Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, November 16, 2013

வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை!

வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி திருட்டுத்தனமாக பார்த்த 80 பேருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்தது. இதனையடுத்து கடந்த 3ம் திகதி 7 நகரங்களில் அந்த 80 பேர் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, துறைமுக நகரான வான்சனில் சுமார் 10,000 பொது மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு அரசு அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். இவர்கள் முன்னிலையில் இந்த கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்! தொல்.திருமாவளவன்

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்கா பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை. சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப்படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினைவிடத்தை எழுப்பியவர்களுக்கு போதிய காலக்கெடுவையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு சுற்று சுவர் இடிப்பு சீமான் மதுரையில் ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமையினை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததாக கூறி நினைவு முற்றம் அகற்றப்பட்டது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் கலந்து கொண்டு பேசியதாவது:– தமிழ் சமுதாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடித்து அகற்றப்பட்டது. பழ.நெடுமாறனை கைது செய்ததும் கண்டனத்துக் குரியதாகும்.இந்த இடிப்பு நிகழ்வுக்கு முன்தினம் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இச்சுவரை இடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதை சட்டப்படி எதிர்கொள்வோம். காமன்வெல்த் மாநாட்டிற்கான எதிர்ப்பை திசை திருப்புவதற்கே முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டு இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது. ஈழப் போர் நடக்கும்போதும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும் ஒருவர் கூட பதவி விலகவில்லை. இதில் கருணாநிதி ஜெயலலிதா என பேதம் இல்லை. எந்த அதிகாரம் நம்மை அடிமையாக்குகிறதோ அந்த அதிகாரத்தை இனிவரும் காலத்தில் இல்லாமல் ஆக்குவோம்.

‘விரைந்து போர்க்குற்றங்களை விசாரிக்குக: தவறினால் பன்னாட்டு விசாரணை!’ – சிங்கள அரசுக்கு பிரித்தானியப் பிரதமர் எச்சரிக்கை

இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தோன்றும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘விரைந்து போர்க்குற்றங்களை விசாரிக்குக: தவறினால் பன்னாட்டு விசாரணை!’ – சிங்கள அரசுக்கு பிரித்தானியப் பிரதமர் எச்சரிக்கை நவ 16, 2013 1 இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தோன்றும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் முகாமில் வைத்து வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கென்று கடந்த காலங்களில் சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு விசாரணைக் குழுவும் உருப்படியான தீர்ப்பை வழங்கியதில்லை என்பதை சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ சுட்டிக் காட்டிய பொழுது அதற்குப் பதிலளித்த பிரதமர் கமரூன், இராணுவத்தினரைப் பயன்படுத்தி விசாரணைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருப்பதாகப் பதிலளித்துள்ளார். http://www.channel4.com/news/sri-lanka-jaffna-tamil-david-cameron-chogm-protest-video

சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பொது மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் காவல்துறையினர் மனிதாபிமானமின்றி மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களால் பல பெண்கள் உடற்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் கடும் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆண் காவல்துறையினர் பெண்களின் மார்புப் பகுதிகளில் பிடித்திழுத்து அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் இங்கு காணாமற்போனோhரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தின்போதே சிறிலங்கா காவல்துறையினர் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கின்றனர். பிரித்தானியப் பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதல் நவ 16, 2013 யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பொது மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் காவல்துறையினர் மனிதாபிமானமின்றி மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களால் பல பெண்கள் உடற்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் கடும் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆண் காவல்துறையினர் பெண்களின் மார்புப் பகுதிகளில் பிடித்திழுத்து அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் இங்கு காணாமற்போனோhரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தின்போதே சிறிலங்கா காவல்துறையினர் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கின்றனர். பிரித்தானியப் பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, இராணுவத்தால் கணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் கதி இன்னமும் என்ன என்று தெரியாத நிலையிலுள்ள அவர்களின் மனைவியர், மனைவியர் கடத்தப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் கணவர்கள், அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள், சசோதரர்களைப் பறிகொடுத்தோர் என்றவாறாக நூற்றுக்கணக்கானோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். சில சுலோகங்களைக் கையில் தாங்கியிருந்த அவர்கள் காணாமற்போன தமது உறவுகளின் புகைப்படங்களையும் கைகளில் வைத்திருந்தனர். அவர்கள் காலை தொடக்கம் தமது உறவுகளை நினைத்து கதறியவாறு இருந்ததால் பெரிதும் களைத்துப்போயிருந்தனர். நீராகாரம் கூட இல்லாததால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த நிலையில் பிற்பகல் வேளை பிரித்தானியப் பிரதமர் யாழ்.பொது நூலகத்திற்கு வருகை தந்ததை அறிந்து அவரிடம் தமது மனக்குமுறல்களைத் தெரிவிப்பதற்காக இவர்கள் எழுந்து சென்றனர். இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழுவொன்றும் அங்கு திடீரெனக் குழுமி நின்று “நாங்கள் இந்த நாட்டில் ஒரே மக்களாக ஒற்றுமையாக வாழ்கின்றோம். எங்களுக்குள் பிரச்சினைகள் இல்லையென்று” கோசங்களை எழுப்பினர். இவர்களில் சிலர் சற்று நேரத்தில் காணாமற்போனோரின் கவயீர்ப்புக்குள் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தினர். அங்கு வந்த சனல் 4 செய்தியாளர்களின் வாகனத்தை இவர்கள் தாக்க முற்பட்டனர். காணாமற்போனோருக்காக போராட்டம் நடத்தியவர்களே வாகனத்தை தாக்கியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு விழட்டும் என்று கருதிய மகிந்தவின் அடிவருடிகள் இந்தச் செயல்களின் ஈடுபட்டனர். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே சிறிலங்கா காவல்துறையினர் காணாமற்போனோரின் உறவினர் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களைத் தள்ளி வீழ்த்திய ஆண் காவல்துறையினர் அவர்களை சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சிலரது கழுத்துக்களை பிடித்து திருகியிருக்கின்றனர். காணாமற்போன தனது தமையனின் படத்தைத் தாங்கியிருந்த 13 வயதுச் சிறுமி ஒருத்தி மீதும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அந்தச் சிறுமியைத் தள்ளி வீழ்;த்திய காவல்துறையினர் அவளைக் காலால் ஏறி மிதித்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆண் காவல்துறையினர் பெண்களின் நெஞ்சில் (மார்பகங்கள் மீது) பலமாகத் தாக்கியுள்ளனர். பெண்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக்கேட்கச் சென்ற வடக்கு மாகாண சபையின் பெண் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் தன்னைத் தள்ளி வீழ்த்தியதாகவும் அவர்களின் நான்கு அடி தன் மீது பலமாக வீழ்ந்ததாகவும் அனந்தி தெரிவித்தார். இந்தத் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் தெரிவித்தார். பெண் காவல்துறையினர் இல்லாமல் அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆண் காவல்துறையினர் அங்கு கவனயீர்ப்பை நடத்திய பெண்கள் மீது தமது குரூரங்களை அரங்கேற்றியதாகவும் அனந்தி ஆவேசமாகத் தெரிவித்தார். இதேவேளை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ரவிகரன், கஜதீபன், சயந்தன் போன்ற பல உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டனர். இவர்களும் சிறிலங்கா பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் சிக்கியிருக்கின்றனர்.