Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, September 4, 2015
அன்று இயற்கை அழகு படைத்த ஏரி இன்று கூவம்!
வந்தோரை வாழ வைத்த தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாறு பழமையானது. தென்னிந்தியாவின் வாசலான சென்னை ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள ஆர்மகாம் என்ற சிற்றூரில் தான் ஆங்கிலேயர்கள் வணிகத்தை தொடங்கினார்கள். அந்த இடத்தில் அவர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டதால் சென்னையை நோக்கி நகர்ந்தனர். அப்போது, மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சென்னை ஓர் சிறிய கிராமமாக இருந்துள்ளது. ஆர்மகாம் பகுதி பிரதிநிதியாக சர் பிரான்ஸிஸ் டே இருந்தார். அவர், வணிகத்துக்காக சென்னையில் இடம் தேடி வந்த போது இங்குள்ள கடற்கரையின் மணல் மேட்டுப்பகுதியும், அடையாறு, கூவம், புலிக்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றின் இயற்கை அழகு அவரை வெகுவாக கவர்ந்தது.
-------------------------------------------------------------------------------------------
அந்த சமயத்தில் புலிக்காடு ஏரிப்பகுதியை டச்சுக்காரர்களும், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை போர்ச்சுகீசியர்களும், உள்நிலப்பகுதியான பூந்தமல்லி, திருவல்லிக்கேணி போன்றவற்றை விஜயநகர நாயக்கர்களுக்குக் கீழே கப்பம் கட்டிவந்த சந்திரகிரி சிற்றரசர்களும் ஆட்சி செய்து வந்தனர். போர்ச்சுக்கல்காரர்களுடன் பிரான்ஸிஸ் டே சமாதானம் செய்து நட்புறவு கொண்டார். சந்திரகிரி சிற்றரசருக்கு பணம் கொடுத்து அந்நிலத்தை (இப்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை) முறைப்படி வாங்கிக்கொண்டார். அங்கே ஆங்கிலேயர் சிறு கோட்டை ஒன்றைக் கட்டி தங்கள் வணிகமுகாமை கடந்த 1639ஆம் ஆண்டில் நிறுவினர். ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக அந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் 1644ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. இந்தப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. ஆனால் இன்றைய சென்னை விரிவடைந்து காணப்படுகிறது.-------------------------------------------------------------------------------------------
தென்னிந்தியாவில் நில அளவையாளராகப் பணியாற்றிய ஆங்கில அதிகாரி கிளின் பார்லோ, எழுதிய சென்னையின் கதை என்ற நூல் சென்னையின் வரலாறை கதையாக சொல்கிறது. இதுபோன்று சென்னையின் வரலாறு தகவல்கள் இடம் பெற்றுள்ள பல நூல்கள் உள்ளன. அதில் உள்ள சில முக்கியத்தகவல்கள் இது.
-------------------------------------------------------------------------------------------
யுதர்கள் வணிக செய்த பகுதி பவளக்கார தெருவாக இருந்துள்ளது. அவர்களின் கல்லறைகள் இன்னமும் தங்க சாலை பகுதியில் உள்ளன. வடசென்னையில் காலடிபேட்டை என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் இன்னமும் நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு காலடிபேட்டை என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கவர்னர் கால் என்பவர் நெசவாளர்களை அங்கு குடியமர்த்தி நெசவு தொழிலை செய்ய சொல்லி இருக்கிறார். அவரது நினைவாகவே அந்தப் பகுதிக்கு காலடிபேட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை கறுப்பர், வெள்ளையர் நகரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயேர்கள் கறுப்பர்களின் நகர் பகுதியை காப்பாற்ற கைவிரித்து விட்டார்கள். இதனால் கறுப்பர்கள் தங்களின் கோட்டையை காப்பாற்றவே வரி விதித்துள்ளார்கள். இது தான் வால்டாக்ஸ் சாலை என்ற பெயர் வந்துள்ளது. இதுபோன்று சென்னையில் உள்ள ஒவ்வொரு இடங்களின் பெயர் குறித்த விளக்கம் உள்ளன. சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்ல தமிழக மக்களுக்கு இந்த நூல்கள் ஒரு வரப்பிரசாதம்.தென்னிந்தியாவில் நில அளவையாளராகப் பணியாற்றிய ஆங்கில அதிகாரி கிளின் பார்லோ, எழுதிய சென்னையின் கதை என்ற நூல் சென்னையின் வரலாறை கதையாக சொல்கிறது. இதுபோன்று சென்னையின் வரலாறு தகவல்கள் இடம் பெற்றுள்ள பல நூல்கள் உள்ளன. அதில் உள்ள சில முக்கியத்தகவல்கள் இது.
-------------------------------------------------------------------------------------------
யுதர்கள் வணிக செய்த பகுதி பவளக்கார தெருவாக இருந்துள்ளது. அவர்களின் கல்லறைகள் இன்னமும் தங்க சாலை பகுதியில் உள்ளன. வடசென்னையில் காலடிபேட்டை என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் இன்னமும் நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு காலடிபேட்டை என்ற பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கவர்னர் கால் என்பவர் நெசவாளர்களை அங்கு குடியமர்த்தி நெசவு தொழிலை செய்ய சொல்லி இருக்கிறார். அவரது நினைவாகவே அந்தப் பகுதிக்கு காலடிபேட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை கறுப்பர், வெள்ளையர் நகரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயேர்கள் கறுப்பர்களின் நகர் பகுதியை காப்பாற்ற கைவிரித்து விட்டார்கள். இதனால் கறுப்பர்கள் தங்களின் கோட்டையை காப்பாற்றவே வரி விதித்துள்ளார்கள். இது தான் வால்டாக்ஸ் சாலை என்ற பெயர் வந்துள்ளது. இதுபோன்று சென்னையில் உள்ள ஒவ்வொரு இடங்களின் பெயர் குறித்த விளக்கம் உள்ளன. சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்ல தமிழக மக்களுக்கு இந்த நூல்கள் ஒரு வரப்பிரசாதம்.-------------------------------------------------------------------------------------------
1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.
-------------------------------------------------------------------------------------------
1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------
1835ல் சென்னை மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. 1871ல் சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1876ல் சென்னை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 1888ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப்பான மதராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1900ல் மூர்மார்க்கெட் திறக்கப்பட்டது. 1913ல் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் 4வது மெட்ரோபாலிடன் நகராக விளங்குகிறது. இவ்வாறு சென்னையின் வரலாறை சொல்லிக் கொண்டே போகலாம்.
-------------------------------------------------------------------------------------------
அன்றைய சென்னைக்கும், இன்றைய சென்னைக்கும் வித்தியாசங்கள் பல உள்ளன. தென் இந்திய கட்டட வேலைப்பாடு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழில்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோ மீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இது இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
சென்னை பஸ் நிலையமான கோயம்பேடு பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ் நிலையமாக கருதப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் இது அமைந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கான டாங்குகள் தயாரிக்கப்படுகின்றன.
-------------------------------------------------------------------------------------------
இன்று சாக்கடை ஆறாக ஓடும் கூவம் நதி முதலில் திருவல்லிக்கேணி ஆறு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஆற்றைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரில் புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவிலும், வங்காளத்திலும் வெள்ளையர் ஆட்சியை நிறுவிய ராபர்ட் கிளைவ்வின் திருமணம் மதராசபட்டினத்தில் தான் நடந்தது. சென்னை அந்த காலத்திலேயே முக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது என்று தகவல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.சென்னைக்கு இரண்டாயிரம் வயது என்று அதற்கானச் சான்றுகளை அடுக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாந்தோம் பகுதியில் போர்ச்சுகீசியர்கள் 1520ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர் என்பதும், ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வந்த இடம் என்பதும் வரலாற்று உண்மை. மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வந்த திருஞானசம்பந்தர் "கார்தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்' என்று பாடியுள்ளார். திருமங்கையாழ்வாரோ திருவல்லிக்கேணிக்கு வந்து, பெருமாளை "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்று பாடியிருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------
திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் வாழ்ந்ததும், அவருக்கு சமாதி இருப்பதும், கோவளத்தில் முகமது நபிகளாரின் சஹாபாக்களில் ஒருவர் தங்கியிருந்தார் என்பதும் அவரது தர்கா இருப்பதும் வரலாற்றுக் குறிப்புகள். அறிஞர்கள் டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு, ரா.பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் ஆகிய நூல்களையும், புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாள் குறிப்புகளையும் படித்தால் சென்னையின் வயது புரிந்துவிடும். திருவான்மியூர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம், கோவளம் ஆகியவை அனைத்துமே சில ஆயிரம் ஆண்டுகள் பழைமை கொண்டவைதான்.
-------------------------------------------------------------------------------------------
தண்ணீர்ப் பற்றாக்குறை தீர வெள்ளைக்காரரான எல்லிஸ், ஏழுகிணற்றை தோண்டியுள்ளார். அந்தப்பகுதி இன்று ஏழுகிணறு என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதி இல்லம், சேக்கிழார் பெருமான் வாழ்ந்த குன்றத்தூர், பூந்தண்மலி எனப்படும் பூந்தமல்லி போன்ற பல வரலாற்று சிறப்புக்கள் உள்ளன. சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22, 1639 என கருதப்படுகிறது. இந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் 'சென்னை டே'. இதற்கு வித்திட்டவர்கள் நகர வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா. பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர்.ரேவதி, வி.ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------
அன்றைய, இன்றைய சென்னை புகைப்படங்களை நாம் பார்க்கும் போது அவைகளில் சில பாரம்பரிய கட்டடங்கள் நமக்கு வரலாற்று பாடங்களை கற்றுக் கொடுப்பதாக காணப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், மரங்களுடன் காணப்படும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா, மாநிலக்கல்லூரி, ரிப்பன் பில்டிங், பாரீஸ் கார்னர், கபாலீஸ்வரர் கோயில், சென்னை உயர் நீதிமன்றம், மூர்மார்க்கெட், மன்றோ சிலை, கன்னிமாரா நூலகம், ராயபுரம் ரயில்வே ஸ்டேசன் ஆகியவை நமக்கு வரலாற்றுச் சான்றாகவே காணப்படுகின்றன. சென்னையில் வானூயர கட்டடங்கள் ஆயிரம் வந்தாலும் எல்.ஐ.சி தான் அன்றைக்கு உயரமான கட்டடம். இத்தகைய பெருமையும், வரலாற்றையும் கொண்ட சென்னையின் பாரம்பரியத்தை காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை.
Thursday, September 3, 2015
குளங்களைக் கரைசேர்ப்போம்!
இந்தியாவின் முக்கியமான நீர் ஆதாரங்களான குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது
---------------------------------------------------------------------------------------
குளம் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இடங்களில் வீடு மற்றும் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செப்டம்பர் 6, 2014 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பைக் கூறியுள்ளது.
---------------------------------------------------------------------------------------
இந்தியாவில் ஆற்றுப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னால், விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக ஏரிகளும் குளங்களும் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. குளமும் ஏரிகளும் அளவில் ஆறுகளைவிடச் சிறியனவாக இருப்பதால், இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும். பராமரிப்புச் செலவும் குறைவு. குளங்களின்மூலம் பயிர்ச் சாகுபடி செய்யப்படும் பரப்பு சிறியதாக இருப்பதால், நீர்ப்பகிர்வும் மேலாண்மையும் செய்வது எளிது.
---------------------------------------------------------------------------------------
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளின் முக்கியமான நீர் ஆதாரம் குளங்கள். சிறிய அளவிலான குளங்கள் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்து, நீர் வளத்தைப் பெருக்க முடியும். இத்தனை சிறப்புகள் மிக்க குளங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் என்பதுதான் மிகப் பெரிய துயரம்!
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமங்களின் உதவியுடன் குளங்களைச் சீர்ப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2004-05-ல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், குளங்களைச் சரிசெய்து உபயோகத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு புத்துயிர்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், குளங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும் நிலைதான் தொடர்கிறது!
---------------------------------------------------------------------------------------
காணாமல் போகும் குளங்கள்
---------------------------------------------------------------------------------------
பெரும்பாலான குளங்களும் ஏரிகளும் அமைந்திருந்த இடங்களில் இன்று அரசு மற்றும் இதர கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இன்னும் சில இடங்களில் குளங்கள் சாக்கடை நீரோடைகளாவும், நகராட்சியின் குப்பைக் கிடங்குகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மத்திய நீர்வளத்துக்கான நிலைக் குழுவால் 2012-13-ல்
---------------------------------------------------------------------------------------
சமர்ப்பிக்கப்பட்ட 16-வது அறிக்கை, பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ‘இது வெட்கக் கேடான விஷயமல்லவா?’ என்றும் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சம் சிறிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் வருவாய்த் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
---------------------------------------------------------------------------------------
தலைநகரிலும் இதே கதை!
டெல்லியில் உள்ள---------------------------------------------------------------------------------------
1,012 நீர்நிலைகளில், ஏறக்குறைய 168 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
---------------------------------------------------------------------------------------
குளங்களும் நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுவதால், மழைக் காலங்களில் நீரைச் சேமித்துப் பூமிக்குள் அனுப்ப முடியாமல் போகிறது. இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்கள் தத்தளிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------
மத்திய நீர்வளத் துறையால் வெளியிடப்பட்ட மூன்றாவது குறு நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி (2000-01), இந்தியாவிலுள்ள குளம் மற்றும் சிறிய நீர்நிலைகளின் எண்ணிக்கை 5.56 லட்சம். இவற்றில் 85,000 குளங்கள் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்மையாலும் தற்போது உபயோகத்தில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய 10 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனப் பரப்பளவை நாம் இழந்துவிட்டோம்.
---------------------------------------------------------------------------------------
தொடர் ஆக்கிரமிப்புகள், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால், இந்த நீர்நிலைகள் மூலம் பயன்பெறும் பாசனப் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. 1950-களில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் ஏறக்குறைய 40 முதல் 50% வரை குளங்கள் மூலமாக மட்டும் பல்வேறு மாநிலங்களில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. 1960-61-ல், இந்தியாவில் குளங்கள் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற மொத்தப் பரப்பளவு ஏறக்குறைய 46.30 லட்சம் ஹெக்டேர்கள். தற்போது (2010-11) அதன் அளவு, பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதாவது, 20.40 லட்சம் ஹெக்டேர்களாக!
---------------------------------------------------------------------------------------
தவிக்கும் தமிழகம்----------
ஏறக்குறைய 39,000 குளங்கள் மற்றும் ஏரிகளைத் தன் வசம் கொண்டுள்ள தமிழகத்தில், 1960-61-ல்இவற்றின் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற பரப்பளவு ஏறக்குறைய 9.36 லட்சம் ஹெக்டேர்கள். ஆனால், இந்தப் பரப்பளவு தொடர்ந்து குறைந்து 2011-12-ல் 5.28 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. மழையின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் எனச் சிலர் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல! அரசுத் துறையினால் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, தமிழகத்திலோ, இந்தியா முழுவதுமோ ஆண்டின் மொத்த மழையளவில் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் குறைவு ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் நல்ல மழை பொழிந்த ஆண்டுகளில்கூட, குளங்கள் மூலமாகப் பயன்பெறும் பாசனப்பரப்பு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால், குறைந்துவரும் குளத்துப் பாசனப் பரப்புக்கு, மழை அல்லாத மற்ற காரணங்கள் முக்கியமானவை என்பது தெளிவாகிறது.
---------------------------------------------------------------------------------------
செய்ய வேண்டியது என்ன?
-----------------------------------
தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்திசெய்யப்
பட்டுவருகின்றன. ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது. எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
---------------------------------------------------------------------------------------
தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன. எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றி, நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்
பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம். உலக நீர்தினம் ஆண்டுதோறும் கொண்டாடுவதுபோல, குளங்களின் மகத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் சிறிய நீர்நிலைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.
---------------------------------------------------------------------------------------
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது. எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்.
---------------------------------------------------------------------------------------
- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.
---------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: na_narayana@hotmail.com
Wednesday, September 2, 2015
ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம்
தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனம்தான் பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வரலாற்று நோக்கில் ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம். ஏனெனில், 73 சதவிகிதம் பாறைப்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும் மழை பெய்வது இல்லை. ஆகவே, பெய்யும் மழையைச் சேமித்து வைத்தாக வேண்டிய கட்டாயம், தமிழர்களுக்குப் புவியியல்ரீதியாகவே இருக்கிறது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏரிகளை உருவாக்கி ஏரிப் பாசன முறையில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.
பொதுப்பணித் துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 38,202 ஏரிகள் இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் அழிக்கப்பட்டு, இப்போது சுமார் 18 ஆயிரம் ஏரிகள் மட்டுமே மிச்சம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக ஏரிகளின் சிறப்பு, இதன் சங்கிலித்தொடர் தன்மைதான். ஓர் ஏரி நிரம்பினால் அதில் இருந்து நீர் வழிந்து இன்னொன்றில் நிரம்பும். அதுவும் நிரம்பினால் அடுத்த ஏரி. இப்போது இந்தச் சங்கிலி அறுக்கப்பட்டு ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவை நிரம்புவதும் இல்லை; வழிந்து ஓடுவதும் இல்லை.
மாநிலம் முழுக்க பரந்துபட்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே ஏரியில் நீர் தேங்கி நிற்கும்போது நிலத்தடி நீர்வளம் சீராக இருக்கும். ஏரிக்கரைகளில் நிற்கும் மரங்கள், சூழலைக் குளிர்விக்கும். ஏரியில் நீர் இல்லை; கரையில் மரங்களும் இல்லை என்பதால் நிலத்தடி நீர்வளமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
ஏரிகளுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களும் சிற்றோடைகளும், ‘ஏரி’ என்னும் உடலின் நரம்புகள். இவை மாநிலம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ஓடி, நீரை ஏரிக்குச் சுமந்துவரும். இந்த நரம்புகள் அறுத்து வீசப்பட்டுவிட்டதால், உயிரற்றச் சடலமாகக் கிடக்கிறது ஏரி.
தண்ணீர் வழக்குகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில், குடிதண்ணீர் பிரச்னை அடிதடிகளில் முடிந்து சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒரு பெண்ணுக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் நடந்த தண்ணீர் அடிதடியில் இரண்டு பேருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கீரனூர் அருகே உள்ள வெம்மேனியில் ஏற்பட்ட குடிநீர் மோதலில் ஒருவருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் நடந்த தண்ணீர் மோதலில் ஒரு பெண் காயம் அடைய, ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இவை எல்லாம் காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். இவை போக, நாள்தோறும் மக்களிடையே சச்சரவுகளை உருவாக்கிப் பெரும் மனக்கசப்புகளையும் பகையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு.--------------------------
நீர் பஞ்சத்தின் சாட்சிகள்!-----------------------
கடந்த இரு வாரங்களில் மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நம் அலட்சியத்தை மட்டும் உணர்த்தவில்லை… கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், நமது நீர் பஞ்சத்தின் கொடிய சாட்சிகள். தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறுகள், தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் அப்படியே கைவிடப்பட்டுள்ளன. இப்படி மாநிலம் முழுக்க ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன. ஒரு போர்வெல் தோண்ட, பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போதைய நிலையில் 300 அடி வரைக்கும் தோண்ட ஓர் அடிக்கு 65 ரூபாய். அதன்பிறகு ஒவ்வொரு 100 அடிக்கும் 10 ரூபாய் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதன்படி, ஒரு போர்வெல் அமைக்க சராசரியாக 35,000 ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவழித்துத் தோண்டியும் தண்ணீர் இல்லை என்ற நிலையில் மக்கள் மனம் வெறுத்து, துளையை அப்படியே விட்டுவிடுகின்றனர். வெறும் 50 ரூபாய், 100 ரூபாய் செலவில் அதை மூடிவிட முடியும் என்ற நிலையில், மூடாமல் விடுவது மிகவும் தவறானதுதான். எனினும் இந்தப் பிரச்னையின் ஆணிவேர் தண்ணீர் சிக்கலில்தான் இருக்கிறது!----------------------------
தமிழகப் பொதுப்பணித் துறை, கடந்த மார்ச் மாதத்தில், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்த வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன்படி மாநிலத்தின் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் முந்தைய ஆண்டைவிட 2 மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 6-7 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது!---
தண்ணீர் கண்ணீர்!
ஒரு குடம் நீருக்கு கையேந்தி அலைகிறார்கள் மக்கள். கோடையின் வெப்பம் அதிகரிக்க… அதிகரிக்க… தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகரம், கிராமம் என எந்த வேறுபாடும் இல்லை. ”டவுன்லதான் தண்ணீர் பிரச்னை. கிராமத்துல பரவாயில்லை” என்ற நிலை, பழங்கதையாகிவிட்டது. இட பேதமின்றி எங்கும் வியாப்பித்திருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ மற்றும் இன்னபிற அத்தியாவசியத் தேவைகள் எதற்கும் தண்ணீர் இல்லை. தினசரி குளியல் என்பது குறைந்து, இரு நாள்களுக்கு ஒரு முறை என்று முறைவைத்து குளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். தண்ணீர் சிக்கலின் கோரமுகம் இனியும் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது.
--------------------------------------------------------------------------------------------
நகரங்களில், குடிப்பதற்கு கேன் தண்ணீர்தான் என்பது பல ஆண்டுகளாக மக்களுக்குப் பழகிவிட்டது. இப்போது, வீட்டில் புழங்குவதற்கான நீரைக்கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை. ”நிலத்தடி நீர் ரொம்பக் கீழே போயிட்ட தால எங்க அப்பார்ட்மென்டில் போர்வெல் தண்ணீர் சொட்டுச் சொட்டாத்தான் வருது. அதனால் ரெண்டு, மூணு வருஷமா நாங்க லாரி தண்ணீர் வாங்கித்தான் பயன்படுத்துறோம். 12,000 லிட்டர் கொண்ட லாரி தண்ணீர் 1,200 ரூபாய். இங்கே மொத்தம் 16 வீடுகள் இருக்கு. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் மட்டும் இந்தத் தண்ணீரைத் திறந்துவிடுவோம். ஒரு வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு 1,000 ரூபாய் செலவாகும்” என்கிறார் சென்னை கிழக்கு அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள ஓர் அடுக்ககத்தின் நிர்வாகி ராஜகோபால்.
--------------------------------------------------------------------------------------------
இது நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்ககம் என்பதால், நான்கு மணி நேரம் மட்டும் தண்ணீரைப் பயன்படுத்தி, செலவைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால், பல நவீன அடுக்கங்களில் லாரி தண்ணீருக்கான கட்டணம் மாதம் 2,000 – 3,000 ரூபாயை எட்டிவிடுகிறது. இத்தகைய தனியார் அடுக்ககங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிப்பதற்கு என்றே சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 2,000 தனியார் லாரிகள் இயங்குகின்றன. இதைத் தவிர மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடமும் பணம் செலுத்தி லாரி தண்ணீரை வாங்கலாம்.
--------------------------------------------------------------------------------------------
இப்படி லாரி தண்ணீர் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பது, கோடைகாலத்துக்கான சிறப்பு ஏற்பாடு அல்ல; ஆண்டு முழுவதுமே இது நடைமுறையில் இருக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு இது பிரச்னை இல்லை. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமானது இல்லையே..! மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கி, அதில் 4,000 ரூபாய் வாடகை தந்து, 3,000 ரூபாய்க்கு மளிகை பொருள்கள் வாங்கி, மீதி 3,000 ரூபாயில் மருத்துவம், கல்வி, பெட்ரோல், செல்போன், துணிமணிகள்… என்று விழிபிதுங்கி நிற்போரிடம் தண்ணீருக்கு 1,000 ரூபாய் செலவழிக்கச் சொல்வது அராஜகம். எனில், அவர்கள் என்னதான் செய்கின்றனர்?-------------------------”என்னா செய்றது..? கார்ப்பரேசன் தண்ணீ என்னிக்கு வருதோ, அன்னிக்குப் பிடிச்சு வெச்சுக்கணும். இல்லேன்னா எந்தத் தெருவுல வருதோ, அங்கே போய்ப் பிடிச்சுட்டு வரணும். அதுவும் இல்லைன்னா… வீட்டுல வர்ற போர்வெல் தண்ணீ அழுக்கும் சேறுமா இருந்தாலும், தெளிய வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிப் பயன்படுத்திக்கணும். வேற என்ன வழி..?” என்று கேட்கிறார் அமைந்தகரை அய்யாவு காலனியில் வசிக்கும் ராஜலட்சுமி.
--------------------------------------------------------------------------------------------
தண்ணீரை, பணம் கொடுத்து வாங்குவது சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆடம்பரச் செலவே! இந்தத் தண்ணீர் பஞ்சம், ஏழை மக்களை அவலத்திலும் அவலமாகத் தாக்குகிறது. ஆனால், அவர்களால் இதை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.
--------------------------------------------------------------------------------------------
நடுத்தரவர்க்க மக்களோ, குடியிருக்கும் வீட்டை மாற்றுவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், தண்ணீர் பிரச்னை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் எங்கு ஓடினாலும் இந்தப் பிரச்னையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிவதில்லை. இன்னொரு பக்கம், நடுத்தர வர்க்க குடும்பங்கள் பலவும் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே வீடு பிடித்துக் குடியேறுகின்றன. தண்ணீர் இல்லை என்றதும் அவர்களால் திடுதிப்பென்று வீட்டைக் காலி செய்துவிட முடியாது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வேறு வழியின்றி அதில் குடியிருக்கின்றனர் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். மொத்தத்தில் யாராலும் இந்தச் சுழலில் இருந்து தப்பிவிட முடிவதில்லை.
--------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுக்கவே இப்போது தண்ணீருக்குப் பிரச்னைதான். ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரைப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து 15 நாள்களாகிவிட்டன. கரூர் மாவட்டம், இனாம் கரூர் பேரூராட்சியில் 20 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தியில் வாரம் ஒரு முறை வரும் நீரும் இப்போது வருவது இல்லை. ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டத்தின் நிலையும் மோசமாக இருக்கிறது. ராமநாதபுரத்துக்குச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் சில கிராமங்கள் பயன் அடைந்தபோதிலும் செலுகை, குருந்தணாக்கோட்டை, தூணுகுடி, பீசர்பட்டினம், மீனாட்சிபுரம், மேலராங்கியம், புலியூர், நெடுவயல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் குடிநீர் பஞ்சத்தில் தத்தளிக்கின்றன. மதுரை மாநகராட்சியில், ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கும் குடிநீர் விநியோகம், இரவு 12 மணி, நள்ளிரவு 2 மணிக்குக்கூட பெண்கள் குடங்களுடன் குடிநீர்க் குழாய்களில் காத்திருக்கின்றனர். தூங்கா நகரமான மதுரை, நான்கு குடம் தண்ணீர் பிடிப்பதற்காக இப்போது உண்மையாகவே ‘தூங்கா நகரமாக’ விழித்திருக்கிறது. இப்படி அரிதாக விடப்படும் தண்ணீரும்கூட தேர்தலுக்குப் பிறகு அடியோடு நிறுத்தப்பட்டுவிடுமோ என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அச்சம், இந்தப் போராட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குதான். நட்சத்திர விடுதிகளுக்கான தண்ணீர் விநியோகத்துக்குக் குறையொன்றும் இல்லை.
--------------------------------------------------------------------------------------------
2012-ம் ஆண்டின் கணக்குப்படி, சென்னை நகரத்தில் உள்ள 4,656 உயர்தர விடுதி அறைகளில், ஓர் அறைக்கு சுமார் 1,500 லிட்டர் வீதம், நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. நீச்சல் குளங்களில் தூய நீர் இடைவிடாமல் நிரப்பப்படுகிறது. மக்கள் தாகத்தில் சாகும்போது, இவர்கள் இவ்வாறு கூத்தடிப்பது என்ன நியாயம்? மக்கள் குடியிருப்பு நெருக்கமாக உள்ள பகுதிகளில், பல அடுக்கு ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி வழங்குவது எப்படி முறையாகும்? அதன் பிரமாண்ட இயந்திரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி இழுக்கும்போது, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகள் உடனடியாகப் பாதிக்கப் படுகின்றன. இதைச் சரிசெய்யவேண்டிய அரசோ, நமக்கு 10 ரூபாய் தண்ணீர் பாட்டிலைக் கையில் கொடுத்து, ‘தண்ணீர் சிக்கனம்’ குறித்து வகுப்பு எடுக்கிறது. இது கோடை காலம் மட்டுமல்ல… கொடிய காலமும்கூட!
--------------------------------------------------------------------------------------------
தற்போதைய தண்ணீர் பிரச்னை ஒரு மாதத்தில், ஓர் ஆண்டில் நடந்தது அல்ல. பல ஆண்டுகளாக நமது மொத்த நீர் ஆதாரங்களையும் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியதன் எதிர்விளைவு. ஏரிப்பாசனத்தை முக்கியமாகக் கொண்ட தமிழ்நாட்டில், அவை அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன.----------------------மறுப்பக்கம் போர்வெல்களின் எண்ணிக்கைத் தாறுமாறாக அதிகரித்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பீட்டின்படி, மதுரை நகரத்தில் உள்ள போர்வெல்களின் எண்ணிக்கை 44,218. இடைப்பட்ட காலத்தில் இது இன்னொரு மடங்கு அதிகரித்து ஒரு லட்சமாக மாறியிருக்கும். தமிழகம் முழுக்க உள்ள பெரு மற்றும் சிறு நகரங்களில் உள்ள போர்வெல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது நம்மை மலைக்க வைக்கும். இதுபோக, இந்தியாவிலேயே மிக அதிகமான பாசன போர்வெல்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்தான் (19 லட்சம்)!
--------------------------------------------------------------------------------------------
ஏரிகளை அழித்து மேற்பரப்பு நீர் ஆதாரத்தை ஒழித்தோம். நிலத்தடி நீர் ஆதாரத்தை இரக்கமின்றி இடைவிடாமல் உறிஞ்சுகிறோம். போதாக்குறைக்குத் தொழிற்சாலைக் கழிவுகள், குடிமைக் கழிவுகள் அனைத்தையும் முறையாகச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளிலும் நிலத்துக்குள்ளும் விடுகிறோம். இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு, பூமிக்குள் இருந்து இடைவிடாமல் பாலும் தேனும் வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?
--------------------------------------------------------------------------------------------
‘விதைநெல்லை விற்றுத் தின்றவனின் இரவு விடியாது’ என்பார்கள். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள கரிய இருள் அதுதான். சிலர், மழை பெய்தால் இந்த நிலை சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். சரியானாலும்கூட அது மிக மிகத் தற்காலிகமானதே. ஏனெனில், மழைநீரைச் சேமிக்கும் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெய்யும் மழைநீரை எதில் சேமித்து வைப்பது? பெய்யும் மழைநீரில் 16 சதவிகித நீராவது நிலத்துக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் சரியான மட்டத்தில் பராமரிக்கப்படும். ஆனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் 8 சதவிகித நீர்கூட நிலத்தடிக்குச் செல்வதில்லை. அந்த அளவுக்கு நிலம் நாசமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தண்ணீர் வியாபாரிகளுக்கு மட்டும் எங்கு இருந்து தண்ணீர் கிடைக்கிறது? அவர்கள், நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை இடைவிடாமல் உறிஞ்சப்படும்போது, அதுவும் ஒருநாள் தீர்ந்துபோகும். அந்த ‘ஒருநாள்’ நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போவது இல்லை. நம் காலத்திலேயே மிக விரைவில் வந்துவிடலாம். அந்தச் சமயத்தில் தண்ணீர் மேலும் விலைமதிப்பற்ற செல்வமாக மாறும். கேன் தண்ணீர் வாங்கவும், லாரி தண்ணீர் பெறவும் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலை வரலாம்.--------------------------------------------------------------------------------------------
ராஜஸ்தான், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் ‘வாட்டர் ஏ.டி.எம்’ என்ற முறை இப்போதே வந்துவிட்டது. ரீ-சார்ஜ் செய்து அட்டையை இயந்திரத்தில் செருகினால் தண்ணீர் வரும். காசு தீர்ந்துவிட்டால் தண்ணீர் வராது. டாப்-அப் செய்துகொள்ள வேண்டும். இந்த வாட்டர் ஏ.டி.எம்-கள் எதிர்காலத்தில் தமிழகத்தின் வீதிகளையும் ஆக்கிரமிக்கும். யார் கண்டது, தண்ணீர் பிடிக்க தட்கல் முறையும் அமலுக்கு வரலாம்.
--------------------------------------------------------------------------------------------
ஒட்டுமொத்த தமிழ்நாடும் தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் கூடுதலாகச் சம்பாதித்து நம் திறமையாலும் சாமர்த்தியத்தாலும் தண்ணீர் பிரச்னையைச் சமாளித்துவிடலாம் என்று நினைப்பது அறியாமை. இது தனிநபர்களின் உழைப்பால் தீர்க்கக்கூடிய சிக்கல் அல்ல. அரசாங்கம் முழு வீச்சில் இறங்கிச் செயலாற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை வகுப்பது, ஓர் ஊரில் உள்ள நீரை உறிஞ்சி இன்னோர் ஊருக்குக் கொடுப்பது எல்லாம் சில ஆண்டுகளுக்கான தற்காலிகத் தீர்வுகளே. ஏரி, குளங்களைச் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்கள், ஓடைகளைச் சீர் செய்வதில்தான் நமது சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------
இப்போதுகூட அரசு கறாராக நடவடிக்கை எடுக்குமானால் தமிழ்நாட்டின் கணிசமான ஏரிகளை மீட்க முடியும். தற்காலிகத் தீர்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அரசு, நிரந்தரத் தீர்வை நோக்கிய முதல் அடியை இப்போதேனும் எடுத்து வைக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------
செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?
Subscribe to:
Posts (Atom)





