Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, October 29, 2013

ராகுல் மீது நடவடிக்கை:தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., புகார்

புதுடில்லி: மத உணர்வுகளைத் தூண்டி, மத கலவரம் ஏற்படும் வகையில் பேசிய, காங்., துணை தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம், பா.ஜ., தலைவர்கள், நேற்று புகார் அளித்தனர். காங்., துணை தலைவர் ராகுல், ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலங்களில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். அப்போது, சமீபத்தில், மத கலவரம் நடந்த, உ.பி.,யின் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த, முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்: இந்திய முன்னாள் அமைச்சர்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துக்காக அவர் நியாயத்தையும் முன்வைத்துள்ளார். இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து நேற்று புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய மணிசங்கர் ஐயர், இலங்கையின் போரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது எனவே அந்த நாட்டுடன் பகையை ஏற்படுத்திக் கொண்டால் அது இலங்கை தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வலி. வடக்கில் தமிழர் வீடுகளை இடித்து 6500 ஏக்கரிலும் இராணுவக்குடும்பங்களின் குடியிருப்பு

தமிழர் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் உள்ள பொதுமக்களது வீடுகளை அண்மைக்காலமாக இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில தலையீடுகளினால் அது நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மூன்று தினங்களாக படையினர் மீண்டும் வீடுகளை இடித்தழிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். அதனை நேரடியாக பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபையைச் சேர்ந்த உறுப்பினர்களும் நேற்று அங்கு சென்றிருந்தனர். இவர்கள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த பேர்து அங்கு வந்த இராணுவ அதிகாரிகள் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்போது அவர்களைப் படம்பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளும் அவர்களால் பலவந்தமாக பறிக்கப்பட்டு படங்களும் அழிக்கப்பட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வலி. வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டு வருவதாக தகவல் அறிந்து நேரடியாக பார்வையிடுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன் , வலி வடக்கு உப தவிசாளர், வலி தெற்கு தவிசாளர் மற்றும் நகர , பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றிருந்தோம். அங்கு சென்ற நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு செல்லவில்லை. இராணுவத்தினர் எல்லைப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியே அதாவது மக்கள் பகுதியில் தான் நின்றிருந்தோம். அப்போது ஒரு வீடு எங்கள் கண் முன்னே புள்டோசரால் இடிக்கப்படுவதைக் கண்டோம். அவற்றை நாம் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர்கள் அவற்றை படம் பிடித்துக் கொண்டு நின்றனர். அப்போது தான் ஒரு பிரிகேடியர் என்று கூறிக் கொண்டு மிக வேகமாக அவ்விடத்திற்கு வந்த அதிகாரி உள்ளிட்ட இராணுவத்தினர் எங்களுடன் வாக்குவதாத்தில் ஈடுபட்டார். அத்துடன் இங்கு படம் எடுக்க முடியாது. படங்கள் எல்லாவற்றையும் அழியுங்கள் என்றும் அச்சுறுத்தும் பாணியில் கூறினார். அப்போது குறித்த இராணுவ அதிகாரி இங்கு இராணுவத்தினரின் முகாம் உள்ளது. பார்க்கத்தெரியவில்லையா உங்களுக்கு நீங்கள் படம் எடுக்க கூடாது என்றார். அதன்போது அவருடன் வந்திருந்த இராணுவத்தினர் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கிப் சென்று அவர்களின் புகைப்படக் கருவிகளை பலவந்தமாக பறித்து அதில் இருந்த படங்களையும் அழித்துக் கொண்டார். அவர்கள் எம்முடன் வந்து வாக்குவாதப்பட்ட இடம் இராணுவத்தினரால் போடப்பட்ட எல்லைக்கு வெளியே. நாமும் அவர்களும் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அதன்போது குறித்த அதிகாரி தேவைப்பட்டால் தனது அதிகாரத்தைப் பாவித்து இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என என்னையும் என்னுடன் நின்றிருந்தவர்களையும் மிரட்டியதுடன் காட்டுமிராண்டித் தனமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தார். இது நாடாளுமன்ற உறுப்பினரான எனது சிறப்புரிமையினை மீறுகின்ற செயலாக அமைகின்றது. தொடர்ந்தும் அவரிடம் கேட்டிருந்தோம் இவ்வாறு உங்களின் இடங்களில் செய்வீர்களா என்று அப்போது அவர் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா இராணுவத்தினரையும் இங்கேயே கொண்டுவரப் போவதாகவும் அவர்களது குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்படவுள்ளது என்றார். அப்போது தான் 6500 ஏக்கரிலும் இராணுவ குடும்பங்களுக்கும் வலி.வடக்கில் வீடுகள் அமையவுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் அரசாங்கம் இங்கு எங்குமே உயர்பாதுகாப்பு வலையம் ஒன்று இல்லை என எமக்கும் சர்வதேசத்திற்கு கூறிவருகின்ற நிலையில் குறித்த அதிகாரியின் நடவடிக்கை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறியாக தென்படவில்லை. இதனை நான் அவருக்கும் நேரடியாக கூறினேன். எனினும் அவர் நீங்கள் மேலிடத்தில் போய் கூறுங்கள் இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது என வர்த்தமாணியில் அறிவிக்கப்பட்டு விட்டது என தெளிவாக கூறினார் என்றார்.

மௌனம் எப்போது கலையப் போகிறது? -

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிரச்சினைக்குரிய விற்பனைப் பொருளாக இப்போதிருப்பது பொதுநலவாய மாநாடு. இது நடைபெறுவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இம்மாநாடு உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இந்த திகதித் தெரிவு மிக முக்கியமானது. மாநாட்டின் முடிவுக்கு அடுத்த நாள் – நவம்பர் 18ஆம் திகதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 68வது பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளான நவம்பர் 19, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எட்டாவது ஆண்டுக் கொண்டாட்ட நாள். மாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி தமது பிறந்தநாளையும், ஜனாதிபதி பதவியேற்பு நாளையும் பெருவிழாவாகக் கொண்டாட மிக நுட்பமாகத் திட்டமிட்டு மாநாட்டுக்கான நாட்களை மகிந்த தெரிந்தெடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் மாநாடு மற்றொரு நாட்டில்(அனேகமாக மொறிசியஸ் நாட்டில்) நடைபெறும் வரை பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருக்கப் போகின்றவரும் மகிந்த ராஜபக்சவே. அந்த வகையில் மாநாட்டையும் அதன் தொடர் நிகழ்ச்சிகளையும் புதிய பதவியையும் சரியாகக் கணக்கிட்டு அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஒபாமாவின் டுவிட்டர் , பேஸ்புக் இணைப்புகளை முடக்கிய சிரியா அதிபரின் ஆதரவாளர்கள்

வாஷிங்டன்: நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களை சில மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள். இதனால், இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.