Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 3, 2014

மன்னார் மனிதபுதைகுழி இன்று தோண்டப்பட்டுள்ளது!

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள மனித புதை குழி இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டது மேலும் பல மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது (படங்கள்) மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டது. ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்,சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. -இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவு படுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டது. குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்ப
தாக மதிமுக வட்டாரத்திலிருந்து புகார் !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்ப
தாக மதிமுக வட்டாரத்திலிருந்து புகார் கிளம்பியிருக்கிறது.
அதிமுகவினரே அதிசயித்துப் போகுமளவுக்கு அந்தக் கட்சிக்கு ஆதரவு வைகோ. ஆனால், அரசியல் சூழலால் அண்மைக்காலமாக அதிமுக முகாமைவிட்டு ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். இதனால், “அங்கே போகக்கூடாது.. இங்கே போகக்கூடாது” என வைகோவுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்து வருகிறது தமிழக போலீஸ்! 
அதிரடி தாக்குதல்
 இதையடுத்து தமிழக அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார் வைகோ. இதன் உச்சபட்சமாக, அண்மையில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த வைகோ, ‘அதிமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை’ என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். அன்று இரவே இன்னொரு காட்டமான அறிக்கையை விடுவித்த வைகோ, “அ.தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்” என்று அதிரடி தாக்குதல் நடத்தினார். 
இதுகுறித்து மதிமுக வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கி புதிய வெற்றிக் கூட்டணியை உருவாக்குவதற்கு வைகோ சில முயற்சிகளை எடுத்துவருகிறார். இது ஆளும் தரப்புக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர் மீது சிறுகச் சிறுக அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார்கள். குறிப்பாக உளவுத் துறையினர் வைகோவை முடக்கிப் போடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். போலீஸ் முட்டுக்கட்டை 
தூத்துக்குடி கட்டபொம்மன் விழாவுக்கு விருதுநகரில் இருந்த வைகோவை போகவிடாமல் தடுத்தது போலீஸ். கிராமங்களில் வைகோ மேற்கொண்டுவரும் மறுமலர்ச்சிப் பிரசாரப் பயணத்துக்கும் போலீஸ் தரப்பிலிருந்து ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். இதையெல்லாம் மனதில் வைத்துதான், ’திமுக ஆட்சியில் ஜாபர் சேட்டுகள் இருந்ததுபோல் இந்த ஆட்சியிலும் சில ஜாபர்சேட்டுகள் இருக்கிறார்கள்’ என தலைவர் வைகோ பகிரங்கமாகவே பேசினார்.
 சேலம் மத்தியச் சிறைச்சாலைக்கு கொளத்தூர் மணியைப் பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை வைகோ சென்றிருந்தபோது, சிறைக் கண்காணிப்பாளர் அறைக்கே வந்த உளவுத் துறையினர், ‘நீங்கள் கொளத்தூர் மணியிடம் பத்து நிமிடங்கள்தான் பேசவேண்டும்’ என கட்டளை போட்டார்கள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த வைகோ, ‘இதைச் சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?’ என்று பொங்கித் தீர்த்துவிட்டார். 
கண்காணிப்பில் வைகோ!
 “வைகோவின் செயல்பாடுகள், அலைபேசி தொடர்புகள் உள்ளிட்டவைகளை மாத்திரமின்றி, மதிமுக முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் அலைபேசி தொடர்புகளும் கண்காணிக்கப்படுகின்றன. உளவுத்துறையின் சதியால் விரைவிலேயே வைகோ ஏதாவதொரு வழக்கில் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாய்ப்பேச்சை வைத்து இதைச் சொல்லவில்லை. நம்பத்தகுந்த தகவல்கள் வந்திருப்பதால்தான் சொல்கிறோம்’’ என்கிறார்கள். source http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article5323259.ece?fb_action_ids=509234542508089&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map=[331725973632455]&action_type_map=[%22og.likes%22]&action_ref_map=[]

உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் எக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஜி 9 திசு வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர். சராசரியாக 1 எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும் குறைந்தபட்ச சாகுபடி அளவே 90 டன் என்ற நிலையில் உள்ளது. இந்தியாவின் சராசரி வாழை சாகுபடி திறன் எக்டேருக்கு 50 டன்கள் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை 68 டன் விளைச்சல் எடுத்து இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. உலக அளவில் பிரேசில், ஈக்வடார், போஸ்டாரிகா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்திருந்தன. தேனி மாவட்ட விவசாயிகள் சராசரியாக எக்டேருக்கு 120 டன் விளைவித்து உலக நாடுகளின் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணைஇயக்குனர் முருகன் கூறியதாவது, தேனி மாவட்டத்தில் காமையகவுண்டன்பட்டியில் ஏராளமான விவசாயிகள் 120 டன் மேல் வாழை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் உலகளவில் வாழை விளைச்சலில் தேனி மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் ஒரு விவசாயி 150 டன்–க்கு மேல் விளைச்சல் எடுத்துள்ளார். இது உலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத சாதனை. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அந்த விவசாயி தோட்டத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

பாகிஸ்தானில் சிவன் கோயில் திறக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து 60 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் அங்கு தமது மத வழிபாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அங்கு கடாஸ்ராஜ் என்னும் இடத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆலயத்தை திருத்தி அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்துக்கள் அங்குள்ள சிவன் ஆலயத்தில் தமது வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள்.

திருமண வயது: பாமக கோரிக்கைக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக மத்திய அரசுக்கு கோரிக்கை. வியாழனன்று சென்னையில் நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்துகொண்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துச் செய்யத் தகுந்தவை என்று அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் பரிந்துரைந்திருந்ததாக தெரிவித்திருக்கும் பாமக பொதுக்குழுவின் தீர்மானம், அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் நடக்கும் காதல் திருமணங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைவதாகவும், காதல் செய்யும் பெண்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்வுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பது தான் இதற்கு காரணம் என்றும் கூறும் பாமகவின் தீர்மானம், “ஒரு பெண்ணின் காதல் திருமணம் தோல்வியடையும் பட்சத்தில் அப்பெண்ணும், அவரது பெற்றோரும் தான் வாழ்க்கை முழுவதும் துயரப்படவேண்டும். திருமணத்திற்கு பிறகுதான் தாங்கள் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு, பின்னர் வருந்தும் தவறை செய்துவிட்டோம் என்பதை உணர்கிறார்கள். ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்” என்றும் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் தங்களின் மகள் மகிழ்ச்சியான மணவாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சட்டப்படி விதிக்க வேண்டும் என்றும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய அமைப்புக்கள் எதிர்ப்பு இந்த தீர்மானம் பெண்களுக்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது என்று விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திதிய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், அதிகரித்துவரும் ஜாதி மறுப்பு திருமணங்களை தடுத்து, ஒரே ஜாதிக்குள் பெண்களை பலவந்தமாக திருமணம் செய்விக்கும் பழமைவாத செயலுக்கு இந்த தீர்மானம் வக்காலத்து வாங்குவதாக கூறினார். 21 வயது வரம்பு என்பதை பெண்களுக்கு மட்டும் விதிக்கும் பாமகவின் போக்கு அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதுடன், தற்போது நிலவும் கள யதார்த்த நிலவரத்தையும் அது புறந்தள்ளுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்களில் பெண்களின் வயது பதினெட்டுக்கும் குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக கூறிய சுதா சுந்தரராமன், இப்படியான இளவயது திருமணங்களை தடுக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் போராடிக்கொண்டிருக்கும்போது பெற்றோர் சம்மதத்துடனே பெண்களின் திருமணம் நடக்கவேண்டும் என்று பாமக கோருவது, பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை பறிக்கும் செயல் என்கிறார் அவர்.

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்:-

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 29 அன்று பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் மீனவர்கள் 18 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். மேலும் மூன்று மாதங்களாக தமிழக மீனவர்கள் 256 பேர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். மேலும் மீனவர்களின் 81 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீனவப் பிரச்சினை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம், பாம்பன், நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்களின் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது என கூறி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன. மீனவர்கள் பாரம்பரியமாக தாங்கள் மீன் பிடித்து வரும் கச்சத்தீவு பகுதிகளில் தொடந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாம்பன் கிராமத் தலைவர் சைமன் தலைமை தாங்கினார். பாம்பன் ஊராட்சிமன்றத் தலைவர் பேட்ரிக் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், கடந்த இரண்ட வாரங்களாக இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை நான் சந்தித்தேன். இலங்ககை சிறைகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மேலும், இலங்கை சிறைச்சாலை உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.மீனவப் பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் மீனவ பிரநிதிகளுக்கு வரவில்லை. மேலும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 81 படகுகளை மீட்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகிறது. படகுகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் இலங்கை நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி தகுந்த ஆவணங்களை சமர்பித்தால் மாத்திரமே படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவிப்பது குறித்து அடுத்த கட்டத்திற்கு நகரும். அரச தரப்பில் சென்னையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழக மற்றும் இலங்கை மீனவப் பிரநிதிகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் தரப்படவில்லை, என்றார். பாம்பனில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

வலி.வடக்கில் மக்கள் காணியில் ஜனாதிபதிக்கு சகல வசதிகளுடன் கூடிய உல்லாச தங்குமிடம் அமைக்கப்படுகிறது:-

கீரிமலை பிரதேசத்தில் J/ 226 கிராமசேவையாளர் பிரிவில் கிருஷ்ணன் கோவிலடியில் உள்ள மக்கள் காணியிலேயே குறித்த தங்குமிடம் கட்டப்பட்டு வருகின்றது. வடக்குக்கு ஜனாதிபதி செல்லும் போது தங்கி செல்வதற்காகவே குறித்த இந்த தங்குமிடம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நவீன வசதிகளுடன் கட்டப்படும் தங்குமிடத்தில் நடுவினில் அதிநவீன வசதிகளுடனான பெரிய வீடு ஒன்றும் அதனை சுற்றி நவீன வசதிகளுடனான 7 சிறிய வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தங்குமிடத்தை சுற்றி அதிவேக நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தப்படும் தரம் உயர்ந்த காப்பற் மூலம் வீதிகள் போடப்பட்டுள்ளன. இந்த தங்குமிடத்தை சுற்றி உள்ள காணிகளில் இருந்து கல் அகழ்ந்ததினால் பாரிய குழிகள் காணப்படுகின்றன. அக் குழிகளுக்குள் கடல் நீரை உட்புகுத்தி தங்குமிடத்தை சுற்றி (அகழி போன்று) தண்ணீர் ஓடக்கூடியவாறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வலி வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் ,நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ் மக்களின் சொந்த இடமான வலி வடக்கில் 24 கிராமசேவையாளர்கள் பிரிவில் உள்ள 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் கையகபடுத்தி உள்ளனர். அக் காணிகளில் இராணுவத்தினரால் யோக்கட் தொழிற்சாலை ,கோல்ப் விளையாட்டு மைதானம், நட்சத்திர விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாய செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன இந் நிலையில் தற்போது ஜனாதிபதிக்கான தங்குமிடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் உள்ள வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு தற்போது இராணுவத்தினரால் இலகுவில் தழைத்து பெருக கூடிய மரவகையான 'கிளிசொரியா' (ஒருவகை மரம் ) தடிகள் நடப்படுகின்றன.

2015ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல்?

எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் ஊகம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த விடயம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நகரத்தின் அபிவிருத்திப் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் வீடமைப்பு திட்டங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாகவும் இதனால் பணிகளை இந்த ஆண்டிற்குள் பூர்த்தி செய்யுமாறும் உயர் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்படக் கூடுமென தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை:-

பிரதமர் டி.எம். ஜயரட்னவிற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரரை பிரதமர் இழிவாக பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பகிரங்கமாக மன்னிப்பு கோராவிட்டால் பல பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர நேரிடும் என கட்சி அறிவித்துள்ளது. தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ஒமல்பே சோபித தேரர், தம்மை போதைப் பொருள் கொள்கலன் கடத்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளார் என பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது -இலங்கைக்கு அமெரிக்கா அறிவிப்பு:-

ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. எவ்வாறெனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சலுகை வழங்கியிருந்தது. எனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு உலகத் தலைவர்கள் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தனர். எனினும், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரானுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. ஈரானிய மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் நோக்கிலேயே சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதாகவும், தற்போது ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் பெற்றோலிய வள அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். மேலும் ஆறு மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சலுகை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லெபனானில் கார் குண்டுத் தாக்குதல்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஐந்த பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லெபனானினல் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் தரப்புக்களுக்கு இடையிலான மோதல்கள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்பட்ட பிரதேசம் ஷியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல் காரணமாக குறித்த பிரதேசத்தின் கட்டடங்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

25 இந்திய மீனவர்கள் கைது

25 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பிற்கள் பிரவேசித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்ததாக கடற்படைப் பேச்சார் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். ஆறு மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த பத்து நாட்களில் மூன்றாவது தடவையாக இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனர்கள் கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தனுஸ்கோடி பிரசேத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 32 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மீன்பிடிப் படகுகளுக்கும் இலங்கைக் கடற்படையினர் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பௌத்த பிக்குவை பாதுகாக்க முயற்சி?

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரை பாதுகாக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும், குறித்த பௌத்த பிக்குவிற்கு அண்யைமில் பிணை வழங்கப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு எதனையும் வெளியிடாத காரணத்தினால் பௌத்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு பௌத்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கு மகளிர் அமைப்;புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரை பாதுகாப்பதற்கு பதிலாக பௌத்த பிக்குவை பாதுகாக்க முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மகளிர் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த எதிர்பை வெளியிட்டுள்ளன. வவுனியா செத்செவன சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய கல்யாண திஸ்ஸ தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மருத்துவ சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், கடந்த 31ம் திகதி நிபந்தனையற்ற அடிப்படையில் குறித்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைகள் பெப்ரவரி மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களம் பிணை வழங்குவதனை எதிர்க்கவில்லை என மகளிர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. எனவே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மகளிர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி

நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் வெளிநாடுகளில் புகலிடம் கோரி சென்றவர்களில் சொற்ப அளவிலானவர்களே இலங்கை திரும்பியுள்ளனர். அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 51 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் சுய விருப்பின் அடிப்படையில் 1480 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர். எனினும், 2013ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 718ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2013ம் ஆண்டு புள்ளி விபரத் தகவல்களி;ன் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 124,436 புகலிடக் கோரிக்கையாளர்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களே அதிகளவில் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்

தந்தையருவரோ தனது மகளை மணம் முடித்துக்கொடுக்க 10 இலட்சம் லைக்ஸ்

வில்லை உடைத்தால்தான் மகளை மணம் முடித்துக்கொடுப்பேன் என தசரதன் கட்டளை போட்டார். ஆனால், நவீன தந்தையருவரோ தனது மகளை மணம் முடித்துக்கொடுக்க 10 இலட்சம் லைக்ஸ் கேட்டுள்ளார். யேமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். யேமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ். இவர் ஒரு கவிஞர். அவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக அளித்தால் தான் தனது மகளை திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனால் தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 இலட்சம் லைக்ஸ் (Likes) பெற வைக்கவேண்டும் என்பதையே வரதட்சணையாக கேட்டுள்ளார் சலீம். தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர் சலீமின் பக்கத்திற்கு 10 இலட்சம் லைக்ஸ் பெற வைக்க ஒரு மாதம் முதல் 2 ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் லைக்ஸ் இல்லாமல் அவரால் சலீமின் மகளை திருமணம் செய்ய முடியாது.

அமெரிக்கச் சோளத்தைத் திருப்பி அனுப்பிய சீனா!

தரம் குறைந்த தானியத்தை ஏற்க முடியாது என்று அமெரிக்கா அனுப்பிய 45 ஆயிரம் தொன் மக்காச் சோளத்தை சீனா திருப்பி அனுப்பியுள்ளது. சீன அரசு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தானியங்கள் உற்பத்தியை ஊக்குவித்துவருகிறது. எந்தெந்த இனவகையில் உள்ள மரபணு மாற்றியமைக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தலாம் என்று அது வரையறை செய்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 45 ஆயிரம் தொன் மக்காச் சோளம் சீனாவிற்கு அனுப்பப்பட்டது. இதை ஏற்க முடியாது என்று சீன அதிகாரிகள் கூறிவிட்டனர். சீன விவசாய நிபுணர்கள் வரையறுத்த மரபணு மாற்றியமைக்கப்பட்ட வகைகளில் இல்லாத (எம்ஐஆர் 162 என்ற விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட) மக்காச் சோளத்தை தான் அமெரிக்கா அனுப்பியிருந்தது. நாங்கள் அங்கீகரிக்கப்படாத வகையில் இது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை அனுமதித்தால் சீனாவில் உள்ள மக்காச் சோள உற்பத்தி பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் நாங்கள் இதை ஏற்க முடியாது? என்று கூறிய சீன அதிகாரிகள் அவற்றைத் திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.

4 முஸ்லிம் நாடுகளிடையே பொதுவான நாணயம்

ஐரோப்பிய நாடுகளுக்கு பொது நாணயமாக ஈரோ இருப்பதுபோல், வளைகுடா ஒத்துழைப்பு சபையின் நான்கு நாடுகள் டிசம்பர் முடிவில் பொதுவான நாணய அலகொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக பஹ்ரைன் நாட்டின் அக்பர் அல் கலீஜ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் சவூதி அரேபிய ஆகிய நான்கு நாடுகள் ஒன்றிணைந்து டொலருக்கு நிகரான நாணய அலகொன்றை அறிவிக்கவுள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் அரசியல் காரணத்திற்காகவே டொலரை ஒத்த நாணய அலகு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கு பொருளாதார காரணங்கள் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் தீர்மானம் நிறைவேற்றும் வட்டத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டோரை மேற்கொள்காட்டியே மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் 1981ம் ஆண்டு நிறுவப்பட்ட வளைகுடா ஒத்துழைப்பு சபையின் ஏனைய இரு நாடுகளான ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இந்த பொது நாணய அலகில் இணைய வாய்ப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வு வைகோ கண்டனம்

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மீண்டும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை ஒரே அடியாக ரூபாய் 220 உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று, உலக வங்கி போடுகிற கட்டளையைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது மத்திய அரசு. அதைப் படிப்படியாக நிறைவேற்ற, கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு, ஆண்டுக்கு 6 உருளைகள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தது. பின்னார், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக 9 உருளைகள் வழங்கப்படும் என்று மாற்றியது. இருந்தாலும், சமையல் எரிவாயு உருளை வழங்குவதற்கு ஆதார் அடையாள அட்டையை பொதுமக்கள் கண்டிப்பாகப் பெற்று, வங்கிகளில் கணக்குத் தொடங்கி இருந்தால் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் நடைமுறை சாத்தியமற்ற, ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற மோசடியான திட்டத்தின் மூலம், மானியத் தொகையை பொதுமக்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், அதுவரை தேவையான மானியம் இல்லாத உருளைகளை பொதுமக்கள் உரிய தொகையைச் செலுத்தி வாங்கிக்கொள்ள வேண்டும்; பிறகுதான் அரசின் மானியத் தொகை கிடைக்கும் என்பது தந்திரமாக மக்களை ஏமாற்றும் திட்டம் ஆகும். 2013 செப்டம்பர் 23 இல், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால உத்தரவில், “ஆதார் அட்டை இல்லை என்பதால், மக்களுக்கு அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது” என்று தெரிவித்து இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, சமையல் எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை கேட்டு மக்களை அலைக்கழிக்கின்றன. இந்நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளைகள் விலையை உயர்த்தி இருப்பது அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும். மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் இறந்த மஞ்­சு­ளாவின் தந்தை தற்­கொலை

கிளி­நொச்­சியில் கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் இறந்­ததாகக் கரு­தப்­ப­டு­கின்ற மஞ்­சு­ளா­தே­வியின் தந்தை நேற்றுத் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்­கொலை செய்­துள்ளார். மகள் இறந்­த­மை­யினால் மன­வி­ரக்­தி­ய­டைந்த நிலை­யி­லேயே இவர் தற்­கொலை செய்­துள்­ள­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர். துணுக்காய் அம்­பாள்­பு­ரத்தைச் சேர்ந்த சு.இரா­ச­ரட்ணம் (வயது 57) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கருத்­தடை ஊசி ஏற்­றப்­பட்­டதால் உயி­ரி­ழந்­த­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற மஞ்­சு­ளாவின் கணவர் நேற்­று­முன்­தினம் மல்­லா­வியில் வசித்து வரு­கின்ற தனது மாம­னாரின் வீட்­டிற்கு மக­ளையும் அழைத்துக் கொண்டு சென்­றுள்ளார். தனது பேரக்­கு­ழந்­தை­யுடன் பகல் பொழுது முழு­வதும் இருந்த இரா­ச­ரட்ணம் தனது மகளின் மர­ணத்­தினால் விரக்­தி­யுற்ற நிலையில் இரவு தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துள்ளார் என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவி க்கின்றனர்.

நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்புவரும் எனத் தெரிய வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து மார்ச் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்தக் குழுவின் பயணம் அமையவுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே தமது உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா.ஆணையர் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு அனுப்புகிறார் எனக் கூறப்பட்டாலும் இதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேவேளை, சிறீலங்காவின் நிலைவரங்கள் தொடர்பில் நேரடியாக பேச்சு நடத்துவதற்கு தமக்கு நேரம் வழங்குமாறுகோரி சில மனித உரிமைகள் அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்படி, ஜெனிவாவில் நடைபெறும் உபமாநாடுகளின் போது பெரும்பாலும் இந்தச் சந்திப்புகள் இடம்பெறலாம் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. ஆணையாளருடன் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டுள்ளது. அண்மையில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறீலங்காவின் மனித உரிமை நிலைவரம் தொடர்பிலும், தமது பயணத்தின் பின்னரான சிறீலங்காவின் செயற்பாடுகள் குறித்தும் அறிக்கை வெளியிடவுள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத தொடரில் அவர் வாய்மூல அறிக்கையை வெளியிட்டிருந்தார்.