Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 31, 2014
இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு; "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்"
பொதுத் துறை தனியார் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சனிக்கிழமை காலையில் வெளியிடப்பட்டது.
அக்கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசியச் செயலர் டி. ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் இதனை வெளியிட்டனர். தேசிய அளவிலான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்கென பிரத்யேகமான அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
------------------------------------------------------------------------------------
குறிப்பாக, நதி நீர் இணைப்பு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா, மேம்பட்ட அரசு நிர்வாகம், அனைவருக்கும் வீடு, நீதிமன்றங்களில் தமிழ் போன்ற அம்சங்களை இந்த அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------
தமிழகத்தின் நிரந்தப் பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை நீடித்துவரும் நிலையில், தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
அதேபோல, இந்தியாவின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் இக்கட்சியின் அறிக்கை வலியுறுத்துகிறது.
------------------------------------------------------------------------------------
தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் பெற்ற இடஒதுக்கீட்டின் வரம்பு சுருக்கிவருவதால், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
ஐ.ஐ.டி.,ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் எடுக்கப்பட்ட 'இனம்' படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.
--------------------------------------------------------------------------------------------------------
உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------------
அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் இன்று முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.
-------------------------------------------------------------------------------------------------------
இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்' என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கேட்க வேண்டாம் - ஜனாதிபதி
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு கேட்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------
அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் உத்தேசம் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் -
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, வட அமெரிக்க தமிழ்;ச்சங்கம், இலங்கை தமிழ் சங்கம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் தமி;ழ் அரசியல் செயற்பாட்டு பேரவை, உலகத் தமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இதனைத் தெரிவித்துள்ளன.
=---------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், யுத்தம் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளன.
=---------------------------------------------------------------------------------------------------
வடக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் தீர்மானத்தில் உரிய முனைப்பு காட்டப்படவில்லை என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)