Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 23, 2013

ரஷ்யாவில் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் எண்ணெய் வர்த்தக செல்வந்தர் மிக்ஹையில் கதர்கோவ்ஸ்கி

ரஷ்யாவில் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் எண்ணெய் வர்த்தக செல்வந்தர் மிக்ஹையில் கதர்கோவ்ஸ்கி, அரசியல் கைதிகளுக்காக தம்மால் முடிந்தவற்றை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். பேர்லினில் ஊடகவியலாளர்கள் பலர் முன்னிலையில் பேசிய கதர்கோவ்ஸ்கி, அனேகமான அரசியல்கைதிகள் ரஷ்யாவிலேயே இருப்பதாகக் கூறினார். ஷ்யாவிலிருந்து திரும்பி வர முடியும் என்ற உத்தரவாதம் கிடைக்காவிட்டால் அங்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை விடுவிக்க உதவியமைக்காக ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கலுக்கு அவர் நன்றி கூறினார். மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதில்லை என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார். மோசடி மற்றும் வரி ஏய்ப்புக் குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், அரசியல் நோக்கத்துடனேயே தன்மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

தெற்கு சூடான்: வன்முறைகளை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை

தெற்கு சூடானில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு மோசமடைந்துவரும் மோதல் நிலைமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிபர் சல்வா கீயரரும் அவரது எதிர்ப்பாளர் ரீக் மஷாரும் பிரச்சனைகளுக்கு அரசியல் வழிமுறையில் தீர்வுகண்டு கொள்ளவேண்டும் என்றும் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு விசுவாசமான கிளர்ச்சிப் படையினர் முக்கிய எண்ணெய் வளப் பிராந்தியத்தை கைப்பற்றியுள்ளதாக முன்னாள் துணை அதிபர் மஷார் கூறுகிறார். தெற்கு சூடானிலுள்ள தமது தொழில் சகாக்கள் பலபேர் கழுத்து வெட்டப்படும் கற்பாறைகளில் தலை மோதப்பட்டும் கொலையுண்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ள வெளிநாட்டு எண்ணெய் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்னர் வெடித்த வன்முறைகளுக்குப் பின்னர் சுமார் 60 ஆயிரம் பொதுமக்கள் அவர்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா எயிட்ஸ்' பற்றிய டுவிட்டர் குறிப்பால் சர்ச்சை

ஆப்பிரிக்காவில் உள்ள எயிட்ஸ் நிலைமை பற்றி சமூகவலைத் தளமான டுவிட்டரில் வெளியாகியிருந்த கருத்தொன்று (comment) இணைய தளங்களில் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க பொது விளம்பர நிறுவனமொன்றைச் சேர்ந்த அதிகாரியின் டுவிட்டர் கணக்கில் இருந்தே இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியுள்ளது. ஐ-ஏ-சி- என்ற பெரும் விளம்பர ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சாக்கோ என்ற அந்த அதிகாரியின் டுவிட்டர் பக்கத்தில், 'ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். எனக்கு எயிட்ஸ் தொற்றாது என்று நம்புவோமாக. விளையாட்டாகச் சொல்கிறேன். நான் வெள்ளையினத்தவர்! '(going to Africa. Hope I don't get Aids. Just kidding. I'm white!) என்று கருத்தொன்று வெளியாகியிருந்தது. இந்த டுவீட் குறிப்பை சாக்கோ தான் பதிவு செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளதா, அதாவது யாராவது அத்துமீறி திருட்டுத் தனமாக அவரது கணக்குக்குள் நுழைந்து இந்தக் குறிப்பை பதிவுசெய்துள்ளார்களா என்று தெரியவில்லை. இந்த சர்ச்சைக்குரிய குறிப்புகள் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. அத்தோடு ஐஏசி நிறுவனமும் இந்தக் கருத்துப் பதிவைக் கண்டித்துள்ளது. குறித்த கண்டனம் வெளியாகியிருந்த சந்தர்ப்பத்தில் தமது பணியாளர் ஜஸ்டின் சாக்கோ வெளிநாட்டு விமானமொன்றில் பயணித்துக்கொண்டிருப்பதால் அவரது கருத்தைப் பெறமுடியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ஆப்பிரிக்காவை வந்தடையும்வரை டுவிட்டர் பாவனையாளர்களும் காத்திருக்கிறார்கள். 'ஜஸ்டின் வந்திறங்கிவிட்டாரா?' என்று டுவிட்டர் பாவனையாளர் ஒருவர் தனது பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

புல்மோட்டை முஸ்லிம்களின் 500 ஏக்கர் காணி கடற்படைக்கு'

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடாவில் முஸ்லிம்களின் பயிர்ச்செய்கை காணிகள் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தொடர்ந்தும் கையகப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் தெரிவிக்கின்றார். போர்க் காலத்தில் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தற்போது அங்கு தற்காலிக கொட்டில்கள் அமைத்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இப்போது, குறித்த காணியில் தானியச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களின் எல்லை வேலிகளையும் கொட்டில்களையும் அகற்றிவிட்டு, இம்மாதம் 25ம் திகதிக்கு முன்னதாக வெளியேறுமாறு திருகோணமலை மாவட்ட உதவி காணி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 'கடற்படையின் தேவைக்கு' என அடையாளமிடப்பட்டிருந்த காணியில் தற்போது 'கடற்படைக்குச் சொந்தமான காணி' என்ற அறிவிப்பு பலகைகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன. இன்று வெள்ளிக்கிழமை வனஜீவராசிகள்- வனத்துறை ,காணி உட்பட பல்வேறு துறைசார் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட சென்றிருந்த போது, பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகினறது. கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக 193 ஏக்கர் காணி தேவை என பிரதேச செயலாளர் ஊடாக கிழக்கு மாகாண காணி பகிர்தளிப்பு குழுவிற்கு மனுச் செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், குறித்த காணிக்கான அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில் 500 ஏக்கருக்கு மேல் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு பெற முற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காணி அனுமதி பத்திரத்திற்காக காணி தினைக்களத்தில் ஏற்கனவே மனுச் செய்துள்ளதை இன்று வருகை தந்த அதிகாரிகளிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

முற்றுகிறது மீனவர் பிரச்சினை; உண்ணாவிரதம் தொடர்கிறது

இலங்கைத் தரப்பால் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். நாகபட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 64 கிராமத்து மக்களும் அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளும் இணைந்து இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போரட்டக் குழுவைச் சேர்ந்த மோகன் தாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள தமது 70 படகுகள்,மற்றும் சிறையில் இருக்கும் சுமார் 200 மீனவர்கள் விடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மற்றும் தஞ்சைப் பகுதி மீனவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வருடன் சந்திப்பு தொடர் உண்ணாவிரதத்தில் சுமார் 3000 பேரும், ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10,000 பேரும் இதில் பங்குபெறுவதாக மோகன் தாஸ் கூறுகிறார். இந்தியா-இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தீர்வில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறன என்றும், இதற்கு முடிவு காண இந்திய அரசு போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. இதனிடையே இப்பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் திங்கட்கிழமை(23.12.13) தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும், அதன் பிறகே போராட்டம் குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மோகன் தாஸ் தெரிவித்தார். இதனிடையே இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்திய அமைச்சர் ஷரத் பவாரை சந்திக்க புதுடில்லி செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன