Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, February 1, 2014

தாய் பூமியைக் காப்போம்.

இது அமெரிக்காவில் மீத்தேன் கிணறுகள் உள்ள பகுதியின் படம் .நெல் விளையும் நம் தாய் மண் இப்படியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுகொண்டு இருக்கிறது.கைகோர்ப்போம். தாய் பூமியைக் காப்போம்.

ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள்

ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்... • அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும். • நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது. • குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும். • பயிர்களும் மரங்களும் கருகி போகும்.. ►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாப்பது வருட குத்தகைக்கு கேட்கும். ►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள். ►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள்.
►நாப்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி,எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும். ►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும் ►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள். ►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்.. ►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல.. ►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்.. ►மயிலாடுதுறை நண்பர்களே இந்த திட்டம் முதல் கட்டமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர்,நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதர்க்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே.. (பிகு) போபால் நிகழ்வை சிந்தித்து பாருங்கள் தோழர்களே.. இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் கூட்டம்

வானகத்தில் ஜனவரி 16ம் தேதி முற்றிலும் ஒரு வித்தியாசமான கூட்டம் ....
( “ நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் கூட்டம் & அடுத்தகட்ட செயல் திட்டக் கூட்டம், ” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ ) வானகத்தில் ஐயா இல்லாமல் நடைபெற்ற முதல் கூட்டம். ( ஆனால், எப்போதும் நம்முள்ளே இருக்கிறார்). வானகத்திற்கு வந்த அனைவரின் முகத்திலும் ஒரு ஏக்கம். ஏனெனில் எப்போதுமே, வானகத்திற்கு வருபவர்கள் அனைவருமே ஐயாவைப் பார்க்க வேண்டும், ஐயாவுடன் இருக்க வேண்டும், ஐயாவிடம் நமது சந்தேகங்களைக் கேட்டு சரி செய்ய வேண்டும், என ஏதாவது எதிர்பார்ப்போடு வருபவர்கள் தான் அதிகம். வழக்கமாக ஐயாவின் பிறந்த நாளன்று மட்டுமே அதிகமான மக்கள் வானகத்திற்கு வருகை புரிவார்கள். அதில் அனேக பேரின் வருகைக்கு காரணம் ஐயாவின் ஆசிர்வதம் பெற வேண்டும் என்பதே. ஆனால் ” நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் “ கூட்டமான ஜனவரி 16 அன்று கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தார்கள். அதிலும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள். வந்திருந்த அனைவருமே “எந்தவித சுய நலமுமில்லாமல் நம்முடைய பங்களிப்பை ஏதாவது வகையில் ” வானகத்திற்கு அளித்து ஐயாவின் கொள்கைகளை அனைவருக்கும் கொண்டு சேர்த்து, ஐயாவின் ஆணையிட்டுள்ள பணிகள் எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல், அனைவருமே பயனடைய வேண்டும் “ என்கிற விவேகத்துடனே வந்திருந்தனர். முதல் நிகழ்வு : ..................... ஐயாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது. அனைவருமே ஐயாவின் முன்னால் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். ஐயாவின் மனைவி சாவித்திரி அம்மாள் மற்றும் அன்பு மகளான மீனா அக்கா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஐயாவின் தொண்டர்கள் உட்பட அனைவருமே ஐயாவின் நினைவிடத்தில் கூடி ஐயாவின் நினைவுகளை சிறிது நேரம் நினைத்துப் பின் ஐயாவுக்கு விருப்பமான சில உணவு வகைகளை படைத்து, வணங்கினோம். இரண்டாம் நிகழ்வு : ............................. பின் அடுத்த நிகழ்வை வானகம் ஒருங்கிணைப்பாளரான ”லெ.ஏங்கல்ஸ் ராஜா “ அவர்கள் நிகழ்வை தொடங்கினார். முதலில் ஐயாவின் பசுமை நினைவுகளையும், ஐயா செய்த வாழ்நாள் சாதனைகளையும் விளக்கினார். பின் ஐயாவின் லட்சிய பூமியான “ வானகம் “ உலக்ததார் அனைவரின் தவறான வாழ்க்கை முறையையும், அதை மாற்றுவதற்காக ஆரம்பிக்கப் பட்ட நோக்கத்தையும் , அதன் பணிகளையும் விரிவாக விளக்கினார். அந்த நோக்கங்களான : 1. உழவில்லாத வேளாண்மை 2. மருந்தில்லா மருத்துவம் 3. பள்ளிசார கல்வி 4. தேவைப்படும் பொழுது இயற்கைக் காக்க போராட வேண்டும். இந்த கொள்கைகளை ஐயா வெறும் எழுத்து வடிவில் மட்டுமே கூறாமல் , அந்த கொள்கைகளை பின்பற்றி அனைவருக்கும் வாழும் வழிகாட்டியாகவும் வாழ்ந்துள்ளார் எனக் கூறினார். அவர் கூறியது வந்திருந்த அனைவரையுமே ” நாமும் ஐயாவைப் போல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பலப்படுத்தியது” . மேலும் குரு என்பவர் “இந்த மண்ணுலகில் தான் இல்லவிட்டாலும், தன்னுடைய கொள்கைகளும், பணிகளும் தொடர்ந்து செயல்படத் தேவையான தளபதிகளை உருவாக்கிவிட்டு தான் செல்கிறார் “ என்பதற்கு சான்றாக நமது ஐயாவும் இவ்வுலகில் நமக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்குமே பதிலளை அளித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். அதற்கும் மேலாக ஐயா தன்னுடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையிலும் சரியான நபர்களையும், வழிகாட்டிகளையும் அடையாளம் காட்டிவிட்டு தான் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். இனி நம்முடைய வேலை அதை சரியான பாதையில் செயல்படுத்துவது மட்டுமே. மூன்றாம் நிகழ்வு (” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ ) : ...................................................................... ஐயாவின் மற்றுமொரு மாற்று சிந்தனை கல்வியின் மீது தான். இன்றைய ” மெக்காலே கல்விமுறையை ” அடிமைத்தனத்தை மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு “ கூலிக்கு ஆட்களைத் தயார் செய்யும் “ clerical Job “ கல்வியாகவே மட்டுமே உள்ளது . மேலும் மெக்காலே இந்த கல்வித்திட்டத்தை செயல்படுத்தும் முன் இங்கிலாந்து ராணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கல்வி முறையில் படித்தவர்கள் பிறப்பாலும் , நிறத்தாலும் இந்தியர்களாகவும், செயல்பாட்டில் ஆங்கிலேயர்களாகவும் இருப்பார்கள் என்றார். அதை அவர்கள் இத்தனை வருடங்களாக சாதித்தும் விட்டார்கள். எனவே இந்த அடிமைக் கல்வியை மாற்றவும் தன்னுடைய வாழ்நாளை தியாகம் செய்தவர் ஐயா. அதற்கான மாற்றுக் கல்வியை ஐயாவின் பயிற்சி அனைத்திலும் அந்த “ சுவரில்லா கல்வியை “ கற்றும் கொடுத்தார். எனவே முதல் செயல் திட்டமாக ஐயாவின் மாற்றுக் கல்வியை அனைவரும் கற்க ” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ என்ற பெயரில் வானகத்தில் ஐயாவின் பிறந்தநாள் விழாவில் தொடங்க வேண்டும் என்றும் அதற்காக அந்த கல்விமுறையில் ஐயா கூறிய ” வாழ்வியலுக்குத் தேவையான தொழிற்கல்வி உட்பட ” எப்படிப்பட்ட கல்வி இருக்க வேண்டும் என்ற விவாதமும் கருத்து கேட்பும், விவாதிக்கப் பட்டது. மேலும் இத்திட்டத்திற்குத் தேவையான பயிற்றுனர்களை உருவாக்குதலும், அதற்குத் தேவையான கட்டுமானம் ( குடில்), நிதி உட்பட அனைவற்றிலும் எல்லோருடைய பங்களிப்பை எப்படிப் பெறுவது, அனைவரும் இத்திட்டத்தில் எப்படி பங்களிக்கலாம், பயனடையாலாம் என்பது பற்றிய தொடர் கலந்தாய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே பசுமைக் காவலர்களே, மாற்றத்தை விரும்பும் விரும்பிகளே... ” நம்மாழ்வார் கல்வித் திட்டம் ” பற்றிய கருத்துகள், செயல்திட்டங்கள், பங்களிப்புகள், நடைமுறைகள் என அனைத்திலும் நீங்களும் பங்குபெறலாம். அதற்கு வயது, சாதி, மதம், மொழி என எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. உங்களுடைய கருத்துக்களை முழுவதும் அனுப்ப வேண்டிய முகவரி : வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் - 621311 . மின்னஞ்சல் : vanagamnammalvarfoundation@gmail.com கைபேசி : 94435 75431, 94421 21473 நான்காம் நிகழ்வு ( செயல்திட்டக் குழுக்கள் அமைத்தல் ) : .................................................................................. மதிய உணவாக நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு, உண்ட மயக்கம்வராமலிருக்க “ அடுப்பில்லா சமையல் முறையில் “ இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர் ஐயாவின் கொள்கைகளை வேகமாக செயல்படுத்த “ செயல் திட்டக் குழுக்கள் “ உருவாக்கப் பட்டது. 15 செயல் திட்டக் குழுக்கள் : ......................................... 1. நம்மாழ்வார் கல்வி திட்டக்குழு 2. இயற்கை வேளாண்மை குழு ( பயிற்சிப் பண்ணைகள் ) 3. தொண்டர்கள் குழு 4. பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் குழு 5. சத்துமிகு தானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் குழு 6. பாரம்பரிய கால்நடைக்குழு 7. ஒருங்கிணைபாளர் குழு 8. மூலிகை மீட்டெடுக்கும் மற்றும் பாரம்பரிய வைத்திய ( மருந்தில்லா மருத்துவம்) குழு 9. நிதிக் குழு 10. போராட்டக்குழு 11. செய்தி மற்றும் ஊடகக் குழு 12. கட்டுமானக் குழு 13. சட்டக் குழு 14. பாரம்பரிய கலைக்குழு 15. வாழும் கிராமங்களை உருவாக்கும் குழு என தற்போது வரை 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் விருப்பமான ஏதாவது ஒரு குழுவில் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மட்டுமல்ல எப்போதுமே செயல்பாட்டில் உள்ள ” ஐயா உருவாக்கிய தளபதிகளும்” தொண்டர்களும், பசுமை ஆர்வலர்களும், கல்லூரி மாணவர்களும் மற்றும் பலர்… என அனைவரும் இணைந்து செயல்பட்டு “ நம்மாழ்வார் ” ஐயாவின் கொள்கைகளை சிறிது சமரசம் செய்யாமல், அதை நாமும் வாழ்ந்து முன்னெடுத்து செல்வோம் என தொடர்ந்து இணைந்த கொண்டிருக்கின்றனர். இந்த ” செயல் திட்டக் குழுக்குகளை “ வலிமையாக கட்டமைத்து விட்டுப் பின், அது விரிவுபடுத்தப் படும். ஆகவே பசுமைக் காவலர்களே, மாற்றத்தை விரும்பும் விரும்பிகளே... அனைத்திலும் நீங்களும் பங்குபெறலாம். அதற்கு வயது, சாதி, மதம், மொழி என எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் தற்போது நடைபெறுகிறது

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் தற்போது நடைபெறுகிறது...சீமான், அர்ஜூன் சம்பத் , பெ.மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

டெல்லியில் மின்கட்டணம் 8% உயர்வு

டெல்லி: டெல்லியில் 3 தனியார் நிறுவனங்கள் மின்கட்டணத்தை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் மின்சாரக் கட்டணம் இன்று முதல் 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்தால் மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற பின்னர், மின்கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்கு டெல்லிக்கு மின்சாரம் வழங்கி வரும் டாடா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. தணிக்கைக்கு உத்தரவு டெல்லியில் மின்சார வினியோகத்தை ‘யமுனா பவர் லிமிடெட்', ‘ராஜ்தானி பவர் லிமிடெட்', ‘டாடா பவர் டிஸ்டிரிபியூஷன் லிமிடெட்' என்ற 3 நிறுவனங்கள் செய்து வருகிறது. அந்த நிறுவனங்களை இதுவரை ஏன் தணிக்கை செய்யவில்லை என்று டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு கேள்வி எழுப்பியது. அரசின் கேள்விக்கு அந்த நிறுவனங்கள் கொடுத்த பதில் அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனை அடுத்து கணக்குகளை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது. மின் உற்பத்தி நிறுத்தம் இந்நிலையில் டெல்லிக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாகவும், இதனால் நாளையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு டெல்லியில் 8 முதல் 10 மணி வரையில் மின்வெட்டு ஏற்படும் என்று அந்த நிறுவனம் மிரட்டியுள்ளதாக கூறியுள்ளார் கெஜ்ரிவால். அவ்வாறு நடந்தால் அவர்களின் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்து ஆகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மின்கட்டணம் உயர்வு இந்த நிலையில், வருவாய் கணக்குகளை தணிக்கை செய்தபின்னர், டாடா, யமுனா மற்றும் ராஜ்தானி ஆகிய 3 தனியார் நிறுவனங்களும் மின்கட்டணத்தை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. 50 லட்சம் மக்கள் இதனால் மத்திய மற்றும் கிழக்கு டெல்லி பகுதிகளில் வாழும் 50 லட்சம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சமீபத்தில்தான் மின் கட்டணத்தை குறைத்து டெல்லி மக்களை குஷிப்படுத்தியிருந்தார் கெஜ்ரிவால். ஆனால் இப்போது மீண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

சீனாவில் பெருகும் காந்தி குறித்த ஆர்வம்

இந்தியாவின் தேசப்பிதா என்றழைக்கப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட நாயகன் மகாத்மா காந்தியின் சுய சரிதையான 'சத்திய சோதனை' முதன் முதலாக சீன மொழியான மாண்டரினில் மொழி பெயர்க்கப்படுகிறது. 'சத்திய சோதனை' சீன மொழியாக்கம் பெறப்படுவது, சீனாவில் காந்தி குறித்த ஆர்வம் அதிகரிப்பதைக் காட்டுவதாக சீன அறிஞர்கள் கூறுகிறார்கள். காந்தியின் சுய சரிதையைத் தவிர, சத்யாகிரகம், மதம், அரசியல் போன்ற தலைப்புகளில் காந்தி எழுதியவையும், அவரது உரைகளும் அடங்கிய ஐந்து தொகுப்புகளும் மாண்டரினில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளன.
"காந்தியின் எழுத்துக்கள் பெரும்பாலும், ரஷ்யாவிலும், சீனாவிலும் கிடைப்பதில்லை. சீனாவில் காந்தியின் எழுத்துக்கள் மீது எழுந்திருக்கும் ஆர்வம் குறித்து எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது", என்று கூறினார் காந்தி அஹமதாபாதில் நிறுவிய நவஜீவன் அறக்கட்டளை என்ற பிரசுர நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் தேசாய். சீனாவில் காந்தியின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்ய உள்ள சீன அறிஞர்கள் குழுவுக்கு சன் யாட் சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஹுவாங் யிங்ஹோங் தலைமை தாங்குகிறார். மகாத்மா காந்தியின் 80க்கும் மேற்பட்ட உரைகள் மொழி பெயர்க்கப்படும் என்கிறார் இவர். சீனாவில் பலர், குறிப்பாக இளைஞர்கள், காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் , ஆனால் உள்ளூர் மொழியில் காந்தியின் எழுத்துக்கள் கிடைப்பதில்லை " என்றார் ஹுவாங். இந்த ஆண்டு இறுதிவாக்கில், காந்தியின் எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்ட ஐந்து தொகுப்புகளும் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஏன் இந்தப் புதிய ஆர்வம் ?"பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக காந்தி 1920ல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமும், மக்களை அவர் ஒன்று திரட்டியதும் அப்போதைய சீன ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது" என்று கூறுகிறார் காந்தி ஆராய்ச்சியாளரும், குவாங்ஸூ நகரில் உள்ள தென் சீனப் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு ஆய்வுகள் துறையில் கற்பிப்பவருமான , பேராசிரியர் ஷாங் குவானு. 1950 வரை , காந்தி பற்றிய 27 புத்தகங்கள் மற்றும் அவர் குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் சீனாவில் பிரசுரிக்கப்பட்டுவந்தன. அப்போதெல்லாம் அவர் இந்தியாவின் ரூஸோ என்றும் டால்ஸ்டாய் என்றும் வர்ணிக்கப்பட்டுவந்தார் " என்கிறார் குவானு. ஆனால் கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர், காந்தியின் எழுத்துக்கள் மீதான ஆர்வம் குறைந்தது என்றும் அவர் கூறுகிறார். அஹிம்சை மற்றும் வர்க்க சமாதானம் போன்ற காந்தியின் கருத்துக்கள், சீனாவுக்குள் நிலவிய மார்க்சிய சித்தாந்தம் மற்றும் அரசியல் சூழல் ஆகியவைகளுடன் ஒத்துப்போகவில்லை, என்கிறார் பேராசிரியர் ஷாங்.காந்தியும் சீனர்களும் "மாவோவுக்கு முந்தைய சீனாவில், சீனச் சிந்தனையாளர்கள் காந்தியை சந்தித்தனர், அவர்கள் சீனாவின் பிரச்சினைகளுக்கு முடிவு காண , காந்தியை நெருக்கமாகத் தொடர்ந்தனர் ", என்கிறார் காந்தி வல்லுநரும் முன்னாள் இந்திய ராஜதந்திரியுமான, பாஸ்கல் ஆலன் நாசரேத். காந்தி சீனாவுக்குச் சென்றதேயில்லை என்றாலும் கூட, இந்தியாவின் அஹிம்சை இயக்கம் சீனர்கள் பலர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காந்தி தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் நடத்திய அமைதிப் போராட்டத்தில் அவருடன் சுமார் 1,000 சீனர்களும் இணைந்தனர் என்கிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா. 1906ல் தென் ஆப்ரிக்காவின் ட்ரான்ஸ்வால் மாகாணத்தில் ஆசியர்கள் சொத்து வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை மற்றும் அவர்கள் அடையாள அட்டையைச் சுமந்து செல்லவேண்டும் என்ற விதி ஆகியவைகளுக்கு எதிராக காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சீனர்களும் கலந்து கொண்டு காந்தியுடன் கைதாகினர் என்கிறார் குஹா. சிறையில், சீனர்களுடன், கடவுளை அடைய இருக்கும் பல வழிகளைப் பற்றி காந்தி விவாதித்தார் என்று எழுதுகிறார் குஹா.பொருளாதார சீர்திருத்தம், மதம், காந்தி சீனப் பொருளாதர சீர்திருத்தங்கள் காந்தியின் எழுத்துக்கள் மீது சீனாவில் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டின என்கிறார் பேராசிரியர் ஷாங். 1980லிருந்து காந்தி பற்றிய 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சீனாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. "சீனர்கள் காந்தியை நவீன இந்தியாவின் நிறுவனர் என்றும் அஹிம்சைக் கொள்கையின் விற்பன்னர் என்றுமே அறிந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அவர்கள் காந்தியின் மத, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்துக்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவரது எழுத்துக்கள் குறித்து சீனா இப்போது மேலும் ஆர்வம் கொண்டிருக்கிறது", என்கிறார் பாஸ்கல் ஆலன் நாசரேத். குறிப்பாக சீனர்கள் , மக்களை அணி திரட்ட காந்தி எவ்வாறு மதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறித்து வியப்படைந்திருக்கிறார்கள் என்கிறார் பாஸ்கல். "சீனாவின் கம்யூனிச சித்தாந்தம் மதத்தை நிராகரிக்கிறது, சீனாவில் இப்போது அறிவுசார் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மட்டங்களில், ஒரு சௌஜன்யமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மதத்துக்கு இருக்கும் பங்கு குறித்து அறியும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் காந்திய மற்றும் பிற கொள்கைகளை ஆராய்ந்து வருகிறார்கள்", என்கிறார் பாஸ்கல் நாசரேத். காந்தியின் போதனைகள் , சீன அரசுக்கும், மக்களுக்கும், அவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் மேம்பட்ட மாற்று வழிகளைப் பரிசீலிக்க உதவலாம் என்று கூறுகிறார், டாக்டர் ஹுவாங். அது தவிர, முதலாளித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்தும் காந்தி கொண்டிருந்த சந்தேகங்களும் இன்றைய சமகால சீனாவில் பரிசீலிக்கபடத் தகுந்தவை என்றும் டாக்டர் ஹுவாங் கூறுகிறார். 'சத்திய சோதனை' உலகின் 35 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் 2 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.

வைகோ ஆதரவு : கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம்:

தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுஉலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற இலட்சோப இலட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும் பாதுகாக்க வேண்டுமெனில் அணு உலை இயங்கக்கூடாது. உலகில் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக அணுஉலைகள் அமைக்கப்படவில்லை. 2011 இல் ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்து மிகப்பெரிய எச்சரிக்கையாகும். இடிந்தகரை அறப்போர்க்களத்தில் 900 நாட்களுக்கு மேலாக, பல்லாயிரக் கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை அணுஉலைக்கு எதிராக நடத்தி வருகின்றனர். அவர்களை மிரட்டுவதற்காக 360க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள், இரண்டு இலட்சத்து இருபத்தி ஏழாயிரம் மக்கள் மீது போடப்பட்டன. அம்மக்கள், குறிப்பாக மீனவ தாய்மார்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளானார்கள். அணுஉலை இயங்குகிறது என்றும், அதிக மின்சாரம் கிடைக்கிறது என்றும் பொதுமக்களை ஏமாற்றுகின்ற வேலையில் மத்திய அரசும், அணுஉலை நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. காயப்பட்ட புண்ணில் சூட்டுக்கோலை திணிப்பதைப்போல் கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுஉலைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கும் வஞ்சகமும், துரோகமும் இழைத்து வரும் மத்திய அரசு தென்தமிழ்நாட்டுக்கு பெரும் அழிவை விளைவிக்கும் விதத்தில் இப்பிரச்சினையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது அணுஉலைகள் அமைக்கக்கூடாது என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்று, இரண்டு அணுஉலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்றும், கோரிக்கைகளை முன்வைத்து இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போரை மக்கள் மேற்கொண்டுள்ளனர். இது நீதிக்கான போராட்டம். சாதி, மதம், கட்சி எல்லை கடந்து தமிழ்நாட்டின் தென்கோடி முனை மக்களைக் காக்க கடற்கரை மீனவ மக்கள் தொடுத்து இருக்கின்ற சத்திய யுத்தமாகும். இந்தப்போராட்டத்துக்கு மறுமலர்ச்சி தி.மு.க. முழுமையான ஆதரவை தெரிவிப்பதோடு, இந்தப் பிரச்சினையில் பாசிச அணுகுமுறை மேற்கொள்ளும் மத்திய - மாநில அரசுகளுக்கு பலத்த கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்" இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

குழந்தை பேறு பெற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை!

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேனும் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் குறிப்பாக எண்ணற்ற சத்துக்களை கொண்ட வாழைப்பழத்தில் பல வகை உண்டு அவற்றில் சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதுடன் இது அதிகளவில் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா விலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்குகிறது என்பதுடன் செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் காணப்படுகிறது எனவே இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கின்றது என்பதுடன் இதில் வைட்டமின் ‘சி’, ஆண்டி ஆக்ஸிடென்ட், 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக காணப்படுகிறது எனவே கண் பார்வை குறைய ஆரம்பித்தால் நீங்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவடைவதுடன் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் இரவுச்சாப்பாட்டுக்கு பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைப்பளம் சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். இது மட்டுமல்லாது பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டன் அணு மீள்உற்பத்தி ஆலையில் அதிகரித்த கதிரியக்க வீச்சு! பணியாளர்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்!

பிரிட்டனின் மிக பெரிய அணு மீள்உற்பத்தி ஆலையான செல்லாஃபீல்ட் ஆலையில் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் இல் தொழில் புரியும் மிக அவசியமான பணியாளர்களைத் தவிர ஏனையவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரித்த கதிரியக்க வீச்சின் அளவு காரணமாக மக்களுக்கோ பணியாளர்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்பிரியா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமைக்கான காரணம் பற்றி ஆராயப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார். இதே வேளை செல்லாஃபீல்ட் ஆலை நிர்வாகத்துடன் இது தொடர்பில் பேசி வருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு !!

16 மாதகாலமாக கடலில் தத்தளித்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் மெக்ஸிகோவிலிருந்து 12,500 கிலேமீற்றர் தூரம் படகொன்றிலிருந்தவாறு தத்த ளித்து வந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நபரின் 24 அடி நீளமான பைபர் இழைப் படகு மார்ஷல் தீவுக்கூட்டத்தைச் சேரந்த எபோன் தீவுக்கு அருகில் உள் ளூர்வாசிகள் இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மெலிந்த தேகத்துடனும் நீண்ட தலைமயிருடனும் தாடிமீசையுடனும் இந்நபர் காணப்ப டுகிறார். இந்நபர் ஸ்பானிய மொழி மாத்திரம் பேசுவதாகவும் தனது பெயர் ஜோஸ் ஐவன் எனவும் அவர் கூறுகிறார். 2012 செப்டெம்பரில் மெக்ஸிகோவிலிருந்து எல் சல்வ டோருக்கு தனது நண்பர் ஒருவருடன் பயணத்தை ஆரம்பித்தாகவும் பல மாதங் களுக்கு முன் தனது நண்பர் இறந்துவிட்டதாகவும் ஜோஸ் ஐவன் தெரிவித்துள்ளார். எபோனின் ஆய்வில் ஈடுபட்டுள்ள நோர்வையைச் சேர்ந்த மானுடவியல் மாண வரான ஒலா பிஜேல்ஸ்டட் என்பவர், ஜோஸ் ஐவனின் படகை ஆராய்ந்தபின், அப்படகு நீண்டகாலமாக கடலில் இருந்தமைக்கான தடயங்கள் தென்படுவதாக கூறியுள்ளார். மேற்படி படகு 12,500 கிலோமீற்றர் தூரம் தத்தளித்த நிலையில் சென்றுள்ளதாகவும் ஒலா பிஜேல்ஸ்டட் மதிப்பிட்டுள்ளார். ஆமைகள், பறவைகள், மீன்கள் ஆகிய வற்றை உட்கொண்டு தான் உயிர்வாழ்ந்ததாகவும் மழை இல்லாத காலங்களில் ஆமை இரத்தத்தை குடித்ததாகவும் ஜோஸ் ஐவன் தெரிவித்துள்ளார்.

யாழில் மீட்கப்பட்ட வெள்ளை நாகம் ( படங்கள் ) !!

யாழ். தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு ஒன்று ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வெள்ளை நாகபாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றதினை அவதானித்த உரிமையாளர் அயலவர்கள் உதவியுடன் பாம்பினைப் பிடித்து ஏழாலை பெரிய தம்பி ரான் ஆலயத்தில் கொண்டு சென்று விட்டார். இந்த வெள்ளைப் நாகபாம்பினைப் பார்ப்பதற்காக அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை உறுதி! நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்தாக கூறுகிறார் சுமந்திரன்:-

போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்இ கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான பிரேரணை கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயன்றளவு முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்குஇ மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். அமெரிக்கத் தூதரகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இனப்பரம்பல் மாற்றியமைப்பு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சகல பிரச்சினைகளையும் விளக்கமாக அமெரிக்கச் செயலரிடம் தெரிவித்தோம். இராணுவப் பிரசன்னம்இ சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுஇ மக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக சுவீக்கரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைஇ சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் எடுது;துக் கூறியுள்ளதாக சுமந்திரன் தெரிவிவ்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைஇ மக்களின் மீள்குடியமர்வுஇ காணாமற்போனோர் தொடர்பிலும் இன்னமும் தீர்க்கப்படாமல் தொடரும் பிரச்சினைகளையும் அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்தோம். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகளாகி யும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினோம் எனவும் தெரிவிவ்த்தார். சர்வதேச விசாரணையே வழி போர்க் குற்றம் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசினால் கடந்த இரண்டு வருடங்களில் எந்த வொரு ஆக்கபூர்வமான விசாரணையும் முன்னெடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணையே ஒரே வழி என்றும் குறிப்பிட்டார். சர்வதேச விசாரணையை வலியுறுத்திஇ ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அமெரிக்கப் பிரேரணை அமைய வேண்டும் என்று எம்மால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நிஷாஇ கடந்த இரண்டு வருடங்களைப் போன்றல்லாமல்இ இம்முறை மிகக் கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயலுமானவரை முயற்சிக்கும் என்று பதிலளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நடத்தினால் போதாது. ஆதனைக் கொண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.வடக்கு மாகாண சபையை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இம்முறையும் இந்தியா இலங்கையை கைவிட்டு விடும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இம்முறையும் இந்தியா இலங்கையை கைவிட்டு விடக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கக் கூடிய சாத்தியங்கள் குறைவு என குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், தமிழகர் உணர்வுகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையிலும் தீர்மானங்கள் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் எவ்வாறான ஓர் நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலும் இந்தியா இவ்வாறான அறிவித்தல்களையே விடுத்துக் கொண்டிருந்து, இறுதி நேரத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்;.பிரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்திருந்தார். பெரும்பாலும் இம்முறை அமர்வுகளிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது

உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது. நாளை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்தான் விஜயகாந்த் தனது அடுத்த கூட்டணி தொடர்பாக அறிவிக்கவுள்ளார் என்று தமிழகமே பதறிப் போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கான அழைப்பிதழை அனைத்துக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு தேமுதிகவினர் தேடித் தேடிப் போய்க் கொடுத்து வருகின்றனர். கட்சித் தலைவர்கள் அதாவது மாவட்ட வாரியான தலைவர்கள், நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுக்கு இதைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதிமுக, சரத்குமார் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு கிடையாதாம். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களாம்.

சிரியா சொந்த மக்கள் மேல், உயிரியல் ஆயுதங்களை உபயோகித்தது- ஜேம்ஸ் கிளப்பர்: ஐரோப்பிய செய்தியாளர்:-

சிரியா நாட்டு அரசு, யுத்த காலத்தில் தன் சொந்த நாட்டு மக்கள் மேல், உயிரியல் ஆயுதங்களை (Biological weapons) உபயோகித்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறையின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் கிளப்பர் (James Clapper) தெரிவித்துள்ளார். வரையறுக்கப்பட்ட அளவிலான உயிரியல் ஆயுதங்களை சிரியா தயாரித்துள்ளதெனவும், அதிலொரு பகுதி அந்த ஆயுதங்களின் செயற்திறனை வலுப்படுத்தும் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் இடம்பெறும் போரை நிறுத்தி அங்கு அமைதியைத் தோற்றுவிக்குமுகமாக, சம்பந்தப்பட்ட இரு குழுக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கென்வ்(F) (Genf) நகரில் பேச்சுவார்த்தை இடம் பெறும் சமயம் அமெரிக்கா இத்தகவலை வெளியிட்டுள்ளது. சிரியா தன் மக்கள் மேல் பல முறை இரசாயன ஆயுதங்களை உபயோகித்த கொடூரத்தையும் குறிப்பிடத் தவறவில்லை. Genf 1 ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டது போல் எதிரணியினரின் பங்களிப்போடு இடைக்கால ஆட்சி முறையைத் தோற்றுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அஷார் அலி அசாத் அரசின் நேரடிப் பெண் பிரதிநிதியான புதைன ஷாபன், (Buthaina Shaaban) அந்த ஒப்பந்தத்தில் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டமை, முழுப் பேச்சு வார்த்தைகளையும் சரித்து விழுத்துவது போலாகுமென, பேச்சுவார்த்தையை நடாத்தும் முக்கிய ஜ-நா பிரதிநிதி பிரஹிமி குறிப்பிட்டுள்ளார். இருந்தும் Genf 1 ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தாகவும், ஒப்பந்தம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் சிரியா அரசு சார்ந்த தொலைக்காட்சிகள் சிரியாவில் செய்திகளை ஒலிபரப்புகின்றன. அசாத்தில்லாத இடைக்கால அரசை அரசதரப்பினர் ஏற்கவில்லை. Homs நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி போதுமானதல்ல என்றும், பாதுகாப்பளிக்கப்பட்ட வாகன வசதிகளில் அவர்கள் ஏற்றிச் செல்லப்படல் வேண்டுமென்றும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுத் தெரிவிக்கிறது. உணவும், மருந்து வசதிக்களுமற்று இருந்த குழந்தைகளும், பெண்களும், நடக்க முடியாத அளவிற்கு மிகவும் வலுவிழந்து இருப்பதாக அமைச்சின் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அங்கு நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளைத் துருக்கி, ஈரான் அரசுகள் பொறுப்பேற்று செயற்படுத்த முன்வந்துள்ளது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி

2ஆம் இணைப்பு- ஜெனீவா தீர்மானம் - பிஸ்வால் சம்பந்தனுடன் பேசினார்-

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதி தம்முடன் பேச்சு நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார். இலங்கையின் எல்எல்ஆர்சி - நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் செய்யப்பட்ட பின்னர், மனித உரிமைகள் பேரவையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பின்னர் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நிஷா பிஸ்வால் கேட்டறிந்துகொண்டதாக சம்பந்தன் கூறினார். அரசாங்கத்தின் செயற்பாடுகள், இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தமது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அமெரிக்க உதவி வௌியுறவுச் செயலர் என்ன வகையான உறுதிமொழியை வழங்கினார் என்று தமிழோசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் வினவியது. 'அவர்கள் உறுதி மொழி வழங்குவதற்காக இங்கு வரவில்லை, அவர்கள் இங்கு வந்தது விடயங்களை அறிவதற்காக, அவர்களின் விஜயத்தை பூர்த்தி செய்யத்தக்க வகையில் சொல்ல வேண்டிய விடயங்கள் அத்தனையையும் சொல்லியிருக்கிறோம்' என்றார் சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் நீதித்துறை அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரை சந்தித்து நிஷா பிஸ்வால் பேச்சு நடத்தினார். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துப் பேசினார். மூன்று நாள் இலங்கை விஜயத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொள்ளும் நிஷா பிஸ்வால், திங்கட்கிழமை பிரிட்டனுக்கு வருகிறார். பின்னர் ஜெனீவாவுக்கும் பயணமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. பிரிட்டனும் அதற்கு ஒத்துழைக்கும் என்று உயர்மட்ட தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் அதிகாரிகளுக்கு இலங்கை விளக்கம்:-

ஜப்பானிய அதிகாரிகளுக்கு இலங்கை விளக்கம் அளித்துள்ளது.
ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் வசந்த கரன்னாகொட, பிரித்தானிய பிரதமரின் பிரதி அமைச்சரவைச் செயலாளர் ஹிரோஷிகி சேகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதலீடு, உட்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போத கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3ஆம் இணைப்பு - தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு- இலண்டன் 2014:-

பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் நேற்றுக் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழவில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம்செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டு தமது பங்களிபபை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வின் முதற்கட்டமாக பிரிததானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோரும் உரை நிகழ்த்தி ஆரம்பித்து வைவத்துள்ளனர்.

இராணுவத்தினரின் குற்றச் செயல்கள் குறித்த இரகசிய விசாரணை

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்பட உள்ளது. இலங்கை இராணுவமே இந்த விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
குற்றச் செயல்களில் ஈடுபடும் இராணுவத்தினர் குறித்து விசாரணை நடத்தப்படும் என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இராணுவ காவல்துஐறயினர் இந்த விசாரணைகளை நடாத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார். கண்டியில் சீமெந்து மோசடியில் ஈடுபட்டிருந்த சில இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கொலை,கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய படைத்தரப்பினர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமேன புலி ஆதரவு அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் அமைப்புக்கள் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபான்ட்டை சந்தித்த தமிழ் அமைப்புக்களும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா மட்டுமன்றி சுமார் நாற்பது நாடுகளின் ஆதரவினை திரட்டிக்கொள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவை ஜெனீவாவில் குண்டுகள் வெடிக்கின்றன – ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கை சுதந்திர நாடாக மாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் புறச்சக்திகள் தொடர்ந்தும் இலங்கையை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.மனித உரிமை என்ற போர்வையில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சி;க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற கடைசி மூன்று நாட்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருவதாகவும், இரண்டாம் உலகப் போரின் இறுதி இரண்டு நாட்கள் பற்றி கேள்வி எழுப்பினால் யார் குற்றவாளிகள் ஆவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் குண்டுகள் வெடிப்பதில்லை என்ற போதிலும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு தடவையும் ஜெனீவாவில் குண்டுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.யுத்த நிறைவின் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியைப் போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் அபிவிருத்தி ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த காரணத்திற்காகவும் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையும் படம் காட்ட உள்ளது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை வீடியோ ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த வீடியோ வெளியிடப்பட உள்ளது. இந்த வீடியோ 20 நிமிட காட்சிகளைக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த வீடியோவில் வெளிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் இந்த வீடியோ காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.