்கான பயணங்களும் கலந்துரையாடல்களும் என வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்}ச மேற்கொள்கின்றார்.
கடந்த காலங்களிலும் சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கும் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி பறந்து செல்வது வழமையான நடவடிக்கையாகவே அமையும். இம்முறை அமெரிக்காவுக்கு ஒரு செய்தியாக அந்நாட்டின் பிரதிநிதி இலங்கையில் இருக்கும் போதே இராணுவமுகாம் திறப்பு உள்ளிட்ட படைத்தரப்பு நடவடிக்கைகரள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்ச மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் சர்வதேச அழுத்தம் என்பது எறும்புக் கடி போன்றது' என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் என்கின்றனர் அவதானிகள்.யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை பயணம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்ச புதிதாக அமைக்கப்பட்ட இரானுவ முகாம்களைத் திறந்து வைத்துள்ளார்.
இதற்கமைய இன்று காலை விசேட விமானம் முலமாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஐபக்ச கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு இரானுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் இரானுவ நிலைமைகளையும் பார்வையிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து யாழிற்கு பயணம் மேற்கொண்ட பாதுகாகப்பு செயலாளர் ஏ 9 வீதியின் மிருசுவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரானுவத்தின் 52 ஆவது படைத் தலைமையகத்தையும் திறந்த வைத்தார்.அத்தோடு அங்குள்ள இரானுவ நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் இரானுவத்தின் முகாம்களையும், பார்வையிட்டதுடன் குறித்த முகாம் தொடர்பாகவும் மாவட்டத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். தோடர்ந்து இராணுவ வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார்.
இதன் போது மாகாண ஆளுநர் சந்திரசிறி இரானுவத் தளபதி மற்றும் மாவட்ட இரானுவத் தளபதி உள்ளிட்ட இரானுவ அதிழகாரிகள் தளபதிகள் எனளப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

திருநெல்வேலியில் உயிர்வலி ஆவணப்படம் திரையிடப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டமனைக் கைதியாக உள்ள பேரறிவாளனின் வாழ்க்கை வரலாறு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான விடயங்கள் உள்ளடங்கிய உயிர் வலி ஆவணப்படம் நேற்றைய தினம் தமிழ்நாடு திருநெல்வேலியில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆய்வாளர் தொ. பரமசிவன், பேராசிரியர் அறிவரசன், எழுத்தாளர் , தி.கா.சிவசங்கரன், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மரண தண்டனை முற்றாக நீக்கப்படவேண்டியது எனவும் பேரறிவாளவன், சாந்தன், முருகன் உள்ளிட்டவர்களை காப்பாற்றுவது என்பது நியாயத்தை காப்பாற்றும் செயலெனவும் தெரிவித்தனர்.

புத்தரும் புதிய இராணுவமுகாமும்

இராணுவமுகாங்களை குறைக்கிறோம், பின் வாங்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு இராணுவமுகாங்களை இலங்கை அரசு விஸ்தரித்துக்கொண்டே செல்லுகிறது. ஈழத் தமிழர்களின் நிலத்தில் இன்று இன்னொரு இராணுவமுகாம் திறக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மிருசுவிலில் இந்த இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. மிருசுவில் யுத்த எல்லையாக இருந்த இடம். பல சமர்களையும் பல அபகரிப்புக்களையும் பல இராணுவமுகாங்களையும் சந்தித்த பகுதி. இன்று இந்தக் கிராமத்திற்கு இன்னொரு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவமயம் நீங்காது என்பதை சொல்லும் ஒரு சமீக்ஞையே இது. ஒரு இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் அக் கிராமத்தின் சுதந்திரமே பறி போகிறது. பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இளைஞர்கள் யுவதிகள் அஞ்ச வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த சனங்களும் எப்போதும் எதுவும் நிகழலாம் என்கிற அச்ச சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் அங்கு ஜனநாயகமும் அமைதியும் இல்லாமல் அச்சமும் பதற்றமும் மேலோங்கும். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இராணுவ முகாங்களதான் ஜனநாயகத்தையும் அமைதியையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக பிரசாரம் செய்யப்படுபவை. இராணுவ முகாங்களை விட்டு வெளியேறுகிறோம். பின்வாங்கிக் கொள்கிறோம் என்றெல்லாம் இலங்கை இராணுவம் கடும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றது. இந்தப் பிரசாரங்களை செய்து கொண்டே தற்காலிக முகாங்களை நிதரந்தர முகாமாக மாற்றி தமிழர் மண்ணில் நிரந்தரமாக காலூன்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இராணுவத்தின் தலையாய பணிகளில் ஒன்று புத்தர் சிலைகளும் நடுவதும் கூட. மிருசுவில் பகுதியில் திற்கப்பட்ட பாரிய இராணுவமுகாமில் புத்தர் சிலை ஒன்றையும் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய திறந்து வைத்திருக்கிறார். இராணுவமுகாமுக்கும் புத்தர் சிலைக்கும் உள்ள தொடர்பை இந்த நிகழ்வு காட்டுகிறது. வடக்கு கிழக்கு எங்கும் இராணுவமுகாங்களையும் புத்தர் சிலைகளையும் பெருக்கும் நடவடிக்கையிலேயே இலங்கை அரசு யுத்தம் முடிந்த கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் சாதனையாகச் செய்திருக்கிறது. அதுவே ஈழத் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் படைச் செயற்பாடாகத் தொடர்கிறது. இராணுவமே வடக்கு கிழக்கை விட்டு வெளியேறு என்று தமிழர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையை தீரப்பதன் முதல் அடியெனப்படுவது இராணுவ முகாங்களை அகற்றிக்கொண்டு இராணுவம் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறுவதில்தான் தொடங்குகிறது. தொடர்ந்தும் மக்களின் நிலங்கள் இராணுவமுகாமுக்காக அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கில் மாத்திரமல்ல மிருசுவிலும் அபபகரிப்போம் என்பதை கோத்தபாய புதிய ஆண்டில் செய்தியாகச் சொல்கிறார். வடக்கு கிழக்கின் நிகழ்காலத்தை மாத்திரமல்ல எதிர்காலத்தையும் வெளிப்படையாக அறிவிக்கின்றன புத்தரும் புதிய இராணுமுகாமும்.