Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, November 5, 2013

நாமக்கல்லில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூரில் நவம்பர் 9ம் தேதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க தகுதியான நிறுவனங்களுக்கு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நவ.9ம்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க குறைந்தபட்சி கல்வித்தகுதியாக 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பட்டய, பட்டப்படிப்புகள் பயின்றவர்கள், திறன் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். முகாமில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய அனைத்து தொழில்நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்குத்தேவையான இளைஞர்களை தேர்வு செய்யலாம். முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள சிறு மற்றும் பெரிய தொழில்நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் பெயரினை நவ.7ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பட்டினிப் போரை சுப்ரமணியம் பரமேஸ்வரன் தொடங்கியுள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலை பாதிக்குமா ?

துடில்லி : நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையாது என அரசியல் வட்டார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தலின் அரையிறுதி போட்டி என்ற கருத்தே பரவலாக நிலவி வருகிறது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்கையில் அதிர்ச்சி தரும் வகையிலான முடிவுகளே வெளியாகி உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டீஸ்கர், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இம்மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, லோக்சபா தேர்தலில் 75 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளன. அதே சமயம் தோல்வி அடைந்த கட்சி லோக்சபா தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் வரவும் வாய்ப்புக்கள் உள்ளது.

திங்கள் முதல் இலண்டனில் தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன்

சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.

மக்கள் குடிநீரின்றி தவிக்கும் போதும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - கிழக்கில் இருந்து எழுவான்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தில் உயிர்வாழ்க்கைக்கு தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில், 2014 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவு 1.95 பில்லியன் டொலரை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை போய் தற்போது, நீராகரத்தையாவது நிறைவு செய்து தருமாறுதான் தற்போது மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சிறீலங்கா அரசபடைகளின் கோரத்தாக்குதல்களினால் உயிர்களையும், அனைத்து வளங்களையும் இழந்த தமிழர்கள் இன்று குடிநீருக்கு கூட அல்லலுரும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடவும், போர் முடிவடைந்து நான்கு வருடம் கடந்த போதும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்தச் செலவில் 12 வீதம் ஆகும். அதாவது, தேசிய பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் மகிந்தவுக்கும் அவரின் சகோதரர் கோத்தாபாயவுக்குமான நிதி ஒதுக்கீடு 253,911 கோடியே 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக மதிப்பீடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் படைகளின் அடாவடித்தனங்களின் அழிவுகளினாலும், இயற்கையனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள் இன்று குந்துவதற்கு கூட ஒரு குடிசையில்லாத இவர்கள் தமது தாகத்தை தீர்ப்பதற்கும் நீரின்றி தவிக்கின்றனர்.