Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, November 11, 2013
NMDC-ல் உதவி டிரெய்னி பணி
சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் National Mineral Development Corporation (NMDC) நிறுவனத்தில் காலியாக உள்ள Maintenance Asst Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Maintenance Asst Trainee
மொத்த காலியிடங்கள்: 90
வயதுவரம்பு: 30.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பிட்டர், வெல்டர், மெசினீஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக்,ஷீட் மேக்கிங் உள்ளிட்ட துறைகளில் ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.8900 - 12,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Jt.G.M.(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் மற்றும் டி.டி அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DY.MANAGER (PERSONNEL)R&P,
BAILADILA IRON ORE MINE,
KIRANDUL COMPLEX, POST. KIRANDUL,
DIST. SOUTH BASTAR DANTEWADA,
(CHATTISGARH), PIN-494556
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nmdc.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய விண்வெளி ஆய்வகங்களில் பணி
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (CSIR) பெங்களூரில் செயல்பட்டு வரும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பணி: திட்ட ஆராய்ச்சியாளர்
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.16,000 மற்றும் 30 சதவிகித வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Electronics, Computer Science, Electrical Electronics, Mechanical, Aerospace போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Project Fellow (SPF)
மொத்த காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.18,000 மற்றும் 30 சதவிகித வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Electronics, Computer Science துறைகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nal.res.in என்ற இணையதளத்தின் Project Fellows பகுதியின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nal.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
APSRTC -ல் ஓட்டுநர் பணி
ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை நிறுவனம் (APSRTC) ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 107+37(wait list)
பணி: ஓட்டுநர்
வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 22 - 35-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Driving Test மற்றும் Medical Fitness test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.apsrtc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேணடும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2013
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.apsrtc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Multi tasking Staff பணிக்கான தேர்வு அறிவிப்பு . பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Multi tasking Staff(Non technical) தேர்வினை எழுதி வருகின்றனர். வரும் SSC MTS 2014 -க்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) அறிவித்துள்ளன.
தேர்வு: Multi Tasking(Non-Technical) Staff (MTS 2014)
வயதுவரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.10. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
சம்பளம்: ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in and www.ssconline2.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2013
SSC MTS 2014-க்கான தேர்வு தேதி: 16.02.2014 மற்றும் 23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in அல்லது www.ssc-cr.org என்ற இணையதளங்களை பார்க்கவும்.
அகமதாபாத் DRDA-வில் டெக்னீக்கல் உதவியாளர் பணி
அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் District Rural Development Agency (DRDA) -ல் Technical Assistant ,Assistant Programmer, Statistical Assistant மற்றும் Rural Employment Worker உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 281
பணி: Technical Assistant , Assistant Programmer, Statistical Assistants , Rural Employee Worker
வயதுவரம்பு: 31.10.2013 தேதிப்படி 21-35-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் நேரிடையாக நேர்முகத்தேர்வு கலந்துகொள்ளலாம். நேர்முகத்தேர்விற்கு வருகையில் அனைத்து உண்மை சான்றிதழ்கள் மற்று BIO-DATA வினை கொண்டு வரவேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 15.11.2013 - 21.11.2013 வரை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Rural Electrification Corporation நிறுவனத்தில் மேலாளர் பணி
பொதுத்துறை நிறுவனமான Rural Electrification Corporation (REC) நிறுவனத்தில் காலியாக உள்ள AGM, Manager, Dy. Manager, Engineer, Asstt. Manager & Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி: AGM, Manager, Dy. Manager, Engineer, Asstt. Manager மற்றும் Officer
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.recindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் டி.டி இணைத்து RURAL ELECTRIFICATION CORPORATION LIMITED,
Core-4, SCOPE Complex, 7, Lodhi Road, New Delhi-110003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் பணிவாரியான சம்பளம், கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.recindia.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Junior Scientific Officer பணிக்கான UPSC தேர்வு அறிவிப்பு
Junior Scientific Officer , Training Officer, Assistant Registrar, Supervisor and Faculty பணிக்கு திறமையானவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது Union Public Service Commission (UPSC).
மொத்த காலியிடங்கள்: 84
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Junior Scientific Officer (Electronics) - 02
02. Junior Scientific Officer (Electronics) - 04
03. Junior Scientific Officer (Mechanical) - 08
04. Training Officer (Machine Tools Maintenance/ Maintenance Millwright) - 02
05. Training Officer Principle of Teaching/General - 04
06. Assistant Registrar - 04
07. Vessel Traffic Service Supervisor - 04
08. Professor (Physiology) - 01
09. Senior Lecturer (Anaesthesiology) - 01
10. Senior Lecturer (Clinical Psychology) - 01
11. Senior Lecturer (Orthopaedics) - 02
12. Senior Lecturer (Paediatrics) - 01
13. Senior Lecturer (Pathology) - 02
14. Senior Lecturer (Radio diagnosis) - 02
15. Associate Professor in Computer Science & Engineering - 15
16. Associate Professor in Electronics and Communication Engineering - 16
17. Associate Professor in Mechanical and Automation Engineering - 15
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.11.2013
மேலும் பணி வாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு சென்ட்ரல் கோல்ஃபீடு நிறுவனத்தில் பணி
ராஞ்சியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் கோல்ஃபீல்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Jr.Overman, Mining Sirdar, Overseer, Asst.Forman உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1427
பணி: Jr. Overman, Mining Sirdar, Overseer (Civil), Dy. Surveyor (Mining), Asst. Foreman (Elect.), E.P.Electrician (Excv.)/ Technician, Electrician (Non-Excv.)/ Technician,
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயதுவரம்பு: 30.10.2013 தேதிப்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ராஞ்சியில் மாற்றத்தக்க வகையில் “Central Coalfields Limited" என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பணி
உருக்குத் துறையில் முன்னணி நிறுவனமான செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), ரூர்கேலாவில் செயல்பட்டு வரும் ஸ்டீல் ஆலையில் காலியாக உள்ள Operator-cum-Technician (Trainee) மற்றும் Attendant-cum-Technician (Trainee) பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப தகுதியானவர்களளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 231
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Operator-cum-Technician (Trainee) - 121
சம்பளம்: ரூ.9,160 - 13,150
02. Attendant-cum-Technician (Trainee) - 110
சம்பளம்: ரூ.8,630 - 12,080
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2013 தேதிப்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் Operator-cum-Technician பணிக்கு ரூ.250. SC/ST/PH பிரிவினருக்கு ரூ.50 மட்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர்
Attendant-cum-Technician பணிக்கு ரூ.150. SC/ST/PH பிரிவினருக்கு ரூ. 50.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 29.11.2013
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தில் career பகுதியை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.shine.com, www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி பணி
ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுனத்தில் அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ் டிரெய்னி
மொத்த காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மாத உதவித்தொகை: ரூ.1970
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.scootersindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம்செய்து தெளிவாக பூர்த்தி செய்து photo copy of Educational/Technical Mark sheets மற்றும் Certificates இணைத்து Dy. Manager (HR), Scooters India Limited, Post Bag No. 23, Sarojini Nagar, Lucknow-226008 என்ற அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scootersindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
எஸ்பிஐயில் Regional Sales Executive பணி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் SBI Payment Services நிறுவனத்தில் காலியாக உள்ள Regional Sales Executive பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Regional Sales Executive
கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். சந்தையியல் பிரிவில் மூன்று வருடம் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பும் தகுதியும் உள்ளவர்கள் asha.sbipspl@sbi.co.in என்ற இ-மெயில் முகவரி மூலம் தங்களது புகைப்படத்துடன் கூடிய பயோ-டேட்டாவை அனுப்பி வைக்க வேண்டும்.
ஒட்டுநர், டிகிரி தகுதிக்கு சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி
ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுனமான Air India Air Transport Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Customer Agent மற்றும் Utility Agent Cum Ramp Driver பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கஸ்டமர் ஏஜெண்ட்
காலியிடம்: 134
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: முதல் வருடத்தில் ரூ.12,000 வீதமும், இரண்டாம் வருடத்தில் ரூ.13,000 வீதமும், மூன்றாம் வருடத்தில் ரூ.14,000 வீதமும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
பணி: ராம்ப் ஒட்டுநர்
காலியிடம்: 45
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: முதல் வருடத்தில் மாதம் ரூ.8,000 வீதமும், இரண்டாம் வருடத்தில் ரூ.9,000 வீதமும், மூன்றாம் வருடத்தில் ரூ.10,000 வீதமும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். அத்துடன் அங்கு அளிக்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தி நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: கஸ்டமர் ஏஜெண்ட் பணிக்கு 12.11.2013 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. ராம்ப் ஒட்டுநர் பணிக்கு 19.11.2013 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Air India Unity Complex, Pallavaram Cantonment, GST Road (Near Taj Flight Kitchen), Chennai - 600043. Phone No. 044 -22561553
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://airindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி
கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer (Laboratory)
பணி: Officer (Official Language)
பணி: Junior Engineer
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், ஃபயர் - சேஃப்டி ஆகிய ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது வேதியியல், விலங்கியல், லைஃப் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdriindia.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மசகோன் டாக் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி
மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணி: Executive Trainee (Technical)
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.16,400 - 40,500
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013
மேலும் தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பிட்டர் -45, பிட்டர் ெலக்ட்ரிக் -11, பிட்டர் எலக்ட்ரானிக்ஸ்-28, மெசினீஸ்ட் -160, வெல்டர்-08, எலக்ட்ரோபிளேட்டர் -11, எலக்ட்ரீசியன் -24, பெயிண்டர் -14, எக்சாமினர் -40, மில்ரைட் -26, டர்னர் -62, டூல் மேக்கர் -04, பிளாக்ஸ்மித் -15, பிட்டர் பாய்லர் -06, கார்பென்டர் -04, லோவர் டிவிசன் கிளார்க் -59
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ofbindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தினை பார்வையிட ஆயிரக்கணக்கில் திரளும் மக்கள்!





தஞ்சையில் அமையப்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை பார்வையிட தொலைதூரங்களில் இருந்து ஊர்திகளில் செல்லும் மக்கள் உணர்வுடன் பார்வையிடுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடிய மக்களின் வேண்டுகோள்!

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடிய அவலத்தை தடுத்துநிறுத்த முடியவில்லை அனைத்து தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாட்டு தமிழர்களும் உலகத்தமிழர்களும் ஒன்று பட்டு போரடவேண்டும்..
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது
தஞ்சையில் முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கதில் காலை தொடக்கம் மாலை வரை இந்த இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது இதில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டுள்ளது உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் அந்த பிரகடனத்தை வாசித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடியுள்ள தமிழர்களின் வேண்டுகோள்..
தொன்மைச்சிறப்பும் வரலாற்று பெருமையும் மிக்க தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும் அறைகூவலையும் எதிர்நோக்கியுள்ளது இலங்கையில் பூர்வீகக்குடிகளான ஈழத்தமிழர்களைச் சிங்களவெறியர்கள் திட்டமிட்ட இனஅழிப்பு செய்து வருகின்றார்கள்.
தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன தமிழர்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் அழிக்கப்படுகின்றன.அவை சிங்களவரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்படுகின்றது தமிழர் தாயகமண்ணில் சிங்களக்குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு மனிதஉரிமை மீறல்கள் மீறப்படுகின்றன.
இந்தகொடுமைகளும் அநீதிகளும் எதிராக ஈழத்தமிழர்கள் 30ஆண்டுகாலம் அறவளியிலும் 30ஆண்டுகாலம் மறவளியிலும் போராடினார்கள் கடந்த 60 ஆண்டுகாலத்தில் சுமார் 3இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்ட்டார்கள். 10இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழவழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலகநாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.உள்ளநாட்டில் 5இலட்சம் தமிழர்கள் சொந்த வீடுகள் இருந்தும் ஊர்களிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்கள் தாயகமண்ணிலேயே ஏதிரிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இளம் பெண்கள் சிங்கள படையினரால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் பட்டுள்ளார்கள்.தமிழர்கள் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.சிங்களகுடியேற்றங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் நிலமை திட்டமிட்டு உருவாக்கப்ட்டுள்து.
சுருங்கக் கூறின் ஈழத்தமிழர்களின் ஒரு தனித்தேசம் என்தையும் அவர்கள் இறைமை உள்ள மக்கள் என்பதையும் அவர்களுக்கு சுய நிர்ணயஉரிமைஉண்டு என்பதையும் அடைளாயம் தெரியாமல் அழிக்கவேண்டும் என்பதே சிங்களஅரசின் நோக்கம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் ஈழத்தமிழர்களின் மொழி,பண்பாடு,வரலாறு,வாழ்விடம்,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை அடியோடு துடைத்து அழிப்பதற்காக கட்மைப்பு சார்இனஅழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழினம் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் தனித்துவம் பெற்ற தேசமாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு இன்று ஏற்பட்ட கதி நாளை மலேசியாவிலும்,தென்னாபிரிக்காவிலும்,பிற நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் ஏற்படலாம்.எனவே தமிழகத்தில் ஏழுகோடிக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தும் எமக்கு மிக அண்மையில் உள்ள இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடிய அவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை அனை;து தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்;வுரிமையை பாதுகாக்கவும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் தொடர்ந்தும் ஒன்று பட்டு போராடவும் கை கோத்து நிற்க வேண்டும் இந்தியாவிலும் உலகநாடுகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் சமத்துவ சிந்தனையாளர்கள் மனிதஉரிமை ஆர்வலர்கள் ஆகியோரை நம்முடன் இணைந்து குரல்கொடுக்க அவர்கள் அனைவரையும் நமக்கு ஆதரவாக ஒன்று திரட்டியாக வேண்டும்.
உலகத்திமிழர்கள் தமது கடமைப்பொறுப்பபுக்களையும் எதிர்காதலத்தில் எதிர்கொள்ள இருக்கின்ற அபாயங்களையும் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும் என முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்ச்சியில் கூடியுள்ள தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் இதுவாகும் என்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற கொள்கைப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)