Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, November 27, 2013

13ஆவது அரசமைப்பின்படி அதிகாரங்களை வழங்க வேண்டும் - அஸாத் சாலி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. அதே போன்றே 13 ஆவது அரசமைப்புத் திருத்தமும் செய்யப்பட்டது. இதற்கிணங்க 13ஆவது அரசமைப்பின்படி அதிகாரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி, பள்ளேகலையில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- நான் தமிழ் மக்களைப் பற்றியும் முஸ்லிம் மக்களைப் பற்றியும் பேசுகின்றேன். அதனால் நான் இனவாதி ஆகிவிடுவேனா? மத்திய மாகாண மக்களின் நிதியில் நடத்திய கூட்டங்களுக்கான செலவு 60 கோடி ரூபா. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் ஏதாவது என்றாவது நடைபெற்றதா? மத்திய மாகாண சபை மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை திருப்திகரமாகவும் முறையாகவும் செய்வதாகத் தெரியவரவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் தொடர்பான எந்தவித தகவல்களும் அது நிறைவேற்றப்பட்ட பின் வெளியிடப்படுவதில்லை. பிரேரணைகள் தொடர்பாக எந்தவித மீள் பரிசீலனைகளும் செய்யப்படுவதில்லை. உரிய அதிகாரிகளும் இவை தொடர்பாக சபைக்கு அறிவிப்பதில்லை - என்றார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்: விஜயகாந்த் பேட்டி

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 11 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:– டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சென்னை கடற்கரை ரோட்டில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப் பார்க்கிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அகற்ற வேண்டிய சிலைகள் ஏராளமாக உள்ளன. அந்த சிலைகளை அகற்றுவதற்கு பதில் சிவாஜி சிலையை அகற்றுவதில் மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு புகழாரம்: தமிழ் எம்.பி.ஸ்ரீதரன் பேச்சு

இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் புகழாரம் சூட்டினார். இலங்கை பாராளுமன்ற கூட்டம் கொழும்புவில் நடந்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சிவஞானம் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டினார். பாராளுமன்றத்தில் அவர் பேசியதாவது:– விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் நியாயமானது. அதில் தவறில்லை. அவரது பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளது. மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த மற்ற போராளிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக கருதப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் தமிழ் மற்றும் சிங்கள தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி மந்திரி குற்றம் சாட்டினார். மந்திரி வாசுதேவ நாணயக்காராவும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபாகரன் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. ஆற்றிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே பிரபாகரன் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் அவர் உரையாற்றிய சில பகுதிகள் நீக்கப்பட்டன. எனவே பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி. பேசிய உரையின் முழு பகுதியும் இலங்கை பாராளுமன்ற இணையதளத்தில் பிரசுரிக்கப்படவில்லை.

மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும்- வைகோ !

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், “குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத்துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றிலும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது தமிழக மக்களையும், ஏன்? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கும் விதத்தில், இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் கேரளத்தைச் சேர்ந்த தியாகராஜன் வாக்குமூலம் தந்துள்ளார். மனித மனங்களை உருக்கும் உணர்ச்சிமயமான ஒளிப்படமான “உயிர்வலி”யில் தியாகராஜன் தன் மனசாட்சியைப் பாரமாக உலுக்கிக் கொண்டிருந்த உண்மையை இப்போது கூறுவதாகவும், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமாக நான் பதிவு செய்தபோது, பேட்டரி செல்கள் எதற்கு என்னை வாங்கச் சொன்னார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியதை தான் பதிவு செய்யவில்லை என்றும், பேரறிவாளனின் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரண தண்டனையில் இருந்து அவர் விடுபடுவார் என்று நினைத்ததாகவும், தற்போது அவர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பதால், தன் நெஞ்சில் உறுத்தும் முள்ளாகிய இந்த உண்மையைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். பொய்யின் அடிப்படையிலேயே வழக்கு சோடிக்கப்பட்டது என்று இந்த வழக்கு விசாரணையின்போது, என்னைப் பிரண்ட சாட்சியாக அரசு வழக்கறிஞர் அறிவித்த நேரத்தில் நான் ஆணித்தரமாகக் கூறினேன். முருகன், சாந்தன் மீதும் இட்டுக்கட்டிய பொய்களை காவல்துறையிடம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலமாக்கி, இந்த வழக்கைப் புனைந்தனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தியாகராஜனுடைய வாக்குமூலத்துக்குப் பிறகாவது மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் நீதி குழிதோண்டிப் புதைக்கப்படாமல் இருக்க, குடியரசுத் தலைவருக்கு உண்மையை தெரிவித்து, மூவரின் மரண தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும். ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது என்பதுதான் அந்த உண்மையாகும். அநீதியின் கொடுங்கரங்கள் அவர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்காமல் காக்க அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை: பணம் - பாஸ்போர்ட்டும் பறிபோனது

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கின் வீடு லாகூரில் உள்ளது. நேற்று அதிகாலை குளியலறை ஜன்னல் வழியாக இவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர். வீட்டினுள் இருந்த இரும்பு லாக்கரை உடைத்து திறந்தால் சத்தம் கேட்கும் என யூகித்து லாக்கரையே 'அபேஸ்' செய்த கொள்ளையர்கள் முன்வாசல் வழியாக வெளியேறினர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக லாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள அப்துல் ரசாக், 'லாக்கரின் உள்ளே சுமார் ஒரு கிலோ தங்கம், 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 2 ஆயிரத்து 500 பிரிட்டிஷ் பவுண்டுகள், சில ஆவணங்கள் மற்றும் என்னுடைய பாஸ்போர்ட்டும் இருந்தன' என தெரிவித்துள்ளார்.

தடையையும் மீறி சீன கடல் எல்லையின் மேல் பறந்து அமெரிக்க போர் விமானங்கள் சாகசம் ..

கிழக்கு சீனாவின் கடல் எல்லைக்கு மேலே எந்த நாட்டின் விமானங்களும் பறக்க கூடாது. அவ்வாறு பறக்க நேரிட்டால் எங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். என சமீபத்தில் சீனா எச்சரிக்கை செய்து தடை அறிவிப்பு வெளியிட்டது. கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட வான்எல்லை வழியாக 2 போர் விமானங்களை அமெரிக்க பறக்க வைத்துள்ளது. சீனாவுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் பி.52 எனப்படும் 2 குண்டுவீச்சு போர் விமானங்கள் சீன ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வெற்றிகரமாக பறந்து பத்திரமாக திரும்பி வந்துள்ளன. இது தொடர்பாக கருத்து கூறிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்கன் செய்தி தொடர்பாளர் 'குவாமில் இருந்து ஓர் போர் விமானம் புறப்படும் அதே வேளையில் இன்னொரு போர் விமானம் குவாமை வந்தடையும் வண்ணம் ஒத்திகை பார்க்க நாங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தோம். நேற்றிரவு அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது' என்று கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சீன அரசு எந்த பதில் அறிக்கையோ, செய்தியோ வெளியிடவில்லை.