Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, December 11, 2013

மதுரை காமராஜர் பல்கலைக்கு காலவரம்பற்ற விடுமுறை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் 8வது நாளாக தொடர்ந்தது. இதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கேரள அரசைக் கண்டித்து டிசம்பர் 14ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கோவையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அட்டப்பாடி தமிழர்களை வெளியேற்றும் கேரள அரசின் செயலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கேரள முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 250 தமிழக மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!!

: கோடியக்கரை அருகே மீன்பிடித்ததுக் கொண்டிருந்த 250 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அட்டூழியம் செய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் நேற்று முன் தினம் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 6 இலங்கை கடற்படை கப்பல்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களுடன் 35 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. ஒரே நாளில் 250 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

இன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள்... தெரியுமா?

சென்னை: மகாகவி பாரதியாரின் 131 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.... என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11. தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதி. அவரது 131 வது பிறந்த நாளை பிறந்த நாளை தமிழக அரசு இன்று கொண்டாடியது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியின் திரு உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அரசு தலைமை கொறடா, சென்னை மாநகர மேயர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பத்திரிக்கையாளர்கள் தினம் மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கொண்டாடியது. இதனையொட்டி சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், நடிகர் எஸ்.வி. சேகர், திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலரும் கடற்கரை சாலையில் உள்ள பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு மகாகவி பாரதியாரின் பாடல்களையும் பாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் அவர் வசித்த பகுதியில் ஒரு மணிமண்டபம் கட்டவேண்டுமென்றும் பாரதியாரின் பிறந்த தினத்தை பத்திரிகையாளர்களின் தினமாகக் கொண்டாடவேண்டும் எனவும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

பேரறிவாளன் மனு தள்ளுபடி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்நோக்கு விசாரணை முகமையை கண்காணிக்கக் கோரிய தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெறப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனு விவரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதித் திட்டங்களை விசாரணை செய்வதற்காக சிபிஐயின் சிறப்பு புலனாய்வு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை கால தாமதமாக நடைபெறுவதால் நான் பாதிக்கப்பட்டு வருகிறேன். சிபிஐ நடத்தும் இந்த விசாரணை முறையாக நடைபெற்றால் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளியே வரும். இது தவிர, பெயர் குறிப்பிடாத சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதால் விசாரணை சரியாக நடைபெறவில்லை. விசாரணை செய்யப்படாதவர்களை விசாரணை செய்ய வேண்டும். பல்நோக்கு விசாரணை முகமையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி என்.தண்டபாணி முன்பு செவ்வாய்க்கிழமை (டிச.10) விசாரணைக்கு வந்தது. அதை நீதிபதி விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிங்கப்பூர் விபத்தில் பலியானது புதுக்கோட்டை வாலிபர்! கணவன், மகள் தற்போது மகனா! தாய் கதறல்!

சிங்கப்பூரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தேக்காவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் ஒன்று சேர்வது வழக்கம். அதன்படி அன்று இரவு பேருந்தில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு விபத்துக்குள்ளாகி பலியானார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர் யார் மற்றும் கைதானவர்கள் யாரென உடனே தெரியவராததால் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த தகவல் மூலம் இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ச. குமாரவேல் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாய் ராஜலெட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீகம்பட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களது மகன்கள் குமாரவேல்(33), ரமேஷ்(25) அதிமுக கிளைச் செயலர். மகள் மகேஸ்வரி. இதில் 2007-ல் சக்திவேல் இறந்துவிட்டார். குடும்ப பொருளாதார நெருக்கடியினால் தொழில் கல்வி முடித்திருந்த குமாரவேல் அதே ஆண்டில் சிங்கப்பூருக்கு வெல்டர் பணிக்கு சென்றார். சில ஆண்டுகள் சிங்கப்பூரிலும், சில ஆண்டுகள் ஊரிலுமாக இருந்த குமாரவேல் 3-வது முறையாக 2011-ல் 3-வது நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மே மாதம் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவரது சகோதரி மகேஸ்வரி தனது கணவருடன் கேரளாவில் திருச்சூரில் தங்கியிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தனியாக இருந்த மகேஸ்வரியை கொலை செய்துள்ளனர். திருமணமாகி 3 மாதத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த குமாரவேல் 10 நாள்கள் இருந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். மகள் இறந்து 4 மாதங்களில் மகனும் இறந்தது குறித்து கதறி அழுத அவரது தாய் ராஜலெட்சுமி கூறியதாவது, நாங்கள் ஓணாங்குடி அருகேயுள்ள மறமடக்கி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்ததால் எங்கள் வீடு அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகுதான் எங்களுக்கு சத்திரம் பகுதியில் அரசு இடத்தில் வீட்டுமனை கொடுத்தார்கள். எனது கணவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னவே இறந்துவிட்டார். என் மகன் கஷ்டப்பட்டுத்தான் மகள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்தோம். 4 மாதத்துல மகளும் இறந்துட்டா. இப்ப ஏன் மகனையும் இழந்துட்டேன். தமிழக அரசுதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றார். பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்று அங்கு விபத்தில் குமாரவேல் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களிடம் தேமுதிக மீதான நம்பிக்கை போய்விட்டதாக நினைக்கிறீர்களா? பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக அவைத்தலைவர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதனையொட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது திடீர் முடிவு இல்லை. திட்டமிட்ட ஒரு முடிவுதான். பொதுவாக அனைத்து தொழில்களிலும் ஓய்வு என்பது உண்டு. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஓய்வு வயது என்பது கிடையாது. எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரசியலில் சாகும்வரை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் நாம் எந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் அந்த பொறுப்பை முழுமையாக நிறைவேற்றக்கூடிய சக்தி நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் இருந்து பயனில்லை. ஒரு எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என்றால் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டும். எல்லாருக்கும் உதவியாக இருக்க வேண்டும். அதுபோல் கட்சியில் ஒரு பொறுப்பில் இருக்கிறோம் என்றால் சுறுசுறுப்பாக எல்லா இடத்திற்கும் போகணும் வரணும். எனக்கு வயது ஆகிட்டே போகுறதால எனக்கு முடியல. தனிப்பட்ட முறையில் உடல் மூலம் செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியவில்லை. வயது 77 ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மெடிக்கல் செக்கப் பண்ணினேன். டாக்டர் என்ன சொல்றார் என்றால் இனி ரொம்ப ஆக்டிவா இருக்க வேண்டாம். குறிப்பாக பாலிக்டிக்ஸ்ல ரொம்ப டென்ஷன் இருக்கும் என்று சொன்னார். இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஞாயிற்றுக்கிழமையே முடிவு பண்ணிட்டேன். ஆனால் அன்றைக்கு எலக்க்ஷன் ரிசல்ட்டா இருந்தது. திங்கள்கிழமை புது எம்எல்ஏ பதவிப்பிரமாணம் இருந்தது. அதனால்தான் இன்னைக்கு போயிட்டு வந்தேன். கேள்வி: தேமுதிக தலைவரிடம் ராஜினாமா செய்வதாக எப்போது சொன்னீர்கள்? பதில்: அவரிடம் உடம்பு சரியில்ல என்பதை மட்டும்தான் சொன்னேன். ராஜினாமா செய்வதா சொன்னா அவர் எப்படி ஒத்துக்குவாரு. அப்புறம் அவங்க நெருக்கடி கொடுப்பாங்க ராஜினாமா பண்ணாதீங்கன்னு. அதுக்காக அவருக்கிட்ட சொல்லல. கேள்வி: இதுக்கு முன்னால் நெருக்கடி ஏதும் இருந்ததா? பதில்: அப்படி எதுவும் இல்லை. கேள்வி: ஏற்கனவே தேமுதிக எம்எல்ஏக்கள் 7 பேர் விலகிவிட்டார்கள். தற்போது நீங்கள் விலகியதால் தேமுதிகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? பதில்: 7 பேர் இன்னும் விலகவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் நான் விலகியதால் பெரும் பாதிப்பு இருப்பதாக நினைக்கவில்லை. கேள்வி: உங்களுக்கும், விஜயகாந்த்துக்கும் கருத்து வேறுபாடு ஏதாவது இருந்ததா? பதில்: கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. கேள்வி: உடல்நிலையை காரணம் காட்டுகிறீர்கள். மூத்த வயதுடையவர்கள் இன்னும் அரசியலில் இருக்கிறார்கள். உடல்நிலையை காரணம் காட்டி அரசிய-ல் இருந்து வெளியேறினால் உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? பதில்: மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அதனால்தான் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன். அங்கு தேர்தல் வந்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அந்த வாய்ப்பு மக்களுக்கு உண்டு. என்னைவிட வயதானவர் யார்? கலைஞர்தான் இருக்கிறார். அவர் இந்தவயதிலும் அரசியலில் இருப்பது அனைவரும் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றுதான். கேள்வி: தற்சமயம் தேமுதிகவின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? பதில்: எனக்கு திருப்தி அளிக்கிறதா என்பது முக்கியமில்லை. மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். கேள்வி: எம்.ஜி.ஆர். தலைமையிலும் செயல்பட்டிருக்கிறீர்கள். விஜயகாந்த் தலைமையிலும் செயல்பட்டிருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். பதில்: அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்பது வேற. கேள்வி: தேமுதிக எம்எல்ஏக்களின் செயல்பாடு சட்டசபையில் எப்படி இருக்கிறது? பதில்: அதையெல்லாம் நீங்களே நிறைய எழுதிகிட்டு இருக்கிறீர்களே. அதில் நான் வேற என்ன சொல்லணும். அவர்கள் இப்போதுôன் முதல் முறையாக சட்டசபைக்கு வந்திருக்கிறார்கள். போக போக அவர்கள் அனுபவத்தை பெற்று திறமையாக பணியாற்ற விரும்புகிறேன். கேள்வி: உங்களுடைய வாரிசுகளை அரசிய-ல் கொண்டுவர திட்டமிட்டுள்ளீர்களா? பதில்: இல்லை கேள்வி: உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? பதில்: அடுத்தக்கட்ட நடவடிக்கை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மனதை நிம்மதியாக வைத்துக்கொள்வதுதான். கேள்வி: டெல்லி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அது நான் அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். அவர் தலைவர் என்ற முறையில் முடிவு எடுத்தார். கேள்வி: எதனால் வேண்டாம் என்று சொன்னீர்கள்? பதில்: ஓட்டு வராது என்பதால்தான். கேள்வி: இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள்தான் நீங்கள் கட்சியில் இருந்து விலக காரணமா? பதில்: இல்லை. ஏற்காடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். டெல்லியில் என்ன காரணத்தினாலோ போட்டி போட்டார்கள். அங்கு ஓட்டு கிடைக்காது என்றுதான் நான் சொன்னேன். கேள்வி: உங்கள் விலகலை மையமாக வைத்து என்ன பேசப்படுகிறது என்றால், அதிமுக - தேமுதிக உறவு முடிந்த பிறகு நீங்கள் இந்த முடிவு எடுத்ததாக கருத்து நிலவுகிறதே. பதில்: அது அப்பவே முடிஞ்சுபோச்சே. சட்டசபையிலேயே. கேள்வி: அதிமுகவில் இருந்து ஒருவேளை அழைப்பு வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? பதில்: ஏங்க நான்தான் அரசியலைவிட்டே ஓய்வு பெறுவதா சொல்றேன். நீங்க ஏதாவது ஒரு கட்சில சேர்த்துவிட நினைக்கிறீங்க. கேள்வி: அண்ணா காலம் முதல் விஜயகாந்த் காலம் வரை அரசியலில் பணிபுரிந்துள்ளீர்கள். உங்களை கவர்ந்த தலைவர் யார்? பதில்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் எனக்கு எல்லாம். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் இல்லை என்றால் நான் இல்லை. கேள்வி: தேமுதிகவில் இருந்து விலகிவிட்டீர்கள். விஜயகாந்த்துக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன? பதில்: அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவருக்கே எல்லாம் தெரியும். கேள்வி: இந்த முடிவு மறுபரிசீலனைக்கு உரியதா? பதில்: இல்லை. அதுதான் ராஜினாமா செய்துவிட்டேனே. கேள்வி: தேமுதிக குடும்ப கட்சியாக ஆகிவிட்டதா? பதில்: எல்லா கட்சியுமே அப்படிதான் ஆகிவிட்டது. குடும்ப கட்சிகள்தான் இந்தியாவில்தான் அதிகம் இருக்கிறது. கேள்வி: விஜயகாந்த்தை சந்திக்க உங்களுக்கு இடையூறு இருந்ததா? பதில்: இல்லை. நான் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்துப்பேசுவேன். எந்தவிதமான தடைகளும் இருந்ததில்லை. கேள்வி: தேமுதிக எம்எல்ஏக்களுக்கும், தொண்டர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன? பதில்: அதில் இருந்து வந்துவிட்டேன். இனி கருத்து சொல்ல என்ன இருக்கு. கேள்வி: தேமுதிக ஆரம்பிக்கும்போது இது ஒரு மாற்று அணியாகவும், மாற்று கொள்கையாகவும் செயல்படுவோம் என்று விஜயகாந்த் சொன்னார். அந்த வார்த்தைக்கு உண்மையாக அந்த கட்சி இருந்ததா? மற்ற கட்சிகள் போன்று மாறிவிட்டதா? பதில்: ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. எங்கு போனாலும் மக்கள் நம்பினார்கள். எப்படியும் ஒரு மாற்று ஏற்பாடாக வரும் என்று. நடைமுறையில் அந்த கட்சியினுடைய செயல்பாட்டில் அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. கேள்வி: மக்களிடம் தேமுதிக மீதான நம்பிக்கை போய்விட்டதாக நினைக்கிறீர்களா? பதில்: குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். கேள்வி: அதை மீட்க முடியும் என்று நினைக்கிறீர்களா? பதில்: அதை அதன் தலைமை தான் மீட்க வேண்டும். கேள்வி: அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும், உங்களுக்கு தேமுதிக தலைமை மதிக்கவில்லை. உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதால்தான் விலகல் முடிவை எடுத்ததாக சொல்கிறார்களே? பதில்: அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். என்னை பொறுத்தவரை நான் எப்போது வேண்டுமானாலும் தலைமையை சந்திப்பேன். என்னுடைய கருத்தை சொல்வேன். சிலவற்றை ஏற்பார். சிலவற்றை ஏற்கமாட்டார். அது தலைவருக்கு உரிய உரிமை. அதை நாம் குறைசொல்ல முடியாது. என்னை பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அவமரியாதையும் கிடையாது. கேள்வி: உங்களைப்போல வேறு எந்த தேமுதிக உறுப்பினரும் இந்த முடிவை எடுப்பார்களா? பதில்: அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு பேட்டி அளித்தார்.

சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் மலேசியாவில் இன்று தொடக்கம்: சாய்னா சாதிப்பாரா?

சூப்பர் சீரிஸ் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விளையாட முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே தகுதி பெற முடியும். இதன்படி இந்த ஆண்டுக்கான சூப்பர் சீரிஸ் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான பரிசுத்தொகை ரூ.3 கோடியாகும். பெண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகளில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவாலும் ஒருவர். வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி ‘பி’ பிரிவில் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சூய் ருய் (சீனா), மினட்சு மிதானி (ஜப்பான்), யோன் ஜீ பாவ் ( தென்கொரியா) ஆகியோரும், ‘ஏ’ பிரிவில் ஷிசியான் வாங் (சீனா), போர்ன்டிப் (தாய்லாந்து), ஜி யுன் சங் (தென்கொரியா), ஜூ யுங் தைய் (சீனத்தைபே) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவருடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் மினட்சு மிதானியுடன் மோதுகிறார். மிதானியுடன் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள சாய்னா அதில் 3-ல் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஒரு பட்டத்தை கூட வெல்லாத சாய்னா நேவால், கவுரமிக்க இந்த போட்டியில் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார். இவரது பிரிவில் அங்கம் வகிக்கும் சீனாவின் சூய் ருய், ஒலிம்பிக் சாம்பியன் மட்டுமின்றி, உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திலும் இருக்கிறார். நடப்பு சாம்பியனும் அவர் தான். ஆனாலும் இந்த தொடரில் தன்னால் சாதிக்க முடியும் என்று சாய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டு, இந்த போட்டிக்கு நன்றாக தயாராகி உள்ளேன். சவாலை சந்திக்க தயாராக இருக்கிறேன். போட்டி அட்டவணை எப்படி அமைந்தாலும், சூப்பர்சீரிஸ் இறுதி சுற்றில் எந்த ஒரு ஆட்டங்களும் எளிதாக இருக்காது. ஆனால் அதற்கு நான் முழு அளவில் தயாராகி இருக்கிறேன். ஒவ்வொரு ஆட்டங்களாக கவனத்தில் கொண்டு, எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார். 2011-ம் ஆண்டு இந்த போட்டியில் சாய்னா 2-வது இடத்தை பிடித்தது நினைவு கூறத்தக்கது.

மன்னாரில் காணாமல் போனவர்களது உறவினர்கள் கண்டன ஊர்வலம்

சர்வதேச மனித உரிகைள் தினமான இன்று செவ்வாய்க்pழமை மன்னார் பிரஜைகள் குழு வின் தலைமையில் மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களுடைய உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினுடன் இணைந்து காணமால் போனவர்களை கண்டு பிடிக்கக்கோரி கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். குறித்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிலும் இடம் பெற்றது. இன்று காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவில் இருந்து குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் தலைவர் ஹேமன் குமார, வாழ்வதற்கான உரிமை அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெனாண்டே,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் ஜே;.பி.சிந்தாத்துரை,அருட்தந்தை எஸ்.நேரு,அருட்பனி எஸ்.டெரன்,மற்றும் காணமால் போன சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் மேலும் குறிக்கிடுகையில்,,, 1990 வன்செயல் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரும் மன்னார் மக்களின் வேண்டுகோள் 1990ம் ஆண்டு வன்செயல் இந்நாட்டில் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரையான 23 வருடகாலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்