Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 3, 2014
ஆம் ஆத்மியில் உதயகுமாரன் - 'எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் ஆம் ஆத்மி இயங்கும்!
இடிந்தகரை: ஆம் ஆத்மி கட்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட சிலர் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கவுள்ளது. இதனை இடிந்தரையில் இன்று செய்தியாளர்களிடையே அறிவித்தார் உதயகுமாரன்.
-------------------------------------------------------------------------------------------------
இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை..----
. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சமுதாயத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராளிகள் தேர்தல் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளனர். அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தை கொள்கைகள் வகுக்கும் தளங்களில் தொடர்ந்து நடத்தவும்; தமிழகமெங்கும் திணிக்கப்படும் மக்கள் விரோத, இயற்கை அழிப்புத் திட்டங்களை தடுத்து நிறுத்தவும்; வருங்காலத் தலைமுறைகளுக்கு தமிழகம் பாதுகாப்பானதாக நீடித்த நிலைத்த வளர்ச்சி கொண்டதாகவும் இருக்கவுமே இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம். தமிழகமெங்கும் மேற்கொள்ளப்படும் ஆபத்தானத் திட்டங்களை காங்கிரசுக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ஒருமுகமாக ஆதரிக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
எனவேதான் போராடும் மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்றைத் தேடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி இந்திய இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்து, அரசியல் கனவுகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பதால், அது ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இக்கட்சியின் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் கப்பற்படை தளபதி அட்மிரல் ராமதாசு, லலிதா ராமதாசு போன்றவர்கள் பலமுறை இடிந்தகரைக்கு வந்திருக்கின்றனர், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
எல்லாவற்றுக்கும் மேலாக அணுஉலைக்கு ஆதரவான காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கின்றனர். இன்னோரன்ன காரணங்களால் ஆம் ஆத்மி கட்சி இயல்பான தோழமைக் கட்சியாகிறது.
--------------------------------------------------------------------------------------------
தங்கள் பகுதியில் நிறுவப்படும் அணுமின் நிலையம் போன்ற ஓர் ஆபத்தான திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் உள்ளூர் மக்கள்தான் அவற்றை நிறுவுவதில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒரு தெளிவான நிலையை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு அணுசக்தி வேண்டுமா, வேண்டாமா எனும் கேள்விக்கு பரந்துபட்ட மக்கள் விவாதம் நடத்தி தக்க நேரத்தில் முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி உறுதியளிக்கிறது.
---------------------------------------------------------------------------------------
"ஆம் ஆத்மி கட்சி" என்றப் பெயரைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் தமிழ்ப் பெயரை பயன்படுத்த எங்களுக்கு அனுமதியளிக்கிறது. எனவே மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், தலித் மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்ட எளிய மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் "எளிய மக்கள் கட்சி (AAP)" என்ற பெயரை பயன்படுத்தவிருக்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------
சமூகத்தில் பலவீனப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரின் நலன்களையும் "எளிய மக்கள் கட்சி (AAP)" கரிசனத்துடன் பாதுகாக்கும். இலங்கை அரசிடமும் இராணுவத்திடமும் சிக்கித் துன்புறும் ஈழத் தமிழரின் இன்னல்களையும், தமிழ் மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களையும் "எளிய மக்கள் கட்சி (AAP)" மிகுந்த சிரத்தையுடனும், அக்கறையுடனும் கண்ணுறுகிறது. இந்திய அரசு இப்பிரச்சினைகள் சம்பந்தமாக இலங்கை அரசையும், சர்வதேச சமூகத்தையும் கண்டிப்பான முறையில் அணுகியிருக்க வேண்டும் என்று "எளிய மக்கள் கட்சி (AAP)" கருதுகிறது. எங்களுடைய அரசியல் உணர்வுகளும், உணர்திறன்களும், புரிதல்களும், கொள்கைகளும் ஆம் ஆத்மி கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், மதிக்கப்படுவதாலும், இடிந்தகரைப் பகுதி எளிய மக்களாகிய நாங்கள் புதிய தலைவர்களோடும், புதிய கனவுகளோடும், புதிய நம்பிக்கைகளோடும் ஓர் அரசியல் பயணத்தைத் துவக்குகிறோம். "எளிய மக்கள் கட்சி (AAP)" உறுப்பினர்களாக இணைகிறோம் என்று அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென் ஆபிரிக்காவிடம் கோரிக்கை:-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தென் ஆபிரிக்காவிடம், புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தென் ஆபிரிக்க அமைப்பு கோரியுள்ளது.
----------------------------------------------------------------------------------------------
தென் ஆபிரிக்க தமிழர் பேரவை, தமிழர் இணைப்புக் கமிட்டி, உலக சைவப் பேரவை உள்ளிட்ட சில அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரியுள்ளன.
----------------------------------------------------------------------------------------------
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------
குறித்த தமிழ் அமைப்புக்கள், உலகத் தமிழர் பேரவையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
இன்றைய தினம் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன.
நவனீதம்பிள்ளையின் அறிக்கையில் சில திருத்தங்கள்:-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
------------------------------------------------------------------------------------------
இது தொடர்பான உத்தேச அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
இந்த பதில்களின் அடிப்படையில் அறிக்கையின் ஒரு சில விடயங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------
வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையில் திருத்த செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தல், வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவற்றுக்கு கால வரையைறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முதில் கோரப்பட்டிருந்தது.
------------------------------------------------------------------------------------------
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------
இறைமையுடைய நாடு என்ற ரீதியில் இலங்கை தொடர்பில் அவ்வாறான பணிப்புரைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்வைக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
------------------------------------------------------------------------------------------
முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)